https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 12 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 401 * காத்திருத்தல் *


ஶ்ரீ:

அடையாளமாதல் - 401

பதிவு : 401 / 562 / தேதி 12 செப்டம்பர்   2018

காத்திருத்தல் 


எழுச்சியின் விலை ” - 03
முரண்களின் தொகை -01 .



என் வரையில் காலம் என்கிற ஒன்றிற்கு காத்திருப்பது அரசியலின் அடிப்படை என்கிற கருத்தைக் கொண்டிருக்கிறேன்  . இரண்டு காரணங்களுக்காக காலத்தை எதிர்நோக்கிதாக அது இருந்தாக வேண்டி இருக்கிறது. ஒன்று காலம் என்பது ஒரு வாசலைப் போல அது தானாக திறக்காத வரை அதை முட்டிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனுமில்லை. இரண்டு ,அப்படி திறந்து கொண்ட வாசல் ஒரே சமயத்தில் நம்மை சுற்றியுள்ள பலருக்கு மனதிலும்  அது ஒரே நேரத்தில் திறக்க வைக்கிறது . இந்த இரண்டும் சேர்ந்தது தான் காலம் என்கிற ஒன்றை நான் புரிந்து வைத்திருக்கிறேன்  . அத்தகைய காலம் நிகழும் போதுதான் , நினைப்பதை விட காரியங்கள் பலமடங்கு வேமெடுக்கின்ற , அத்துடன் இயைந்து செயல்படும் மற்றவர்களும் நாம் சொல்லில் சொல்லாததையும் குறிப்பறிந்து செயல்பட்டு எவற்றறையும் பெரும் வெற்றிக்கு இட்டுச்செல்கிறார்கள்

முதல் கதவு திறந்தவனுக்கு இரண்டாம் கதவு திறக்கவில்லை என்றால் அதை போன்றதொரு வதை அவனுக்கு வேறில்லை. அவன் ஒவ்வொன்றையும் பிறரிடம் விளக்கி , எதிர்பார்த்து ஏமாற்றமுற்று , செய்ய நினைத்தது திரிந்து அதனால் அவை வேறொரு உருக்கொள்வதை தனக்கு எதிரே வந்து குறுக்காக நிறப்பதை பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை தவிற அவன் செய்யக் கூடுவது ஒன்றில்லை.

காலத்தையே நான் எனக்கான சவாலாக எப்போதும் பார்த்து வருகிறேன். அது தனது முதல் கதவை மட்டும் எனக்கு எப்போதும்  திறந்து கொடுப்பதும்  . வெகு அறிதாக சில முறை இரண்டாவது திறப்பான என்ன சுற்றி உள்ளவர்களுக்கு அது மனதில் ஏற்படுகிறது . பல முறை அது நிகழாமல் போனதால் நான் பயணிக்க முயன்ற பாதைகள் முழுவதும் தடைகளால் ஆனதாகவும் , சிறு வழி கிடைத்து அதில் தனித்து பயணிக்கவே என்னை ஊழ் எப்போதும் அழுத்திக் கொண்டிருந்தது . அது செயலின் அகண்ட வெளியை திறந்து கொடுக்காத்தால் அதன் பிற வாசல்களுக்கு இட்டுச் செல்லும் வழிகள் உருவாகி வருவதில்லை . பிறரை ஒப்பு நோக்குகையில் , எனக்கு இது வாழ்நாளில் எப்போதும் நிகழ்வது ஒன்றைக் கொண்டே நிறைவடைகிறேன்.

நான் உருவாக்கி எடுக்க நினைத்த அமைப்பை ஒன்று தொகுக்க கிடைத்த காலப் போதாமையை  முதற் சிக்கலென என்முன் எப்போதும் போலவே கொண்டு நிறுத்தியது  . ஒருங்கிணைக்கப் பட்டவர்களில் எனது நண்பர்கள் சிலர் ஊடுருவியது நான் நினைக்காத பல சிக்கல்களுக்கு காரணமானது. முதலில் அதை தவிர்த்தையும்பின்னர் அது தடுக்க முடியாது போனபோது விளைவுகளையும் நான் கணக்கிடவில்லை . முன்பே தொழிலின் பொருட்டு நண்பர்களை உட்புகுத்தியதால் நல்ல நட்புக்களை இழந்தேன் . அதே தவறை மறுமுறை செய்யலாகாது என்கிற நினைவு இருந்தும இது எப்படி நிகழ்ந்தது என வியந்திருக்கிறேன்

