https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 2 அக்டோபர், 2018

அடையாளமாதல் - 407 * எதிர்விசை உருவாக்கும் வாய்ப்பு *

ஶ்ரீ:




பதிவு : 407 / 570 / தேதி 02 அக்டோபர்   2018

 *எதிர்விசை உருவாக்கும் வாய்ப்பு  * 


எழுச்சியின் விலை ” - 09
முரண்களின் தொகை -01 .




இது ஊழின் பொருட்டு ஆடும் ஆடலை போன்றே கருணையற்றது , இதில்விளையும் மகிழ்வு, வருத்தம் , புகழ் , காழ்ப்பு , கண்ணீர், வியர்வை, ரத்தமென என அகமும் புறமுமாக உருவாகிற அல்லது உணரப்படுகிற அனைத்தும் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டுவரக்கூடய வல்லமை கொண்டவை . வாழ்கையின் விழுமியங்களை புரட்டிப்போட வல்லது . அதன் பரமபத விளையாட்டில் . வெற்றி தோல்வி இரண்டிற்கும் இறுதியில் எந்த வேறுபாடுகளுமே இருப்பதில்லை என்பது இன்னும் வினோதமானது . என்னால் இதை தொடர்ந்து ஆடமுடியுமா , இல்லையா ? யோசிக்க எனக்கு பொழுதில்லைவாய்ப்புகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளை கொண்டவை . காலம் ,நேரம் , திறன் என மீளவும் அவை எதிர் திசையில் என்மீது ஊடாடுவதை பார்க்க முடிந்தது . எதுவும் நிரந்தரமல்ல . இது ஒரு பயணம் இதில் பயணிப்பதே அன்றி பிறிதொன்றை யோசிப்பதே அவசிமில்லாதது .

அமைப்பில் புதிய வாய்ப்புகளால் அங்கீகரிக்கப் பெறுவது யாருக்கும்  அவ்வளவு எளிதில் நிகழ்ந்து விடுவதில்லை. அவை எப்போதும் எள்ளலும், புறக்கணிப்படுவதற்கு மத்தியில் தான்  பெரும்பாலும் நிகழ்கின்றன . அதில் நுழையும் முயற்சி என்பது அவைகளில் ஊடுபாவுகிற , எப்போதும் சமநிலை பேணுகிற துணிவு உள்ளவர்களுக்கானது . பலனையும் அதனால் எழும் பின்விளைவுகளையும் அதற்கான விலையாக கொண்டது . பாம்புடன் பழகுவது போல . நாட்கள் வேண்டுமானால் தள்ளிப்போகலாம் ஆனால் ஊழ் ஒரு நாள் வந்தே தீரும் . அவர்கள் அனைவரும் அதன் சொடுக்கிற்கு ஒவ்வொரு நாளும் காத்திருப்பவர்களே

இந்தப் புரிதல்கள் நடைமுறை அரசியலின் கசப்பிலிருந்து கிடைத்த அனுபவத்தினால் விளைந்தவை , என்றாலும் இதை எங்கோ ஆழ்மனதில் உணர்ந்திருந்தேன் போலும். அதில் நுழையும் போது அதன் அத்தனை பரிமாணங்களில்  அதன் வீர்யம் என்னவாக இருக்க முடியும் என்பதை பிறகுதான் அறிந்து கொண்டேன் . வலிமிகுந்ததாக இருப்பினும் , அவை இனியவைகளே.செயற்குழு கூட்டம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து , எதிர்ப்பை கொட்டுவாயில் வைக்கும் திறன் உள்ளவர்களின் விளையாட்டில் ஊழின் வலிமையால் நானும் ஒரு நாற்களக் காயென உள்நுழைந்திருந்தேன்.

நிகழ்ந்து முடிந்த அந்த செயற்குகுழு , மிக கவனமாக நிர்மாணிக்கப்பட்டருந்தது  . அதுவரை செயல்படாது நீர்த்துப்போயிருந்த செயற்குழு கமிட்டியை மூன்று மாவட்டமாக பிரித்து அத்துடன் புதிதாக உள்நுழைந்த அனைவரும் இணைக்கப்பட்டதால் கூடுகை உறுப்பினர் எண்ணிக்கை அறநூறை தாண்டியிருந்தது . அனைவரையும் ஒரே கூறுகையில் அமரவைப்பது எனது திட்டத்திற்கு உகந்ததல்ல என்பதால் அதை மூன்றாக பிரித்து ஒன்னரை நாள் நிகழ்வாக ஒருங்கி இருந்தேன் . அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தியது இந்த செயல்முறை

அரசியலில் தங்களை நிலைப்படுத்துக்கொள்ள விரும்பும் எவரும் தாங்கள் நிகழ்த்தும் நிகழ்வினை பிரம்மாண்டத்தின்  வழியாக பிறிதொருவரின் மலைப்பில் அதை பெற்றுவிடுவார்கள் . பெரும் மனிதத்திரளை கூட்டி பிரமிக்க செய்வதில் எந்த  அர்த்தமும் இருப்பதாக நான் எப்போதும்  நினைத்தில்லை . அது எனது வழிமுறையாகவும் இருந்ததில்லைஅதற்கு எதிர்நிலை பயணமாக அவை இருந்திருக்கின்றன

சிறு சிறு நிகழ்வாக செறிவாக செயல்திட்டமிட்டு , ஒவ்வொருவரையும் பங்கு கொள்ள வைக்கும் வழி அதில் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன் . அதில் பங்கு பெறும் அனைவரும் அதில் சொல்லெடுத்து பேசும் வாய்ப்பு திறந்ந்திருந்தது. அதில் பேசும் ஒவ்வொருவரும் இந்த நாளை மறக்கப்போவதில்லை. எனக்கும் கூரிய பேச்சுள்ளவர்கள் இனம் கண்டுகொள்ளப்பட இது ஒரு நல் வாய்ப்பு  . சபை அமைப்பு அனைவருக்கும் அவர்கள் சொல்ல விழையும் கருத்துக்கள் கடைசீ சொட்டு வரை பேச வாய்ப்பு மீள மீள கொடுத்தபடி இருக்கும் , என்பதால் யாரும் தங்களை ஒரு உரைக்கு தயார்படுத்திக் கொள்ள அவசியமிருக்காது . கட்சி அலுவலகத்தில் உரை நிகழ்த்த யாரும் தயக்கம் கொள்வார்கள்.   அனைவரையும் இங்கு பேசவைப்பதன் மூலம் இயக்கம் முழு செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக நான் காட்ட நினைக்கும் நிலையை அது இயற்கையாகவே அடைந்துவிடும் . மட்டுறுத்தலுக்கு மட்டுமே நியமிக்க பட்ட குழு மிகைத்திறமையாக அதைசெய்து முடிக்கும் . கூடுகைக்கு நாட்டாமையாக பலர் தளி எடுக்கும் வாய்ப்பை அது தருகையில் யாரும் அதை தவறவிடமாட்டார்கள் . இந்த கூடுகை முடிவில் , மேல் கீழ் அமைப்பு முறை தானாக உருவாக்கி வந்து விடும் .

அங்கு நான் ஒருங்கிணைப்பாளராக அதில்  அமர விழையவில்லை . அந்த கூடுகைக்கு நானும் கட்டுப்பட்டவன் என்கிற ஒன்றை நிலைநிறுத்த விரும்பினேன் . குழு தன்னளவில் திறன் மிக்கதாக ஒரு தோற்றம் உருவாகிவரும் என் திட்டமிட்டிருந்தேன் .கூடுகையை ஒழுங்கு படுத்த மட்டுறுத்தும் நெறியாளர்  உருவாக்கப்பட்டு , அந்த குழுவிற்கு சில முறைமைகளை சொல்லி வைத்திருந்தேன் . அது  அவர்களுக்கு இரண்டு வழிமுறைகளாக  சொல்லப்பட்டிருந்தன. ஒன்று பேசியது மீளவும் பேசாமை . நிரல் குறிப்பிலிருந்து விலகாமை மற்றும் அதுவரை பேசப்படாதாது  மட்டும் , பேச வாய்ப்புகள் தொடர்ந்து அளிக்கப்படும்  என்கிற நிலை கூடுகையை திண்மையாக மாற்றுவதும் நிரல் விஷயம் மட்டுமே பேசப்படும் , பலருக்கு பலமுறை வாய்ப்பு கிடைத்தாலும் , கருத்துக்கே முதலிடம் இருக்கும் .

செயற்குழுவின் நோக்கமும் , சூழ்லையின் நுட்பம் புரியாது தனது மிகைமுரண்பாடுகளால்  கூடுகையை  வெளியேற்றிய சுகுமாரன் பின்னர் அதில் பங்கெடுக்காது போனால் விளையும் சிக்கலை அன்று இரவு உணர்ந்திருக்க வேண்டும். அல்லது அவன் வெளியேறியது அரசியல் மடமை என விஷயமறிந்த யாராகிலும் அவனுக்கு  அறிவுறுத்தியிருக்க வேண்டும். மறுநாள் காலை கூடுகைக்கு அவனும் வந்திருந்தான். ஆனால் அதற்குள்ளாக இரண்டு மாவட்ட குழுக்கூட்டம் நிகழ்ந்து முடிந்திருந்தது .அன்று மதியத்துடன் அனைத்து நிகழ்வும்நிறைவுறும் தருவாயில் , நிறைவு நாள் அன்று சுகுமாரன் தனது மாவட்டம் பற்றிய சிக்கலை சொல்லும்போது ,அவன் முன்னெடுத்த அனைத்து விஷயமும் முன்பே பேசப்பட்டு அதற்குறிய தீர்வும் சொல்லப்பட்டிருந்த நிலையில்  கூடுகை நெறியாளர்களே , அவன் எழுப்பிய அனைத்தையும் ஏற்றும், விளக்கியும் அல்லது மறுத்தும் பேசி அதை சில நிமிடங்களில் முடித்து வைத்தனர் .

நான் அவன் தலையில் ஓடுவது என்னவாக இருக்கும் என்பதை பார்க்க முடிந்தது . உண்மையில் அவன் எழுப்பிய சில விஷயங்களே நேற்று கூடுகையில் முழு நேரத்தையும் எடுத்துக் கொண்டது. பலர்முரண்பட்டு பின் அனைவரும் ஏற்கும் மாற்றுத்திட்டம் முனவைக்கப்பட்டதால், கூடுகயின் நெறியாளரே அவனை முழுமையாக எதிர் கொண்டனர். அவர்கள் அளவில் நேற்று நடந்ததை சுகுமாரனுக்கு விளக்கிச் சொலகிறோம் என்கிற பாவனை மட்டுமே இருந்தது . ஆனால் சுகுமாரன் மனம் அனைத்துநிர்வாகிகளும் என் பின்னால் அணிதிரண்டுவிட்டதாக கற்பனை செய்து கொண்டிருப்பான் . அரசியலில் பிழைக் கணக்கு அதன் பாதையை முற்றாக மாற்றக்கூடியது . அந்த மாற்றமே இப்போது  நான்  ஆலோசனை கூட்டத்தை கூட்டும் வாய்பபை எனக்கு கொடுத்ததுடன் .எனது ஏதிர்நிலைப்பாட்டாளர்களும் அதில் பங்கு பெற்றேயாகவேண்டும் என்கிற நிர்பந்தத்தை ஏற்படுத்தி விட்டது வேடிக்கையானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்