https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 214 * நிலையாமையின் இருமுனைகள் *

ஶ்ரீ:



பதிவு : 214 / 294 / தேதி :- 15 அக்டோபர்    2017


*   நிலையாமையின் இருமுனைகள்  *



வாய்ப்புகளில் புரியாமை - 01 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.


ஆளும் அரசு சூழலின்  மத்தியில் அனைத்து எதிர்விசை சமன்பாட்டில் நிலைகொள்ளும் அதிசயம் எப்போதாவது நிகழ்வதுண்டு. இதுபற்றி தலைவர் பல சந்தர்ப்பங்களில் எனக்கு சொன்னது நினைவிற்கு வந்தது  . அதை  இப்போது என்னால்  பார்க்க முடிகிறது. ஆனால்  பார்க்க மட்டுமே முடியும் . தொடவோ எடுக்கவோ முடியாது. புதுவை அரசின் சிக்கல் பல பரிமாணங்களை கொண்டதாக , அதன்  வேர்  சென்னையிலும் தில்லியிலும் பரவியிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.




“நிலையாமை சில சமயம் எதிர்வினையால் நிகர்நிலை பேனும்போது , அதுபற்றிய அவதானிப்பு முறைகள்  வேறுவிதமானவை. அவை நிகழவிருப்பதை கூற முயல்பவை . விளையாட்டாக ஒன்று , ஜோதிஷத்தில் “விபரீத ராஜயோகம்” என்பது இது போல ஒன்று .இப்போது அது சொல்லும் செய்தி நல்லதற்கல்ல” என்றார் . அவர் அப்போது அதை விளக்கவில்லை ஆனால் அது என்னவென்று பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது . மிக நுட்பமாண அரசியல் பார்வையாக அதைப்பார்த்தேன் . வேகமான புது அரசியல் முயற்சியாளர்களின் பேர முறை காலத்தில் இதற்கெல்லாம் இன்று யாதொரு அர்த்தமும் இருப்பதாக நான் எண்ணவில்லை அப்போது வினோதமாக நான் உணர்ந்தது , தலைவர் சொன்ன பல வியூக மடிப்புகளெல்லாம் என்னென்ன அடிப்படையில் இவற்றில் நாம் ஈடுபடக் கூடாதென்பதாகவே இருந்தது . பலதரபட்ட கோணத்தில் இதை பார்க்க முயல்கிறாரா ?. அல்லது தனது முன்முடிவை நியாயப்படுத்துகிறாரா ?. ஆள்பவர் ஏமாறும் சமயம்  குப்புறத்தள்ளுவதுதான் அரசியல் என்றிருக்கையில் , தலைவரின் “மீனமேஷம்” பார்ப்பது விசித்திரமாக இருந்தது . இதில் மாறுபட்டு  காந்திராஜ் ஒருமுறை என்னிடம் "அரசியலென்பது கிரிக்கெட்டை போல  ஜென்டில்மேன் ஆட்டமல்ல நடுவர் "கை"  உயர்த்தும் முன் களத்தை வெளியேற . இது கால்பந்தாட்டம் கூச்சமில்லாது உடலால் முட்டி மோதி வெற்றியை பெறுவது" என்றார் . நான் அதற்கு முரண்பட்டாலும் . கற்பதென்பது அந்தந்த களம் ஒருங்கும் போது நிகழ்வது. இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பிக்கொளவதால் , கற்கும் வாய்ப்பு நிகழாது போகலாம் . அதன் உட்கூறுகளை தெரிந்து கொள்வதற்காக , அவர் பேச காத்திருந்தேன்.

கண்ணன் முதல்வருடன் முரண்படுகிறார் என்கிற தகவல் காரண காரியதுடன் என்னை விட அவரிடம் நிறைய இருந்தது . அவர் சொல்லட்டும் என காத்திருந்தேன் . நாராயணசாமி தன் வெற்றியின் அருகில் வந்ததே இந்த சிக்கலை நெடுநாட்களுக்கு முன்பாக அறிந்து கொண்டதனால்தான் . என்ன காரணத்திறகாக அவர் போட்டியிட வேண்டுமென நினைத்தாரோ, அதே காரணத்திற்காக நான் அதை மறுத்தேன் என்றார்.

கண்ணன் தனிக்கட்டசி துவங்குவதற்கு ஆயிரம் உளநோக்கமிருந்தாலும் முக்கிய காரணமாக மூப்பனாரையே முன்னிறுத்தினார். அவர் திமுக, காங்கிரஸ் இரண்டு பக்கமும் அவர் பேசக்கூடியவர். எல்லா வாய்ப்புகளையும் திறந்து வைத்திருப்பது. தன்னை முதல்வராக முன்னிறுத்த வேண்டும் என கண்ணன் விழைந்த போது , அதன் சாத்தியமற்ற தன்மையை  கருதியே மூப்பனார் இதில் முரண்படுவதாக நான் கேள்விப்படுகிறேன் என்றேன் . மூப்பனாருக்கு அவர் நினைத்தபடி திமுகவுடன் இணைந்து செல்ல முடியவில்லை. மாநில அரசியலின் உட்கூறுகள் மிக விரிவானவை அதையெல்லாம் பல வருட அனுபவத்தில் கலைஞர் அறிந்திருந்தார் . ஆனால் மூப்பனார் ஆரம்ப நிலையில் இருந்தார். அதன் விளைவு கசப்பு மட்டுமே. இதன் வேர் மிக தூரமாக ஆழமாக வேறெங்கோ படர்ந்திருக்கிறது என புரிந்து கொண்டேன் . தலைவர்  என்னை ஊடுருவி பார்த்து சுருங்கிய கண்ணகளால் என்னை நோக்கி "என்ன செய்யலாம்" என்றார் . நான் “பழம் பழுக்கும் நிலைக்கு வரட்டும்” என்றேன் . அவர் முகத்தில் அமைதியான புன்முறுவல் ஆனால் அதில் வலிமிகுந்திருப்பதை அறிந்ததும் , என்னுள் ஒரு மெல்லிய திடுக்கிடலை உணர்ந்தேன் . ரவி கொண்டுவந்து கொடுத்த டீ யை வாங்கிக் கொண்டேன் . அது சூடு குறைய காத்திருந்து குடிக்கும் வரை அவர் ஏதும் சொல்லாது தனக்குள் மூழ்கிப் போயிருந்தார்.  நானும்  அப்படித்தான் இருந்தேன் .தலைவரிடம் விடை பெற்று பெருகுழப்பத்துடன் வீட்டை நோக்கி புறப்பட்டேன் 

