https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 10 அக்டோபர், 2017

எழுதழல் * நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 3*

ஶ்ரீ:

பதிவு : 289 / தேதி :-  10 அக்டோபர்    2017





எழுத்தழல்




நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 3




மிக இயல்பாகவும் , செறிவாக செல்லுகிறது சொல்சூழ் சிற்றவை . சொற்களை கொண்டு சூழும் ஒவ்வொரு அவையும் . கூறுபோக்கை மட்டும் கருதாது . அவரவர் நாவில் எழுபவை ஆழ்ந்த படிமங்களாவே வெளிப்படுகின்றன . பெயருக்கான அர்த்தம் பேச்சில் வெளிப்படுவது போல யுதிஷ்டிரராக பேசுபவர். ஞானம் பேசுகிற ஓரிடத்தில் மட்டும் தருமராகிறார் என்கிறார் ஜெ.இங்கு அவர் அறிந்து அவர் தருமரானாரா என்பது அவருகே தெரியும் !!

இதில் ஆச்சர்யமூட்டுவது சில கதாபாத்திரம் எங்கும் சோர்வில்லாதது அந்த பாத்திரங்களாகவே வெளிபட்டபடியே இருக்கிறது. ஜெ தனக்குள் மிக ஆழமாக தர்கித்துச் செல்வதை மிக நுண்மையாக உணரமுடிகிறது .

வியாசபாரதம் , அவரது ஆழ்மனம் , வாழ்வில் பெற்ற அனுபவம் , என மூன்றும் முரணியங்கித்தான் வெண்முரசாக தினமும் வெளிப்பட்டாலும் . தான் இருக்கும் நிலையில் சற்றும் விலகாத உறுதி என்னை வியக்கவைக்கிறது . சில இடங்களில் சமன்வயப்படுதலையும் அவர் நெகிழ்வை காணும்போது .அங்கெல்லாம் நான் என்னை இழக்கிறேன் .

தான் அவனை இளை யாதவனாக பார்த்தாலும். சொல் சாம்யத்யால் தன் ஞானத்தினடியாக கண்ணின் பின் நிற்பதாக சொல்கிறார். ஜெ பல்லாயிரம் கதாபாத்திரங்களினூடாக அனைவராகவும் சிந்தித்து , பேசி தன் அறிதலையே முன்வைத்தபடி சென்று கொண்டே இருக்கிறார் . வாழ்க அவருக்குள் நாளும் நிகழும் இந்த யுத்தம்

|| பதின்மூன்று ஆண்டுகள் காட்டில் அலைந்தும் கந்தமாதன மலையுச்சியின் கனல்வடிவ முதல்முழுமையைக் கண்டும் நான் அறிந்த மெய்மை ஒன்றே, கனிவதனூடாகவே அடையவும் அறியவும் கடக்கவும் முடியும். கனியாதவன் வாழாதவனேஎன்றார் தருமன் || 

யுதிஷ்டிரரை மையமாக கொண்ட அவை , அவரது எண்ணங்களை அழுத்தமாகவும் , சாரமாகவும் முன்வைக்கப்படுகிறது . சமாதனத்தை விரும்புபவன் தனது இயலாமையை ஒலித்துக்கொள்ள தருக்கத்தை நாடுவது போலன்றி , நிதானத்துடன் சொல்லெண்ணுகிறார். முன்முடிவாக எதையும் வைத்திருக்காத அவை அமர்வதை மிக அற்புதமாக வெளிப்படுகிறது .

|| “இந்த கொள்விளையாடலில் எங்கும் உளம்மறந்தும் நாபுரண்டும்கூட போர் எனும் சொல் எழவேண்டியதில்லை. சொற்களுக்கு விண்ணிலிருந்து நிகழ்வுகளை கறந்தெடுக்கும் திறனுண்டு. போர் என்று சொல்லுந்தோறும் போரை நோக்கி நகர்கிறோம்.|| என போரென ஒலிக்கும்போது அதை அஞ்சுகிறார்.

யுதிஷ்டிரர்மனிதர்கள் கற்தூண்கள் அல்ல. தருணங்கள் ஆடும் ஆடிப்பரப்புகள் அவர்கள். மானுடரின் நிலையின்மையை புரிந்துகொள்ளாதவன் அவர்களை வெறுப்பவனாகவே என்பதை தனக்கேயாக சொல்லிக்கொள்கிறார்.

|| அர்ஜுனன்இளைய யாதவர் நமக்கெனப் பேசுவதா வேண்டாமா என்பதை இந்த அவை முடிவு செய்யட்டும், அதில் எனக்கு சொல்லில்லை. ஆனால் இளைய யாதவரிடமிருந்து நான் என்னை பிரித்துக்கொள்ள வேண்டும் என்று மண்ணில் எவரும் எனக்கு சொல்ல வேண்டியதில்லை. தந்தை வடிவமாக இங்கிருக்கும் மூத்தவரும் ஈன்ற அன்னையும் என் குருதியினரும்கூட அதற்கு உரிமைகொண்டவர்கள் அல்ல. நான் இப்பிறவியை அவருக்கு அளித்தவன்என்றான். பீமன்எனக்கும் பிறிதொரு சொல்லில்லை. வாழ்வதும் இறப்பதும் அவர்பொருட்டே” ||  என்றான்.

தனக்கு அவன் இளைய யாதவன் மட்டுமே. ஆனால் பாஞ்சாலரே, அவன் முன்வைக்கும் அந்த மெய்மையின்பொருட்டு என் அரசையும் துணைவியையும் இளையோர் அனைவரையும் மைந்தர்நிரையையும் கொடிவழிகளையும் புகழையும் விண்ணுலகையும்கூட துறக்க சித்தமாக இருக்கிறேன்என்றார். “ஏனென்றால் கந்தமாதன மலையிலேறி நான் கண்டது அனலுருக்கொண்டெழுந்த அவன் சொற்களையே.”

யுதிஷ்டிரர்இங்கு இத்தனை பொழுது என் குலம் குருதிப் பூசலில் இறங்கலாகாது என்று விழைந்தேன். போர் நிகழ்ந்து மண் சிவக்கக்கூடாதென்று அஞ்சியே சொல்லெடுத்தேன். ஆனால் அவன் சொல்லும் அம்மெய்மைக்காக இப்பாரதவர்ஷமே முற்றழியுமென்றால் அதுவே ஆகட்டும் என்றே எனது மறுமொழி இருக்கும்என்றார்.

போரெனும் சொல்லை வெறுத்தவர் இறுதியில் தானும் உளம்மாறி போருக்குள் நுழைகிறார் .


- கிருபாநிதி அரிகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக