https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 221 * நிழலின் இருளைநாடி *

ஶ்ரீ:




பதிவு : 221 / 301 / தேதி :- 22 அக்டோபர்  2017


* நிழலின் இருளைநாடி  *




வாய்ப்புகளில் புரியாமை - 07 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.

இந்தத் தொடர்புறுத்தல் எனக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்திருந்தது . அதனால்தான் வல்சராஜ் ஒரு சவாலைப்போல அந்த பதவியை கொடுத்தபோது தயக்கமில்லாது என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது . என்னை நிரூபிக்க இயலாத எந்தப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை . எதை பற்றியும் ஒரு கனவு வேண்டும் என்பதுபோல நானும் வண்ணமயமான கனவுகளை காண துவங்கியிருந்தேன் . அதனாலேயே நான் என்னுடன் முரண்படுவதும் உடைவதும் , பிறகு சிலவற்றை கண்டடைவதுமாக முன்னகர்ந்து கொண்டிருந்தேன் .அப்படி பட்ட சூழலில் எனக்கு கிடைத்த மகத்தான வாய்ப்பாக அந்த பால் விலை உயர்வை எதிர்த்த போராட்டம் . அது அனைத்து முனைகளிலும் என்னை ஒரே சமயத்தில் உட்கார வைத்தது . அங்கிருந்து கொண்டு பெற்றதும் , பட்டதும் அதிகம்.




தலைவர் போராட்டம் நடத்த சொல்லியது முதல் சிறிது தயக்கமாக தொடங்கினாலும். எதிர் கட்சிகளின் தரப்பிலிருந்து வந்த சில தகவல்கள் உற்சாகமான பிறிதொரு செய்தியை சொன்னது. அதன் பிறகு மளமளவென காரியங்களை செய்யத்துவம்கினோம் . கூடுகை மூலமாக அறிமுகமான அனைத்து ஒருங்கிணைப்பாளர்களையும் அழைத்து பேசத்துவதற்கு  முன்பாக வல்சாஜிடம் தொலைபேசியில்  சொன்னேன்  , எந்த தயக்கமுமின்றி நடத்தசொல்லி அது வெற்றி பெற வாழ்த்தும் சொன்னார்

கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்துவதாக இருந்த போராட்ட தேதிக்கு இரண்டுநாள் தள்ளி எங்கள் போராட்ட தேதியை முடிவு செய்தேன் . கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முது பெரும் தலைவர் சுப்பையாவிற்கு பிறகு முப்பது வருடம் கழித்தே அவர்களின் அமைப்பிலிருந்து ஒருவர் அதிகாரத்திற்கு வர நேர்ந்தது . போரட்டமுகமாக தன்னை வைத்துக்கொண்ட கட்சி அமைப்பு , ஆளும் முகமாக தன்னை காட்டிக்கொள்ள தயங்கியது, அது அந்த அமைப்பிற்குள் சங்கடங்களை உருவாக்கி வருவதை , என்னால் உணர முடிந்தது . நான் என்னை முன்னிறுத்திக்கொள்ள பத்திரிக்கைகளின் அரசியலுக்குள் நுழைந்தது அப்போதுதான் . இந்த போராட்ட வாய்ப்பு பலவிதஅரசியல்சரிநிலைகளைஎனக்கு அறிமுகப்படுத்தியிருந்தது . கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் போடாரட்டத்தை பத்திரிக்கைகள் அதை எப்படி எடுத்துக்கொள்கின்றன என்பதை பற்றி அறியும் ஆவலும் , கிடைத்த தகவல்களைக்கொண்டு , அவர்களை நெருங்கும் வாய்பிற்கு காத்திருந்தேன்.

ஆளும் கட்சியாக இருக்கும் போது , யாரை அல்லது எதை முன்னிறுத்தி தங்களின்  போரட்ட அனுகுமுறையை திட்டமிடுகிறார்கள் என்பதை அறிந்த பிறகு எனது போராட்டத்தின் வடிவமைப்பை பற்றி சிந்திக்கலாம் என்கிருந்தேன். பத்திரிக்கைகளுக்கு அதுநாள் வரை அவர்கள்தான் செல்லப்பிள்ளைகள் . தங்களின் நடவடிக்கைகளினால் செய்தித்தாள்களை நிரப்புபவர்கள்.
செய்தியாளர்களின் மத்தியில் தத்துவங்களின் வழியாக பேசி மிக அனுக்கமாக தங்களை நிலைநிறுத்திக்கொள்பவர்கள். அதனாலேயே செய்தியாளர்கள் பிற கட்சியினரை அரசியல் மூடர்களைப் போல பார்ப்பதுண்டு. இது அவர்களுக்கு அடையாள சிக்கலை உண்டுபண்ணக்கூடியது. பத்திரிக்கை அவர்களை ஒரு எள்ளலுடன் எழுத்துவங்கினர் .ஒருகாலத்தில் பத்திரிக்கையின் வெளிச்சத்தில் மகிழ்ந்தவர்கள் . இன்று நிழலில் ஒதுங்க முறச்சிக்கிறார்கள் 

