https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 25 அக்டோபர், 2017

எழுதழல் , ஐந்து : துலாநிலையின் ஆடல் – 6

ஶ்ரீ:



பதிவு 304 / தேதி : 25-10-2017



 துலாநிலையின் ஆடல் – 6



|| எதன்பொருட்டு அதை சௌவீரர்களும் பால்ஹிகர்களும் கடைபிடிப்பார்கள்? இன்றுவரை அவர்களின் படைகள் மத்ரநாட்டுக்குள் நுழையவே இல்லை என்றால் அது எந்தையர் இருவரின் தோள்வலிமையும் வில்வலிமையும் கண்ட அச்சத்தால் மட்டுமே. படைகொண்டு என்றேனும் அவர்கள் எழுந்துவந்து பழிதீர்க்கக்கூடும் எனும் கருதலால். இத்தனை காலம் இரு காவல்நிலைகளென நின்று மத்ர நாட்டைக் காப்பாற்றியது அவர்கள் கொண்ட புகழ். இனிமேலும் அவர்கள் கொடிவழியினரின் காப்பே மத்ரநாட்டுக்குரியது என்று உணர்க!” ||

அச்சம் மகிழ்வு போன்று கண்களுக்கு விஷயமாகாத ஒன்றுதான் செல்வாக்கு , செல்வாக்கென்பது பிறரின் அச்சம் , அல்லது தேவைக்கு காரணியாக இருப்பது . ஒருவர் மீதுள்ள அச்சம் அவரின் திறன் பொருட்டு மட்டுமே இருக்க வேண்டுமென்பதில்லை . பிறிதொருவரின் பலத்தின் பின்னணியில் கூட அது இருக்கும் . பிறருக்கு சல்லியர் மீது இருக்கும் காரணமாக எழும் அச்சம் அவருக்கு சபையில் தருக்கி நிமிர வாய்ப்பிருந்தாலும், உள்ளாழத்தில் அவரும் தனது பலம் பிறிதொருவரின் பொருட்டு என்கிற காழ்ப்பை அடைகிறது . இருந்தும் அதற்கு நல்ல விலை கிடைக்கும்போது அதை விற்கவும் அவர்கள் தயங்குவதில்லை. சல்லியரின் மனோபாவம்  இதை போன்றதுவெளிப்பார்வைக்கு கொண்டாடப்படுவதின் பலனை கொடுப்பவரும் பெறுபவருக்கு அடைவார்கள் . அதற்கு அருகதையில்லை என்கிற உண்மையை உணர்ந்தே. இங்கு மொழியில் சொல்லாது சுருதகீர்த்தி சொல்ல விழைவது அனைவருக்கும் புரிந்தே இருந்தாலும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள அவரின் ஆணவம் தடுக்கிறது

தென்தமிழக பக்கத்தில் மிக இழிதவர்களை குறிக்கும் சொல்சல்லிப்பயல்என்பது இது அதன் நீட்சியோ?



கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...