இழந்த நட்ப்புகளை இப்போது நினைத்து பார்த்தால் மனம் எதிர்திசையில்தான் . அதன் நுட்பங்கள் இன்று எனது வருத்தத்தை இன்னும் ஆழப்படுத்தலாம் என்றே அது  பயணிக்கிறது. தொழிலில் இழந்த நட்பு குறித்து பல நாள் நினைத்து வருந்தியதுண்டு. அவர்கள் விலகிய காரணத்தை நான் அப்போது ஆராய முற்படவில்லை இழப்பே அனைத்தையும் கடந்து முன்னின்றது. ஆனால் சிந்தித்துப் பார்த்தால்  அவர்கள் தங்களது நட்பை கடக்க உலகியல் லாபங்களலிருந்து தயங்காது ஒன்றை எடுத்துக் காட்ட தயங்குவதல்லை.

நான் அரசலுக்கு வந்த சூழலையும் எனது வயதையும் இப்போது நினைக்கின்றேன். தேசிய பெருந்தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எங்களை போன்றவர்களுக்கு கிடைக்கவில்லை . லட்சியவாதம் என்கிற ஒன்று தோற்றுப்போன காலத்தில் நாங்கள் அரசியலுக்கு வந்தோம் . அதன் மிச்சம் இருந்த சூழலில் அரசியல் பலவித உடலமைப்பைக்கொண்ட வினோத மிருகமாக அது நின்றுகொண்டிருந்ததுதலைவர் சண்முகம் பல தேசிய ஆளுமைகளிடன் நீண்ட காலம் பழகியவர் என்கிற அடிப்படையில் , அவர் வழியாக எங்கள் அரசியல் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கான சந்தர்ப்பம் . அவருடன் பணியாற்றி காலத்தில் எப்போதும் அவர் வழியாக நான் இறந்த காலத்தில் இருந்த அரசியல் நகர் முறைகளை தெரிந்து கொள்வதில் பெரும் மனநிறைவை அடைந்தேன். இது மிக சிறிய அளவில் அரசியலின் அனைத்து இயங்கு விசைகளை புரிந்து கொள்ள ஒரு காரணியாக இருந்தது . எதிர்காலத்தில் இதுகூட யாருக்கும் கிடைக்கப்போவதில்லை
என்பது எதார்த்தம் .

நான் கூட்ட நினைத்த இளந்தலைவர்களை கொண்ட ஆலோசனை குழவில் மத்தியில் என்னுடன் உடன்பாடில்லாத நாராயணசாமி போன்ற தலைவர் அமர்வது எனது நோக்கத்தை சிதைத்துவிடும் ,என சொல்லியும் தலைவர் என்னை நாராயணசாமியை வைத்தே அந்தக் கூட்டத்தை நடத்த சொல்லி உறுதியாக சொல்லிவிட்டார் . இது அவர்களுக்குள் நிகழும் அரசியல் என்பதால் அதைப் பற்றி மேற்கொண்டு பேச இயலாதுநான் அவர் சொன்னபடியே செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானேன் .

இந்த நிகழ்வு அமைப்பு நான் எதிரார்த்த பதத்திற்கு வருவதற்கு பெரும் தடையாக இருக்ப்போகிறது என உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது . ஆரம்பத்தில் அமைப்பை முடக்கி அதன்வழியாக அதை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்றவர்களை எனக்கு எதிர் நிலையாளர்களாக நான் புரிந்து வைத்திருந்தேன் . இந்த மாநில செயற்குழுவின் வெற்றி அவர்களைத்தான் வீழ்த்தி அமைப்பை எனக்கு முழுமையாக மீட்டுக்கொடுத்தது . ஆனால் நான் சந்தித்த சவால்கள் முந்தைய விட சிக்கலானதற்கு எனது அணுக்கர்களே காரணமாயினர் . என்பது இன்னும் வினோதமானது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக