https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 15 அக்டோபர், 2018

அடையாளமாதல் - 410 *வெளிப்படும் முகங்கள் *

ஶ்ரீ:




பதிவு : 410 / 573 / தேதி 15 அக்டோபர்   2018

*வெளிப்படும் முகங்கள்  * 


எழுச்சியின் விலை ” - 11
முரண்களின் தொகை -01 .





கட்சித் தலைவர்களாக பொறுப்பிற்கு வருபவர்கள் எப்போதும் அனுக்கர்களையே தங்களது கமிட்டியில் கொண்டு வருவார்கள். அது கமிட்டியை செயல்பாட்டில் வைப்பது  என்பதால் ஒரு வகையில் சரியானதும் கூட . தனக்கு கட்டுப்படாத ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு யார்தான் என்ன செய்ய முடியும் , ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஒரு வழமை உண்டு , குறிப்பிட்ட அளவில் மாற்று கருத்துடையவர்களையும் ஒதுக்கீடு என்கிற வகைமையில் அதில் உள்புகுத்துவார்கள் . அது இரண்டு விதமான பலன்களை கொடுப்பவை ஒன்று உட்கட்சி ஜனநாயகம் காக்கப்படும் . இரண்டு, பலதரப்பட்ட கருத்துக்களை கொண்டவர்கள் யாரையும்  விட்டு விடாது அமைப்பை சரியான திசைக்கு அழைத்து செல்ல உதவும் என்பது கட்சியின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று என்பது பிறிதொரு காரணம் .(மேலிடத்திற்கு எங்கும் யாரும் தனித்த தலைமையாக எழலாகாது என்கிற எண்ணமிருக்குமோ என்மோ).

எனது பாணியும் அதைப் பின்பற்றிநான் எனது அனுக்கர்களை மட்டுமே கமிட்டியில் கொண்டு வருவேன் என்கிற எண்ணம் எனது எதிர்நிலையாளர்களுக்கு இருந்திருந்தால் அதில் வியப்பில்லை . நான் யாருக்கும் கட்டுப்படாத போக்குள்ளவன் என்பது ஒரு இயல்பு, அதையே எல்லாவற்றிலும் செய்ய முனைவேன்  என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால்  எனக்கு அதுபோல ஒன்றை அமைத்துக்கொண்டு அல்லாட எனக்கு விருப்பமில்லை . அவர்களுக்கு  எனது கமிட்டியில்இடம்   கொடுப்பது வேறுமாதிரியான திண்டாட்டம் என்றாலும் , எனக்கு அந்த எண்ணம் இல்லாததற்கு பாலன் கமிட்டியில் கிடைத்த பாடம் போதுமானது. திறனற்ற குழுவை கொண்டதாக ஒரு கமிட்டி அமையுமானால் அதன் தலைமைக்கு அதனினும் கேடு பிறிதில்லைசெயல் திறனற்றவர்களுக்கு , தங்களை தக்க வைத்துக் கொள்ள இரண்டு வழிமுறைகள் மட்டுமே சாத்தியப்படுவது. ஒன்று கூச்சமில்லாத ஓயாது தலைமை துதிபாடுதல் அல்லது பிரறை எப்போதும் போட்டுக் கொடுப்பது. இது ஆரோக்கியமான கருத்திற்கு வழியே இல்லாதுசெய்துவிடும் 

அனைத்தையும்  எல்லா நேரமும் திறம்பட , சரியாக செய்ய எந்த  ஒரு தலைமையாலும்  முடியாது . மாற்றுத் திறனும் வாய்ப்பும் உள்ள அமைப்பாக இருந்தால் மட்டுமேதலைமை அதை சரியான இலக்கை நோக்கி செலுத்த இயலும்  . திறன் இல்லாத அமைப்பை நடத்தி செல்வதை காட்டிலும் தலைமைக்கு வதை பிறிதொன்றில்லை. தலைமை தனியாளுமையின் குணம் என்றாலும் பொறிகள் நிறைந்த அரசியலின் , அனைத்து கூறுகளையும் கருத்தில் கொள்வது தனியொருவனருக்கு   சாத்தியமில்லாதது  ஒரு விதமான கூட்டு முயற்சி , மாநிலம் முழுவதும் பிரதிநிதித்துவப் படுத்தும் கமிட்டி வெற்றிகரமாக அமைந்து விட்டால் . நிகழ் அரசியலின் நிலை குறித்த தரவுகளுக்கு பஞ்சமிருக்காது. அதை கொண்டு   தனக்கோ தனது திட்டங்களுக்கோ எழும் சிக்கலை எதிர்கொள்ளவும் அதை முறியடிக்கும் வாய்ப்பை  அது பெருக்கிக் கொடுத்து விடும்.உத்தேச கமிட்டியில் எனது அணுக்கர்களில் அசலான தனித்திறமை உள்ளவர்கள் முதல்மை இடம் பெற்றார்கள் . மற்றவர்கள் எனக்கு கட்டுப்படாதவர்களாக இருந்தாலும் , முக்கியமான பிற ஸ்தானத்தில்   அவர்களை அமர்த்தினேன் , அமைப்பிற்குள் எனது அணுக்கர்களே முக்கியத்துவம் பெறுவார்கள் என்கிற எண்ணம் முற்றாக தகர்க்கப்பட வேண்டும் என விழைந்தேன்

அரசியலில் தனித்த அடையாளங்களுடன் முகம் எழுவது இன்றியமையாதது என நினைக்கிறேன். அதுவே செயல்படும் முறைப்பற்றிய முன்வடிவத்தை உருவாக்கிவிடும்அரசியலில் சிலருக்கு மட்டுமே உச்சநிலையை அடைவதற்கான வாயப்பு கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்புகளில்   உள்ள சிடுக்குகளை கற்றுக் கொள்வதற்குள்ளாக , காலம் முடிந்து விடுகிறது , அதனாலேயே பலர்   சொற்ப்ப காலத்திற்கே  அங்கே நிலை கொள் இயலுகிறது . வெகு சிலர் மட்டுமே காலம்  துணைக்க  தங்களது செயல்திறனால் கூடுதல் காலம் அதில் நீடிக்கிறார்கள். . அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் அடையாளம்உருவாவதை   அறிந்து கொள்ள முடிகிறது. அரசியலில் பதவிகளை பெறுவதைவிட தனக்கான முகம் அடைவதுதான் மிக சிக்கலானது. முகமுள்ளவர்களுக்கு  மீண்டும் , மீண்டும் வாய்ப்புகளைப் பெற்று அடுத்தவருக்கான வழியை மறிக்கிறார்கள் .
என்னை மட்டுமே சார்ந்திருந்த எவரையும் விட்டுவிடாமல் அனைவரையும் இரண்டாம் அல்லது முன்றாம் நிலைக்கு கொண்டுவந்த போது அவர்கள் என்மீது வருத்தமடைந்தார்கள் . எதிர்பார்த்ததுதான் . அதை அவர்கள் எடுத்துப்பேச முயன்ற போது எனது கடுமையான எதிர்ப்பினால் ஆரம்பத்திலியேயே அதை  தவிர்க்க முயற்சித்தேன் . பதவியை எனது அணுக்கர்களுக்கு மட்டும் முதல்மை பொறுப்பு தரமுடியாது  அது செயல்பாட்டை பாதிக்கும் என்பது பற்றி அவர்களுக்கு விளக்க பெரும் முயற்சி எடுத்தேன் . எதுவும்  அவர்களுக்கு அது புரியப்போவதில்லை .

காரணம் அது அமைப்பில் உள்ள அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவை முதன்மையாக கொண்டது. சராசரி உறுப்பனர்களின் திறள் கடல் போல எப்போதும் கொந்தளித்தபடியே இருப்பது ,அவர்களை அனுசரிக்க , அல்லது ஒருங்கிணைக்கும் சக்தியற்றவர்கள் தாங்கள் வீழ்ச்சி அடைவது மட்டுமின்றி அமைப்பையும் வீழ்த்திவிடுவார்கள் . பாலன் அமைப்பில் இந்த சீரழிவை நேரடியாக பார்த்தேன் . ஆனால் வேறு கோணத்தில் பார்க்கையில்  பாலன் அதை முயற்சித்தருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றே இப்போது நினைக்கிறேன் . காரணம் காங்கிரஸ் கட்சி அமைப்பும் அதன் தலைமையும்  இளைஞர் காங்கிரசுக்கு எதிர்ப்பாக இருந்ததால் எந்த தொகுதியிலும் கட்சி சார்ந்த பொது ஆதரவை தளத்தை அவரால்  பெற முடியாது போவதற்கே வாய்ப்பு. அதுவே நிகழ்ந்து அமைப்பை குறுங்குழுவாக்கி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக