https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 10 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 400 * செயல்பாட்டின் ஆழ்மனம் *

ஶ்ரீ:



பதிவு : 400 / 561 / தேதி 10 செப்டம்பர்   2018

செயல்பாட்டின் ஆழ்மனம் 


எழுச்சியின் விலை ” - 02
முரண்களின் தொகை -01 .



என்னை பற்றிய புதிதான ஒரு அறிதலை நான் உணர்ந்து கொண்டது அன்றுதான் . என்னால் கடக்கவே முடியாதது என நினைத்த ஒன்றை மிக எளிதாக கடந்திருக்கிறேன் . சரியாக ஒன்றை செய்துவிட்ட பின் ,மனதில் இனி இத்தால் எனக்கு ஆகவேண்டிது ஒன்றில்லை என்கிற மன நிலையே என்னை இங்கு கொண்டு நிறுத்தியிருக்கலாம் . அது ஒருவிதமான விடுபட்ட நிலை விட்டேந்தியாக விடுபட்டு ,  எதிலிருந்தும் லாப நோக்கில்லை என்கிற நினைவே , யாரையும் லட்சியம் பாராட்டாத நிலைப்பாடே என்னில் என்னை உணரவைக்கும் தருணங்களாக வாய்த்தது என நினைக்கிறேன்

எந்த குறிப்பும் வைத்துக்கொள்ளாது அப்போது என்ன தோன்றியதோ அதை பேசினேன் .அதிலிருந்து  என்னை பற்றி நான் கொண்ட புரிதல் . நினைவில் இல்லாததை , நான் உணர்வுபூர்வமாக நினைக்கும் ஒன்றை ,அழுத்தமாக முன்வைக்க முயற்சிக்கையில் அதுவரை தொண்டையில் திறக்காத குரல் ஒன்று திறந்து கொள்கிறது என்பதுதான் . இதுவும் ஒரு மகரக்கட்டு போலும். பல நாள் தேங்கிய என் தயக்கம் , பிறரின் எள்ளலுக்கு உள்ளாகிவிடும்  அச்சம் போன்ற ஒன்றால் மூடிய சவ்வுப்படலம் போன்ற  அன்று கிழிந்து திறந்து கொண்டது போலும் .

நினைவில் உள்ளதை துழாவும் போதோ, மேற்கோள் காட்ட முயற்சிக்கும் போதோ, அல்லது படித்ததை சொல்ல முயலும் போதோ  அவை மழைநீரின் ஊறிய தோல் வாத்தியம் போல நீர்த்து தடித்து விடுகின்றன . உள்ளிழுந்து எழும் அனலே அவற்றை சூடு பறக்க வின்னென மாற்றுமானால் என்னால் நினைத்ததை பேச இயலுகிறது. அல்லாது போனால் எனது வார்த்தைகளுக்கு நான் மூச்சிற்கு ஏங்குபவன் போல , எப்போதும் வார்த்தைகளுக்கு திக்கித் திணறுகிறேன். பிறருக்கு புரியவைத்துவிட முடியாத  அவஸ்தை  . மேடை பேச்சு போன்ற ஒன்றை, அடுக்கு மொழி போல , ஒரு ஒப்பீடு போல என்னால் ஏற்க இயலாத ஒன்றை , நான் வாழ்வில் முயற்சித்து பார்க்காத ஒன்றை என்னால் பேச்சில்  நிகழ்ந்த இயலாது போகலாம் , ஆனால் மனம் படபடக்காது , கூட்டத்தை லட்சியம் பாராட்டாது பேசினால் ,என்னை என்னால் வென்றெடுக்கு முடியும் எனத் தோன்றியது

ஒருமுறை ஒரு மனோதத்துவ நண்பர் சொன்னார், "சிந்தனை வேகத்திற்கு நான் பேச முயற்சிக்கையில் மட்டுமே வார்த்தைகளுக்கு தடுமாறுகிறேன்" என்று ,அது அவர் என்னை உத்வேகப்படுத்தும் உபசாரத்திற்கு  சொன்னதாக இருக்கலாம் , ஆனால் ஏதாவது ஒன்றை பற்றிக் கொண்டு நான் வெளி வர இயலுமானால் இது எடுக்கச் சிறந்ததாகத் தோன்றியது. நான் என்னை புரிந்து கொண்ட வகையில் இரண்டு சந்தர்ப்பத்தில் நான் திக்குவதில்லை ஒன்று உணர்வுகள் கொந்தளிக்கும் போது அல்லது ஆழ்ந்து அமைதியில் உரையாடும்போது . அல்லது பாடல்களில்  என்னை மறந்து நான் பாடும் போது திக்குவதில்லை என்பதை உணர்ந்துள்ளேன்.

அன்று நிகழ்ந்த கூட்டத்தில் தலைவரின் பேச்சை இப்போது நினைவு கூர்கையில் , அவரது மேடைப் பேச்சை பல வருடங்களாக கேட்டிருக்கிறேன், அவை அரைத்ததையே அரைத்ததுபோல சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார் . ஆனால் அன்று அவரது பேச்ச்சு மறக்க முடியாததாக இருந்தது , மிகவும் நெகிழ்ந்து காணப்பட்டார். வழி காட்டவேண்டிய தமைக்கு தனது வழி தெரியாது போவது எத்தனை துரதிஷ்டவசமானது என்றார். அவரை சிந்தனைவாதியாக நான் அறிந்ததில்லை. அது எனக்கு  ஒரு திகைப்பை உருவாக்கியது

திடீரென தத்துவம் நிறைய பேச ஆரம்பித்தார் . அரசியலில் தத்துவதற்கு இடமிருப்பதாக நான் உணர்ந்த தருணம் அது . “யாருடைய உழைப்பும் வீணாவதில்லைஇங்கு பலர் தங்களது உழைப்பு வீணாகிவிட்டதாக வருந்தியதற்கு அவர் பதில் சொல்ல முயன்றார் என நினைக்கிறேன். ”நீங்கள் உங்கள் பகுதியில் உழைத்திருக்கிறீர்கள் மீண்டும் அவர்களிடம் செல்லுங்கள் , உங்களுக்கான காலம், உங்களுக்கான அங்கீகாரம்  அங்கிருக்கிறது . அதை பெற்றுவாருங்கள் உங்களுக்கான இடம் இங்கு காத்திருக்கிறதுஎன்றார் . இதுவும்  என்ன கோணம் என எனக்கு புரியவில்லை.

எனது முயற்சியோ அதன் பலனோ நான் பயணித்த பாதையில் நான் சந்தித்த சவால்களை பற்றி அங்கு யாராலும் எதுவும்  பேசப்படவில்லை , எனது அணுக்கர்களுக்கு அது பெரும் குறையாக பட்டது  . அதைவிட அவர்களை நான் பேச அனுமதிக்காதது அவரகளுக்கு குமுறலை ஏற்படுத்தியது அதை மெல்ல என்னிடம் காட்டினார்கள்  . நான் அவர்களை அனுமதித்திருந்தால் அந்த கூட்டம் வேறு திசைக்கு சென்றிருக்கும் . என்னை முதல்மை படுத்தி ஏதாவது பேசி என்னை குன்ற வைத்திவிடுவார்களோ என்கிற அச்சம் என்கிருந்தது

எனக்கு வேண்டியது தனித்த ஆளுமைகளை கொண்ட தலைவர்களின் நிரை . அடிமை கூட்டமல்ல . அங்கிருந்து எனது இடத்தை நான் கண்டடைய வேண்டும்  என விரும்பினேன் . ஆனால்  நான் நினைத்ததை அவர்களுக்கு புரியவைக்க முடியவில்லை .

அரசியல் . அது ஒருவரின் இயல்பிலிருந்து எழுவதாக இருப்பினும்கற்றலின் வழியாக செறிவான நிலையை  அடையமுடியும் , அனைத்திற்கும் குரு பரம்பரைக்கு போன்ற ஒன்று தேவைபடுகிறது , அந்த அனுபவம் இல்லாதவர்கள் தங்களை மேல் கீழ் என்கிற அடுக்கு முறைக்குள் கொண்டுவர   வர மறுப்பார்கள். அவர்களை  வைத்துக்கொண்டு எதையும் செய்ய இயலாது.

பொதுவான கருத்துக்கு வந்து இருவர் கூட அதை செயல்படுவதில்  ஒத்த கருத்துடையவர்களாக   இருப்பதில்லை . சிந்தனைக்கு முரணாவது போல தோன்றினாலும் ,அதுவே நடைமுறை . திட்டம் அனைவரின் கருத்தால் ஒன்றென்றாலும் அதை செயல்படுத்தும் விதம் , காலத்தை வைத்து அதன் பயனும் பலனும் பெரும் மாற்த்திற்கு உள்ளாகி விடுகிறது . எப்போதும் அதை முதன்மையில் நின்று செயல்படுத்தும் எவரும் பிறரின் குற்றச்சாட்டைத்தான் அதற்கான பலனாக அடைகிறார்கள்  என்பதுதான்  வினோதம் 

பலர் செயல்பாட்டில்  இருக்கும்போது இதைப் போன்ற முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க இயலாது . அவர்கள் அனைவருக்கும் தங்களின் துறையை பற்றிய தெளிவான பார்வையும் , தன இலக்கு பற்றிய அறிவும் , அதில் விழுமியம் போன்ற குணமும் இருப்பவர்களை கொண்ட குழுவாக ஒன்று அமைந்து விட்டால் , அதுவே ஒரு முழுமையான அமைப்பு. அதை உருவாக்கி எடுத்து செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் காலம் என்கிற கருதுகோள் இன்றியமையாதது

எனக்கு சவாலாக அமைந்தது காலம் என்கிற ஒன்று. அது எனக்கு கிடைக்கவேயில்லை . நான் உருவாக்கி எடுக்க நினைத்த அமைப்பை ஒன்று தொகுக்க காலம் போதாமை முதற் சிக்கல் . இரண்டு ஒருங்கிணைக்கப் பட்டவர்களில் எனது நண்பர்கள் சிலர் ஊடுருவியது நான் நினைக்காத பல சிக்கல்களுக்கு காரணமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்