https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 9 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 209 * தொடுகற்றலின் புரிதல் *

ஶ்ரீ:




பதிவு : 209 / 288 / தேதி :- 09 அக்டோபர்    2017


*   தொடுகையின் கற்றல்  *


தனியாளுமைகள் - 35 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-12


ஏனோ மிகவும் வெறுமையாக  உணர்ந்தேன் . தலைவர் யாரை சிபாரிசு செய்தாரோ அவரை நான் அறிவேன். அவர் அமரவேண்டிய பதவியிது . சபாபதி இன்னும் அந்த பழைய வஞ்சத்தை சுமந்தலைகிறார் . அப்படி செய்வதுதான் அரசியலென நினைகிறார்கள் போலும்  . அது அனாவசிய பொதி அதை தள்ளினால் அவர்களுக்கான உலகம் தனக்கென தனித்து விரிவதை ஒருநாளும் அவர்கள்  உணரப்போவதில்லை . எது எப்படி இருந்தாலும் இந்த பதவி பலரின் கண்களுக்கு எனது தகுதியற்று  இனாமாக பெற்றதாக இருகப்போகிறது. தலைவரும் வல்சராஜூம் தங்களின் கைகளால்  என்னை தாங்குவதாலேயே நான் இந்த உயரங்களை எட்டுகிறேன் என அவர்கள் நினைப்பதை போல என்னை அவமானமானமடையச் செய்வது   பிறிதொன்றில்லை . அது என் ஆற்றலை கொச்சைப்படுத்துவது . அது எப்போதும் எனக்கான பாதையை மலினப்படுத்துவது . என்னை எப்போதும்  சோர்வடைய செய்வது .





அரசியல் செயல்பாடுகளோ எதிர்வினைகளோ , குடியமச் சமூகத்தில் முயங்கும் முரணியக்கத்தின் வெளிப்பாடுகள் . அதில் பொது வெளியில் உள்ள சரி தவறு என்கிற ஒற்றைபடை பார்வையை அவை தருவதில்லை . “அரசியல் சரிநிலைகள்” என்கிற விபரீத கருதுகோளை , அரசியல் தலைவர்கள் சமூகத்தின் புழக்கத்திலிருந்தேதான் கண்டடைந்திருக்கவேண்டும். லோகாயத கருதுகோளைப் போல ,குறுகிய கால , தொலைநோக்கு , வியாதிக்கு கசப்பு மருந்து , ஊரை காப்பாற்ற ஒருவனை பலிகொடு என்பதைப்போல இதுவும் தனிநபர் வாழ்வில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தத்துவார்த்த  நியாயமாகக்கூட  இருக்கலாம் என நினைக்கிறேன்.

ரவி என்னிடம் “ தலைவர்  புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடுகிறார்கள்  ஏன் அங்கு செல்லாது இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்? ” என்றார் . நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை .எப்படியும் பட்டியல் வெளியானதும் என்னை கரித்துக்கொட்ட போகிறார்கள் . நான் வல்சராஜை ஏமாற்றி வாங்கிய பதவி இது என்று அவர்களும் , வல்சராஜ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என மறுக்கும்போதே,அப்படி ஒன்று இருப்பதாக எண்ணச்செய்வார். அப்படி எண்ணுபவர்களை அது மேலும் கொந்தளிக்க செய்யும் . தங்களை சமாதானம் செய்யும் வாய்ப்பபை அவர்களே வலிந்து  வல்சராஜுக்காக உருவாக்கிக் கொடுத்து அதன் பலனை பெற்றுக்கொள்வதுடன்  . எனது செயல்படுதளம் எனக்கு கிடைக்காமல் போவதற்கு அனைத்து செய்ய முயற்சிக்கப்போகிறார்கள் . எனக்காக அவர்களிடம் வல்சராஜ் எப்படியெல்லாம் இல்லையென மான்றாடி என்னை வென்றெடுப்பதை ,  நான் காணவேண்டும் என விழைவார்கள் .விதி நான் இதன் உள்ளேவந்தபிறகு, சூழும் திரளின் ஒத்திசைவிற்கு ஏற்ப நானும் ஆடியாக வேண்டும் . மிக வெறுப்பாக இருந்தது . சிறிது நேரம் கழித்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும் எழுந்து சென்ற பிறகு யாரோ பெருங்குரல் எடுத்து வாதம் செய்வதை கேட்க முடிந்தது . ரவி முன்கட்டுக்கு விரைந்தார் . எப்படியும் எனக்கான அழைப்பு வரும் என காத்திருந்தேன் 

எதிர்நோக்கியதைப்போல தலைவரிடமிருந்து கூப்பாடு வந்தது . நான் முன்கட்டிலுள்ள தலைவர் அறைக்கு சென்றேன்.   தலைவர் என்னை கண்டதும் வாழ்த்து சொல்லி எனக்கு சால்வை முறைமைகள் செய்தார் . முக்கிய பொறுப்பிலிருக்கும் நான் அனைவரையம் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதில் துவங்கி அவர் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார் . அவர் சொல்லும் சஹஸ்ராம்சத்தில், ஒன்றை அம்சத்தையும்  கூட என்னால் செய்ய முடியாது. எதையும் நான் செய்யக்கூடியவன் அல்லன் என்பதையும் அவர் அறிந்தே இருந்தார் . 

கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்களை சிலர் சமாதானம் செய்வதும் , அவர்கள் யாருக்கும் அடங்க மறுத்து வல்சராஜிடம் கடுமையாக விவாதத்தில் ஈடுட்டுப்பட்டிருந்தனர் .சிலர் மெளனமாக தங்களின் விருப்பமின்மையை வெளிப்படுத்திய படி இருந்தனர். பொதுவாக இருந்த மற்ற சிலர் எனக்கு வாழ்த்து சொல்ல, நான் அனைவரின் கைகளை தொட்டு அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டிருந்தேன் . இதோ தலைவர் அவர்வேலையை முடித்துக்கொண்டார் . எப்படியும் வல்சராஜை திரும்ப கொண்டு விடும்போது . இப்போது தலைவர் சொன்னதையே வல்சராஜ் இன்னும் தனது “அழகிய  செம்மொழியில்” பிறிதொரு வழியில் சொல்லப்போகிறார் . 

இது நல்லதோர் அரசியல் சூழ்தல் . இதை பார்த்து புரிந்து அலுத்துப்போயிருக்கிறேன் . அவர்களில் முதல்மை படைக்கலாம் நான் .எங்கள் மூவருக்கிடையேயான உறவு மிக ஆழமானது அழுத்தமானது . ஆனால் அது வெளிப்டையானதில்லை . என்னை போன்ற ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் விழைவுப்படி செய்யப்பட விடுவதால், எழும் நன்மைகளை யானை இலை தழைகளை சுருட்டி காலிலடித்து மண்விலக்கி  வாயிலிட்டு உண்ணுவது போல வேண்டியதை தங்களுக்காக தொகுத்துக்கொள்வதுடன் . எனக்கு எதிராக எழும் அனைத்தும் என் அகந்தையால் , அவர்களின் சொல்பேச்சி கேளாமையால் , என் அறிவின்மையால் நிகழ்ந்ததாக, புகாரிட வந்தவருடன் அவர்களும் இணைந்து மருகி நின்று குழப்புவார்கள் . பார் , இந்த அரி தலைவர்களுக்கு விருத்தமாக , தான்தோன்றித்தனமாக செய்யும் அனைத்திற்கும் வெகு விரைவாக விலையை கொடுப்பான் . தலவர்கள் அவன் மீது மதிப்பிழந்து விட்டார்கள் ,என்கிற மனநிறைவில் களைந்து செல்வார்கள் . 

எனது இந்த கட்டில்ல தன்மையால்  எனது செயல்கள் அனைத்து மட்டத்திலும் எழுந்து வரும்போது என் போட்டியாளர்களுக்கு தலைவர்களே தலைமைதாங்க . பிறதெல்லாரும் என்னை நாடி வருவார்கள் . எனது  பின்னால் அணிதிரள்வார்கள் . என்னுடைய  தலைவர் மீதுள்ள விசுவாசம் அனைத்து ஒற்றை தரப்பாக இணைந்து தனது முரணியக்க விளைவுகளை வெளியிடத் துவங்கும் . அதுவே என்னால் எழுந்து வரும் தலைவர்கள் விரும்பும் அரசியல் விளைபொருள் . அதை வெட்டி ஒட்டி தங்களுக்கானதை எடுத்துக்கொள்வார்கள் . 

பாலனுடனான எனது அரசியலோடு நான் இங்கு வராது அங்கேயே நின்றிருந்தால் நிகழ் அரசியலை அறிந்து கொள்ளாமலேயே  இருந்திருப்பேன்  , அன்று பெற்றதை மட்டும்  வைத்திருந்தால் இன்று என்னை சுற்றி நிகழும் இந்த அரசியல் போக்கால் மனம் பிறழ்ந்த நிலையை தொட்டுவிட்டிருப்பேன். ஆனால் நான் ,இன்று இங்கு வந்து; தொடர்ந்து இருந்துகொண்டிருந்ததால் யாரும் சொல்லிக்கொடுக்காத ஒரு கற்பித்தலை நான் அனைவரிடமும் அடைந்து கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தை நிச்சயமாக இழந்து போயிருப்பேன் . 

யாருக்கும் யாரும் அரசியல் பாடங்களை சொல்லிக்கொடுப்பதில்லை ஆனால் அது நிகழ்ந்து முடியும் நிகழ்வுகளின் அனுபவங்களை தொடுவதன் வழியாக கற்றுக்கொள்ளுதல் .இன்னதென விளக்க முடியாத ஒரு புரிதல்களை கொடுத்தபடி இருந்தது . ஒரு அமைப்பில் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டி வரும்போது , அதுவே அதை இயக்கும் ஆற்றலை கொஞ்ச காலத்திற்குள் அவர்களுக்கு கொடுத்து விடுகிறது  . இது காலத்தின் பெருநியதிகளில் ஒன்றென நினைக்கிறேன் . ஒருவித நிறைவின்மை , ஒருவித பசியை எப்போதும்  உணர்ந்து கொண்டிருந்ததனால், நான் பலவித முயற்சிகளையும் அதன் வழியாக பரவிய அனுபவங்களை பெற்றபடி இருந்தேன் என நினைக்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்