https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 24 அக்டோபர், 2017

வெண்முரசு எழுதழல்

ஶ்ரீ:
பதிவு : 302 / தேதி 23-01-2017




இரு இயல்புகளால் அஸ்தினபுரியின் அரசர் இயக்கப்படுகிறார். ஆணவமும், மண்விருப்பும். ஆகவே ஆணவமும் மண்விருப்பும் கொண்ட அனைவருக்கும் இயல்பாகவே அவரை புரிந்துகொள்ள முடிகிறது. அவருடன் இணைவதே அவர்களுக்கு உகந்ததாகவும் இருக்கும். நம்முடன் வந்தால் இங்கிருக்கும் பிற இயல்புகள் அவர்களை உந்தி வெளியே தள்ளிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு அவையிலும் பேசி நகைத்து சினந்து நடித்து தங்களை அவர்கள் இவ்வகையில் நிறுவிக்கொள்ளவேண்டும்என்றான் சுதசோமன்”. வெண்முரசு - எழுதழல் .

ஒரு யதார்த்த உலகம் செயல்படும் முறை மிக எளிமையாக சொல்லப்படுகிறது . அறம் எனப்படுவது அனைவராலும் புரிந்து கொள்ளப்படுவது . பொதுவில் அது மீறப்படுகிறபோது எவருக்கும் அது ஆழ்மனங்களில் இருந்து கொந்தளிப்பாக வெளிப்படுவது . ஆனால் அது சாமான்ய மனிதர்களுக்கானது . ஆனால்அரசியல்சரிநிலைகளைபோலஉலகியல் சரிநிலைகள்இவை . தனிப்பட்ட வாழ்வில் இதை சந்திக்கும் மனிதர்கள் எந்த பதவியில் இருப்பினும் அவர்கள் நகர்வது இந்த உலகியல் சரிநிலைகள் நோக்கியே . ஏனெனில் உடனடியாக பலன் தரவல்லது . அனைவரிலும் கடைபிடிக்கப்படுவது திரளில் இணைவதால் அதுசரிஎன்கிற அறத்தை நோக்கி நகர்கிறது . ஆற்று ஒழுக்குடன் பயணி என சொல்வதைப்போல 

அறமெனப்படுவதை சார்ந்து வாழ்பவர்களின் கொந்தளிப்புகள் மனிதப்பொதுவில் புரிந்துகொள்ளப்படுவதில்லை . அந்த சமூகம் அவைகளை எள்ளலுடன்தான் பார்க்கிறது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்