https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 405 *வாய்ப்பும் விளைவும் *

ஶ்ரீ:பதிவு : 405 / 568 / தேதி 28 செப்டம்பர்   2018

*வாய்ப்பும்  விளைவும்  


எழுச்சியின் விலை ” - 07
முரண்களின் தொகை -01 .
வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே கழித்திருப்பதை நினைத்துப் பார்க்கிறேன் .பிறருக்கு  கிடைத்தற்கு அரியவைகள் மிக எளிதாகவும் , அனைவருக்கும் மிக எளிதென கிடைக்கும் பல விஷயங்கள்  எனக்கு எப்போதும் கிடைக்காததுமாகவே  வாழ்கை என்னைக் கடந்து சென்றிருக்கின்றன. கிடைக்காமல் ஆகும் எளிய விஷயங்களை அடையவே என் போராட்டங்களை நான் நிகழ்த்த வேண்டி இருப்பதை நினைக்கும் போதும் , அது பிறருக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை என்கிற நினைவே வலிமிகுந்ததாக இருக்கின்றன.

அறிய விஷயங்களில் இருந்து கிடைப்பவை நமக்கான அடையாளத்தை கொடுப்பவை ,அந்த அடையாளம்  பிறர் நம்மீது பொறாமை கொள்ள வைப்பவை , அதில் அவர்களது கற்பனைகள் நம் மீது ஏற்றி வைக்கப் பட்டு  , சில காலங்களுக்கு உள்ளாகவே அந்தக் கற்பனைகள்  நம்மைப் பற்றி என்ன கருத்தை உருவாக்கினவோ அதற்கு எதிர்மறையான புறவிளைவுகளை அவை படரவிட்டுச் சென்றிருக்கின்றன என்பதால், அந்த அரிய நிகழ்வுகள் எனக்குள் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தி விட்டதை இப்போது அறிகிறேன்.

வாழ்வில் நிகழும் எளிய விஷயங்களே எல்லோர் மனதிற்கு அனுக்கமானவையாக  ,புற உலகை நம்முடன் இணைப்பவையாக , வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதுடன் , வாழ்வெனும் நெடும் பயணத்தை சுவைமிக்கதாக்கக் கூடியதாக இருக்கிறன்றன  . ஆனால் வினோதமாக அவை எவராலும் தொடர்ந்து நினைவுகூறாதபடி நிகந்து முடிகின்றன

இந்த சிக்கலை விலக்கிக் கொள்ள அல்லது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள , பிறரால் செய்ய இயலாத விஷயங்களை நோக்கிச் செல்வதை நான்  எனது வழமையாகிக் கொண்மிருக்கலாம் . அதன் பொருட்டே நான் எனது அடுத்த நகர்வுக்கான திட்டம் . ஆலோசனை கூட்டத்தின் வழியாக , புதியவர்களை, நான் நினைக்கும் இடத்தில் பொறுத்த முயற்சிக்கும் வேலையை துவங்கினேன் . அதற்கான ஆரம்ப நிலை பயிற்ச்சியாக அந்தக் கூட்டத்தை நிகழ்த்த இருந்தேன் . இப்போதும் எனக்கான வழியை எனது  ஊழ் ஏதாவதொரு வழியில் மாற்றவோ அல்லது தடுக்கவோதான் போகிறது . ஆனால் நான் செயல்படாது இருக்க முடியாது

நிகழ்ந்து முடிந்த செயற்குழு கூடுகை பற்றியும் நான் அதை நிகழ்த்திய விதம்பற்றி தன்னை சந்நிப்பவர்களிடம் தலைவர் ஓயாது பேசிக்கொண்டே இருந்தார் . அவற்றில் சிலவற்றை உண்மை என நான் நம்ப வேண்டி இருக்கிறது. அதுதான் என்னை தொடர்ந்து செலுத்தக் கூடிய விசை. அதை எதன் பொருட்டும் இழக்க முடியாது. என்னைப்பற்றி தனது எண்ணத்தை பலரிடம் சொன்ன தலைவர் அவற்றில்  சிலவற்றையாகிலும் என் அணுக்கர்களிடம் சொல்லியிருந்தால் அவை எனது பயணத்திற்காகவாவது உபயோகப்பட்டிருக்கும். அப்படி நிகழாதது அவர் என்னைப் பற்றி சொல்லியது  எனக்கோ அல்லது என்னை சர்ந்த பிறருக்கோ அது எவ்வித அர்த்தமுமில்லாது போயிருந்தது .

இப்போது வந்து சேர்ந்து இந்த இடத்திற்கு வருவதற்கு, நான்  திட்டமிடவில்லை. வளர்வதற்கான வாய்ப்புள்ள இத்தகைய சூழல் ஒருவனுக்கு அரிதிலும் அரிதாகவே நிகழ்கின்றது. என்றாகிலும் ஒருநாள் இங்கு வந்தடைவதே ஒரு தலைவனாக முயலும் ஒருவன் தனது வாழ்நாள் இலக்காக கொண்டிருப்பான் . அதற்கான வாசல் தெரிகிறபோது அதை சூழலின் பொருட்டு ,மனநிலை பொருட்டு என எந்த காரணத்தையும் சொல்லி அதிலிருந்து அவன் விலக முடியாது

இது ஒரு நாற்களப்பலகை, அதன் வாயில் நாம் இருக்கும் பக்கம் திறந்து கொள்ளுமேயானால், அதில் நுழைவது மரணத்தை கொண்டு  வருவதாக இருந்தாலும்கூட அதில் உள் நுழைவதே அவன் செய்யக்கூடியதாக இதுக்கும்எனது வாழ்வில் அப்படிப்பட்ட தருணம் மாற்றமுடியாத பல விளைவுகளைக் கொண்டதாக என்னை வந்து அடைந்து, எனது வாழ்க்கை முறையை முற்றாக மாற்றி அமைத்திருக்கின்றன.

கண்களுக்கு தெரியும் வாய்ப்புகளை அத்தனையையும்  எடுத்துக்கொள்ளவும், அதில் இருக்கும் சவால்களும் எதிர் கொள்ளவும் தயாரானேன் . நிலை கொள்ளாது திமிறும் மாநில கமிட்டியை கட்டுக்குள் கொண்டுவர, சமூகத்தின் அதன் அமைப்பின் வெகுஜன ஆதரவுள்ள இளந்தலைவர்கள் பல பொறுப்புகளில்  தொகுதிக்கும் மாவட்டங்களுக்கும்  நியமிக்கப்பட வேண்டும் என்பது எனது எண்ணமாக இருந்தது . மாநில அமைப்பில் என்னால் யாரையும் உட்புகுத்த முடியாது . காரணம் அது தில்லி அகில இந்திய தலைமை முடிவு செய்ய வேண்டியது .

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நான் அழைத்திருக்கும் அனைவரும் , எனக்கு இதற்கு சில காலத்திறகு முன்தான் அறிமுகமானவர்கள். அவர்கள் யாரையும் எந்த திட்டத்துடனும் நான் அனுகவில்லை . எனக்கான மேடை பேச்சு பயிற்சி களமாக நான் நிகழ்த்திய சிறு சிறு கூடுகையின் வழியாக, அவர்கள் எனக்கு அறிமுகமாகி இருந்தார்கள் . மாறிவந்த சூழலில் அவர்கள் எனது தொடர் நிகழ்வுகளுக்கு கொடுத்த ஒத்துழைப்பின் வழியாக எனக்கு அனுக்கமாயினர். பலநாள் நான் அவர்களுடன் இளைஞர் காங்கிரஸின் கருத்தியல் குறித்து உரையாடி இருக்கிறேன். அதுவும் கூட ஒரு விவாதமாகவே நிகழ்ந்திருக்கிறது. அதை கடந்து அதற்கு வேறு எந்த நோக்கமும் இருந்ததில்லை. என்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்பபை பற்றி பேசியிருக்கிறேன். அவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கும் நிலை ஒருநாள் எனக்கு வரும்  என அப்போது நான் நினைத்திருக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...