https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 11 அக்டோபர், 2018

அடையாளமாதல் -409 - திறப்பு-

ஶ்ரீ:

அடையாளமாதல் - 409

பதிவு : 409 / 572 / தேதி 11 அக்டோபர்   2018

திறப்பு 


எழுச்சியின் விலை ” - 10
முரண்களின் தொகை -01 .





அந்த செயற்குழு கூடுகையும் அதில் நிகழ்ந்த பிழையும் எனது சிந்தனையிலும்  செயல்பாடு விதத்திலும் பெரியதாக மாற்றங்களை கொண்டு வந்துவிட்தை உணரமுடிந்தது சில அடைப்படை தயக்கங்களிலிருந்து நான் முற்றாக வெளிவர அது உதவியது . இதற்கு முன் இருந்த தயக்கங்களுக்கு ஒரு சமாதான கோட்பாடு இருக்கும் , அதுவே என்னை எதிலும் அகலக் கால் வைப்பதை தடுப்பது . அதுதான் இப்போது என்னையும் அறியாமல்  புதிய கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டது  நினைக்கிறேன் .

விளைந்த சாதக நிலை திரிபடைவதற்குள்ளாக. அமைப்பை சரி செய்யத் வேண்டும் என்கிற வேகம் இருந்தது. இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் . “ஓசோன் திறப்புஎன அரசியலில் ஒரு சொல் உண்டு . அதன் கோட்பாடு ஒருவகை மூடநம்பிக்கை போல, வேடிக்கையாக இருந்தாலும், சில நேரங்களில் அந்த திறப்பு பற்றி சிலர் உற்சாகமாக பேசுகிற போது அதில் இருந்த தர்க்க நியாயம் , உண்மை எனக்கு திகைப்பை கொடுத்ததுண்டு . மனிதன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள உருவகிக்கும் கோட்பாடுகளை நம்மால் அறிவியல் ரீதியாக எப்போதும் நிரூபிக்க இயலாது போனாலும் . அது ஒரு அனுபூதி போல பலரின் சொல்நிறைந்த வெளியில் , அனுபவத்தில் உறைந்திருக்கிறது .

அரசியிலில்ஓசோன் திறப்புஎன்கிற பதம் ஒருவகை அதிர்ஷ்ட காலக் கணக்கு . “நுண்மான் நுழைபுலம்அல்லதுகருந்துளைபோல ஒரு கருத்தியல் கோட்பாடுகளுடன்  இதை இணைத்து புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் . அது தன்னில் நுழையும் எவரையும் அவர்களது திறமையை அல்லது அனுபவ அறிவை கணக்கில் கொள்ளாது அவர்களை ஒரு இடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு கடத்துகிறது , அதாவது நினைக்க முடியாத வெற்றிக்கு என்கிறது ஒரு நம்பிக்கை . அதாவது விளக்கவியலாத வெற்றிக்கு  ஒரு குறிப்பிட்ட கதியில் தளத்தில் புழங்கும் அனைவரையும் அது ஒரு சேர கடத்துகிறது.இதை பற்றி நம்பிக்கையுடன் விவாதிப்பவர்கள் சொல்வதை  எடுத்து நோக்கி அவர்கள் அடைந்ததை வெற்றியை இதனால் மட்டுமே விளக்க முடியும் என்பார்கள் . வெற்றி மற்றும் தோல்வியடைந்த மனிதர்களையும் அவர்களின்  புத்திசாலித்தனம்  பற்றியும் மறைந்த சினிமா நடிகர் சந்திரபாபுவின் பாடல் இதற்கு ஒரு நல்ல உதாரணம் . அரசியலில் பலருடைய வெற்றி ,தோல்விகள் இந்த பாடலுக்கு பெரும் வலு சேர்ப்பதை இணைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

முதல் முறையாக நான் இதை அறிந்து கொள்ள நேர்ந்த போது ஒரு விதமான இளிவரலாகத்தான் அதை அனுகினேன். சிலரின் வெற்றி தோல்விகளை யதார்த்தக் கணக்குகளில் பொதிந்து புரிந்து கொள்ள முடியாது போகிறபோது அவைகளை நெருங்கி அறிந்து கொள்ள உதவும் ஒரு கடப்பாடு  . இதை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள் அதற்கு வலு சேர்க்க சொன்ன உதாகரங்கள் எனக்கு வியப்பை ஏற்படுத்தியதுண்டு. அவர்களின் கூற்றுப்படி அவர்கள் சில வருடங்களை அதற்கு உதாரணமாக சொன்னபோது எனக்கு நம்பவியலாத திகைப்பை ஏற்படுத்தியது . சிலர் பெரும் தலைவர்களாக உருவெடுத்தது நிகழ்ந்ததை அந்த வருடத்தை ஏதாவதொரு வகையில் இணைத்தது

பிற்காலத்தில் அரசியில்லாத பிற துறைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கூட  அந்த வருடத்துடன் ஏதாவதொரு வகையில் சம்பந்திருப்பதை நான் பார்த்த போது அது உண்மையோ என்கிற உளமயக்கு ஏற்ப்பட்டதுண்டு .விளங்கவொன்னாத வெற்றி என்பது ஏறக்குறைய அப்படிப் பட்டதே எனப் புரிந்து கொள்ள முடியாததுமுக்கியமான நிகழ்வுகள் நடந்து  அவர்கள் சொன்ன வருடத்தில்தான் துவங்கியதாக நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது.

செயல்பாடுகளில் இருந்து முற்றாக விலகி நின்ற மாநில அமைப்பை மூன்று மாவட்டமாகவும், அவை ஒவ்வொன்றின் கீழ் பத்து தொகுதிகள் வருவமாறு அது வடிவமைக்கப்பட்டது. மாவட்ட மற்றும் தொகுத்தி நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்பு துவங்கி, அதற்கான முறைமைகளாக சிலவற்றை அமைத்துக்கொண்டேன் . கடந்த கால அனுபவம் மற்றும் பாலன் செய்த அரசியல் பிழை போன்றவற்றிலிருந்து விலகி நிற்பது என்பதில் உறுதியாக இருந்தேன்  . ஒரு தலைமை என்பது எப்படிப்பட்ட கருத்தியலால் நிலைபெறுகிறது . அதன் மனப்பான்மை எத்தகையது அதனால் எழும் நண்மை சிக்கல்  குறித்த புரிதல் போன்றவை பல்வேறு அடுக்குகளாக அமைந்திருப்பதை காண முடிந்தது

அனைத்தும் ஓர் எல்லைக்கு உட்பட்டது . நான் அவைகளை பிறிதொரு முனையிலிருந்து அறிந்து கொள்ள முயன்றவன். இதற்கு முன்பாக பாலன் தலைமையில் பல முறை கமிட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தாலும் , அவை எப்போதும் அரசியல் முறைமைகளை பிரதானமாக கொண்டிருக்கவில்லை . நான் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலைகளை கையாண்டேன் . பின்னாளில் எனது முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு அவைகளை நான் முதன்மையாக கொண்டு வர முயற்சித்தது ஒரு காரணமாக இருக்கலாம் . இருப்பினும் இன்றளவும்அந்த தோல்விகளால் நான்  துயருறுவதில்லை . ஒரு கட்டத்தில் எந்த முயற்சியும் வெற்றி தோல்வி என்கிற இரட்டைகளுக்குள் நின்றுவிடுவதில்லை அதற்கு அப்பால் வேறொன்றை சொல்வருவதை பார்க்கிறேன் . அது முடிவிலி  . எதற்கும் ஒற்றைப்படை கணக்கை நான் வைத்திருக்காததால் புதிதாக ஒன்றை முயற்சித்ததில் எனக்கு பரிபூர்ண உடன்பாடு , எனது மனநிலைக்கு பிறிதொன்றை என்னால் செய்ய இயன்றிருக்காது என இப்போதும் உணர்கிறேன்

ஒரு செயல் பெரும் தோல்வியில் முடிந்தாலும், அதை சரியாக செய்ய  முயற்சித்த திருப்தியே எனக்கு இன்றளவும் நிறைவை தருகிறது . எவர்களுக்காக இதை செயதேனோ அவர்களில் சிலராவது அம்முயற்சிகள் வெற்றி பெறாததைக் குறித்து இப்போது வருந்துவதையே நான் அவற்றை சரியாக முயற்சித்தேன் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு பதவிக்கும் நியமிக்கப்படுகிற நபரை பலமுறை யோசித்தே அந்தஇடத்திற்கு கொண்டுவந்திருந்தேன் , இது பலகாலம் முன்பே மனதில் திட்டவட்டமாக உருப்பெற்ற ஒன்று என்பதால் ,அதற்கு வடிவம் கொடுக்க எனக்கு நீண்ட காலம் தேவைப் படவில்லை . ஒவ்விரு பதவிக்கும் அந்ததந்த தொகுதியின் ஆற்றல் மிக்க இளைஞர்களை உள்ளே கொண்டுவந்தேன் . அவர்கள் எவ்விதத்திலும் எனக்கு கட்டப்பட்டவர்களில்லை என்பது நான் முன்பே அறிந்ததுதான் இருப்பினும் . எல்லாவற்றையும் கடந்து , சரியான செய்பாடுகளின் வழியாக அவர்களின் மனதை வென்றெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது சவால் என்றாலும் அதை முயற்சிக்க முடிவு செய்தேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்