https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 5 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 398 *ஆதாரமும் ,முடிவும் இரு எல்லைகள் *

ஶ்ரீ:



பதிவு : 398 / 569 / தேதி 05 செப்டம்பர்   2018

*ஆதாரமும் ,முடிவும் இரு எல்லைகள்  


எழுச்சியின் விலை ” - 01
முரண்களின் தொகை -01 .




என்ன ஒரு அசட்டுத்தனம் , வெகுநேரம் கட்டுக்குள் வைத்திருந்த கோபம் அர்த்தமில்லாது எனக்கு உரிமையுள்ள இடத்தில் சீறுவதாக முடிந்தது.எனது கோபத்தை முழுமையாக சூர்யநாராயணனிடம் வெளிப்படுத்தினேன் . சூர்யநாராயணன் பதட்டமானார் . “உனக்கு நிதானமில்லைஎன்றார் . ஆம் . அதை காட்டுவதற்கு அவர் உகந்தவரில்லைதான் . அதன் உண்மை என்னை கடுமையாக தாக்கியது . என்னிடம்  கோபத்தைக்  கூட யாரிடம் காட்ட வேண்டும் என்கிற நிதானமிருப்பதை உணரமுடிந்தது.

ஜனநாயக மரபில் அதன்மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு  அது வழி வழியாக கையளிக்கும் ஒன்று உள்ளது , அதை உனது கோணத்தைக் கொண்டு மட்டும் பார்ப்பது எவ்வளவு அறிவீனம் என்றது. உடல் துச்மென்றாலும் ஆன்ம லாபத்தை அதைக்கோண்டே அடைய வேண்டுமென்கிறது பாரமார்த்திகம் . இது எனக்கு ஏன் இங்கு தோன்றுகிறது . அதிலிருந்து கொண்டுதான் நினைப்பதை சாதிக்க வேண்டும் . உன் லாபம் மட்டுமே உனக்கு இலக்கில்லை என்றால் சும்மா இரேன்என்றது, கொந்தளிக்கும் ஒன்று . நான் மெல்ல என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டேன். சூர்யநாராயணன் தலைவர்  கிளம்பி வரவேண்டிய அவசியத்தை சொன்ன பிறகு அவர் கிளம்பி இங்கு வந்தார் என்பது எனக்கு புதுத் தகவல்....

பண்பு என்கிற ஒன்று யாருக்கும் இயல்பில் இல்லை போலிருக்கிறதே , ஒவ்வொரு முறையும் அது ஒழுக்கத்தில் முளைப்பதல்ல . அது ஒரு செயல் நேர்த்திமட்டுமே . அது மனிதனின் இயல்பில்லை . தன் பொருட்டு அதை அவன்  தூக்கிப் பிடிக்கவேண்டும் என்றால் ,அது எப்படி அவனின்  இயல்பாக இருக்க முடியும் . மனதின் போக்கை கட்டியே ஒருவன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இயலுகிறது . அதிலிருந்து மாறுபட்டு  நம்மை பற்றிய வேறொரு கோணம் நமக்கே அறிமுகமாகும்போது வெட்கிப்போகிறோம் , ஒருவன் தன்னை பற்றி கட்டி எழுப்பியிருக்கும் அந்த அகக்கட்டுமானம் இங்கு சிதைந்து போகிறது . பலநாள் என்னை அலைக்கழித்த நினைவுகள் இவை . ஆனால் மானுட இயல்பு இது , இத்தகைய தடைகளை கடந்தே எவரும் வெளிவர வேண்டி இருக்கும் , ஜெயமோகனின் இன்றைய காந்தி , மற்றும் பின்தொடரும் நிழலின் குரல் வரும் காந்தி பற்றி அய்யன்காளி சொல்லும் இடம் பின்னாளில் எனக்கான திறப்பாக அமைந்தது

நாம் மீண்டும் சந்திப்போம் என்று தோன்றவில்லைஎன்றார் அய்யன்காளி. “ ஆகவே உங்களுக்கு கடைசியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்வெல்லும் தருணங்களில் இருக்கும் இதே மனவலிமை தோற்கும்போதும், புறக்கணிக்கப்படும்போதும், கொல்லப்படும்போதும் உங்களுக்கு இருக்க வேண்டும் . நீங்கள் இதுவரை கேட்டது எல்லாம் வானத்திலிருந்து வந்தவை. இது பாதாளத்தில் இருந்து எழுந்து வரும் குரல். நான் வருகிறேன்” .நிமிர்ந்த தலையுடன் அவர் திரும்பி நடந்தார் . பாபுவின்  ராட்டினம் நின்றுவிட்டிருப்பதை சோகன்லால் கவனித்தான். காந்தியைப்பற்றிய குறிப்பாக வரும் இதை பல முறை என்னை சிந்திக்க தூண்டியவை. என்ன ஒரு தாக்குதல் . தன்னைத் தான் கைவிடும் ஒரு மனிதனின் சொல்லாக இது வெளிப்படும் தருணம் மகத்தானது

முடிவுகளை ஒட்டி தான் நிற்கும் பீடத்தை மனம் பலவாறு கட்டமைக்க முயலுவதே ஒழுக்கம் மற்றும் பண்பியல் என சொல்லுகிறோம் போலும் . எப்படிப்பட்ட வதை அது. மனிதன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அகத்தாலும் புறத்திலும் தனக்கு வலிகளை ஏற்படுத்திக்கொள்ளுவதும் அதனிலிருந்து வெளியேறுதலை விடுதலை என்கிறது போலும் . இத்தகையது என்கிற ஒன்று நினைவில் எழும்போது , என்னால் எவ்வித உறுத்தலும் இல்லாமல் எந்த கொந்தளிப்பும் இல்லாமல் எவற்றையும் கடந்து போக முயற்சிக்கிறேன் . காயங்கள் பெரிதாக தெரியாத அளவிற்கு வைத்துக் கொண்டு செய்ய நினைப்பது வேறு.
என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் , தலைவர் சுகுமாரனைவெளியே போஎன கத்தியவுடன் , அதிர்ந்துபோனவன் அடுத்து என்ன செய்யவேண்டும் என்கிற திட்டமில்லாமல் அங்கேயே சில நொடிப்பொழுது இருந்துவிட்டு , பின்னர் தான் அழைத்துவந்த அனைவரையும் கூட்டிக்கொண்டு அவரது அறையிலிருந்தும் , அலுவலகத்திலிருந்து வெளியேறினான்

தலைவர் அவனை தனது அறையை விட்டுத்தான் வெளியேற சொன்னார் , ஆனால் அவன் அதை பிழையாக புரிந்து கொண்டு அலுவலகத்தை விட்டே வெளியேறினான் . கூட்டம் சட்டென வடிந்துவிட நான் ,சூர்யநாராயணன் மற்றும் தலைவர் மட்டுமே அந்த அறையில் மிச்சப்பட்டிருந்தோம். அறை குளிரூட்டி  அவரது அறையின்  மனித கூச்சல் ஓய்ந்ததும்  அதன் வெப்பத்தை குறைத்தது . அறை அமைதியை விடுத்து தலைவர் என்னிடம் செயற்குழு கூட்டத்தை துவக்க சொன்னார் , நான் அவர் சொன்னதும் வெளியே கூடியிருந்த அனைவரையும் அவரவரது இருகையில் அமரச் சொன்னேன் பாதியில் நின்று போன வந்தேமாதரம் பாடல் மீண்டும் ஒலிக்க செயற்குழு கூட்டம் துவங்கியது .வேறு சிலரை துவக்க உரையாற்ற சொல்லியிருந்தேன் ஆனால் கூட்டத்தின் திசையை முடிவு செய்யும் பேச்சை வரவேற்புரையாக நான் தொடங்கினேன். அது எனது இயல்பிறகு முற்றும் மாறுபட்டது . பேசுவதில் எனக்குள்ள இயற்கைக் குறை என்னை பேச விடுவதில்லை. இன்று கொந்தளிக்கும் மனம் என்னை பின்னிருந்து உந்தியது
நண்பர்களே , மாநில இளைஞர் காங்கிரசின் வரலாற்றறில் இது ஒரு சரித்திர நிகழ்வு .அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கம் தனது கருத்தியலால் உருவாக்கிய இயக்கம் இளைஞர்களுக்கான இந்த அமைப்பு, இதை மாநில கட்சி அமைப்புடன் மோதி முரண்பட்டு தங்களின் அரசியல் பாதையை உருவாக்கி எடுக்க இது அமைக்கப்பட்டது

இதற்கு தலைமை பொறுப்பில் இருந்த இரண்டு தலைவர்களை பற்றிய விமர்சன கூட்டமாக நான் இதை நடத்த விரும்பவில்லை . இருவரும் வெவேறு வழிகளில் இதன் கருத்தியலை வளர்த்தெடுத்து இன்று தங்களை அரசியலில் வகைமை படுத்திக்கொண்டார்கள் . அவர்கள் சென்று சேர்ந்த இடம் என்ன . அது வெற்றியாக தோல்வியாக இருக்கலாம் யாருக்கு அதை எப்படி பார்க்க விருப்பமோ அவர்கள் அதை அப்படியே பார்த்துக்கொள்ளட்டும் .

 நான் எனக்கான விஷயமாக சொல்லவந்தது , அந்த கருத்தியலை இதோ இங்கே இந்த கட்சியின் மூத்த உறுப்பினர் , தலைவர் பல தேசிய தலைவர்களால அடையாளம் கட்டப்பட்ட தலைமைக்கு முன்பிருந்து கொண்டு சொல்கிறேன் . அந்த கருத்தியல் மட்டுமே நமது பாதையை காட்டக்கூடியது . முரண்படுங்கள் முன்னேறுங்கள் , சண்டையிடுங்கள் ஆனால் அதை இந்த அலுவலகத்திற்கு உள்ளே செய்யுங்கள் , என்று பேசி அமர்ந்து கொண்டேன் . கூட்டம் திகைத்திருந்தது  தலைவர் தனக்குள் சிரித்துக்கொள்வதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்