https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 8 ஆகஸ்ட், 2026

அடையாளமாதல். * மனசாட்சி *

 


ஶ்ரீ:



பதிவு : 699  / 888/ தேதி 08 ஆகஸ்ட்  2026




* மனசாட்சி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 96.


திட்டமிடப்பட்ட நிகழ்விற்கு பின்னால் இருந்த நிஜ சிக்கல் மாரிமுத்துவின் தீவிர ஆதரவாளர்கள். ஊசுடு தொழிற்சாலைகளால் சூழ்ந்த பகுதி. அந்த நிறுவனங்களில் சில மாரிமுத்துவின் ஆதரவாளர்களில் சிலரை தேர்ந்தெடுத்து தங்கள் அரசியல் லாபத்திற்கு உபயோகப்படுத்துக் கொண்டன. அதற்குறிய சன்மானம் அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது. அவைகளில் பெரும்பாலான தொழிற்சாலைகள் விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் இருந்தது உதாரணத்திற்கு சேதராப்பட்டு,கரசூர்,துத்துப்பட்டு போன்ற கிராம குடியிருப்பிற்கு மத்தியில் அவை அமைந்திருந்தன. அது பெரிய விதிமீறல். அரசாங்கத்தில் பலரை ஒழுங்குகட்டி அந்த நிறுவனங்கள் அங்கு நிறுவப்பட்டு இயங்கி வந்ததால் அதிலிருந்து எழும் பலவித மாசுகள் குடியிருக்கும் மக்களை நேரடியாக பாதித்தது. அரசாங்க துறைகள் யாவும் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் இருந்தார்கள் என்பதால் நிர்வாகம் யாருக்கும் அஞ்சாதவர்களாக உருவெடுத்திருந்தது . அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் காவல்துறையின் உதவி இல்லாமல் அவர்களாக நேரடியாக ஒடுக்க ஆரம்பிக்க சிக்கல் கொதிநிலையை அடைந்தது. இளைஞர் காங்கிரஸ் தொடர் போராட்டம் வழியாக நிலைமை சீர்பட்டாலும் அது புகை மூடிய நெருப்பாக இருந்தது. இதுபற்றி விரிவாக பழைய பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்


மாரிமுத்துவின் ஆதரவாளர்கள் சிலர் அந்த நிறுவனங்களிடம் இருந்து பணமும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டிருந்ததால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக பொதுமக்கள் எழுந்து விடாத படிபார்த்துக்கொள்ளப்பட்டனர். காங்கிரஸ் இளைஞர் அமைபிற்கும் அவர்களுகளுக்கும் எப்போதும் விரோதம் இருந்தது எனவே இளைஞர் காங்கிரஸ் அமைப்பு பலம் பெறுவது இரண்டு தரப்பிற்கும் ஏற்றதல்ல என்பதால் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கு விரோதமாக பாலன் காலத்தில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அவர்களை இப்போது ஒரே அணியில் கொண்டுவருவதில் உள்ள சிக்கல் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவிடம் பேசினேன். அந்த பிளவு மாரிமுத்து தனது அரசியல் காரணமாக வளர்த்தெடுக்கப்பட்டது இப்போது அதை பாசறைக்கு திரும்ப சொல்வதில் அவருக்குள்ள வலியை உணர்ந்து கொள்ள முடிந்தது அதை வெளிக்காட்டிக்  கொள்ள விரும்பவில்லை அது பற்றி தெரிந்தவனாக நானும் என்னை காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதன மூலம் எல்லா தரப்பிற்கும் சாதகமான சூழல் உருவாகலாம் என நினைக்கும் சில ஊகங்களை அவரிடம் முன் வைத்தேன்.   


மாரிமுத்துவின் சமீபத்தில் நிகழ்ந்த தேர்தலில் தோல்வியுற்றதில் இருந்து அவரது ஆதரவாளர்கள் தங்களுக்குள் எழுந்த முரண் உள்ளிட்ட வேறு பல வேறு காரணங்களால் பிரிந்து கிடந்தனர். அவர்களின் முதன்மை ஆதரவாளன் என அறியப்பட்ட நபரின் தலைமையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு சிறு கூட்டத்துடன் எதிர்கட்சிக்கு சென்றுவிட்டனர் அவர்கள் ஊருக்குள் யாரை வேண்டுமானாலும் எங்களுக்கு எதிராக தூண்ட முடியும். நிகழ்வில் எங்காவது வரு இடத்தில் அமைப்பிற்குள் கடும் மோதல் உருவாகும் சூழல் நிலவியது. அப்படிப்பட்ட  உருவானால் அது எனக்கு எதிரானதாக சண்முகம் முன் வைக்கப்படும். இதை என்றாவது ஒருவித்தில் எதிர் கொண்டேயாக வேண்டியது. அதை மறுத்தே எனது இடத்தை நான் நிறுவிக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் அனைவரவையும் இணைக்கும் வாய்ப்பு உருவாகி நிற்கிறது. எளிய அச்சத்தின் காரணமாக இதை தவறவிட்டால் பின் பிறிதொரு சந்தர்பம் வாய்க்காது.அதை மாரிமுத்துவிடம் தெளிவாக கூறினேன். இன்றைய கள உண்மை நிலவரம் அவர் உருவாக்கி எடுத்த அமைப்பு நீர்த்து இன்று ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு ஆதாயத்தை பங்கு பிரிப்பதில் உள்ள சர்ச்சையில் நாங்கள் மூன்றாவது தரப்பினர். அமைப்பு ரீதியாக பெரும் கூட்டம் இதில் நாங்கள் ஏதாவது ஒரு தரப்பை ஆதரித்தால் அதில் எழும் தீவிரம் பின் ஒரு அணையாது என்பது மட்டுமல்ல உயிர் பலியை தடுக்க இயலாது. நான் இதற்கு முற்றும் எதிரான நிலைப்பாட்டில் இருந்தேன்


மாரிமுத்து அதை உருவாக்கினாலும் இன்று அது எதற்கும் கட்டுப்படாத கூட்டமாக நிற்கிறது. எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கும் சூழலில் அவரும் உள்நுழைந்தால் யாரும் யாரையும் காப்பாற்ற இயலாது. இன்று எங்களை ஆதரிப்பதை தவிற அவருக்கும் வேறு வாய்ப்புகள் இல்லை என என்னைவிட அவருக்கு தெரிந்திருந்தது. ஒருவாறு உடன்பட நிகழ்வு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இன்று நிகழ இருக்கும் நிகழ்ச்சி மாநில காங்கிரஸ் அமைப்புடன் இணைந்து நடைபெற இருப்பது. இயல்பில் இரண்டும் இருபது ஆண்டு காலம் எதிரெதிராக நின்றிருந்த சூழல் மாறி இன்று இணைந்து ஒரு நிகழ்வை நடத்த முயற்சிக்கும் வாய்ப்பு. அது எனக்கு தனிப்பட்டு தலைவர் சண்முகம் ஏற்ற திட்டம். அதை இளைஞர் காங்கிரஸ் நிகழ்வாக மாற்றியது இரு அமைப்பிற்குள்ளும் இருந்த முரண்களை சிறிதாவது சரி செய்யும் முயற்சி.  