பத்திரிக்கைகளின் அரசியல் சார்பு மற்றும் எதிர்ப்பிற்கு  இருக்கும் புதிய பரிமாணங்களை நான்  அறுமுகப்படுத்திக்கொண்டது இந்த சந்தர்ப்பத்தில்தான். அவைகளின்  செயல்படு முறையில் உள்ள முன்முடிவுகள் எப்படி அரசியலில் போக்கில் மாற்றத்தை உருவாக்குகிறது எனபதை உணர்ந்தபோது அதிர்ந்து போனேன் .செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு அந்த செய்திகளுக்கு தலைப்பிடும்போது செய்யும் அரசியல்,அதன் முழு நோக்கத்தை மாற்றியோ , திரித்தோ புரிந்து கொள்ளும் விதமாக நிகழ்ந்து விடுவதுண்டு . அவை எதையும் ஒற்றைப்படையானதாக மாற்றிவிடுவதால்  “அரசியல்சரிநிலைகளில்பெரும் பிழை புரிதலுக்கு இட்டுச்செல்கிறது

குடிமை சமூகத்தின் அரசியல் புரிதலுக்கு பத்திரிக்கை ஊடகம் பிரதான இடம் வகிக்கிறது . ஏதும்  எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்களை பெறும்போது , திரிபடைந்தே புரிந்து கொள்ளப்படுகிறது . மானிடர்கள் கவலை ,சந்தோஷம் , வலி போன்றவைகள் உருவமற்று தனிப்பட்ட உணர்வுகளைப் போல ஆதரவும் உணர்வுகளினால் ஆனவை .அவை கண்ணுக்கு விஷயமாதவைகள் . குடிமைச் சமூகம் ஆச்சர்யமாக இந்த ஆதரவு விஷயதில் ஒற்றை மனப்பரப்பை அடைகின்றன . அதை சரியாக உணர்ந்து
கொள்ளும் சமயங்களில் அரசியல் தலைவர்கள் தங்களின்  முடிவுகளில் வெற்றியை அடைகிறார்கள் . மிகச் சிலரால் மட்டுமே அதன் நுண்ணிய காரணிகளையும் சேர்த்து அவதானிக்க முடிகிறது. இதுவும் ஒரு இலக்கிய வாசிப்பில் கிடைக்கும் அற்புதமான திறப்புகளுக்கு நிகரானது .

ஒருங்கிணைப்பாளர்களை நான்கு குழுவாக பிரித்து வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டது  . கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைபிடிக்கும் அதே ஒழுங்கை நான் நடத்தவிருக்கும் நிகழ்வுகளிலும் கொண்டுவர முடிவெடுத்திருந்தேன். பிதுங்கி வழியும் திரள்களைக் கொண்டதாக நிகழ்வுகளை நடத்துவது ஒரு வியாதிபோல பரவியுள்ளது . அது ஒரு குடிமை சமூகத்திற்கு ஒரு செய்தி சொல்கிறது என நினைப்பதைப் போல பிறிதொரு மடமை இல்லை. இலக்கை நோக்கிய பயணத்தின் தயாரிப்பை போன்றது .அதன் அங்கமாக ஒத்த கருத்துடைய நண்பர்களை கண்டடைவது . பல கூடுகையின் வழியாக நான் பல நண்பர்களை அடைந்திருந்தேன் . அனைவரும் எனது எண்ணத்திற்கு மிக அருகில் இருந்தாலும் அணுகுமுறையில் பல்வேறு மாற்றுக் கருத்துக்களாக கொண்டவர்களாக இருந்தது ,பலவித உரையாடலுக்கு வாய்ப்பை கொடுத்து எனது செய்முறைகளை கூர்மையடைய செய்தது இந்தகைய சந்தர்ப்பத்தில் என  நினைக்கிறேன் . முழுவதுமாக ஒருங்கிய பிறகு . கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் நடத்திய போராட்டத்தைதை மிக நுண்மையாக கவனித்தோம்

இதைப்போன்ற பல பேரணிகள் போராட்டங்கள் நிறைய பார்த்திருந்தாலும் , நாமே நடத்தும் ஒரு வாய்ப்பு வாய்க்கும் என நினைக்கவில்லை. முழுவதும் ஒரு ஒழுங்கான ஒழுக்குடன் அது நடந்து முடிந்தது . இருப்பினும் பத்திரிக்கை செய்திகள் அவர்களுக்கு சாதகமா எழுதவில்லை . பல போராட்டங்களை நடத்திய இயக்கம் ஒருநாள் தானும் பதில் சொல்லவேண்டிய முனைக்கு வர நேரும் என்பதை அறிந்திருக்கவில்லை போலும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்