https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 22 செப்டம்பர், 2018

வெண்முரசு புதுவை கூடுகை 19 நூல் 2 மழைப்பாடல் / இருள்வேழம்


ஶ்ரீ:பதிவு :  567 / தேதி 22 செப்டம்பர்   2018

வெண்முரசு புதுவை கூடுகை 19

நூல் 2 மழைப்பாடல் / இருள்வேழம்
நேற்றுகாலை ஒரு முதிய பிடியானையை அவிழ்த்துவிட்டார். அது பிளிறியபடி நம் அரண்மனை முற்றத்துக்கு வந்து நின்று குரலெழுப்பியது. அரசி மைந்தனைப் பெறவிருக்கிறாள் என்று அந்த யானை சொல்கிறது, மகவை எடுக்க உதவவே அது வந்துள்ளது என்று சொல்லி அனைத்தையும் ஒழுங்குசெய்யத் தொடங்கிவிட்டார்.” இயற்கையில் உயிர் கொண்ட எண்பது லட்ச உடல் கொண்ட அனுக்களில் மனிதனும் ஒருவனே . அவன் எதனாலும் பிரிவு படுவதில்லை . பிறப்பும் இறப்பும் அனைத்திற்கும் பொதுவில் வைக்கப்பட்டுள்ளது., பிற விலங்குகளின் ஒன்றை மனப்பரப்பை மனிதன் இழந்து விட்டாலும் , பிற உயிர்கள் அதை இழப்பதில்லை . பேறுகாலத்தின் உதவிக்கு யானை வந்து நிற்பதையும் , மச்சர் தன் வாழ்நாளில் அறியாத ஒன்றை அறிந்து கொள்ள வந்திருப்பதை மழைப் பாடலின் இருள்வேழம் மிக மெலிதாக சொல்லிச் செல்கிறது 

மச்சர் வெளியே வந்து "வணங்குகிறேன் அரசி" என்றபின் சத்யசேனையிடம் "உடனடியாக மூத்த யானைமருத்துவர் இருவரை வரச்சொல்லுங்கள்" என்றார். "ஏன் மச்சரே?" என்றாள் அம்பிகை. "எனக்கு இந்தக் கருவின் நெறிகளென்ன என்று இன்னும்கூடத் தெரியவில்லை. அவர்கள் இருவர் உடனிருந்தால் நன்றோ என்று எண்ணுகிறேன்" என்றார் மச்சர். "நான் சொன்ன அனைத்து மருந்துகளும் சித்தமாக உள்ளன அல்லவா?" சத்யசேனை "ஆம் மச்சரே" என்றாள். அவர் திரும்ப உள்ளே சென்றார். சத்யவிரதை வெளியே ஓடினாள்.”

யானைகள் மட்டுமே காணும் அஸ்தினபுரி என ஒன்று உண்டா என்ன?”ஒவ்வொரு உயிருக்கும் தனித்த ஏதோ ஒன்று இருப்பதை அது சொல்லாது போனாலும் , திருதராஷ்டிரன் அதை சொல்லுவதாக வருகிறது

நான் சென்று அவரை சிதையேற்றவேண்டும் விதுரா" என்றான் திருதராஷ்டிரன். "அது மரபல்ல" என்றான் விதுரன். "தாங்கள் குருகுலத்து மூத்தவர். அவர் சூதர் மட்டுமே." "மரபும் முறைமையும் எங்களுக்கில்லை. நாங்கள் விழியற்றவர்கள். நான் சொர்க்கம்சென்றால் அங்கே என்னை எதிர்கொள்ள என் பிதாமகர்கள் இருக்கமாட்டார்கள். தீர்க்கசியாமர்தான் இருப்பார். ஏனென்றால் அது விழியிழந்தவர்களுக்கான சொர்க்கமாக இருக்கும்" என்றான். பெருமூச்சுடன் கைகளைத் தூக்கி அசைத்து மேலும் ஏதோ சொல்லவந்து தயங்கி கைகளைத் தாழ்த்தி "எனக்கு ரதங்களை ஒருங்குசெய்" என்றான்.”

ஆம் அவன் பெருங்கோடைகள் ஆளும் பாலையின் மைந்தன். அவ்வாறுதான் அவன் வருகை நிகழமுடியும். அவனை அவர்கள் அஞ்சட்டும். அச்சம் பணிவைக் கொண்டுவரும். தாங்கள் அஞ்சாத எவரையும் மக்கள் தலைவனாக ஏற்பதில்லை. அச்சமே மக்களை ஒன்றாக்கும் விசை. அதுவே ஆற்றலாக ஆகிறது. அதுவே படைக்கலனாகிறது. பாரதவர்ஷம் நோக்கி கூரின் ஒளியுடன் எழும் வாள் அது!”

சகுனி திகைப்புடன் பார்த்தபின் விழிகளை திருப்பிக்கொண்டான். தானறியாத இன்னொரு ஆழத்தை தொட்டுவிட்டிருப்பதாக உணர்ந்தான். குரோதமா? ஆம் அதுதான். குரோதமேதான். எந்த அநீதியையும் செய்யத்துணியும் குரோதம் அது. யாருக்காக? பெரும் அன்பிலிருந்தே பெரும் குரோதம் பிறக்கமுடியும். யார் மேல்? பாண்டுவின் மைந்தன் மேலா? இல்லை. ஒரு கணத்தில் அவனுள் நூற்றுக்கணக்கான வாயில்கள் திறந்துகொண்டன. அதுவரை கண்ட பலநூறு தருணங்கள் மீண்டும் நினைவில் ஓடின. ஒவ்வொரு தருணத்திலும் அவன் ஆழம் கண்டு பதிவுசெய்த விழிநிகழ்வுகளை மீட்டெடுத்து கோத்துக்கொண்டே சென்று இறுதி எல்லையில் அவன் மலைத்து நின்றான். ஆம், அவனுடைய பாதையில் இறுதிவரை எதிர்வரப்போகும் எதிரி இவன்தான். இவனிருப்பதுவரை அவள் ஒருபோதும் தனியளல்ல...”கிருபாநிதி அரிகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...