முதல் முயற்சியில் தோல்வியடைய தேரிட்டால் எனது பாதையை மாற்றி யோசிக்க வேண்டி இருக்கும் எது எப்படி  ஆயினும் இன்று எனக்கு மட்டுமே என திறந்திருக்கும் கதவின் வழியாக நான் எல்லோரையும் அழைத்துச் செல்லவேண்டும். துரதிஷ்டவசமாக இன்று அமைப்பில் சீனியர் ஜூனியர் என எவரும் இல்லை அது ஒருவகையில் ஆட்டத்தை கலைத்து ஆட எனக்கு வாய்ப்பளிக்கும் அதே சமயம் எனக்கான இடம் அவர்கள் அமர்ந்திருக்கும் பீடத்திற்கு மேல உருவாக வேண்டியது. பீடம் உருவாகாமல் போனால் எனக்கான இடம் எப்பதைக்கும் அல்லாமலாகும் . நான் எனக்குள சொல்லிக் கொண்ட ஊழ்க நுண்சொல் இது. மிக மிக கவனமாக ஒவ்வொரு நகர்வாக சென்று கொண்டிருந்தது. அதுவும் ஏறக்குறைய இதைவிட விரிந்த நிலையில் அரங்கேற்றப்பட்டாலும் அதன் மைய விசையை இழந்து நிற்காமல் பாரத்துக் கொள்ள வேண்டும். எதிர்பாளர்கள் என திரண்டிருப்பவர்கள் இன்று அமைப்பென ஏதும் இன்றி அரசு அதிகாரத்திற்காக செய்து கொண்ட சமரங்கள் அதனுள் அடங்கா முள் என குத்தி வெளிக்காட்டி நிற்கிறது என்பதால் தலைவர்கள் என யாரையும் நான் சென்று பார்க்கவில்லை. அதி காங்கிரஸின் மாநில தலைமை செய்ய வேண்டியது என அதிலிருந்து விலகி நின்றேன். அதற்கு முக்கியமான வேறு காரணங்களும் இருந்தது. தொகுதி தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நிலமுடை சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்களை நான் சென்று சந்திப்பது சரியாக இருக்காது என்றேன் . இளைஞர் காங்கிரஸின் இத்தனை கால அரசியல் இழப்பை இனியாவது ஈடு செய்தாக வேண்டும் என்பது நீண்ட கால கனவு அது நிகழும் காலம் ஒன்று வரும் என நான் கற்பனையிலும் நினைத்ததில்லை. இன்று ஊழ் என் அருகே நின்றுஎன்ன செய்யப் போகிறாய்?” என கேட்டு நிற்கிறது.


அரசியல் கைவிடப்படுதல் துரோகங்களால் முன் நகர்பவை இந்த இரண்டும் அதன் வளர்ச்சி சக்தியாக புரிந்து கொள்ளப் பட்டிமிருக்கிறது என்பதால் அது ஏற்கப்படும் செயல்முறை என வகுக்கப்பட்டு விட்டது. அதன் விளைவு என்ன என்பதை நன்கு அறிந்திருக்கிறேன். இதுநாள் வரை எனது அரசியல் அந்த இரண்டு மாற்றமில்லாத விதிகளுக்கு எதிரானவை. என் அரசியலை அப்படித்தான் உருவாக்கிக் கொண்டேன்என் சொந்த அமைப்பின் உறுப்பினர்களே நான் அவர்களை சென்று சந்திப்பதை விரும்பமாட்டார்கள். எந்த திட்டம் முன்வைத்தாலும் அதை ஏற்க மறுக்கலாம் மேலும் என்மீதிருக்கும் நம்பிக்கையை அது குலைத்துவிடும் என் அரசியலே நிலமுடை சமூகத்தை எதிர்த்து இளைஞர் அமைப்பை வெளிக் கொண்டுவருதுலில் இருக்கிறது. மூச்சடைக்க வைத்திருக்கும் சூழலில் இருந்து அவர்களை மீட்டாக வேண்டும்.


மாரிமுத்து இறுதி முடிவு எடுக்கும் முன்பு ஊர் பெரியவர்களை அஞ்சினார். அவரிடம் நான்ஊசுடுவில் எனக்கு எதிராக நிகழ்வது நிகழட்டும் அதை எதிர் கொள்ளும் ஆற்றலுடன் இருக்கிறேன் நான் அவற்றை இங்கு எதிர் கொள்ளும் முறை பின் எந்த தொகுயிலும் எனக்கு எதிர்ப்பில்லாமல் செய்து கொள்ளும் யுக்தியிலானது என்பதால் அவர்பளுடன் எனக்கு எந்த உடன்பாடும் தேவையில்லை. அவர்களின் செல்வாக்கு தொகுதியில் காலாவதியாகி விட்டதை தலைவர் புரிந்து கொள்ளாது இருக்கலாம் . ஆனால் நான் களத்தில் நின்று வளர்ந்தவன் இங்கு உள்ள உண்மை நிலை எனக்கு தெரியும்என்றேன்.இணைந்து செயல்படுவது என்கிற முடிவுடன் அவரது வீட்டில் இருந்து வெளியே வந்தேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அடையாளமாதல். * மனசாட்சி *

  ஶ்ரீ : பதிவு : 699  / 888/ தேதி 08 ஆகஸ்ட்   2026 * மனசாட்சி *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 96. திட்டமிடப்பட்ட நிகழ்விற்கு...