https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 399 * சிந்தனையும் சொல்லும் *

ஶ்ரீ:பதிவு : 399 / 560 / தேதி 07 செப்டம்பர்   2018

* சிந்தனையும் சொல்லும்  


எழுச்சியின் விலை ” - 01
முரண்களின் தொகை -01 .
எந்த அரசியல் பின்புலமும் இல்லாத இளைஞர்களை அரசியலில் நிலைபெறவைக்கவும் , அவர்களின் நவீன மனம் மரபான அரசியல் மூத்தோரின் கருத்துடன் மோதி முயங்கி தங்களுக்கான  புதிய பாதையை கண்டடைவது  என்பதிலிருந்து கட்சி கால வெள்ளத்தால் சுருங்கிப் போகாது தன்னை புதுபித்தல் என்பதை கருத்தியலாக கொண்டது . ஆனால் தாழ்வு மனப்பான்மை அல்லது தகுதிக்கு மீறிய மனநிலை ,அதன் வாசல்களை மூடுவதற்கான காரணிகளை கொண்டு தன்னை தாழிட்டுக் கொண்டது . அதை திறப்பவன் புதிய பாதைகளை காணலாம் , அல்லது பிறருக்கு வழிவிட்டு களபலியாக நேரலாம் . கட்சியின் இந்த கருத்தியல் உருவான காலத்தில் பொறுப்பிலிருந்த கட்சியின் மூத்த உறுப்பினர் , தலைவர் பல தேசிய தலைவர்களால அடையாளம் கட்டப்பட்ட தலைமைக்கு முன்பிருந்து கொண்டு சொன்னது காலத்திற்கு மீண்டுமொரு முறை சொன்னதாகியது

அந்த கருத்தியல் மட்டுமே பாதையை காட்டக்கூடியது . முரண்படுதலை அலுவலகத்திற்கு உள்ளே செய்யும்வரை அதில் ஆரோக்கியமான போக்கிரிப்பதாக பேசி அமர்ந்து விட்டேன் . கூட்டம் திகைத்திருப்பதையும் தலைவர் தனக்குள் சிரித்துக்கொள்வதையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்ததுஇந்த கூட்டத்தின் பாதையை நான் நிர்ணயித்து பேசி துவக்கி விட்டதால் அடுத்தடுத்து யார் பேசவேண்டும் என்கிற கணக்கை மனதில்கொள்ளாது யார் யார் நான் சொன்னதால் தாக்குண்டார்களோ , ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள் எழுந்து பேசட்டும் .என களத்தை காலத்தின் வசம் ஒப்படைத்து விட்டு  அமைதியாக என் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

அசலான அரசியல் இயக்கம் ஒரு யானையை போன்று கம்பீரமானது , அதனிடம் கீழமை இருப்பதில்லை , தன் பொருட்டு அது வேட்டையாடுவதில்லை , ஆடினால் அதன் பயனை அது அனுபவிப்தில்லை . அமைதியாக இந்தக் கூட்டம் தெரிந்தாலும் தூரத்து இடி போல ,யானையின் வயிற்றில் எழும் மிக சன்னமான உறும்பல் போல  கூட்டம் சலசலக்கத் துவங்கியது . தன் இருப்பை உணர்த்த விரும்புபவரும் இதில் முரண்பட விழைபவர்களும் தாங்களாக தங்களை முன்னிறுத்தி பேசத்துவங்கட்டும் என அவையை அவர்களிடம் விட்டு விலகியிருந்தேன் . நான் அவர்களை அழைத்து இந்த கூட்டத்தை முறைபடுத்தலாம் , அதனால் என்னால் அழைக்கப்பட்ட சிலரேனும் அதற்கான நன்றியை அல்லது விசுவாசத்தை எனக்கு காட்டலாம் . அதனால் விளையப் போவது ஒன்றில்லை

தலைவருக்கு இளைஞர் காங்கிரசை பற்றியோ அல்லது என்னைப் பற்றியோ இருக்கும் எண்ணத்தை இங்கு எழும் கூட்டத்திலிருந்து அவர் புரிந்து கொள்ளட்டும் என அதன் போக்கிலேயே அதை விட்டேன் . பழைய நிர்வாகிகளில் மூத்தவர்கள் சிலர் தயக்கத்துடனும் , சிலர் ஆக்ரோஷத்துடனும் பேச துவங்கினர் . அவர்களைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக பேச ஆரம்பித்தார்கள் . பேச்சின் போக்கு இரண்டு விதமாக இருந்தது .

