https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

வெண்முரசு / எழுத்தழல் / காற்றின் சுடர் 3

ஶ்ரீ:


பதிவு : 307 தேதி / 28-10-2017


வெண்முரசு / எழுத்தழல் / காற்றின் சுடர்



வெண்முரசின் இந்த இறுதிப் பகுதி அபிமன்யுவைu மையப்படுத்தியே அனைத்தும் ஞானமயமானதாக உருமாறத்துவங்குகிறது


ஆம், வெற்றியை விழைந்து செல்கிறேன். ஆனால் வெற்றியென்று நான் எண்ணுவது பிறிதொன்று. அவரிடமிருந்து எதையேனும் நான் கற்றுக்கொள்ள முடியுமென்றால் அது இப்போதுதான். ஒவ்வொன்றும் அவரை விட்டுச் செல்கின்றன. ஒருவேளை அவர் துவாரகையை இழக்கக்கூடும். முன்புலரியில் அணியும் ஆடையுமிலாது கருவறையில் கரிய பெருமேனியுடன் எழுந்து நின்றிருக்கும் ஆழிவண்ணப் பெருமாளைப் பார்க்கும் தருணம் எனக்கும் அமையக்கூடும்என்றான்.

குருவாயூரில் அதிகாலையில் சிகப்பு கௌபீனம் மட்டுமே கட்டிக் காட்சிதருவது போல . நடை திறக்கும்வரை நாராயாணா , நாராயணா என கூவும் திரள் திறந்தவுடன் கதறுவது கண்ணா....குருவாயூரப்பா.....என . ஞானம் மறைந்து பக்தி பிரேமை மட்டுமேயாக....


உத்தரைஅவர் மெய்யாகவே சூடிய எதுவும் அவரிலிருந்து உதிர்வதில்லைஎன்றாள்.

நார - அயன தத்துவத்தை ஒரே வரியில் சொல்கிறார் , வகுப்பெடுப்பு போல் அன்றி எளிய உரையாடல்கள் வழியாக....


அவர்கள் ஒருகணமேனும் அவரை விட்டு விலகமாட்டார்கள். அவர்கள் உள்ளங்களில் தன்னுரு கரந்து நிறைந்துள்ள பிரேமை மட்டுமேயான ஒருத்தி முன்பு அங்கு கோகுலத்தில் இருந்தாள். அவள் பெயர் ராதை என்கிறார்கள். அவளிடமிருந்து அவர் ஒன்றை கற்றுக்கொண்டார்என்றாள். அபிமன்யூஅவரா? அங்கிருந்து கற்றுக்கொண்டாரா?” என்றான். “என்ன ஐயம்? இப்புவிக்கு அவர் கற்பிப்பவை முழுக்க அவர் அங்கிருந்து கற்றுக்கொண்டவை மட்டும்தான்என்றாள்.

அவர் கால்களை முதலில் சென்னிசூடியவள் அவள். அப்பெயரை அவருக்கிட்டவள். அவர் ஏந்தும் இசைக்குழலையும் சூடும் பீலியையும் அளித்தவள். அவள் சுட்டிக்காட்டிய மண்ணும் விண்ணுமே அவர் அறிந்தது. இந்த பாரதவர்ஷம் இன்றுவரை அறியாத ஒன்றை அவள் அவரிடம் சொன்னாள். இது பெற்றுப் பெருகும் பேரன்னையரால் நிறைந்த மண். அவர்கள் வயிற்றிலிருந்து எழுந்து சொல்லும் வாளும் ஏந்தி திசையெங்கும் விரிந்த ஞானியரும் வீரர்களும் வாழும் நிலம். அசுரவேதம் அன்னையரை அறிந்தது. மானுடவேதம் அறிந்தது ஞானியரையும் வீரரையும்.”

ஆனால் பித்தெடுத்த பிச்சியரின் நிலை இரு வேதங்களுக்கும் தெரியாது. பெற்றுநிறைந்தோ தேடிச்சென்றோ கண்டடைய முடியாத ஒன்றை கனவு கனிந்து சென்று தொட்டுவிட முடியுமென்று அவள் அவருக்கு காட்டினாள். பாரதவர்ஷத்திற்கு அவர் கற்பிக்க இருப்பது அதுவேஎன்றாள் உத்தரை

ராதைஅப்படி ஒரு வெக்தியே கிடையாது என, பக்தி சித்தாந்தத்தில் உயர்ந்து ஒளித்து வைக்கப்படுபவர் , கண்ணனைவிட வயதில் மூத்தவள் , அவனுக்கான ஆசிரியை என்கிறது வெண்முரசு , நிஜம் அது பக்தியை பிரபலபடுத்த சொல்லப்படுவது , கோபிகைகளை உதாகரிக்கிறது இங்கு

சென்று வாருங்கள்! நீங்கள் அறிந்தவற்றைக் கடந்து பிற சிலவற்றை அறியக்கூடும்என்றாள். “நீ என்ன சொல்கிறாய்?” என்றான். அவள் மேலும் முகம் குனித்து முகத்திரையை இழுத்து மார்பு வரை சரித்து அமர்ந்தாள். “அறமும் நெறிகளும் முறைகளும் கடுகென்று சிறுத்து காலடியில் மறைய எழுந்து நிற்கும் பித்துக்கணமொன்று உண்டு. பிறிதொருவர் இல்லாத பாதையில் ஒவ்வொருவரும் சென்று அமரும் இடமொன்று உண்டு. இப்புவிக்கு அவர் சொல்ல வந்தது அவ்விரண்டைப்பற்றி மட்டும்தான். விண்ணிலிருந்து முனிவர் தொட்டு இறக்கிய வேதங்களிலோ மண்ணில் பரவி தொல்மூதாதையர் வார்த்தெடுத்த அசுர வேதங்களிலோ இல்லாதது அந்த மெய்மை ஒன்றுதான்என்றாள்.

இங்கு ஒவ்வொருவரும் ஐந்தாவது வேதம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாராயண வேதம். அது தனிமையின் கனவின் வேதம். விழைதலின், எய்துதலின், ஆதலின், அமைதலின் சொல்.” அவள் வடிவில் அங்கே அணங்கு ஒன்று வந்து அமைந்துள்ளதா? இளவரசி ஒருத்தி சொல்லும் மொழிதானா அது? இவற்றை நான் என் உள்ளிருந்து எடுத்து செவிநிறைத்துக்கொள்கிறேனா? “எனக்கு அவர் அதை சொல்லவில்லைஎன்றான்.

அவர் எனக்கு அதை சொல்லவேண்டியதே இல்லை. காதல்கொண்ட கன்னியர் எவரிடமும் அதை சொல்லவேண்டியதில்லைஎன்றாள் உத்தரை. அபிமன்யூ எழுந்துநான் கிளம்புகிறேன்என்றான். “அன்னையும் ஆகி நின்று இத்தருணத்தில் அறிந்து எழுக என வாழ்த்துகிறேன்என்றாள் உத்தரை. “ஆம்என்று சொல்லி தலைவணங்கி அவன் திரும்பி நடந்தான்.

பெண்னென ஏறிட்டுக்கொளவதை பிரேமையின் உச்சம் அற்புதமாக வெளியாகியிருக்கிறது .


-கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்