https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 18 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 217 * ஊழின் களத்தில் தெறிவாகும் காய்கள் *

ஶ்ரீ:





பதிவு : 217 /  297 / தேதி :- 18 அக்டோபர்    2017


* ஊழின் களத்தில் தெறிவாகும் காய்கள் *



வாய்ப்புகளில் புரியாமை - 04 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.

அரசியலில் மிக வித்தியாசமான சில புதிய முறைமைகளை முக்கியமான அரசியல் கட்சிகள் உலகிற்கு வெட்கமில்லாமல் சொல்லத்துவிங்கி இருந்தது . அது அந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வெளிப்பட்டது . “கொள்கைக்கும், கூட்டணியின்  தொகுதி உடன்பாட்டிற்கும் சம்பந்தமில்லை” என்கிற விசித்திரமான அறிவிப்பு அது . இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவதாக , அவர்களை நோக்கி பேசுவதாக ,திமுகவின் அற்புத விளக்கத்துடன் பாரதிய ஜனதா கூட்டணி உடன்பாடு நிகழ்ந்தது அதுவரையில்  மறைமுகமாக எல்லோராலும் உணரப்பட்ட அரசியல் நடைமுறை சித்தாந்தம் தான் அது  . ஆனால் அது முற்றாக வெளிப்படும் போது நிகழும் ஆபாசமாக , மலிந்த ரசனையாக வெளிபடுகிறது  . இப்படி ஒரு கருதுகோள் முன்வைக்கப்ட்டால் , பின் குடிமை சமூகம் எந்த அடிப்பபையில்தான்  ஒரு கூட்டணியை தேர்ந்தடுக்கும் என்பதைக்கான விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ளவே இயலவில்லை . 




அனைத்து பெரும் நிகழ்வுகளின் துவக்கம் மிக எளிய தற்செயல்களிலிருந்து தொடங்குவதை பார்த்திருக்கிறேன் . மாணவர் அமைப்பு தேர்தலில் எனக்கு ஈடுபடும் எண்ணமில்லாது ,தலைவரிடம் நான் மறுத்த போது, அவரால்  வலிந்து இதனுள் நுழையும்படியாக நேர்ந்தது  . அந்த நிகழ்வின் போது ஏற்பட்ட சில உளப்பதிவை தலைவரிடம் வைக்கப்போக, அவரும் பல தகவல்களை சொன்னார் . அதன் நிதர்சனத்தன்மை முகத்திலறைந்தபோது , வயதின்மை மற்றும் அனுபவமின்மை காரணமாக அதை ஜீரணிக்க முடியாது திணறினேன் . அவை அதுவரை அடையாத அனுபவமாக இருந்த போதும் , அவற்றால் கிடைத்த திறப்புகள் வழியாக எனது ஆழ்மனப்படிமம் எனக்கு நிகழ்த்தி கையளித்த வழிகாட்டல்கள் பெரும் ஆச்சர்யத்தை கொடுத்தவை.

அன்றைய செய்தி கட்சி அனுதாபிகள் வேறு, குடிமை சமூகம் வேறு என ஒரு புது அரசியல் சமூக பகுப்பை அப்போதைய தேர்தல் கூட்டணி செய்திருந்தது . அதை ஒட்டி அப்படி பேசுவது என்பது நவீன அரசியல் முறைமையாகிப் போனது . 

செய்தி 1) புதுவை அரசாங்கம் அன்று காலை அமைசச்சரவை கூடி பால் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்திருந்தது . கூட்டணி அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  விஸ்வவநாதன் அமைச்சர் இருந்த அவர் ஜனநாயக முறைப்படி தீர்மானத்தை ஆதரித்தார் . 

செய்தி 2) மாநில கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுநாள் இடைவெளியில் புதுவை அரசை அதன்  பால் விலை உயர்விற்காக கண்டித்து ,அரசை எதிர்த்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது . இதில் வேடிக்கை விவசாயத்துறை விஸ்வநாதன் அதற்கு தலைமை தாங்குவதாக இருந்தது . இது என்ன கூத்து என நினைத்திருந்த போதுதான் ரஹ்மான் என்னை தேடி வந்திருப்பதாக சொன்னார்கள் . சென்று அவனை சந்தித்தபோது . அவனும் இதே பால் விலை உயர்வு போராட்ட நாடகத்தை பற்றி கடுமையாக விமரிசித்தான் . எனக்கும் அவன் சொன்ன அனைத்திலும் உடன்பாடுதான் ஆனால் அடுத்த என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி.