மாணவர் அமைப்பு தேர்தல் களம்  ரஹ்மான் சொன்னதைப்போல அவ்வளவு எளிதல்ல என்பதை என்னால் அவதானிக்க முடிந்தது . அவனுக்குத்தான் அதை புரியவைக்க முடியவில்லை . நான்  முயற்சிக்கவும் இல்லை. அது வேண்டாதவேளை . நான் அந்த மூன்றுநாளில் நிலைமையை ஒருவாறு தொகுத்து விட்டேன் . வெற்றிக்கான வாய்ப்பு மிக சிறிய அளவிலிருந்து . சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற மேலவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தாலும் . ஆளும் அமைப்பிற்கு அது கலக்கத்தை கொடுத்துவிட்டது . அரசாங்கம் அவர்களின் பெரும்பான்மையால்  ஆளப்படவில்லை. மாறாக மாய எண்களின் கருணையாலும் , எதிர்கட்சியின் அமைதியாலும் தான் இதுவரை உயிர்பிழைத்திருக்கிறது என்பதை ஓங்கி சொல்லியதாகிறது . முதலவருக்கு தலைவரின் மௌனம் ஆதரவாக தெரிந்திருக்கலாம் , ஆனால் அவர் அரசியல் நிகழ்முறையில் நிலையழிந்திருக்கிறார் என அறிவில்லை . கடசிக்குள் இதை உள்குத்து என்கிற அளவில்தான்  புரிந்து கொண்டார்கள். அதனால்  தங்களுக்கான சமயம் வர காத்திருந்திருந்தனர் . இதில் வல்சராஜின் பங்கு பொதுவெளியில்   அனுமானிக்க  முடியாத அளவிற்கு பெரியது.கட்சியின் புறவிளிம்பைத்தாண்டி வல்சராஜ் ,கண்ணன் அணியுடன் நல்ல தொடர்பிலிருந்தார் . நான் சம்பந்தபட்ட பல அரசியல் நிகழ்வுகள் எனது   தலையீட்டால் தெறித்து விலகியதை, நான் அவர்களுக்கு தலைவர் மீதுள்ள அச்சம் மட்டுமே காரணமென அல்லது எனது செறிவான திட்டமிடல் என உணர்ந்திருந்தேன். ஆனால் அதன் பின்னனியில் அவைகளில் மூளையை சொடுக்கும் மின்னல்களை கொண்டிருப்பதை மிக தாமதமாக அறியமுடிந்தது . 
சிந்தனையும் அதன் முடிவுகளும் நரம்பின் முடுக்குகளில்  உறைபவை . நரம்புகளோ வயதிற்கும் காலத்திற்கு அதீனமானது . சூழலோ வளர்சிதை மாற்றங்களாக எப்போதும் இருந்து கொண்டிருப்பது. அனுபவங்களின் தொகுப்பும் வயோதிகமும் தான் முன்போலவே எப்போதும் அதே வீர்யமுடன் இருப்பதாக பொய்யுரைக்கின்றன. அதனால்  காலம் எதிர்மறை மாற்றத்தை அடைந்து விட்டது, என அது நினைக்க வைக்கும் அந்த தருணத்தில் எவரும் தோற்கத்துவங்குகிறார்கள்............. தலைவர் தோற்றுக்கொண்டிருக்கிறார்

சுமூகமாக தேர்தல் நிகழுமானால் அதை முறைப்படி எதிர் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் . இதில் திமுக ஆர்வம்காட்டவில்லை , தாமாக அதை  கையிலெடுத்து கொண்டதற்கு தற்செயலான காரணம் இருந்திருக்கலாம் . அவர்கள் எதையும்  வன்முறையால் பேசுபவர்கள் அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி அதுதான் . வன்முறை எங்கள் வழியல்ல அதை செயக்கூடியவர்களை நாங்கள் வைத்திருக்கவும் இல்லை . இது சட்டசபைக்கான பொது தேர்தல் இல்லை . இது கல்லூரி வளாகத்திற்குள் நடப்பது . சமூக விரோதிகளைக் கொண்டு தகராறுகளை அரங்கேற்ற முடியாது . அவர்களுக்குள் ஒருவையொருவர் தாக்குமளவிற்கு அதை கொண்டுசெல்வது சாத்தியமில்லை . ஆகவே மாணவர் அமைப்பின் தேர்தலை முயற்சிக்கலாம் என தோன்றியது . இந்த கல்லூரி தேர்தலில் ஒருவேளை எங்களால் வெற்றிபெறமுடியுமானால் . களத்தில் அவர்களின் நிலையாமையை  மீண்டுமொருமுறை நிறுவியதாகிறது .அதை அவர்களும் அறிந்திருந்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்