https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 3 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 396 *உணர்வின் மிகை *

ஶ்ரீ:





பதிவு : 396 / 567 / தேதி 01 செப்டம்பர்   2018

*உணர்வின் மிகை 


நெருக்கத்தின் விழைவு ” - 91
விபரீதக் கூட்டு -05 .






உள்ளே அறைக்குள் தலைவர் சுகுமாரனுக்கு நீண்ட பதிலை பொறுமையாக சொல்லிக்கொண்டிருப்பது வெளியில் எல்லோருக்கும் கேட்டது , எனக்கு எரிச்சலாகவும் தலைவர் மீது கடும் அதிருப்தியை உண்டாக்கியது . அது என்னமோ தெரியவில்லை எனக்கு வேண்டியவர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் அறவுணர்வு தூக்காக இருக்கிறது. அல்லது அதை போன்றவர்களை நோக்கியே நான் என் வாழ்நாள் முழுக்க நடக்கிறேன் . என் ஊழ் போலும் இது.

இருந்தும், வெளியே அனைவரின் மத்தியில் அமைதியாக அமர்ந்திருந்தேன். எனக்கான கூப்பாடு வரும்வரை நான் எழுந்து உள்ளே செல்வதாக இல்லை. அங்கு கேட்கப்படும் கேள்வி அனைத்தையும் என்னால் எதிர்கொள்ள முடியும். ஆனால் வெளியே அமர்ந்திருப்பவர்களில் பெரும்பான்மையான நபர்கள் முற்றிலும் புதியவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தலைமை இருப்பதாக ஒரு எண்ணமே இங்கு எழலாகாது . இந்த கூட்டமே அதை தெளிவடையச் செய்வதற்கானது . இங்கிருந்து புதிதாக ஒன்று கிளம்புவதை என்னால் அனுமதிக்க முடியாது .

அவனது அரசியல் எந்த வழிமுறையும்  அற்றது எனவே அது செயல்பாடுகளை நோக்கி ஒருநாளும் செல்லாது . எதிர்ப்பும், முரட்டுத்தனமாக எதையும் முன்வைப்பதை தன் முகம் என்றும் அதுவே பிறரால் கவனிக்ககப்படும் அரசியல் என தவறாக புரிந்திருக்கிறான் . அவன் அரசியல்சூழ் மதியாளனாக இருந்திருந்தால், எதிர்பாராது தலைவர் வந்தவிட்ட பிறகு, தனது வழியை மாற்றிக்கொண்டு அதில் கிடைக்கும் அங்கீகாரத்துடன் , இப்போது தலைவரிடம் தனிப்பட்ட முறையில் அவன் கேட்டுகும் அத்தனையையும் அவன் இந்த கூடுகையிலேயே கேட்க முடியும் . அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவன் , நான் ஓன்று அவன் இரண்டு எனற ஸ்தானத்தை பெற்று இந்த கூட்டத்தை மேற்கொண்டு நடத்த அனுமதித்திருக்கலாம்

அவனுக்கான அங்கீகாரமும் இந்த கூட்டம் நடந்தால் மட்டுமே அவனுக்கு கிடைக்கும் என்கிற அடிப்படைக் கருத்துக் கூட தெரியாது , கூட்டத்தை கலைப்பது மட்டுமே தான் செய்யவேண்டியது என்கிற தீர்மானத்தில் இருந்தான் , அவனுக்கு சொல்லி அனுப்பி வைத்த தலைமை அவனுக்கு ஒற்றைப்படையான புரிதலையே கொடுத்து அனுப்பி இருப்பது அவனது ஊழ் .அரசியல் ஒற்றைப்படையாதல்ல, அது பல கருத்துக்களுடன் முயங்கி பல்வேறு கருத்துக்களின் தொகுப்பாக தன்னை வடிவமைத்துக்கொள்கிறது . அது திரள்களின் மத்தியில் நிகழும் போது  யாரால் அதன் வண்ணச் சேர்க்கையை புரிந்து கொள்ள முடிகிறதோ அவன் அதன் பாதையை அடைகிறான் . அந்த நிமிடம் ஊழ் அவனை முடிவெடுக்க வைக்கிறது

தலைவரிடமிருந்து எனக்கான அழைப்பு வரும்வரை நான் உள்ளே செல்லாது காத்திருக்க முடிவு செய்திருந்தேன்  . நடப்பவை மனதின் ஒருமூலையில் நிலைகுலைவை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது . “மிக சிரமப்பட்டு கூடிய கூட்டம் இதற்கு தவறான தகவல்கள் இப்போது காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது அதை சரி செய்ய உடன் எழுந்து உள்ளே செல் என்று ஒன்றும் , இல்லை நீ உள்ளே சென்று இதை சாதித்துக்கொள்வதால் ,என்ன விளையப்போகிறது . கூட்டத்தில் ஒருவர் கூட எழுந்து அவனுக்கு மறுப்போ கண்டனமோ சொல்லவில்லைஎன்றது  அது என்னை மிகவும் பாதிப்பதாக இருந்தது

இருப்பது வருடங்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்தில் இந்த கூட்டத்தை கூட்ட முடியும் என யாரும் கனவிலும்  நினைத்திருக்க முடியாது . இது புரியாத இந்தக் கூட்டத்தால் எனக்கு ஆவது என்ன? . தலைவருக்கு  எல்லாம் தெரிந்திருந்தும் இப்போது அவனுடன் அவர் நடத்தும் பேச்சுவார்த்தை விட என்னை வேறெதாலும் அவமானப்படுத்த முடியாது . கடந்த ஒருவாரமாக பல நாள் தூக்கமில்லாத இரவுகளாக கழித்தது இதை பார்ப்பதற்கல்ல . இவர்கள் யாரும்  இதன் பின்னுள்ள உழைப்பை அறிந்திருக்கவில்லைஎன்கிற எண்ணம் எழுந்தது . அந்த உண்மை , தாங்க இயலாது மனவருத்தத்தை கொடுத்தது

ஆனால்இப்படி முயங்குவதுதான் ஜனநாயக மரபு .தலைவர் அதை செய்து கொண்டிருக்கிறார் உன்னை விடவும் இந்த கூட்டம் அவற்றுக்கே முதன்மை , அவசியம்”  . என அலைபோல் இருபுறமும் மாறி மாறி எழுந்து கொண்டிருந்த பல்வேறு சிந்தனைக்கு மத்தியில் நான் இருந்து கொண்டிருந்தேன் . அது இயல்பில் எழுவது அலைக்கழிப்பது, இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என ஒருவரும் அதை நிர்பந்திக்க முடியாது . நான் ஒருபோதும் அதனுடன் தர்கிப்பதில்லை . பலமுறை முயன்று அது பேருரு கொண்டு என்னை அழுத்தியதே நான் எப்போதும் கண்டது.

அப்போது போது தலைவரால் ஏதோ வேலை சொல்லப்பட்டு வெளியே வந்த சூர்யநாராயணன் , மௌனமாக அமர்ந்திருந்த என்னை கடந்து செல்லும்போது, சிறு சமிக்கை செய்துவிட்ட எதிரே உள்ள தனது அறைக்கு சென்றார் , நான் சில நொடிகள் தாமதித்து அந்த அறைக்குள் சென்றேன் . அவரை பார்த்ததும் குமிறிக்கொண்டு எழுந்த கோபத்தை முழுமையாக வெளிப்படுத்தினேன் . “இன்னும் சில நொடிகளில் இதை முடித்துக்கொண்டு  தலைவர் வெளியே வந்து கூட்டத்தை துவக்கவில்லை என்றால் நான் என் பதவியை ராஜினாமா செய்து இங்கிருந்து வெளியேறுவதை தவிரனெனக்கு வேறு வழியில்லைஎன்றேன் . சூர்யநாராயணன் பதட்டமானார் . உனக்கு நிதானமில்லை, எப்படியும் இந்தக் கூட்டம் நடந்தே தீரும் . நீ வற்புறுத்தாது தலைவர் தானே இங்கு வந்ததிலிருந்து அது உனக்குத் தெறியவில்லையா? . உன்னுடன் இங்கு சுகுமாரன் மல்லுக்ககட்டும் போதே நான் இங்கு நடப்பதை தலைவைரம் சொன்னேன். அவர் கிளம்பி வரவேண்டிய அவசியத்தை சொன்னே பிறகு உடன் கிளம்பி இங்கு வந்தார் .அது உனக்கு தெரியாது தலைவர்  இவ்வளவு பெரிய கூட்டத்தை நீ கூட்டி வைத்திருப்பாய் என்று முதலில் அவரே எதிர்ப்பார்க்கவில்லைஎன்றார். அப்படி ஒன்று இருப்பதை அப்போதுதான் எனது மிகை உணர்வை நான் நினைத்துக் கொண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்