https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 20 மார்ச், 2017

அடையாளமாதல் - 12 (அரசியல் களம் - 12 காங்கிரஸ் கட்சி உள்ளிருந்து ஒரு பார்வை)

அடையாளமாதல் - 12
அரசியல் களம் - 12
 காங்கிரஸ் கட்சி உள்ளிருந்து ஒரு பார்வை


காங்கிரஸ் பேரியக்கம் இந்திய நிலப்பகுதிகளின் பிரதியை  ஒத்திருக்கும் ஒரு முரண்களின் தொகுப்பு .பலவித மொழி மத கலாச்சார பண்பாடுகளின் தனித்தன்மை என பிரிந்து கிடப்பதாலேயே உயிரோட்டமுள்ளதாக ஆக்கும் மற்றும் ஒருங்கினக்கும் சக்தியாக  காங்கிரஸ் இருந்திருக்கிறது.

காந்தி மெல்ல மெல்ல உருவக்கி எடுத்தது. காங்கிரஸுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஒரு சரிந்ததிரம் இருக்கிறது . இன்றைய சமுதாயம் அதை பார்கிற மற்றும் புரிந்து கொள்கிற முறை ஊடக பிரச்சாரத்தில் மத்தயில் பெரும் முரணிலைகளின் மத்தியில் உள்ளது . யதார்த்தம் நோக்கி யாரையும் எதையும் புறவயமான முறையிலே பார்க்க வைப்பது மனித சாத்தியமில்லை. இக்காலத்தில் மட்டுமல்ல , எக்காலத்திற்கும் இதுவே பொருந்தும்.

அரசியலில் , எனக்கு தெரிந்த உண்மையை மக்களுக்கு புரியவைக்கிறேன் , ஆனால் அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் , என காழ்ப்பை கக்குபவரகளால் பிரயோஜனமில்லை அவரகளுக்கு பொதுவாழ்கையில் விருப்முள்ளவரெனில அதற்கு அவர்கள் லாயக்கில்லை.

ஒரு கருத்து அல்லது நிகழ்வு நடந்து முடிந்தவுடன் மக்கள் அதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பது , யாருக்கு யாரைப் பொருத்தவரை , அது சிரி,தவறு? . எவர் விளக்கிவிட இயலும் இதை .

எக்காலத்திற்கும் சரி என்கிற ஒன்று இவ்வுலகில் இல்லை , ஒரு காலத்தில் அல்லது ஒருவருக்கு அல்லது ஒரு சமுகத்திற்கு சரியாக இருப்பது மற்றரொரு காலத்தில் தவறென ஆகிறது . நவீனத்துவமும் , பின் நவீனத்துவமும் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

காங்கிரஸின் உட்கட்சி அரசியல் என்பது காந்திக்கு முன் பின் என பிரியக்கூடியது . காந்தி அதன் தலைமைக்கு வரும் வரை அது மக்களின் இயக்கமாக இருந்திருக்கவில்லை . இருந்தும், அன்று அது ஒன்றே மக்களுக்காக என தன்னை பிரதிநிதிப்படுத்தி இருந்தது . காரணம் மக்கள் முற்றிலும் அன்றாட வாழ்வியல் சிக்கலில் இருந்தனர். காந்தி தன் குறியீட்டு ரீதியான அரசியல் நகரவுகளால் தான் அது மக்களியிக்கமானது . துரதிஷ்டவசமாக அதன் விழுமியங்கள் காந்தியின் கண்முன்னேயே அவை கைவிடப்பட்டது . காரணம் இந்திய விடுதலைக்கு காந்தியின் பார்வை முரணியியல் வழியாக கட்சியில் ஏற்கப்பட்டதற்கு மக்களிடம் அதைப்பற்றிய கருத்தியலை வெற்றிகரமாக காந்தியால் எடுச்செல்ல முடிந்தது . கருத்தியலின் புரிதல் இல்லாதவரகள்கூட ,சொன்னது காந்தி என்கிற ஒற்றை நம்பிக்கையால் அது ஏற்கப்பட்டு முன்னகர்ந்தது . அது ஆட்சியை நோக்கி செலுத்துவது ,என்பதால் கட்சில் உள்ளவர்களும் அதை ஏற்ப்பதை தவிர அவரகளிக்கும் அன்று வேறு வழியில்லை.

காந்தியைப் பொருத்தவரை சுதந்திரமென்பது அவரது முற்றான திட்டமன்று அது ஒரு தொடக்கம் மட்டுமே . சுதந்திர போராட்மே கூட பல அடுக்குகளையும் உள் அலகுகளைக் கொண்டதாகவே காந்தியால் முன்னெடுக்கப்பட்டது. தன் போராட்ட முறைகளில் மக்கள் குவியாத போது , அவர் தன் போராட்டங்களை கைவிட்டு மக்களிடையே தன் பலவித சீர்திருத்தங்கள் மூலமாக உரையாடத் தொடங்குவார் . அவை பலன் அளிக்கும் என்ற புரிதல் ஏற்பட்டவுடன்.போராட்டம் சிறிய அளவில் முன்னெடுக்கப்படும் . தவறுகள் களையப்பட்டு பின் பெரிய அளவில் அது தொடங்கப்படும்.வைக்கம் போராட்டம் ஒரு சிறந்த உதாரணம்.

காந்தியின் இந்த வகை போராட்ட முறை தலைவர்களை சோர்வடையச் செய்வது , அவர்களின் எதிர்பார்ப்பான "ஒரே வித உணர்வில் "எப்போதும் வைத்துக்கொண்டிருப்பது என்கிற கோட்பாட்டிற்கு எதிரானது . ஆகவே உட்கட்சியில் தலைவர்கள் அவருக்கு எதிராக திரும்பியது ஒன்றும் வியப்பானதன்று.

இந்திய மக்களின் ஆதரவைப் பெற்றே பிரிட்டிஷாரின் ஆட்சி இங்கு நடந்து கொண்டிருந்தது . அவர்களுக்கு அதில் உள்ள நுட்பமானது ஊழலை மக்கள் மத்தியில் வெளிக்கொணரவது என்பது நிகழாமல் விடுதலைப்போர் சாத்தியமாகாது என்கிற நிலை அன்று காந்தியைத் அளவிற்கு இது பற்றிய புரிதல் உள்ளவர்கள்  அனேகமாக இல்லை.

ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு இந்தியாவின் குறுக்குவெட்டு தோற்றம் , நம்மைவிட அவரகளுக்கு தெளிவாக பிரிந்திருந்தது . அதற்கு சீக்கியர்கள்,முஸ்லிம் மக்களை அவர்களின் அரசியல் சதுரங்கத்தில் ஏற்கனவே கொண்டுவந்து விட்டார்கள் . தாழ்த்தப்பட்டோரையும் அதில் சேர்க்கும் முயற்சியில் , காந்தியின் செயல்பாடுகள் , அம்பேத்கருடன் அவர் செய்து கொண்ட சமரசம் போன்றவை பிரிட்டீஷின் நரித்தன அரசியல் எடுபடவில்லை. இந்திய விடுதலைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.காந்தி அதற்கு இன்றுவரையில் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்மீது நிருவனங்களின் திட்டமிட்ட காழ்பு இன்றுவரை வழிந்த படியே இருக்கிறது.


இந்தியாவில்  கொண்டுவரவேண்டிய மாற்றங்களுக்கு மற்றும் தனித்தன்மை பாதுகாப்பிற்காக தன் கருத்தியலை பொது ஜனத்திற்கு கடத்த காந்திக்கு சமயம் வாங்கவில்லை . அதற்கு காங்கிரஸ் அரசு அமைந்ததே கூட ஒரு காரணியாகிப்போனது . வயோதிகம் , பிரிவினையில் ஏற்பபட்ட உளச்சோர்வு போன்ற காரணங்களால்  காந்தியால் அவைகள் மேல் அழுத்தும் கொடுக்கவியாது போனது. நேருவிற்கு அவர் எழுதிய கடிதங்கள் வாசிக்கப்படாமலேயே நின்றன. உலக அரசியல் குறித்த காந்தியின் பார்வை குறைவுபட்டதாக நேருவிற்கு தோன்றி இருக்கலாம். சோவியத்தின் தாக்கம் உலகளவில் இந்தியாவின் நடுநிலைப்பாடு , அணிசேரா நாடுகளுடன் இந்தியாவின் தோழமை , போன்றவை பிற்காலத்தில் வெளிப்பட்டு நேரு உலகதலவர்கள் வரிசையில் பேசப்பட்டது. சீனாவுடனான போரில் அவர் கனவுகள் கலைந்தன. இருந்தும் காங்கிரஸின் அரசியல் கொள்கை நீர்மை அடைந்திருந்தாலும் இந்திரா காலம் வரை பேனப்பட்டது.

நவீனத்துவம் பேயாய் பிடித்தாட்டியகாலம் , அது ஒரு பொது போக்கு. சோவியத்தின் வெற்றியும் கோட்பாடுகள் வெளியுலகுக்கு பெரும் போதையை தரவல்லதுமான சித்தாந்தமாக உருபெற்றது.

இவை அனைத்தும் அகவயமான புரிதலுக்கு உட்படுவது , பொது மக்களுக்கு எளிதில் புரியக்கூடியதன்று . சித்தாந்தம் மக்கள் பொது புத்திக்கு கடத்த காந்தியை போன்ற நம்பத்தகுந்த ஆளுமை இல்லாததால் அது எவறாலும் இனி செய்யக்கூடுவது ஒன்றில்லை.

பின்நவீனத்துவம் எழுந்த பிறகும் கூட தர்க்கரீதியாக இன்றும் அது தன் உரையாடலை நிறுத்தவில்லை .உலகமயமாக்கலுக்கு பிறகு பின்நவீனத்துவம் இருப்பிடம் கேள்விக்குறியாக மாறி அதை பிற சிக்கல்கள் ஆகரமித்து விட்டன.உலகமயமாதல் அனைத்து துறைகளிலும் தன் வலுவான ஆதிக்கத்தை செலுத்த துவங்கியது

இந்த யுகத்திற்கான மாநுட அறம் சார்ந்த போராட்ட வழிமுறை. அது காங்கிரஸின் வாயிலாக உலகுக்கு காந்தி வழங்கிய ஒரு  மாபெரும் கொடை . அவர் இந்த ஒன்றுக்காக மட்டுமே மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவரகள் நன்றியுடன் நினைவுகூர்தலுக்கு உரியவர். அனால் நடைமுறை யதார்த்தம்  காந்தி கசப்பை கக்கும் ஒரு பெருந்திரளின் விவாதப் பொருளாக இருப்பது விசித்திரமான முரண்நகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக