https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

மணிவிழா 82 *அபௌர்ஷேயம்*

 



ஶ்ரீ:



மணிவிழா - 82


07-08-2026




* அபௌர்ஷேயம் *




ரிஷிகேசத்தல் இருந்து திரும்பிய பிறகு உருவான மனநிலை என்பது கூட ஒருவித விட்டேந்தியாக அதை புரிந்து வைத்திருந்தேன். ஆனால் அது ஒரு நல்ல தொடக்கம் என்பதை அப்போது நான் அறியவில்லை . என்வரையில் வைணவ சம்பிரதாயத்தின்சரணாகதிதத்துவம் ஆகச்சிறந்த கருவி. மிகச் சரியாக நிலையழிவை தடுப்பது மனதை அமைதிப்படுத்துவது. இயற்கையின் போக்கில் அனைத்தையும் விட்டுவிடுதலும் எனக்கானது சிறப்பாக நடந்தேறும் என நினைக்கஅறம்என்கிறதுலாபற்றிய நம்பிக்கையும் அது சார்ந்து நிற்கும் ஆன்மீகம் என அது விரிந்து விரிந்து சென்றது . எதை ஏற்று நம்பி நம்மை கைவிடுதல் நிகழும் என்றால் இயற்கையின் கையில் அதை விட மேல சொன்ன அனைத்தும் தேவையாகிறது.தாய் தந்தையர்கள் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்ள என்கிற நம்பிக்கை நம்மை உறங்க விடுவது போல அனைவருக்கும்நாதன்எனகாரியபிரம்மம்இருக்கிறது என்கிற நினைவு.


வைணவ தத்துவம் பிரம்மத்தை காரணபிரம்மம் மற்றும் காரியபிரம்மம் என இரண்டாக பகுத்துக் கொள்கிறது. காரணபிரம்மம் ஒருவித ஜடத் தன்மை கொண்டது அனைத்தற்கும் காரணமானது. காரியபிரம்மம் செயல் ஆற்றுவது. அதற்கு அனைத்தும் தன் பொறுப்பு என வைக்கிறது வைணவ தத்துவங்கள். விஷ்ணுவை அந்த இரண்டு காரணங்களாக சொல்வார்கள். விஷ்ணு வியாபித்திருப்பது. விஷ்ணு அனைத்திலும் இருப்பது. காரிய பிரம்மம் என் சுக துக்கங்களுக்கு சாட்சியாக இருப்பது என்பது ஒரு பாவனை தான் என்றாலும் அது தரும் விடுதலை பெரிது. வேண்டுதல் வைப்பது துவக்கத்தில் ஒரு சடங்காக இருந்தாலும் உள்ளம் மெல்ல அதிலிருந்து வெளியேறி அனைத்தையும் புரிந்து கொண்டு ஏற்க ஆரம்பிக்கிறது. வேண்டுதலை முழுமையாக கைவிட இயலவில்லை. பெரியதாக ஒன்று வந்து அழுத்தும் போது அதை தவிற்க இயலது. அது எப்போதாவது நிகழ்வது. மிகப் பெரிய விஷயங்களில் கூட அந்த விலகல் தன்மையை உருவாக்கிக் கொண்டேன்


உலகின் அனைத்து மதமும் வெவ்வேறு வகைமைகளில்சரணாகதியையேசொல்ல வந்தது. தன்னை பேரிருப்பின் முன்பு ஒப்புக் கொடுப்பது பின் பிறிதொன்றில்லாதபடி இருப்பது என்பதற்கு மத்தியில் நம்மை போன்ற எளிய மானுடர்களுக்கு அது என்ன சொல்ல வருகிறது அல்லது எப்படி உள்ளிழுத்துக் கொள்கிறது. என்பதை அவதானிக்க வாய்ப்பு கிடைக்கலாம். நமது தேவைகளும் ஆசைகளும் வேண்டுதலும் கூட அதன் பெருந்திட்டத்தை ஊடுருவ முயற்சிப்பது என்கிற மிக உயர்ந்த புரிதல். சாமான்யத்தில் அதன் பொருட்டு சிறு சலுகையை எதிர் பார்க்கலாம். விசேஷத்தில் அதற்கும் அப்பால் நிற்பது. மெல்ல அதை நோக்கி பயணபடுவது விதிக்கப்படுவதாக உணர்வது. நான் ராமாநுஜரின்சரணாகதிநிலைப்பாட்டை கொள்கையை புரிந்து அதை வாழ்வின் அங்கமாக மிக மிக சிறிய மனம் வைத்தலை செய்ய முயல்கிறேன்.


என் தந்தை அதை வைணவ சம்பிரதாயத்தில் வைத்து எனக்கு கையளித்தார். நான் அதை என் நடைமுறை வாழ்க்கைக்குள் கொண்டு வர இன்று வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்நாள் அருளியதன் இறுதிவரை அது நிகழ்ந்து கொண்டே இருக்கலாம். அது கூட எனதுஏன்என்கிற ஒருபோதும் விடையில்லாத கேள்விக்கு பின் எழுந்த நிலையழிதலுக்கு காரணமாக இருக்கலாம்.அதில் ஈடுபடும் ஒருவருக்கு மனதில் அதனை ஏற்கும் கூறு ஒன்று முன்பே தங்கி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.அது உளப்பதிவாக தலைமுறை தலைமுறையாக கையளிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும்.சரணாகதி போன்று வேறு மதத்தில், சம்பிரதாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.எனக்கானது வைணவ கோட்பாடு என்பது அது என் ஆழ்மனதில் எப்போதும் இருந்ததுஎனக்கானது” .


அதன் துவக்க புள்ளி வானப்பிரஸ்த மனநிலை. அனைத்துடன் இழிந்தாலும் எதானாலும் பற்றப்படாதிருத்தல். முடிவில்லா மன்னிப்பை வழங்குதல். இவை மனக் கொந்தளிப்பை அகற்றுபவை. ஆனால் எந்த ஒரு செயலும் அதற்கான இடத்தை அடைந்தேயாக வேண்டும் என்கிற கோட்பாட்டை அறம் நிலைநிற்பதாக அறிகிறேன். அறத்தின் பொறுப்பு தெய்வத்தால் ஆவது. இப்படி அடிக்கிக் கொண்டால் மேகத்தின் நீர் மழையாக பொழிந்த பின் மேகம் தனது எடையை இழக்கிறது. எடையற்றாதாக இருப்பது அதன் இயல்பு காரணம் அது மீளவும் தண்ணீரை அள்ள வேண்டி இருக்கிறது. பிரபஞ்ச நெறி எதுவும் என்றும் முடிவதல்ல. பிறப்பே முடிவற்றது எனும் போது வேறு எதுவும் முடிவுறாது. நிலையழிதல் மீள மீள வந்து போதுகிற போது அடைகிற போதமையை மன ஒழுக்கின் விடுபட்ட பகுதிகள் என நினைத்தவற்றை அத்வைத தத்துவம் கொண்டு நிரப்பினேன்


ஜெயமோகன் சொன்னது போல தத்துவம் முடிவில்லா கேள்விகளை கொண்டதாக இருந்தால் அதற்கு அகாலத்தில் எழும் ஒன்று என்றால் அதற்கான பதில்கள் நவீனதன்மை கொண்டதாக ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்திருக்கிறது. “ஷனிகம்என்கிற பௌத்த தத்துவம் அக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் அது நவீன கருத்தியல் கொண்டது. அணு நிரந்தரமில்லாத ஒன்று என்பதால் அதன் கூறுகளைக் கொண்ட உடல்களும் நிரந்தரமில்லாதது. ஆனால்ஷனிகதத்துவம் உடலை ஒவ்வொரு நிமிடமும் மாற்றிக் கொண்டிருப்பதை சொல்கிறது. கால தத்துவத்தின் உள்ளே வைத்து அதை புரிந்து கொள்ளலாம் என்றால் கால தத்துவம் இன்னும் ஆழமானது. உடலை சொல்லும் போது புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஆத்மாவிற்கும் அது பொருந்தும் என்கிற போது சங்கரர் மற்றும் ராமாநுஜர் காலத்தில் அது பெறும் சர்ச்சை உருவாக்கி இருந்தது. உள்ளீடுள்ள எந்த பொருளும் அதன் மேல் படிவதை களைந்து கொண்டிருக்கிறது என்றால் மாறத் தன்மை கொண்ட ஒன்று இருந்தாக வேண்டும். அனைத்தும் நிலையற்றது என்றால் பின் எது எதைப்பற்றி நிலை கொள்ள முடியும்


ஆகவே மீள மீள பயன்படுத்தப்படும் எதுவும் கூர் மழங்குவது போல சரணாகதியின் பிடிப்பும் அதை நிலை நிறுத்தும் கருத்தியலும் மனம் வழியாக நழுவி விடக் கூடியதே. அது நழுவாது பிடித்திருக்க வேண்டிய பொறுப்பு தன்னைசரணாகதன்என சொல்லிக் கொள்பவனுடையது. எனக்கு சரணாகதி தத்துவத்தை என் தந்தை அறிமுகம் செய்த போது எனக்கு அது தேவைப்படாத வயது. பின்னாளில் அது பயன்படாத நாளே இல்லை. அதை மீள மீள எழுதி எழுதி கண்டடைய முயல்கிறேன். என்வரையில் தத்துவத்தை பக்தி மற்றும் ஆன்மீகம் வழியாக புரிந்து கொள்ள முயல்கிறேன். எனக்கு ஏன் அது அத்தனை முக்கியம். ஆன்மீகம் சார்ந்த தத்துவங்களை எனது நிலையழிதலுக்கு எதிராக பயன்படுத்துகிறேன். என்பதுடன் அதன் தொடர்புடைய ஆன்மீகம் இறை நம்பிக்கை வழிபாடு போன்றவைகளுடன் அது நின்றுவிடுவதில்லை. இறை நிலையை விளக்க தத்துவம் தேவையாகிறது. தத்துவம் உலகின் பிரபஞ்ச விதிகளை சொல்ல அல்லது விளக்க வந்தது. அதன் ஒரு கிளை இறைநிலை. இந்தியா போன்ற நாட்டில் இறைநிலை குறித்த பேச்சும சர்சசைகளும் ஓங்கி இருந்த சூழலில் தத்துவமும் அதுபற்றி மட்டும் பேச வந்ததாக புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால் தத்துவத்திற்கு அதை கடந்த ஒரு தேவை இருக்கிறது


இறைநிலை குறித்த புரிதல்கள் மட்டுமின்றி உலகின் அனைத்திற்குமான விளக்கம் அதில் உள்ளது. வேதம் தத்துவத்தில் இறங்கி வருகிறது. சமையப் பெரியவர்கள் அந்த தத்துவத்தில் இருந்து சித்தாந்தங்களை கண்டடைந்தார்ககள். மதம் அந்த தத்துவத்தின் கால்களில் அமர்ந்திருக்கிறது மேலை நாடுகளில் இரண்டையும் தத்துவம் மற்றும் இறையில் என இரண்டு வெவ்வேறு துறைகளாக பிறித்து புரிந்து கொள்கிறார்கள்.தத்துவம் முடிவில்லாத கேள்விகளால் ஆனது. அதில் இழியும் எவரும் ஒரு எல்லைக்கு பிறகு கற்றவைகளை தொகுத்து கொள்ள அதிலிருந்து விலகி விடுகிறார்கள். தொகுத்துக் கொள்கையில் சித்தாந்தங்கள் உருவாகின்றன . ஒருவர் விட்ட இடத்தில் இருந்து அதை தொடரும் ஒருவர் தனது எல்லையை கண்டடைந்ததும் தத்துவத்திற்கான ஆராய்ச்சியில் இருந்து வெளியேறுகிறார். இரண்டும் வெவ்வேறு காலட்டங்களிலிலும் , நிலைகளிலும் நிகழ்வதால் இரண்டு தத்துவ ஆராய்ச்சியாளர்களும் ஒரு போதும் ஒருவரை ஒருவர் ஏற்காமலாகிறார்கள். முரண் மிக சிறியது என்றாலும் அதன் விசை பெரியது


சைவ வைணவ முரண் மட்டுமின்றி இன்னறைய நடைமுறை ஆச்சார வாதத்தை இதில் வைத்தே புரிந்து கொள்ள முயல்கிறேன். ஒரு முறை ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழு செயல்பாடுகள் குறித்து ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒன்று சொன்னார். இன்றைய பௌத்த மதம் கீழை நாடுகளில் பெரும் செல்வாக்குடன் இருப்பதற்கு காரணம் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அகில உலக பௌத்த மாநாடு முக்கிய பங்கு வகித்தது என. அப்போது அது எனக்கு எப்படி பொருள்படும் என தோன்றவில்லை ஆனால் இன்று நினைக்கையில் அவர் சொன்ன அந்த தகவல்களின் ஆழம் திகைக்க வைக்கிறது. அவர்கள் உணவு சார்ந்த ஆச்சாரத்தை முற்றாக கைவிட்ட பிறகு நிகழ்ந்த அந்த மாற்றத்தை உணர்கிறேன். நான் இன்றளவும் சைவ உணவு வழக்கமுடையவன். அது எனது தேர்வல்ல. மனமோ வேறு ஏதுவோ ஒன்று உணவில் அசைவத்தை தவிற்கு சொல்கிறது. பல வெளிநாடுகளுக்கு பயணம் சென்ற போதும் கூட அது எனது உணவு வழக்கத்தை பாதிக்கவில்லை. அவரவர் தேர்வு ஆழ்மனம் பொருத்து முடிவாகிறது


தத்துவம் இறையிலை கடந்து மனிதனின் வாழ்கையை வடிவமைக்கிறது என்பதை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை தருவது பற்றிய எண்ணமிருந்தது.தத்துவ விளைநிலத்தில் இறையியல் அந்த தத்துவத்தின் கனி. என்றாலும் அதை கடந்து பிறிதொன்றும் அதைவிட ஈர்ப்பு கொண்டதாக நிலைபெற்றிருக்க வேண்டும். அதன் தத்வார்த ஆராய்சியில் இறங்கும் முன்பு உலகியலில் அதன் வெளிப்பாடு எப்படி இருக்கிறது என புரிந்து கொண்டால் அதற்கான இடத்தை அடைய முடியும் என நினைக்கிறேன். தத்துவம் குறித்த அவதானிப்பில் உள்ளவர்கள் தாங்கள் கற்கும் தத்துவத்தை சித்தாந்தத்தில் வைத்து தொகுத்து கொள்கிறார்கள்.பின் அதுவாக ஆகிறார்கள். சித்தாந்தம் இறைநிலைகளை சென்று தொடுபவை. ஒருவர் கடுமையாக முளையை சொடுக்கவும் அதை நோக்கி ஒருவர் சட்டென வந்துவிட இயலாது. அதற்கான பயணம் ஒரு வாழ்நாள் காலம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அடையாளமாதல். * முடிவுறாத துவக்கம் *

  ஶ்ரீ : பதிவு : 700  / 889/ தேதி 09 ஆகஸ்ட்   2026 * முடிவுறாத துவக்கம் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 97. புதுவை அரசியலி...