https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 14 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 213 * எதிர்வினையின் மையத்தில் *

ஶ்ரீ:





பதிவு : 213 / 293 / தேதி :- 14 அக்டோபர்    2017


*   எதிர்வினையின் மையத்தில்    *



தனியாளுமைகள் - 38”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-13

இது சிறுபிள்ளை விளையாட்டு வலிந்து நாம் சொல்லும் எச்சரிக்கைகளுக்காகவே நம்மை வெறுப்பவரகள் தங்களின் அறியாமையால் விளையாட்டில் படும் அடிகளுக்கு பெரும் ஆதாரவை எதிர்நோக்குவார்கள் . இங்கு மரணம் கூட மௌனமாக கடந்து செல்லத்தக்கதென அறியாதவர்கள்.  இவர்களின் தவறுகளுக்கும் நம்மையே சுட்டுவார்கள். இது அனாவசிய வம்பு.






து உள்நுழைந்தபிறகு வெளியேறும் வாய்ப்பில்லாது. அறிந்திருந்தாலும் , வெளியேறும் காரணத்தை  காத்திருந்தேன் . ஆனால்  அடுத்தடுத்து என ஏதாவது ஒன்று  நிகழ்ந்துகொண்டே இருந்து  . அன்று இரண்டாம் நாள் மாலை மாணவனொருவனை அழைத்துக்கொண்டு ரஹ்மான் என் வீட்டிற்கு வந்தான் . வழமைபோல தேர்தல் வாபஸ் அடிதடி. லாஸ்பேட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அது எடுத்துக்கொள்ளப்படவில்லை . எதிர்பார்த்த பதட்டம் வந்துவிட்டது . காவல் நிலையம் செல்லும் முன்பாக நான் லாஸ்பேட் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பினரை அங்கு முன்னமே குழும சொல்லியிருந்தேன் . கவலையடைந்த ரஹ்மான் தலைவரிடம் சொல்லி உதவி கோரலாமென்றன் . நான் உடன்படவில்லைஇந்த மாணவர் தேர்தலில்  ஈடுபடலாமா வேண்டாமா? என்பது மட்டுமே அவருடன் நாம் விவாதிக்க தக்கது, பின் அவரிடம் கொடுக்கவேண்டியது வெற்றி பெற்றோம் என்கிற சொல் மட்டுமே . நம்மால் இதை கையாளமுடியதுபோனால் நாம் இதில் நுழைந்தது வீண்என்றேன் . “இப்போதும் ஒன்றும் கெடவில்லை இதிலிருந்து வெளியேற இது சந்தர்ப்பம்என்றேன் . மிகுந்த வன்மத்துடன் என்னை பார்த்தபடி மௌனமானான் . தலைவர் தேவையற்று என்னை உள் நுழைந்ததாக நினைக்கிறான் என உணர்ந்தேன் .

களத்தில் நுழைந்த பிறகு நான்  பிறிதொருவரிடம் கருத்து கேட்பதோ அல்லது அவர்கள் என் முடிவில் தலையிடுவதையோ அனுமதிப்பதில்லை . அரசியலில் புறவய நிலவரங்களை கணக்கிடும் கண்களை தாண்டி அகவய உணர்வுகளுக்கே முக்கியத்தும் நான் எப்போதும் நினைப்பவன் . அது சொல்வதை சரியாக செய்தால் வெற்றியை நோக்கி நகர்கிறோம் என்றே அர்த்தம் . அந்த உணர்வை வார்த்தைகளில் கொண்டுவரவே இயலாது. என்னை பொறுத்தவரை இது உட்கட்சி அரசியலில். எனக்கான இடத்தைப்பற்றிய பிறரின் ஊகங்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது . அதை தாண்டி இந்த மாணவர் தேர்தல் குட்டையில் படகு விடுவது . பயணம் மாதிரிதானே அன்றி நிஜமில்லாதது . இங்கிருந்து எந்த ஊருக்கும் பாதையில்லை . அதை தேட விருப்புபவன் செயல்படும் முறை வேறு விதமானது . ரஹமான் போன்றவர்கள் ஒருநாளும் அதை தெரிந்து கொள்ளப் போவதில்லை .

காவல்நிலையத்தை அணுகும் தோரும் அவனுக்கு  பதட்டம் ஏறி வருவது தெரிந்தது . எனக்கும் அப்படித்தான் . ஆனால் நான் அதை அடைகாத்தபடி இருந்தேன். இப்போதைய சூழலில் ரஹ்மானுக்கு எதையும் சொல்லிப்புரியவைக்க முயல்வது, வாதத்தில் கொண்டு விடும். நாங்கள்  மேற்கொண்டு எதுவும் பேசாது லாஸ்பேட் காவல் நிலையத்திற்கு விரைந்தோம் . அங்கு நாங்கள் சென்று சேர்வதற்கு முன்னோராக இளைஞர் மற்றும் மாணவ அமைப்பினர் இருநூறு பேர்களுக்கு மேலாக குழுமிவிட்டிருந்தனர் . காவல் நிலயமெதிரில் தர்ணா மாதிரி நடத்த துவங்கினோம் . அரை மணி நேரத்திறகு பிறகு சமாதானத்திற்கு வந்தனர் . காவல் நிலையத்தின் உள்ளிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்து உள்ளே சென்றோம். முறைப்படி தேர்தல் நிகழாது போனால் இதைப்போல காவல்துறை உயரதிகாரிகளின் அலுவலகத்தில்  தினம் நிகழ்த்த தயங்கமாட்டோம் என்று எச்சரித்து விட்டு . வெளிவந்ததும் ,அது அன்று அடங்கிப்போனது . எனக்கு மட்டும் நாம் உள்வந்தாகி விட்டது .இனி நான் நினைத்தாலும் வெளியேற முடியாது என தெரிந்து போனது.

நான் காவல்நிலையத்தில் இருக்கும் போது நுண்மையாக ஒன்றை உணர்ந்தேன் என நினைக்கிறேன் . கண்ணன் உள்துறை அமைச்சர் . காவல் துறை முழுவதுமாக அவரது கட்டுப்பாட்டில் வருவது . நான் காரிலிருந்து இறங்கி காவல்நிலையத்திற்குள் நுழையும் போதே தாமாக ரவிச்சந்திரனின் காரை கவனித்ததை மிக தாமதமாக உணர்ந்தேன் . அப்படியானால் அவர் உள்ளே இருந்திருக்க வேண்டும் . காவல் துறை அதிகாரிகள் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் . அதற்கு எதிர்வினையாக நாளை என்னென்ன செய்யவேண்டிவரும் என நினைத்தபடி இருந்தேன் . ஆனால் மாணவர் தாக்கப்பட்ட விஷயத்திற்கு "முதல் தகவல் அறிக்கையை" அவர்கள் உடனே பதிவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை . இதில் எங்கோ முரண் . நான் அவனிடம் இதுபற்றி பேசமுடியாது ரஹ்மானிடம் விடைபெற்று வெளியேறினேன் . எனக்கு ஒருவித புரியாமை பதட்டம் எழுந்துவந்து. இன்னதென அறிந்து கொள்ள முடியாமை . நான் தலைவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என நினைத்தேன் நான் வழமையாக அமரும் கடற்கரையில் இருந்தபடி இருட்டிவர காத்திருந்தேன் . அதற்குள் என்னை தொகுத்துக்கொள்ள வேண்டும் . நிறைய கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்ததேன் . அதற்கு தலைவரிடம் பதில் கிடைக்கலாம்.

இந்த சிக்கலில் கண்ணன் தரப்பினர் என்னுடைய நுழைவை எதிர்பார்க்க வில்லை என்பதை முதலில் புரிந்துகொண்டேன். தலைவர் அதை ஒரு அனுமானமாக சொன்னாரா? அல்லது கணக்காகா சொன்னாரா ? என தெரியவில்லை ஆனால் கடைசி நேர மற்றம் அந்த "முதல் தகவல் அறிக்கையை" பதிவு செய்தது , எனக்கு பலத் திறப்புகளைக் கொடுத்தது . அது காவல் துறை அவர்கள்  நினைத்ததை போல  உத்துழைக்க மறுக்கிறது என்கிற என் யூகம் சரியாக இருப்பின், காவல்துறைக்கு நிழல் தலைமை இருக்க வேண்டும் , எனில் யாருக்கு அஞ்சுகிறார்கள் . ஒன்று தலைவருக்கு . பிரிதொடுவர் ........ஆம்....முதல்வர் . எனக்கான கணக்கு தொகுக்கப்பட்டதும் நான் தலைவரை சந்திக்க புறப்பட்டேன்.

இரவு 9:00 மணிக்கு மேல் இருக்கும் , அவர் அப்பொழுதான் இரவு உணவு முடித்து கை துடைத்தபடி பனியனுடன் வந்தமர்ந்தார் . நான் சாப்பிடாததை கேட்டு தெரிந்துகொண்டார் , தலைவருக்கு உணவு பறிமாறிவிட்டு வெளியே வந்த ரவி என்னை கேட்டு டீ போட சென்றான் . தலைவருக்கு மதிய உணவு மட்டுமே அவரது வீட்டில் தயாரிக்கப்படும் . காலை உணவு அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து, மதருக்கு அவர் மீதுள்ள பிரியத்தால் அங்கிருந்து அனுப்பட்டு வருகிறது . இது நெடுநாள் வழக்கமாக இன்றுவரை தொடர்கிறது . இரவுணவு மூன்று இட்லி வெளி விடுதியிலிருந்து வாங்கிவருவார்கள். பால் மட்டும் அங்கேயே தாயாரிக்கப்பட்டுவிடும் . சில சமயங்களில் இரண்டு வாழைப்பழம் பால் மட்டும் இரவு உணவாவதுண்டு.

வழமையாக அமரும் நாற்காலியில் அமர்ந்தபடி  “என்ன காவல் நிலையம் போய்வந்தீர்கள் போல? . எல்லாம் சீக்கிரமே தொடங்கியாகிவிட்டதா?” என்றார் . நான் எல்லாவற்றையும் முழுமையாக சொல்ல துவங்குமுன்னர் “ரஹ்மான் இப்போதுதான் கிளம்பி சென்றான்” என்றார் . அவன் எல்லாவற்றையும் ஏடாகூடமாக சொல்லி இருப்பான் . நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை . காவல் நிலையத்திற்கு வெளியே ரவிசந்திரன் வண்டியை பாரத்ததையும் பின் நான் அனுமானித்ததையும் அவரிடம் சொன்னேன் . அவரிடம் ஏற்கனவே தகவல் இருக்கிறது என்பதை அவரது மாறாத முக பாவதிலிடுந்து புரிந்து கொண்டேன். 

ஆளும் அரசு சூழலின்  மத்தியில் அனைத்து எதிர்விசை சமன்பாட்டில் நிலைகொள்ளும் அதிசயம் எப்போதாவது நிகழ்வதுண்டு. இதுபற்றி தலைவர் பல சந்தர்ப்பங்களில் எனக்கு சொன்னது நினைவிற்கு வந்தது  . அதை  இப்போது என்னால்  பார்க்க முடிகிறது. ஆனால்  பார்க்க மட்டுமே முடியும் . தொடவோ எடுக்கவோ முடியாது. புதுவை அரசின் சிக்கல் பல பரிமாணங்களை கொண்டதாக , அதன்  வேர்  சென்னையிலும் தில்லியிலும் பரவியிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...