https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

அடையாளமாதல் - 404 *அகம் , மனம், புறம் *

ஶ்ரீ:



பதிவு : 404 / 566 / தேதி 21 செப்டம்பர்   2018

*அகம் , மனம், புறம் 


எழுச்சியின் விலை ” - 06
முரண்களின் தொகை -01 .





இயல்பில் அரசியலைஅறியாதவர்களுக்கு பாடம் நடத்தி நேர விரையம் செய்ய முடியாது ,அதைவிட எல்லோரையும் பற்றி எல்லோரும் பேசும்  வெளியில் உலவும் பலவித செய்திகளுக்கும் , வதந்திகளுக்கும் பஞ்சமிருப்பதில்லை அது உண்மையா என அறிந்து கொள்கிற ஆவல் எழுவது இயற்கையானது , காரணம் அதில் அவர்களது எதிர்காலமும் இணைக்கப்பட்டிருக்கும் . அதற்கு பதில் வெளியிலிருந்து கிடைக்காது. அது உள்ளிருந்து எழவேண்டியது . அகற்கான எண்ணங்கள் அசைக்க முடியாதபடி மனதை சில கோட்பாடுகள் , கருத்தியல் போன்றவற்றால்  ஆழ அடித்து அதன்  தறிகளில்  கட்ட முடியாதவன் காற்றில் பறந்து கொண்டே இருக்க வேண்டியதுதான் .

அதனாலேயே புதியவர்களை அரசியலின் நுண்மைக்கு பழக்குவது அவ்வளவு எளிதல்ல . அது இயல்பில் இருப்பது , அதில் காணப்படும் குறைபாடுகளை சரிசெய்வதே மிகக்கடினம் என்கிறபோது அரசியலின் அடிப்படை முறைமையையும், அதன் மனப்பாங்கையும் ஒருவரிடம் உருவாக்கிவிட முடியாது . அது சிட்டுக்குருவியை மீன்கொத்தியாக்குவது . ஒருவரின் இயல்பை மாற்றுவது போல என்கிறேன்.

தலவரின் கையிலிருந்து கட்சி அமைப்பு கழன்று கொண்டிருப்பதை என்னால் எப்படி அறிந்து கொள்ள முடியாதானது என்பது , இப்போது மிகவும் விந்தையான உணர்வைக் கொடுக்கிறது . அதற்கு காரணம்  அன்றைய சூழலில் அரசியல் நடைமுறைகளையும் அவற்றில் எழுந்த தேக்கமும் , புதிய தலைமைக்கு இருந்த வெற்றிடத்தையும் நோக்கியே அது சென்று கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக பார்க்க முடிந்தது . அது மிக உற்சாகமாக மனக்கணக்கிடலை கொடுத்திருக்கலாம், அதுவே சில உண்மைகளை பார்க்க முடியாதபடி செய்துதிருக்க வேண்டும். தலைவரின் முழு ஆளுமையின் கீழிருந்து அது நழுவிக் கொண்டிருக்கிறது என்பதை நிச்சயம் எங்கோ ஆழ்மனதில் உணர்ந்திருக்க வேண்டும் . இரண்டு காரணங்களுக்காக அவற்றை கூடர்ந்து அவதானிக்க தவறியிருக்க வேண்டும் .

முடிவற்ற ஒன்று உலகில் இருக்க முடியாது.அதில் வீழ்ச்சி  ஒரு அலகு மட்டுமே. அவரது ஆளுமை தரைதட்டுவதற்கு நீண்ட காலமாகும் என நான் நினைத்திருந்தேன். சில நிதர்சணமான உண்மைகளை உணர்ந்த போதும் , நான் அவருக்கு மிக அருகில் வந்துவிட்டதால் , அவரை பற்றிய எனது பிரமையாக இருக்கும் என நினைத்ததுண்டு . ஆளுமையின் பிரம்மாண்டம் செவி வழிச் செய்திகளிலினால் ஆனது  யாரைப் பற்றியும் எதுவும் செவி வழியாக உணரப்படுகையில் மிக பிரமாண்டமாகவும் , அதையே அருகிருந்து அணுக்கமாக  பார்க்கையில் அதன் தவறுகள் அனைத்து மனிதர்களின் எளிய தவறுகளாக  கண்ணில்படுகிறபோது அதை பற்றிய பிரமாண்டம் சிதையுறுவது இயல்பானது. நான் என்னில்  ஒரு பிரமாண்டத்தை எளிதில் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை . என்னுள் மிக நிதானமாகவே அது நடைபெறுகிறது . காரண காரியங்களைச் கொண்டு புரிந்து கொள்ளப்படுகிறது ஆகையால் வந்தேறிய அந்த ஆளுமை என்னுள் அவ்வளவு எளிதில் களைந்தும்  விடுவதில்லை.

உள்ளுணர்வு . அது ஒரு வித அசட்டுத்தனம் போல .இருப்பினும்  இதுவரை எனது ஆழ்மன உந்துதலின் வழியாகவே எனது வாழ்வின் அனைத்து தருணங்களையும் முடிவு செய்திருக்கிறேன் . அது எனக்கு வெற்றியும் தோல்வியையும் கலந்து கொடுத்திருந்தாலும். அந்த இரட்டையின் முடிவில் எப்போதும்  அளவிட முடியாத மன அமைதியை அடைந்திருக்கிறேன் . வந்து சேர்ந்த இடம் என்னவாக இருந்தாலும் அதுவே எனக்கு எப்போதும் உகந்ததாக இருந்திருக்கிறது.அதை போலவே அரசியலில் என்னை மிக வேகமாக இயக்கியது அந்த விசையே .2000 ஆம் ஆண்டில் திட்டமிட்ட உழைப்பும் அதன் பலன் 2005 ல் என்பதில் மிக உறுதியாக இருந்தேன் . ஆகவே எனக்கு அதிக நேரமில்லை. முற்றும் புதிதாக ஒரு அமைப்பையே அனைத்து தகுதிகளோடு உருவாக்கி எடுக்க .
எனது பயணத்தில், நான் எதிர்நோக்கும் ஒரு இடம் அதுவரை உருவாகி இல்லாத நிலையில் , செயல்பாட்டில் உள்ளவர்களை கொண்டு இரண்டையும் ஏக காலத்தில் உருவாக்கி எடுக்க மிகவும் முனைந்த காலம் அது. பலர் அரசியலுக்கு புதியவர்கள் , நான் என்னை கொண்டு வைக்கும் இடம் இதுவரையில் உருவாகி இருக்கவில்லை , விதி அதை நானே உருவாக்கி பின் அதில் அமர்ந்தாக வேண்டும்

மாநில தலைவருக்கு நிகரியான பதவி எனக்கான களத்தை நான் முயற்சிக்காமலேயே உருவாக்கி கொடுத்திருந்தது . அடுத்த நிலை நான் தலைமைக்கு நியமிக்கப்பட வேண்டும். ஆனால் என்ன காரணமோ நான் அந்த பதவியை மனதால் மட்டுமே உணரமுடிந்தது . உடலால் அதை எவ்வளவு முயற்சித்தும் நான் அதை உணர்ந்ததில்லை . உணர்வு இரண்டு நிலைகளாலும் உணரப்படுவது . மனம் மற்றும் உடல் மனம் அகவயமான தேடல்களிலும் , அதை வகுத்துக்கொண்டு அது தனது பயணத்தை தொடங்கி விடுவதால் செயலில் உற்சாகத்தை எப்போதும் வடிந்துவடாது பார்த்துக் கொள்கிறது . ஆனால் உடலால் உணருதல் என்பது புறவயமானது , அது நம்மை சுற்றி இயங்கும் சமூகத்தின் ஆழ்மனத்துடன் நம்மையும் அறியாது உரையாடுகிறது. அங்கு நாம் எதிர்பார்க்கும் யாவும் ஒரு நடிப்பு மட்டுமே என்றும்   நாம் அவர்களது மனதை சென்று தொடவில்லை . என்பதை உடலே நமக்கு சொல்லியாக வேண்டும் என நினைக்கிறேன். அதில் ஏற்படும் பிறழ்வு , நமக்கு நடக்க விருப்பதை நமது ஆழ்மனதிறகு சொல்லிவிடுகிறது போலும். அதை எதிர்கொள்ளவே மனம் நம்மையும் அறியாது விவாதத்திற்குள் வராத ஒரு கோட்பாடை , யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு முடிவை நோக்கி நம்மை செலுத்துகிறது.

நான்எப்போதும் இந்த இரண்டுமற்ற நிலையில் அல்லாடிக்கொண்டிருந்தேன் . வாழ்க்கை முழுவதும் இத்தகைய போராட்டமாகவே கழித்திருக்கிறேன் , இப்போதும் எனக்கான ஊழ் அதை தடுக்கத்தான் போகிறது . ஆனால் நான் செயல்படாது இருக்க முடியாது . தலைவருக்கு இணையான இடம் என்கிற உணர்வையும் அதனால் பிறருக்கு என்மீது எழும் பணிவும், அச்சத்தையும் அது கொடுத்தாலும். ஸ்தானத்தால் அது எனக்கு இந்த மாநில நிர்வாகக் கமிட்டியில் கிடைக்கப்போவதில்லை

செயற்குழு கூடுகை பற்றியும் நான் அதை நிகழ்த்திய விதம்பற்றி யார்யாரிடமெல்லாமோ தலைவர் பேசிக்கொண்டே இருந்தார் , ஆனால் அதை ஒருமுறைகூட என்னிடமோ எனது அணுக்கர்களிடமோ ஒருவார்த்தையும் சொன்னதில்லை . குருவை நேரிலும் , அதிதியை சென்ற பிறகும் கொண்டாடு , புத்திரனை ஒருபோதும் கொண்டாடாதே என்கிறது ஒரு சாஸ்திரம் , அதுபோல் குருவிற்கு சீடன் புத்திர ஸ்தானம் என நினைத்துக்கொண்டேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்