https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

மணிவிழா. * நினைவுகளை ஏந்தல்*

 ஶ்ரீ:



மணிவிழா - 81


06-08-2026




* நினைவுகளை ஏந்தல் *




அறம் பேரிப்பினால் நிலைபெறுகிறது. தன்னை காக்க ஒரு நாதன் இருக்கிறான் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்தாலும் அது தரும் விடுதலையை பிற எதுவும் தர இயலாது அதை மறுப்பவரேஅநாதைகள்”. பேரிருப்பின் மீதான நம்பிக்கையை கைவிடாதிருத்தல் மட்டுமே எந்த நேரமும் என்னை குடைந்து கொண்டிருக்கும் எதிர்மறை நினைவுகளில் இருந்தும், அதை உருவாக்கும் என்னை என்னிடமிருந்து மீட்க முடியும் என என் ஆழமனம் எனக்கு அறிவுறுத்தி இருக்கலாம். அதன் மீதான நம்பிக்கை ஒரு வரம் போல எனக்கு அருளப்பட்டிருந்தது. அன்றாட விழ்வியலில் மனம் உருவாக்கும் நம்பிக்கை இழப்பு அச்சம் போன்றவைகளில் பல நிகழ்வதே இல்லை கற்பனையில் அதுவரை அழுத்திக் கொண்டிருந்த அச்சமும் கவலையும் என் ஊழ் மட்டுமே. நிலையழிவு உருவாக்கும் சோர்வும் அதை விலக்கிக் கொள்ள அறம் குறித்த நம்பிக்கைக்கும் உள்ள தூரத்தை கடக்க எனக்கான சாதனம்சரணாகதி”. நான் சரணாகதி என நினைத்திருப்பதை பற்றியும் அதை பின் பற்ற நினைப்பதும் அனைத்தும் நான் உருவகித்துக் கொண்டது. வானப்பிரஸ்தம் போல என்னை நான் தனிமைபடுத்திக் கொண்டதில் இருந்து நான் எனக்கென உருவாக்கிக் கொண்டதுஅது அசல் வடிவில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கலாம். ஆனால் அந்த சொல் அளிக்கும் விடுதலை ஒருநாள் அது என்னை ஆரத்தழுவி என்னை அதன் அருகில் சென்று நிறுத்திக் கொள்ளலாம்


நான் உருவாக்கிக் கொள்ள நினைத்தது என்னால் செய்ய இயன்றது. அதற்கான சக்தியோ திறனோ எனக்கு இருக்கிறதா என கேட்டால் பதில் நிச்சயம் இல்லை என்பதாக மட்டுமே இருக்கும். ஆனால் என்னை நிலைநிறுத்திக் கொள்ள  முயலும் கோட்பாட்டில் அதன் சாரம் இருக்கும் என்றால் அது என்னை எங்கு கொண்டு விடுமோ அதுவே எனக்கானது. அது மெல்ல சரணாகதியின் அத்தனைக்கும் என்னை அறிமுகம் செய்யலாம் என்பதும் ஆழ்ந்த நம்பிக்கைக்கு உரியது. கண்ணன் கீதையில் சொன்னது போல ஒரு சதகன் தன் முயற்சியில் வெற்றியடையமல் இறக்க நேர்ந்தால் அவனும் அவனது முயற்சியும் உடைந்த மேகம் போல இல்லாமலாவதில்லை. சாதகத்திற்கு உரிய பலனையும் அதை தொடர்ந்து மறுபிறவியில் விட்ட இடத்தில் இருந்து துவங்குகிறான் என்கிறான். எனக்கு மறுபிறப்பு கொள்கை மீது நம்பிக்கை இருந்தாலும் அது எனக்கு தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். கிடைத்த இந்த பிறவியில் அணுகியதை பற்றி நிறைந்து வாழ முயற்சிக்கிறேன்


இன்னைய மனப்போக்கு நான் அல்ல என உறுதியாக தெரிந்தாலும் அது நான்தான் என தெரிகிறது. அது இதுவரை எனக்கு தெரியாத நான். அல்லது என் தயக்கங்களே இல்லாத முழுமையான நான். நான் என்னை ஆழ்ந்து அவதானித்ததில் முதன்மையான மாற்றம் ஆச்சரத்தின் பிடியில் இருந்து வெளியேறி இருந்தேன் அல்லது அதன் வாசலில் இருக்கிறேன். தூய்மை என்பதை இந்த உலகில் பேணுவதில் உள்ள மூட நம்பிக்கை எனப்படும் சிலவற்றில் நம்பிக்கையில்லாமல் இருந்தேன். எங்கிருந்து இவற்றை பெற்றேன் என தெரியாது. ஐந்து வருட தனிமை அதில் பொழுது போக்கென எதையும் செய்யாதது இருந்தேன் ஆனால் உளச் சோர்வு இறுகப் பற்றாது இருக்க எதையாவது செய்து கொண்டிருப்பது. மிக விரிவான பூஜை காலை பொழுதை முழுவதுமாக எடுத்துக் கொண்டது. பின் மதிய உணவுவரையிலான இடைவெளியில் கிருஷ்ணபிரமியின் உபன்யாசங்கள். அவை மிக ஜனரஞ்சகமானவை தத்துவங்களின் ஆழ்ந்து பொருளை மிக எளிதாக சொல்லிச் செல்லும் லாவகம். அருமையான இசை ஞானம் அதில் சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் கடினத் தன்மை உணதராது இருக்கு உதவியது. நல்ல குரல் வளம் அதை நிகழ்த்தியது. ஆழ்ந்த மதிய உறக்கம் இரவு உறக்கதை பாதிக்காத பற்றி இன்னளவும் என்னால் நம்ப இயலமல் இருக்கிறது படுக்கும் முன்பு நான் எனக்கு சொல்லிக் கொள்ளும் அந்த சொல் கண்ணனின் ஸரமஸ்லோகத்தின் இறுதி சொல்மாசுச:” “கவலைப்படாதேஎன்று அர்த்தம். மறுநாள் விழிப்பிற்கு பிறகு அதே பூஜை உபன்யாச இத்தியாதிகள். அது மூளை அல்லது மனதின் இயல்பான எதிர்மறை சிந்தனைகளில் இருந்து என்னை விடுவித்தது. ஆனால் அதற்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என எனக்கு தெரியாது. அந்த சூழலில் ஒரு நாள் நான் அடைத்து வைத்திருந்த கதவை திறந்து வெளியே வந்த போது உலகம் அன்று புதிதாய் பிறந்திருந்தது போலிருந்தது. மூளை அல்லது மனத்தின் இயல்பான எதிர்மறை செயல்பாடுகள் இல்லாமல் நேர்மறையாக இருந்திருக்க வேண்டும் அது மூளையின் செல்களை மறுகட்டமைப்பு செய்தது போல அத்தனையும்பளிச்செனஇருந்தது.இன்று புதிதாய் பிறந்தேன் என சொல்வது போல


வானம் அனைத்து வழிகளில் பயணப்பட திறந்திருக்கிறது என்பது போல இருந்தாலும் கண்களுக்கு எட்டிய சூரிய சந்திரர்களுக்கான சரியான அல்லது சிறந்த பாதையை விஞ்ஞானிகள் நிர்ணயித்திருக்கிறார்கள். ஆனால் அதை தாண்டிய ஒன்றைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள். கடவுளின் இருப்பை பற்றி முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமிடம் ஒரு மாணவன் கேட்ட போது அவர் சொன்னார்வானவியலை ஆழ்ந்து பார்க்கும் போது நிச்சயம் அது யாரோலோ கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப் படுவது போல தெரிகிறது. அதை கடவுள் என்று சொல்லலாம்என்றார். நடப்பவைகள் நல்லதாகத்தான் முடியவேண்டும் என்றில்லை நல்லவை அல்லாதவை என்கிற பாகுபாட்டின் கோடு எங்கு வரையப்பட்டருக்கிறது. அப்படி இருந்தாலும் அதைப் பற்றிய புரிதல் ஒவ்வொரு நாளும் மாறுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வயதில் இந்த காலத்தில் இந்த கோணத்தில் என அவற்றை பகுத்து பார்த்த உள்ளம் வெவ்வேறு சூழலில் கொஞ்சமும் கூச்சமில்லாமல் தனது நிலைப்பாட்டை மாற்னிக் கொள்கிறது. எப்படி முடிந்தாலும் அது எனக்கானதே. உலகில் எல்ல பலன்களும் நன்மை தீமை என்கிற இரண்டு வரையறைக்குள் அடைக்கபடாதவை. அனைத்தும் நன்மையே தீமை என தோன்றுவது ஒரு தற்காலிக உணர்வு நிலை காலத்தில் அதற்கான புது புது அர்த்தங்கள் தொடர்ந்து எழுந்து வருவதை இத்தனை ஆண்டு காலம் பார்த்தாகிவிட்டது. இப்போது வேண்டுவது மனசாந்தி நடப்பவை அனைத்தையும் நல்லவை என அறுதியிடல் மட்டுமே.


என் தந்தை எனக்களித்த சரணாகதி தத்துவத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தேன் என்பது துவக்கத்தில் மட்டுமின்றி இன்று வரையில் அது ஒரு பாவனையாக மட்டுமே இருக்கிறது. நல்லூழ் இருந்தால் அதற்கு ஒரு தொடக்கம் தொடர்ந்து நிகழ வேண்டும் பின் அதுவே அனைத்திலிருந்தும் என்னை மெல்ல மெல்ல விலகிக் கொள்வது நிகழ்கலாம் . வானப்பிரஸ்தம் போன்ற ஒன்றை உருவகித்திருந்தேன். அதுவே இது அனைத்திற்குமான தொடக்கம். அரசியல் சார்ந்த மற்றும் அதன் நண்பர்கள் நிகழ்த்தும் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் தவிர்க்க துவங்கினேன். புதுவை அரசியலின் பெரிய ஆளுமைகளை கூட சென்று சந்திப்பதில்லை என்றானது. அவர்களுடனான தொடர்பு வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து வெளியேற அவர்களின் ஆதரவை நாட சொல்லும் நிலை உருவாகும் அதை முற்றாக விலக்க நினைத்தேன். துவக்கத்தில் அது அவ்வளவு எளிதாக இல்லை. ஒவ்வொரு சிக்கல் எழும் போதும் அந்த சூழல் நம்மை பற்றிய மதிப்பீடுகள் அரசியல் தலைவர்களிடமும் உள்ள செல்வாக்கை சார்ந்தே உருவாகும். அதைக் கழித்தால் எஞ்சுவது எளியன் , சாமான்யன் என்கிற இடம். வாழ்நாளில் நான் என்னை அப்படி உருவகித்துக் கொண்டதில்லை, அதற்கான இடமும் உருவாகி வரவில்லை. அதை ஆனவம் என வகைபடுத்தினால் அது தான் என்னை படைப்பூக்கம் கொண்டவனாக செயல்களில் ஈடுபடுபவனாக பிறரிடம் இருந்து தனித்து வேறுபடுத்திக் காட்டியது


தனித்து அல்லது வேறுபட்டு நிற்க வேண்டும் என விழைந்து எதையும் மெனக்கட்டு ஆற்றுவதில்லை. முழுமையான ஈடுபாடு வழியாக உருவாகும் செயல்களின் வெற்றி எனக்கு அதை அளிக்கிறது. அந்த அடையாளத்தை வலிந்து கலைக்க முற்படும் போது அது எவ்வளவு வலிமிகுந்தது என அறிந்திருந்தேன்.நிகழ்வதற்கு முன் அது பற்றிய அவதானிப்புகள் அந்த நிஜ வலியை உணராது. பார்த்துக் கொள்ளலாம் என்கிற அசட்டு துணிவு மட்டுமே வழி நடத்தும். இதே வலைபூதளத்தில்அடையளமாதல்என்கிற கட்டுரையை பத்தி வருடங்களாக எழுதி வருகிறேன் இதுவரை 700 பதிவுகளை கடந்துவிட்டது. அதை வாசிப்பவர்கள் அரசியல் கட்டுரையாக அல்லது சயசரிதம் போல என புரிந்து கொள்வார்கள் ஆனால் அது அந்த இரண்டுமல்ல அரசியல் ஊடாக அடைந்த மெய்மையை நோக்கி செல்வது. ஆனால் அதில் அரசியல் குறித்த தகவல்கள் இன்னும் சொல்லி முடியவில்லை என்பதால் மெய்மையின் சாலை நோக்கி திரும்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதன் பிறிதொரு வடிவம் இந்தமணிவிழா”.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அடையாளமாதல். * மனசாட்சி *

  ஶ்ரீ : பதிவு : 699  / 888/ தேதி 08 ஆகஸ்ட்   2026 * மனசாட்சி *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 96. திட்டமிடப்பட்ட நிகழ்விற்கு...