பழைய நிர்வாகிகள் தங்களை ஒதுக்கியதற்கு வருந்தினார்கள் , தங்கள் உழைப்பு யாராலும் அறியப்படாது போனதாகவும் , வீண் உழைப்பு என கண்ணீர் மல்கினார் . ஒரு கட்டத்தில் தலைவர் உள்நுழைந்தார் , கூட்டம் கேள்வி பதிலெனும் ஆபத்தாக கட்டத்தை எட்டியது . அலுவலக நிர்வாகிகள் சிலர் நான் இதை மட்டுறுத்த வேண்டும் என என்னிடம் சைகையில் சொன்னார்கள் . நான் அதைச் செய்வதாக இல்லை 

கூட்டம் உணர்வு கொந்தளிப்பாக மாறியது , கண்ணன் துவங்கி பாலன் வரை தங்களது உழைப்பு சுரண்டப்பட்டதாக முறையிட்டனர் . தலைவர்களுக்குள் இருக்கும் பூசலில் சாமான்ய தொண்டனிடம் தலைவர் ஏன் முரண்பட வேண்டும் தங்கள் உழைப்பு அங்கீகரிக்கப் படவில்லை என்கிற வருத்தம் அதில் ஓங்கி ஒலித்தது. தலைவர் அன்று பேசியது அனைவரின் உள்ளத்தை சென்று தொட்டது , என்று இங்கே சொல்லிவிடலாம் , ஆனால் கால வெள்ளத்தில் அது போன்ற உணர்வுப் பரிவாகங்களுக்கு நீண்ட ஆயுள் இருப்பதில்லை.

சின்ன சின்ன சந்தோஷங்களை கொடுத்தேன் காலம் தனது எண்ணத்தை மனிதர்களை கொண்டு நிறைவேற்றிக் கொள்கிறது . ஊழ் என அனைத்தையும் ஒற்றை சொல்லாலே சொல்லிவிட இயலும். ராமனின் வனவாசம் நிகழுமிடத்தில் ராமாயணத்தில் வருகின்றஇழைக்கின்ற விதிஎன்கிற சொல்லாட்சி பல காலம் எனது நினைவைவிட்டு அகன்றதில்லை. மனிதன் சுதந்திரன் இல்லை என்பதை காட்டுகிற இடமாக இதை நினைப்பதுண்டு , எத்தகைய தரகத்தாலும் விளக்கிவிட முடியாத இந்தவிதிக்கின்ற விதிஅவன் கட்டுண்டவன் என்கிறது.  

கூட்ட இறுதியில் பல வருடங்களாக மனதை வருத்திய விஷயங்களை பட்டியலிட்டேன் , இனி நடக்க வேண்டியது என்ன என்கிற தீர்மானமாக சிலவற்றை முன்மொழிய அதுவே ஏற்கப்பட்டு அனைவராலும் வழிமொழியப்பட்டது , நான் பேசி அமைந்தபிறந்த பிறகுதான் நினைவு கூர்ந்தேன் நான் ஒலிபெருக்கியில் தலைவர் முன்னிநிலையில் எந்த தடங்களும் இன்றி பேசி அமர்ந்திருக்கிறேன் என்று . பேச்சில் தடங்கல் இல்லாதது எனக்கே அப்போதுதான் நினைவுக்கு வந்தது .. என்னை பற்றிய பிறிதொரு புரிதலை நான் அதனித்தது அன்றுதான்

என்னால் கடக்க முடியாதது என நினைத்த ஒன்றை மிக எளிதாக கடந்திருக்கிறேன் . அதை செய்தது இரண்டு காரணிகள் . நான் எனது எண்ணமாக எதை தீர்மானித்தேனோ அதையே  தொகுத்து பேசினேன் . அதில் என் உணர்வு கொட்டிக்கிடந்தது , இரண்டு , எந்த குறிப்பும் வைத்துக்கொள்ளாது அப்போது என்ன தோன்றியதோ அதை பேசினேன் . இது என்னை பற்றி நான் அறிந்த கொண்ட புரிதல் நினைவில் இல்லாததை , நான் உணர்வுபூர்வமாக நினைக்கும் ஒன்றை அழுத்தமாக முன்வைக்க முயற்சிக்கையில் எனது குரல் திறப்பதை அறிந்து கொண்டேன்

நினைவில் உள்ளதை துழாவும் போதுதான் வார்த்தைகள்  முட்டி மோதுகின்றன . எனது பேசும் சிரமத்திற்கு வருந்திய எனது தந்தை ஒருமுறை அவரது மனோதத்துவ நண்பர் ஒருவரிடம் அழைத்து சென்றார் , என்னை பலமுறை சோதித்த அவர்  சொன்னார், நான்  சிந்தனைவேகத்திற்கு பேச முயற்சிக்கையில் மட்டுமே வார்த்தைகளுக்கு தடுமாறுகிறேன் என்று , இரண்டு சந்தர்ப்பத்தில் நான் திக்குவதில்லை ஒன்று உணர்வுப்பிகொந்தளிக்கும்போது அல்லது ஆழ்ந்து அமைதியில் உரையாடும்போது . பாடல்களில்  நான் திக்குவதில்லை என்பதை உணர்ந்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக