ஶ்ரீ:
அடையாளமாதல் - 15
அரசியல் களம் - 13
இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-3
புதுவையில் அன்றும் ஜனநாயக அமைப்பிற்காக தேர்தல்கள் நடந்த காலங்கள் உண்டு . என்ன, முடிவுகள் அறிவிக்கும் முன்பு பொட்டிகள் காணாமலாகி , சிலர் வென்றாதாக அறிவிப்பு வெளியாகும் . நாளடைவில் பங்குபெறுதல் இல்லாமலாகியது.
தமிழக மற்றும் புதுவை மக்கள் மத்தியில் விடுதலையை பற்றிய உணர்வில் அடிப்படையான வித்தியாசம் ஆட்சியாளரின் அனுகுமுறை . இங்கு ஆண்டுகொண்டிருந்த பிரெஞ்சு அரசாங்கம் இந்திய விடுதலைக்கு ஆதரவானதல்ல . தியாகிகள் இங்கு பதுங்கி இருக்க அனுமதித்தது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அதனுடனான முரண்பாட்டினால் விளைந்தவை .விடுதலை போரை ஆதரித்தால் அது ஒரு நாள் மக்களை தங்களுக்கு எதிராக கொண்டு வந்து நிறுத்தும் என அறியாதவர்கள் அல்ல .
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு சர்தார் வல்லபாய் பட்டேல் பேச்சுவார்த்தைகள் மற்றும ராணுவப்பலபிரயோக முறையில் சிறு சமஸ்தானங்கள் இந்திய ஒன்றியத்தில் இனைந்து கொண்டிருந்தன. புதுவையில் பிரெஞ்சு ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் . ராணுவம் வழியான தீர்வு சாத்தியமற்றது . இந்திய ஒன்றியத்துடன் இனைய மக்கள் விழைவு ஒன்றே முக்கிய காரணியாக இருந்துவந்தது. புதுவையை இனைப்பது மெல்ல இரண்டு நாடு சம்மந்தமானதாக மாறியது . பலாத்காரமாக இனைப்பது சர்வதேச சிக்கலை
நேரு புதுவையை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பொறுப்பை காமராஜர் மற்றும் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார். புதுவை விடுதலை போராட்டம் இரண்டு இடங்களில் மையம் கொண்டிருந்தது மடுகரை நெட்டப்பாக்கம் மற்றும் காரைக்கால் . காமராஜர் தன் களமாக காரைக்காலைத் தெரிவு செய்தார் . பிரெஞ்சு அரசாங்கம் நிர்வாகம் மிக சிறியது . மற்றும் புதுவையிலுள்ளது போல வலுவான எதிர்ப்பு அணி இங்கு இல்லை.
புதுவையின் விடுதலைக்கு போராடியவர்களை ஒருங்கினைக்க இயலாததால் , காமராஜர் மாற்று வழிக்கான திட்டம் பற்றிய அரசுசூதலில் இறங்கினார் , பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரளவாளர்களையே அவர்களுக்கு எதிராக திருப்புவது . அதில் காமராஜர் வெற்றி கண்டார் அதன் விலைவாக சுதந்திர போராட்டம் மாற்றி அமைக்கப்பட்டு வென்றது. அதன் பரிசாக பக்கிரிசாமி பிள்ளை முதல்வராக . அவர் காலமான காரணத்தால் எதுவார் குபேர் முதல்வரானார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக