https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 3 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 203 * நிழலின் தொடுகை *

ஶ்ரீ:




பதிவு : 203 / 282 / தேதி :- 03 அக்டோபர்    2017

* நிழலின் தொடுகை *



தனியாளுமைகள் - 29 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-08

தலைவர் சண்முகம் ; எனது செயல்பாட்டிலிருந்து எனது பயணம் எந்த மாதிராயானது , எதை நோக்கியது என்பதை என்னைவிட அவரே மிகச்சரியாக புரிந்திருந்தார்.அதை ஒரு கட்டத்தில் நானே உணர்ந்ததும் , அவரது ஆதரவில் மட்டும் என்றில்லாது  பெரும்பாலும்  எதிர்பிலிருந்து எனக்கான பாதையை நான் கண்டடைந்தேன் . எனது அணுகுமுறையை அவரது ஆசியை விட வசையை பெற்றே நான் எனது அனுகுமுறையை வகுத்துக்கொண்டேன் . ஏனெனில் நான் அவரது பின்னால் எப்போதும் இருந்ததால் , எனது அரசியல் அடிபடாது இருந்ததது . ஆனால் நான் பட்ட அடிகள் வேறுவிதமானவைகள்.




எனது தொடர் சிறு கூடுகையில் கிடைத்த உணர்வுகளும்,  தலைவருடன் மேற்கொண்ட பல தனித்த  பயணத்தின் போது கிடைத்த  வாய்ப்புகளினூடாக  ,அவர் தனது அனுபவமாக என்னுடன் நிகழ்த்திய உரையாடல்களின் வழியாக எனது செயல்திட்டம் உருவாகி வந்திருக்க வேண்டும் . தனது பல முயற்சிகள் பலனலிக்காது போனதன் தடைகள் ,வருத்தங்களை பற்றிய அவர் சொன்னதை அவதானித்த போது , அவற்றை இப்போது நிகழ்த்துவதற்கான பிரகாசமான வாய்ப்பும் அதிலுள்ள எதிர்ப்பும் சேர்ந்தே எனக்கு புரிந்தது .

தலைவரது அனுகுமுறையால் புதுவை முழுவதுமாக மூன்று தளங்களில் கட்சியின் தொகுதி செயல்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன . ஒன்று மேட்டிமை மனோபாவத்தில் , இரண்டு பொருளியல் பலமில்லாத மாற்று கட்சிக்கு தாரைவார்க்கும் தொகுதிகளில் தனது பதவி  முழுவதும் மாற்றுக்கட்சிகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் போக்கும் , வேட்பாளர் அறிவிக்கும்வரை எந்த பெரிய செயல்பாடுகளிலும் ஈடுபடாத போக்குமா இருக்கும், இவை மூன்றிலும் தனி ஆளுமையாக புதியவர்கள் எழுந்து வரும் வாய்ப்பில்லாததால் அனைத்திலும் அது தேக்கநிலையை அடைந்து வெகுகாலமாகிவிட்டிருந்தது . தனி ஆளுமையுள்ள இளைஞர்களை ,பரப்பிய இயக்கங்கள் கவர்ந்ததுபோல கட்சி அமைப்பால் அவர்களை கவர இயலவில்லை . நகர பகுதிகள் எப்போதும் கட்சிக்கு எதிர்நிலையில்தான் இருந்து கொண்டிருந்தது . நான் அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து எனக்கான இலக்கை கண்டடைந்தேன் . ஆனால் அதை செயல்படுத்த  நிர்வாக ரீதியில் நீண்ட காலம்  எடுக்கும் ஒரு செயல்பாட்டுமுறை அது . அதுகுறித்து என்னால் எவருடனும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை . 

சிறிய அளவில் அதை முயற்சித்து பார்ப்பதற்கு நான் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை பயன்படுத்த நினைத்தேன் . எந்த புதுமுயற்சியிலும் நூறு சதவிகித வெற்றி உத்தரவாதமில்லை . தோல்வி அடையும் வாய்ப்புகளே அதிகமும் இருந்தது . ஆனால் இந்த அமைப்பின் செயல் திட்டம் தோல்வியை தழுவினால் அது பெரிய அளவில் விவாதப்பொருளாகும் வாய்ப்பில்லை . திட்டத்தில் ஏற்படும் பின்னடைவுகளை சரிசெய்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் . அதை மெல்ல மெருகேற்றி மற்ற பகுதிகளுக்கு மாற்றி விரிவு படுத்தலாம் . ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில கமிட்டியில் என் நிலை என்ன எனபதை உறுதி செய்துகொள்ளாமல் இதில் ஈடுபடுவது சாத்தியமில்லை. ஏதும் வேண்டாம் என்கிற மனநிலையும் , வாய்ப்பிருக்குமாயின் உகந்ததென  நினைப்பதை முயற்சித்துப்பார்க்கும் ஆவலுமாக ,குழம்பி இருந்தேன் .

வல்சராஜ் தன்னை சிக்கல் சூழாதிருக்கம்  சிந்தனை கூர்ந்தாலும் , அதனால் எழும் பலன்களை விழைந்ததால் , செயல்படுபவரின் அரசியல்  சூழ்கையால் எவர்  வென்றெடுப்பதிலும்  தன்னளவில் சிறந்தது தன்னைவந்தடையட்டும் என காத்திருந்தார் . செய்கையின் பயன் செயல்படுபவனைத்தாண்டி பிறிதொருவரை சென்றடைவதைப்பற்றி கவலை கொள்ள இயலாது . செய்கையில் விளையும் பயன் அனைவருக்குமானது . அதை யாரும் ஓரிடத்தில் மடையிட்டு தேங்கிவிட இயலாது .  எப்போதும் எதிர்நோக்கும் ஊழின் கரத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன் . என் வழமையாது , பலமுறை இதைப்போன்ற செயல்பாடுகளால் பட்ட அடிகள் இன்னும் தழும்பாக இருப்பதால் . செயல்படவேண்டிய வழிமுறைகளை காலம் எடுத்துக்கொடுக்கட்டும் என பொறுத்திருந்தேன்.

அனைவருக்கும்  பொதுவாக தனது தலைமையை பேண நினைக்கும் வல்சராஜ், அதே சமயம் என்னை நோக்கிய மனச்சாய்வு உள்ளவராக தன்னை , நான் நினைக்கும்  வகையில் அத்தனையும் செய்துகொண்டிருந்தார்;  தனது அரசியல் நிலைப்பாட்டிற்கோ அல்லது தலைவரை அஞ்சியோ .ஆனால் கட்சி அரசியலென்பது என்பது இதற்கு நேர் எதிர்மறையானது . அதன் துவக்கமே பிறிதொருவரின் மீதுள்ள வெறுப்பு அல்லது காழ்ப்பிலிருந்து துவங்குவது . அதை எதிர்கொள்ளும் அமைப்பாக அதை விருப்பு வெறுப்பு கொண்ட இரட்டை விளிம்புகளில் நிற்கும் திரளாக அவர்கள் தங்களை   பேணுவதை நாம் அங்கீகரிப்பது இன்றியமையாதது . ஆகவே வெறுப்பில் துவங்கும் இது ,அந்த ஒத்த கருத்துடைய குறுங்குழுவால் இயக்கப்படுவது . பின்னர் கோஷ்டிகளாக அவை கிளைப்பதை தவிற இயலாது. 

அதன் உயிர் மூச்சே அந்த ஒற்றைபடை எண்ணங்கொண்ட  குறுங்குழுவை போராட்டகளச் செயல்பாடுடையதாக வளர்த்தெடுப்பதே . கட்சி அரசியலில் முன்னுரிமை பெற விழையும் எவரும் அதன்மூலமாக அடுத்த தளத்திற்குள் செல்ல முடியும் . இது கொள்கைகளில் பேசும் கூட்டத்திலிருந்து வேறுபட்டது . தலைமை பொறுப்பிலுள்ளவர்களுக்கு அணுக்கமாக தங்களை   வெளிப்படுத்திக்கொள்வதும் . அன்றாட நிகழ்தலுக்கு ஒத்திசைவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாக அது இருக்கும் .

அதற்கு எதிராக அல்லது இணையாக மற்றொரு குறுங்குழு எழுவது இயற்கையானது . இந்த விளையாட்டில் ஒருவர் தன்னை நடுத்தலைமையாக, தங்களுக்குள் எப்பவும் முரண்படும் குழுக்களை ,சம தொலைவில் வைக்க விரும்பும் போது  அது இன்னும் சிக்கலானது .ஆனால் வல்சராஜுக்கு புதுவை கட்சி அரசியலில் தனக்கான இலக்கென ஒன்று தேவைபாடத்தால் . அவரது மௌனம் , அவர் செயல்படாத நிலையை ஒத்த சூழலை வளர்க்க துவங்கியது . நான் அமைப்பை வெற்றிகரமாக நடத்திச்செல்ல ,ஏற்கனவே திரட்டிய குழுக்களை அமைப்பிற்குள் கொண்டுவரமுடியாது போனால் அது சிதைந்து விடும் . 

எனக்கெதிராக கிளம்பும் அனைத்தையும் எதிர்கொள்ளும் சாத்தியக்கூறுகள் நான் வளர்த்தெடுக்கும் குழுவிற்கு உண்டு. ஆனால் முதல் நிலையிலேயே தென்படும் இந்த  இடரடக்கல்கள், அவற்றை  முதல் கோணலாக்கும்  வாய்ப்பை பெற்றிருந்தது . அதை நான் விரும்பவில்லை. கண்ணில் தெரியும் பொருளை தனது நிழலால் தொடமுடியும் , எடுக்க முடியாது . முதலில் வல்சராஜின் நகர்வு களத்தில் நிகழும்வரை நான் காத்திருக்க முடிவு செய்தேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்