ரஹமானுக்கு அந்த மாணவர் தேர்தலுக்கு பின் என்னுடன் இணைந்து செயல் படுவது சிரமமில்லாத வழியாக தோன்றியிருக்கலாம் . நிறைய நேரம் அதை சுற்றியே அவனது பேச்சி இருந்தது . பல காரணங்களுக்காக நான் எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபடும் எண்ணம் அந்த செயற்குழு குழப்பத்திற்கு பிறகு இல்லாமலாகியிருந்தது . திட்டங்களை வாடிவமைப்பதில் எனக்கு என்றும் சிரமமாக இருந்ததில்லை . ஆனால்  எதிர் நிற்கும் குறுங்குழு கொடுக்கும் அவசியமில்லாத நெருக்கடிக்கடிகளும் அதை தொடர்ந்து எழும் உளச்சோர்வும் எனக்கு மிகுந்த களைப்பை கொடுத்திருந்தன . இவனிடம் அதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது . ரஹமானுகு அவனுடைய  காலத்திலுள்ள சவால்கள் புரிந்துகொள்ள தெரியாதவன் . இதில் இந்த சமாச்சாரத்தை வேறு சொல்லி விளங்கின மாதிரிதான் . மேலும் இவனுடன் இணைந்து இனி எந்த நிகழ்விலும் பங்கெடுக்கும் எண்ணம் நிச்சயமாக இல்லை . மாணவர் தேர்தலிலேயே இவன் எந்த மாதிரியான ரகம் என பார்த்தாகிவிட்டது .

இந்த விஷயத்தில் ஏதாவது செய்யவேண்டும் என தோன்றினாலும் . செய்வதாக இருந்தால் தனித்து ஏதாகிலும் செய்யவேண்டும். நான் அவனை அந்த மாணவர் தேர்தலிலேயே அவனுடைய போதாமையையும் சிறுபிள்ளை தனமான அணுகிமுறையும் கொடுத்த ஒவ்வாமையை உணர்ந்தேன்  . நான் தலைவரை சந்திக்க கிளம்பினேன் . அது வழமையாக அவரை சந்திக்கும் நேரம் . அவனும் என்னுடன் கிளப்பினான் . தலைவர் ஓய்வாக இருக்கும் சமயங்களில் காலையும் ஒன்று . எங்கள் இருவரையும் பார்த்து புன்முறுவலுடன் அருகே அமர சொன்னார் .

நான் வீட்டிலிருந்து கிளம்பும்போதே நான் எந்த போராட்டத்திற்கும் ஆளில்லை என தெளிவாக ரஹமானிடம் சொல்லி விட்டதால் . அவன் தலைவருடன் நேரடியாக அதைப்பற்றி பேசத்துவங்கினான் . நான் அமைதியாக பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன் . தலைவர் சமீப செய்திகள் மீது தனுக்குள்ள ஒவ்வாமையையும் ,அரசியல் களத்தின் தற்போது நிலவும் கீழ்மையை கடுமையாக சாடிக்கொண்டிருந்தார் . அவருக்கு பலவிதமாக தனது யோசனைகளை சொல்லி அவரை இதற்கு எதிர்ப்பாக ஏதாவது போராட்டம் நடத்தச்சொல்லி வற்புறுத்திய படி இருந்தான் . ஒரு கட்டத்தில் தலைவர் கடுமையாக சீறத்துவங்கியதும் ,தான் மாணவர் காங்கிரஸ் சார்பாக நடத்தப்போவதாக சொன்னதும், அவர் சிரிக்க துவங்கிவிட்டார் . 

மாணவர்களுக்கும் பால் விலை உயர்விற்கும் ஏதாவது தொடர்புள்ளதா   . நீ எப்போதுதான் இதுபோல சம்பந்தமில்லாது  பேசுவதை நிறுத்தப்போகிறாய் எனத்தெரியவில்லை என கடிந்து  கொண்டார்  . சட்டென என்னை நோக்கி ஏன் இவர் போராடட்டும் இளைஞர் காங்கிரஸ் தூங்கிக்கொண்டிருக்கிறது என பத்திரிகைகள் கிண்டல் செய்வது அவருக்கு தெரியாததா என்றார் . எனக்கு திக்கென்றது . கடைசியில் வழமைபோலஎன்னை இழுத்து  இதில் விட்டான். ஊழ் தனது களத்திற்கு காய்களை தெறிவு செய்ய துவங்கிவிட்டது என அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...