https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 4 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 204 * சிந்தனையை குழப்பும் பாதை *

ஶ்ரீ:





பதிவு : 204 / 283 / தேதி :- 04 அக்டோபர்    2017

*  சிந்தனையை குழப்பும் பாதை  *



தனியாளுமைகள் - 30 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-09


எனக்கெதிராக கிளம்பும் அனைத்தையும் எதிர்கொள்ளும் சாத்தியக்கூறுகள் நான் வளர்த்தெடுக்கும் குழுவிற்கு உண்டு. ஆனால் முதல் நிலையிலேயே தென்படும் இந்த  இடரடக்கல்கள், அவற்றை  முதல் கோணலாக்கும்  வாய்ப்பை பெற்றிருந்தது . அதை நான் விரும்பவில்லை. கண்ணில் தெரியும் பொருளை தனது நிழலால் தொடமுடியும் , எடுக்க முடியாது . முதலில் வல்சராஜின் நகர்வு களத்தில் நிகழும்வரை நான் காத்திருக்க முடிவு செய்தேன்




“அரசியலில் நம்மை சூழ்ந்து நடப்பவைகளை நாம் மனம்கொண்டு தீர்மாணிக்க முயல்கிறோம் . அது ஒரு புரிதல் மட்டுமே” என்கிறார் திரு.ஜெயமோகன் தனது கட்டுரைத் தொகுதி ஒன்றல்.

அரசியல் முன்னெடுப்புகள் அனைத்தையுமே இந்த சொல்லாட்சி சென்று தொடவல்லது . நிகழ்வுகளை ஒரு கருத்தாக்கிக் கொள்கிற போது , அதிலிருந்து நாம் புரிதலை அடையமுடியுமானால் , அதன் வழியாக அதில் சம்பந்தபட்ட அனைவரின் கண்ணுக்கு தெரியாத தொடர்பையும்  விழைவைவையும் அனுமானிக்க முடியும். அனைவரின் மத்தியில் வல்சராஜுக்கு அடுத்த ஸ்தானம் என்னுடையது என்பது உச்சரிக்கப்படாமலேயே எல்லோருக்கும்  புரிந்திருந்ததால் அனைத்து குழுவும்  என்னை புறந்தள்ளும் நோக்கத்தில் ஒன்றிணைந்து எனக்கெதிராக அணித்திறள துவங்கியிருந்தது . மாநில அனைத்து குறுங்குழுவின் வெளிப்படையான ஆதரவும் அதற்கு இருந்தது . அனைவரின் இலக்கும் தாங்கள் இரண்டு தளத்தில் செயல்படுவதை பற்றியிருந்தது. ஒன்று: முற்றிலுமாக என்னை முடக்குவது . இரண்டு: அது முடியாமலானால் நான் தன்னிச்சையாக செயல்படுவதற்கு தடைகளை உருவாக்குவது.

இப்போது என் முன்னுள்ள கேள்வி, நானும் வல்சராஜும் ஒரே அணியா? , ஆம் என்றால் இணைந்து எல்லா முடிவுகளையும் தேறலாம் . அப்போது எல்லா முடிவுகளையும் எடுக்கும் இடத்தில் நானும் , அவற்றை செயல்படுத்த என்னை அங்கீகரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு வல்சராஜ் வந்து சேரவேண்டியிருக்கு .ஏனெனில் இந்த பதவி அவருக்கு செயல்பட சொல்லி கொடுக்கப்பட்டது அல்ல . இப்போதைய சூழலில் பிறிதொருவரிடம் அது இருந்தால் , தலைவர் பல சிக்கலை எதிர்கொள்ள வேண்டும். அல்லது இளைஞர் காங்கிரஸ் நீர்த்து போகட்டும் என்றுகூட தலைவர் நினைத்திருக்கலாம் . வல்சராஜ் எனக்கு ஆதரவான போக்கை வெளிப்படையாக எடுக்க முடியாததற்கு , இதைப்போல காரணங்களும் பின்புலத்தில் இருந்திருக்கலாம் 

தற்போதைய சூழலில் என்னை ஆதரிப்பதுபோல தோற்றமே அவரளவில் அது சிக்கல் மிகுந்தது , எனது தவறுகளையும் சேர்நதே அவர் நியாயப்படுத்த வேண்டியிருக்கும் . அவற்றால் எனக்கான எதிர்ப்புகளுக்கு அவர் குவிமையமாக விடுவார்  . மாநில அரசியலில் எந்த நோக்கமும் இல்லாத தனக்கு அது தேவையற்றது என் நிலைத்திருக்கலாம்  . அதன் பொருட்டு எல்லோரையும் அரவணைத்து செல்வதுதான் தனக்கான அரசியல் என்பதை புரிந்திருந்தார் . மேலதிகமாக தற்போதுள்ள சூழலில் நான் அவரது முழு கட்டுப்பாட்டிற்குள் வர மறுக்கிறேன் . காரணம் எனக்குள்ள தலைவரின் ஆதரவு . என் அரசியல் செயல்பாடுகள் இளைஞர் காங்கிரசின் விழுமியங்களை கடந்தது . அதன் பலன் முழுவதும் தலைவரை சென்றடைகின்றன. காரணம் அவை கட்சியின் வளர்சிதைமாற்றத்திற்கு வழிவகுப்பவைகள்.

தன்னை பொதுவில் வைப்பதால் ,எனக்கெதிராக இருப்பவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் போக்கு என்னை கட்டுப்படுத்தும். அதனால் நான் அவரது நிர்பந்த எல்லைக்குள் வந்துவிடுவேன் . என்பது அவரது கணக்காக இருந்திருக்கலாம். எனது அரசியல் செயல்பாடுகள் நிழலானவைகள் அல்ல என்பதால், என்னை ஆதரிப்பவர்கள் அதை வெளிப்படையாக செய்யவேண்டிய நிர்பந்தத்தில் நான் அவர்களை நிலைகொள்ள செய்கிறேன் . மற்ற எல்லோரும் எனக்கெதிரான நிலையில் இருப்பதாக ஒரு புரிதல் அரசியல் பொதுவெளியில் நிகழ்ந்து கொண்டிருந்தது . உட்கட்சி அரசியலில்  எனக்கெதிரான அறைகூவல் தலைவருக்கெதிரான அறைகூவலாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதே இப்போது மாறி வருகிற சூழல் . அதை வல்சராஜ் துல்லியமாக அறிந்திருந்தார் .

நான் வெளிபடையாக அவருக்கு முரண்பட மாட்டேன் என நம்பும் அவர் ஒரு சூழல் அதை செய்யவேண்டிய நிர்பந்தம் எழுந்தால் நான் அதை செய்ய தயங்கமாட்டேன் என்பதையும் புரிந்தே இருந்தார். தலைமைக்கும் அதே போன்ற சிக்கல் எழுவதை அவரும் தெரிந்திருந்தார் . ஆனால் கட்சி அரசியலில் இதை அவரால் தவிர்க்க இயலாது என்பதால் இது ஒரு முக்கோண அரசியல் நிகர்நிலையை அடைந்துவிட்டிருந்தது. வல்சராஜை பொறுத்தவரை, எனக்கு அதற்கான தகுதி இருக்குமாயின் எனக்கான இடத்தை நான் வென்றெடுக்கட்டும் என்கிற முடிவிற்கு வந்துவிட்டிருந்தார் என நினைக்கிறேன்  . இது எனக்கான அறைகூவலே.

உள்ளத்தை பேதலிக்க செய்யும் எதிர்ப்புகள் அவை . ஆகையால் நான் எதை நோக்கியும் முனையவில்லை . ஒரு கட்டத்தில் மாநில நிர்வாக கமிட்டியில் இடம்பெறாது போனால் கூட பரவாயில்லையோ என தோன்ற ஆரம்பித்துவிட்டது . பாதையில் தடைகள் என ஏதும் இல்லாது போனாலும் அவை ஒரு நாற்கள விளையாட்டைப்போல சிந்திக்கும் திறனை சிதறடித்து,   சிந்தனையை குழப்புவதாவே எப்போதும் இருந்து கொண்டிருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...