12 டிசம்பர் 2015
திரு ஜெயமோகன் அவர்களுக்கு
என் பணிவான வணக்கம் , என்னை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி சந்தித்ததற்கும் , நான் கூறியவைகளை மிகுந்த அலுவல்களிக்கு மத்தியில் பொருமையாக செவி மடுத்தமையால், நான் தங்களிடம் கூறவிரும்பியதை மிச்சமின்றி கூற முடிந்தமைக்கு தங்களுக்கு நன்றி
திறந்த மேடை திட்டம் குறித்தது சுமார் ஏழு ஆண்டுகால தேடல் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருப்பதை முழுமையாக உணர்கிறேன் . என் தேடல்
" ஓர் சரியான தொடக்கப்புள்ளி"
"அதற்கான பாடதிட்டம்"
இப்படியாக என் என்ன ஓட்டம் இருந்தது , தங்களின் எழுத்துடனேயான என் அறிமுகம், சுமார் மூன்று மாதங்கள் மட்டுமே , அதன் தாக்கம் பற்றியும் அதனால் எனக்கேற்பட்ட திறப்பு பற்றி ஏற்கனவே தங்களி நேரில் சந்தித்த போது கூறிவிட்டேன்.
பிரபலமானவர்களை பற்றி ஊடகங்களால் அவரைப்பற்றி ஒருவருக்கு எற்படும் மனப்பதிவு நேரில் சந்திக்கும் போது பெரும்பாலும் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக இருந்திருக்கிறது . ஆனால் அது அவர்களது தவறல்ல, காரணம் வெற்றி என்பதற்கு லோகாயதமான காரணமும் அதற்கான நியாயங்களும் அவர்களிடம் இருக்கும். அவர்கள் "மனோ வாக் காயத்தினால் " ஓர் நேர்கோட்டில் தங்களின் இருத்தலியலில் நியாயங்களால் நிகர்நிலை நிற்பவர் அல்லர்.
பல்வேறு பிரலபலர்கள சந்திக்கும் வாய்ப்பில் இருந்த எனக்கு , என்மீது தாக்கத்தை ஏற்படித்தியவார்கள் ஒருகை விரல் என்னிக்கைக்குள் அடங்குவர் அதில் தாங்கள் தலையாய இடத்தில் உள்ளீர்கள் . ஓர் முடிவிற்கு வருவதற்கு முன் நிறைய தயக்கமிருக்கும் , மெதுவாக அதை நோக்கி நகர்ந்து என் பதிவுகளை ஏற்படுத்திக்கொள்வேன். ஏமாற்றமடையாமல் இருப்தற்கான என் அனுகுமுறை இது.
தங்கள் எழுத்துக்களை வாசிக்கும் போது இதுவரை இல்லாத பலத்திறப்புகளுக்கு ஆளானேன் . ஒன்றரை மாத்த்தில் வெண்முரசு முடித்தேன். மிகுந்த தயக்கத்துடன் விஷ்ணுபுரம் தொட்டேன்,காரணம் , அதற்கு இருந்த ஆரவாரமாக இருக்கலாம். தங்களை கோயம்பத்தூரில் சந்திக்க கிளம்பும்போது கடைசி முப்பது பக்கம் மீதமிருந்தது. கீதை உரையைப்பற்றிய உங்களுடைய குறிப்பே என்னை கோயமுத்தூர் வரவழைத்தது, மற்றபடி தங்களை சந்திக்கும் திட்டமெல்லாம் இல்லை. எனக்கு அங்கு யாரையும் தெரியாது மூன்று நாள் தங்குவதாக திட்டம். ஆனால் அதே சமயம் ஒரு ஒன்னறை மணி நிகழ்விற்காக காலை முதல் காத்திருப்பது பைத்தியக்காரத்தனமானதாக தோன்றியது.
முதல் நாள் தங்களின் உரையை கேட்ட பிறகு , என்னுடைய பல வருடத்தேடல் முடிவிற்கு வந்ததாகத் தோன்றியது . அன்று தங்களை சந்தித்து என் விசிட்டிங் கார்டை கொடுத்து என்னை அறிமுகம் செய்துகொண்டேன் .
அடுத்ததாக தங்களிடம் பேச வேண்டிய விஷயங்களையும் அதற்கு நீங்கள் என்ன கூறப்போகிரீர்கள் என யோசிக்க ஆரம்பித்து விட்டேன் . அந்த சந்திப்பு மிக இனிமையானதாக முடிந்ததை மறுபடியும் , மறுபடியும் என் மனத்தில் வந்தபடியே இருந்தது .
இது சம்மந்தமாக தங்களை மறுமடியும் சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன் .
என்னை மிகுந்த சிந்தனைக்கு ஆட்படுத்தியது, வெண்முரசை நீங்கள் அஸ்தீகரிடமிருந்து தொடங்கியது ,
என்னை பாதித்தும் / என் மனப்பதிவுகளும்
ஆஸ்திகன் திரும்பி ஜனமேஜயரிடம் “மாமன்னரே, சத்வ, ரஜோ, தமோ குணங்களுடன் இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும். நீங்கள் சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க நினைத்தீர்கள். அதன் வழியாக இவ்வுலகையே அழிக்கவிருந்தீர்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் தட்சனின் உயிரை கோரிப்பெற்றேன்” என்றான்.
ஜனமேஜயன் சினத்துடன், “நீங்கள் சொல்லும் தரிசனத்தை நானறியமாட்டேன். நான் கற்ற வேதாந்தம் அதைச் சொல்லவில்லை…ஆஸ்திகரே, நீங்கள் தப்பவிட்டது இருட்டை….தீமையை” என்றார். ஆஸ்திகன் உறுதியான குரலில், “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என்றான்.
இதுவே எனக்கு முதற்திறப்பை தொடங்கிவைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் என் மனம் இதற்கு சொந்தம் கொண்டாடியது , என் வெளியிடப்படாத கருத்திற்கு நீங்கள் சொற்களை அடுக்கியதாக என்னுடன் விவாதித்தது , ............ஆம் அது சரியே, திரு ஜெயகாந்தனை பற்றி நீங்கள் சொன்னது சபலத்திலத்தையும்,சஞ்சலத்தையும் ஜெயித்தவர் என்று , நான் இப்படித்தான் என்று பிறரர் அறிய வாழ்ந்த கவிஞர் திரு.கண்ணதாசனுக்கும் , திரு.ஜெயகாந்தனுக்கும் பெரும் வித்தியாசமுண்டு என நினைக்கிறேன்
சபலத்திலத்தையும்,சஞ்சலத்தையும் ஜெயிப்பதென்பது அதை மறுப்பதா,மறப்பதா என்பதும் உடன்பட்டு மறுமுனையில் சமன்படுத்துவது மற்றும் நியாயபடுத்துதலின் மத்தியில் மறைந்திருக்கும் நுட்பம் .
சாஸ்திரங்களில் ஆமோதிப்பதிக்கும, மறுப்பதற்கும் சகல விதமான வாதங்களை வைத்துவிட்டு , தள்ளி நின்று நகைக்கிறது. பல சமயம் தன்னை வைளிக்காட்ட விரும்பாதது போலவே தோன்றுவதும் . வதையே.
முனிவர் வியப்புடன் “பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை” என்றார்.
இது சத்தியமானது மனித இனத்தில் காணாத ஓர் கட்டுப்பாட்டு பிற உயிர்களில் காணமுடிகிறது. புரிதலின் , உச்சம் என நினைக்கிறேன். சிருஷ்டியில் மிக பலவீனமானது மனிதப்பிறவியே . அது தன் வாழ்நாள் முழுவதும் தன் மேன்மையை கண்டடைவதில் இழியட்டும் என விட்டது பெருந்தெய்வம் .இது வரமா , சாபமா? அடைந்தவனுக்கும் அடையாதவனுக்கும் சூழ்நிலையை வைத்து விளையாடுவது ஒரு கணம் கொடுமையானதாகப் படுகிறது . நம் கோபம் யாரை என்ன செய்யும் .
“ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்ஷமகதனம் என்று சொல்கிறோம்” என்றார் முனிவர்.
நீங்கள் கூற விரும்புவதாகத் எனக்கு தோன்றுவதும் , திறப்பு எனப்படுவதும் இதுவே என நினைக்கிறேன் காரணம் தெரிந்ததையே புரியவைக்க முடியும்-
ஆம், நான் மூன்று பெரும் சுவர்களை உடைத்திருக்கிறேன். மனிதர்களுக்கு நடுவே இருக்கும் சுவரை முதலில் உடைத்தேன். அடுத்ததாக மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் சுவரைத் தகர்த்தேன். மனிதர்களுக்கும் விண்ணகப் பேராற்றல்களுக்கும் நடுவே இருக்கும் சுவரை இறுதியாக விலக்கினேன்” என்றார்.
எப்பேற்பட்ட வரிகள்.
தியானத்திலும் , யோகத்தாலும் ஒரு சாதகன் அடையும் நிலை அனேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும் . புரியாத ,வறட்சியான ஸமஸ்கிருத்தால் ,பத்திர எழுத்தர் போல , பௌராணிகர்கள் அல்லாடுவது இதைத்தான் .
இன்றைய இளைஞர்களுக்கு தங்களின் மொழி ஆளுமை அதை சாதாரணமாக புரியவைக்கிறது
நான் துர்வாசர் கற்றுத்தந்த அந்த மந்திரத்தைச் சொன்னேன். அது பொருளற்ற ஓர் ஒலியாகவே இருந்தது. அதை மும்முறை சொன்னதுமே அதில் காலையின் முதல்கரிச்சானின் இசை இருப்பதை அறிந்துகொண்டேன். காலைப்பறவைகளின் குரல், முதல்கதிரொளியில் பறக்கும் சிறுபூச்சிகளின் மீட்டல், மலர்கள் மொக்கவிழும் வெடிப்பு, ஒளிர்ந்து சொட்டும் பனியின் தட்டல் என அனைத்தையும் தொகுத்து சுருக்கி ஒரு துளியாக்கியதாக இருந்தது அந்த மந்திரம்.
மந்திர த்ருஷ்டாக்கள் கண்டடைவது இதுவோ !! ஆனால் இந்த வரிகள் படிக்க படிக்க ஏதோ அநிர்வசநீயமான உணர்வுகளை கட்டுப்படுத்தவே இயலவில்லை .
ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் தருணம் ஒன்று இளமையில் நிகழும். அவ்வண்ணம் இளமையில் நிகழாதவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். நிகழ்பவர்களோ பெருமழையை ஏற்கும் சிறுசெடிபோல அதன் அடியில் துடிக்கிறார்கள். வேர்கள் பறிந்து செல்லாமலிருக்க தவிக்கிறார்கள். என் வாழ்க்கையின் முதன்மைப்பெருநிகழ்வு அது என இப்போது ஐயமில்லாமல் உணர்கிறேன்.”
அடிப்படையான விஷயங்கள் நமக்கு கிடைக்காமலும் பிறருக்கு மிக எளிதாக கிடைப்பதும் , மற்றவர்களால் கனவிலும் நினைக்க இயலாதது சதாரணமாக கிடைப்பதும் , வாழ்கையின் சில நிமிடங்களில் நம்மை நிலைகுலைய வைக்கிறது , என எப்பொழுதும் நினைக்க வைப்பதுடன் , வலிமிகுந்ததாக இருப்பது . இந்த வரிகள் என்னை கட்டுபடுத்த இல்லாமல் கண்ணீர் பெருக்க வைத்தவை
சத்யவதியின் முகம் சற்று மாறுபட்டது. “ஆனால் பேரரசியரின் ஊழ் என்றுமே கரியதுதான். தேவயானியின் ஊழும் பிறிதொன்றல்ல. அரியணையில் அமர்ந்தவள் விழையும் அனைத்தும் கைதொடும் தொலைவில் இருக்கும். செல்வம், அரசு, மக்கள், புகழ். ஒவ்வொன்றுக்கும் நிகராக தன்னுள் இருந்து மதிப்புமிக்க ஒன்றை அவள் இழந்துகொண்டே இருப்பாள். இறுதியில் வெறுமையையே சுமந்துகொண்டிருப்பாள்.”
முன் சொன்ன என வரியின் விவரணமாகத்தான் இந்த வரி அமைந்ததாக என்னினேன்
உண்ட உணவு ஜீரணித்து மேலும் அடுத்த வேளைக்கு வழிவிடுவது; போல் வெற்றி இறக்கம் காணுதல் நல்லூழே
------
முழுமை என்பது கூட்டத்தின் அமர்வில் ;தன் பாதுகாப்பு குறித்த மகிழ்வில் அல்ல , யாராலும் தனக்கு உதவமுடியாமை குறித்த தன்னற தெளிவுடைமை.
------
அப்போது அறிந்தேன், உண்மை என ஒன்று இருந்தால் அது அனைவரும் அறியக்கூடியதாக இருக்காது என்று. அவ்வாறு இருந்திருந்தால் அனைவருமே அதை அறிந்திருப்பார்கள்.”
----
பிறப்பும் இறப்பும் ஊடியும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழும் அனைத்துடனும் இணைந்துள்ளது என்பதே நிமித்திக நூலின் முதல் அறிதல்” என்றார் முதியசூதராகிய யூபாக்ஷர். “இப்புடவி ஒன்பதின் அடுக்குகளினாலானது என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் புடவி என்னும் பெருநிகழ்வின் ஏதேனும் ஒன்பது நிகழ்வுகளுடன் இணைந்திருக்கும்.”
எனக்கிது கயாஸ் தியரி மற்றும் ஸ்டிங்தியரிப் கலவையைப் போல்லுள்ளது, அது ஓடி மூச்சுவாங்க கூறுவதை தாங்கள் போகிற போக்கில் கூறுவதை பிரமிப்புடன் பார்க்கிறேன்
பொருளில்லாத நிகழ்வோட்டங்களின் உள்ளே மேலும் மேலும் பொருளின்மைகள் ஊடுருவிக்கலக்க இருத்தலும் சுவைத்தலும் அறிதலும் கடத்தலும் ஒன்றேயாகி மண்புழு மண்ணைத் தின்று தின்று சென்றுகொண்டே இருந்தது. முடிவேயில்லாத நெளிதல். நெளிவு மட்டுமேயான உடல். நெளிவுக்குள் நெளிந்து செல்லும் அகம்.
எனக்கு இது மனித வாழ்வினை கடும் கோபத்துடன் சொல்வதாக ஆறுதல் படுகிறது ,
---
தர்க்கபூர்வமாக வகுக்கமுடியாதது ஒன்றுண்டு. அதை மானுட ஆணவம் என்றுரைத்தனர் மூதாதையர். அது கணந்தோறும் உருமாறும். தன் விதிகளை தானே உருவாக்கும். சென்றபின் வழி வகுக்கும். நிகழ்ந்தபின் நெறியமைக்கும். ஒருபோதும் நிறையாது. எவ்விளக்கத்தையும் ஏற்காது.”
நான் சிரித்து மகிழ்ந்து இருந்த தருனம் இவை , இதை ஏற்கவைக்க முடியுமானால் , எவரையும் உடைக்கும் வரிகள் இவை ,
--------
“தார்க்கிகன் மனம் திகைக்கும் ஒரு தருணம் உண்டு கூத்தரே” என்றார் சௌனகர். “ஒவ்வொன்றும் பிசிறின்றி பிறிதுடன் இணைந்து ஒன்றாகி முழுமைகொள்வதைக் காணும்போது அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் முழுமை இப்புடவியின் இயல்பல்ல. அது முழுமைக்கு சற்று முன்னரே தன்னை குலைத்துக்கொள்ளும். அது நிகழும் புள்ளியைத் தேடி அவன் அகம் பதைக்கிறது. அவனை தர்க்கத்தின் கருவிகள் துழாவுகின்றன. ஆனால் ஒவ்வொருமுறையும் அவன் தோற்கடிக்கப்படுகிறான். முழுமையாக. மீதமின்றி. அப்போது அவன் தர்க்கத்தின் எல்லையை அறிகிறான். நம்பிய தெய்வத்தால் கைவிடப்பட்டவனின் வெறுமையை சென்றுசேர்கிறான்.”
-------

ஸ்மிருதிகளனைத்தும் சொல்வது ஒன்றே. அதை அறம் எனலாம். சொல்லும் கோணங்களும் செல்லும் வழிகளுமே மாறுபடுகின்றன என்பார்கள். ஒவ்வொரு யுகத்துக்கும் உரிய ஸ்மிருதிகள் வேறு. மாறுவதனாலேயே ஸ்மிருதிகள் வாழ்கின்றன, மாறாத தன்மையால் சுருதிகள் வாழ்கின்றன. ஸ்மிருதிகளை சுருதிகளுக்கு நிகராக்குபவன் மாறா இருளை அடைகிறான்” துரோணர் சொன்னார். “ஸ்மிருதிகள் ஆடலுக்காக வகுக்கப்பட்ட களங்கள். அவை ஆடலை நெறிப்படுத்துகின்றன. ஆடலுக்குப்பின் அவை அழிக்கப்பட்டாகவேண்டும்.
-
மிக நுட்பமாக , அதே சமயம் காலத்திற்கேற்ப மாறுதல்களை அடைய வேண்டியதை பற்றி பேசுகிறது ,ஆனால் இன்றைய பௌராணிகர்களுக்கு புரியவேண்டியது இது என நினைக்கிறேன்
---
“இதோ என தொட்டறிவது மனம். அறிந்தவற்றை அடுக்குவது புத்தி. அடுக்கியதை தொகுத்துக்கொள்வது சித்தம். அதில் வேண்டியதை குறித்துக்கொள்வது அகங்காரம். அதைக்கொண்டு வருவதை வகுப்பது சங்கல்பம். அதற்கெனக் கொள்ளும் உறுதியே நிச்சயம். அதன்மூலம் எழும் தன்முனைப்பே அபிமானம்இவ்வேழு கரணங்களாலும் நம்முள் வந்த உண்மையை நமது உண்மையாக நாம் ஆக்கிக்கொள்வதை அவதாரணம் என்கின்றன நூல்கள்.”
மீளாவிட்டாலும்தான் என்ன என நான் எண்ணிக்கொண்டேன். அதுவே வழிபாடு”
இது ஏறக்குறைய விஷ்ணுபுரத்தில் பிங்களுடன் அவர் குரு விவாதம் , மற்றும் அந்த காவியத்தில் உள்ள பல இருக்கமான உடையும் போது அது இதன் அடிப்படையில் தான் நடக்கிறது என நினைக்கிறேன்
----
உலக உயிர்கள் ஒரு விதி, ஒரு செயல்பாடு என்பது ஓர் வாக்கியமானால் அதில் ஒரு ஜீவன் , ஒரு சொல்
இந்த வரிகள் என்னை ஏதோ செய்கிறது .நினப்பதை வார்தைகளில் கொண்டு வரும் தவம் எனக்கில்லை இருப்பினும் முயன்றால் என்ன.
ஆம் ....பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஓர் காவியமாக்கினால் ஆம் அதில் மட்டுமே ஓர் ஜீவன் அர்த்தமுள்ள சொல். வாழ்கை எனும் பயணத்தில் காலில் தட்டுபடும் சில பொருள்கள் சேகரிக்க தொடங்கினால் அவை எதிர்காலத்தில் நம் வாழ்கையில் உள்ள வெற்றிடத்தை நிரப்புவாக இருக்கும் என உறுதியாக நினைக்கிறேன் .
--
நூல்கள் மானுடரை மிகச்சிறியவர்களாகவே காட்டுகின்றன. கற்கும்தோறும் மானுடர் சிறுத்துக்கொண்டேதான் செல்கிறார்கள். மானுடரை இயக்கும் அடிப்படை விசைகள் பேருருவம் கொள்கின்றன. அவ்விசைகளை வைத்து விளையாடும் விசும்பின் கரவுகள் தெரியவருகின்றன. அந்த நுண்மைகளின் வாயிலற்ற கோட்டை முன் நம்மைக் கொண்டுவிட்டுவிட்டு நூல்கள் திரும்பிவிடுகின்றன. நூலறிந்தவன் அங்கே திகைத்து நின்று அழிகிறான்.”
பெரும் வேதாந்திகளை இது இப்படித்தான் சித்திரவதை செய்கிறது , சரியான திசையிலே செல்கிறோம் என்கிற செருக்கு நிச்சயமாக வாயிலற்ற கோடை முன் நிறுத்திவிடுகிறது . வாயிலற்ற கோட்டை ........என்ன ஒரு சொல்லாட்சி .
இது ஒரு களம் அரசே. இதில் புண்படவும் தோற்கவும் ஒரு தரப்பு இருந்தாக வேண்டும் அல்லவா?”
வலியையும் மரணத்தை பற்றியும் இதயம் நோகாமல் இதைவிட சிறப்பாக யார் சொல்லிவிட முடியும் .
--
“அவர் காதல்கொண்டார் என நினைக்கிறீர்களா?” என்று கிருஷ்ணன் கேட்டான். “அது காதலல்ல. ஆம், அதை அன்னையென நான் அறிவேன். காதலுக்கு அப்பால் ஒன்றுள்ளது. அது…” என்று குழம்பிய காந்தாரி தன் மேலாடையை இழுத்து தோளிலிடும் அசைவின் வழியாக உறைந்து நின்ற சொற்களை மீட்டுக்கொண்டு “அதை வழிபாடு என்பதே பொருத்தம்” என்றாள். கிருஷ்ணன் அவளை நோக்கியபடி விழி அசையாமல் அமர்ந்திருந்தான். “கண்ணா, மிகமிக அரியதோர் உணர்வு இது. பெண்ணை தாய்மை வழியாகவோ காமம் வழியாகவோதான் ஆண்கள் அணுகுகிறார்கள், அறிகிறார்கள். என்றோ எவரிலோ அதற்கப்பால் ஒன்று நிகழ்கிறது. அந்த ஆண் ஒரு பெண்ணை வழிபடுகிறான். அவள் காலடிமண்ணையும் போற்றும் பெரும் பணிவை அடைகிறான்” என்றாள் காந்தாரி.
“அது மிக ஆபத்தானது யாதவனே. ஏனென்றால் அதன் அரியதன்மையாலேயே அது புரிந்துகொள்ளப்படாது போகும். அவ்வுணர்வை அடைபவனுக்கேகூட அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆகலாம்” காந்தாரி தொடர்ந்தாள். நெடுநாட்களாக அவள் எண்ணியிருந்த சொற்களென்றாலும் அவளால் அவற்றை பொருள்திகழ கோத்தெடுக்க முடியவில்லை. “அன்னையின் புறக்கணிப்பும் காதலியின் புறக்கணிப்பும் கொடுநஞ்சாக ஊறக்கூடியவை. அதற்கும் அப்பாலுள்ள இப்பெரும்புறக்கணிப்போ ஆலகாலம்…” மேலும் சொல்ல விழைந்து சொற்களுக்காக தவித்து “அங்கன் அகம் கொண்ட புண் ஆறிவிடும்…” என்றாள்.
-
ஓர் உறவு உடையும்போது ஆண்கள் பெரிதும் துயரமடைவது அதை பிறர் எப்படி கொள்வார்கள் என்று எண்ணிக்கொள்வதனால்தான்”
-
மிகமிக எளிய உயிர்கள். ஆணும் பெண்ணும். மிகமிக பழகிப்போன நாடகம். அதைமட்டும் உணர்ந்துகொண்டால் சினமும் வஞ்சமும் நெஞ்சில் எஞ்சியிருக்காது. இனிமை மட்டும்தான். அதைத்தான் இன்று கண்ணனின் இசையில் கேட்டுக்கொண்டிருந்தேன்.”
-
விழி சொல்லாததை மொழி சொல்லக்கூடுமா?
-
இச்சொற்களுடன் நீங்கள் நின்றிருக்கும் எந்நிலத்திலும் என் கால்கள் இல்லை. நான் உணர்ந்திருப்பது காலமற்ற வெளியில் வாழும் தெய்வங்கள் கூறுவது.
இச்சொல்லாடல்கள் முற்றிலும் புதிய அனுகுமுறையை தோற்றுவிக்கும் வல்லமை உடையது, பிரமிக்கத்தக்கது
-
இம்மண்ணுக்கு நீங்கள் அளித்த அனைத்தும் உப்பென்றும் உயிரென்றுமாகி நிறைந்துள்ளன. நானோ உங்கள் சொல் சென்று தொட்டு மீளும் சிற்றுயிர். தானே நகரும் உரிமையற்றது நிழல். ஆயினும் என் உள்ளம் எப்படிச் சுழன்றாலும் அங்கேயே சென்றமர்கிறது
-
அர்ஜுனன் “இது வெறும் தற்செயல்” என்றான். “மானுடனே, புடவிப் பெருநிகழ்வில் தற்செயல்கள் இல்லை. ஒவ்வொரு கணமும் பெரும்படிவன் சொல்லெண்ணி யாத்த கவிதை போல் அமைப்பும் இலக்கும் இலக்கணமும் உள்ளதென்றுணர்க!” என்றான் சித்ரரதன். “நான் காத்திருந்த மானுடன் நீயே.” அர்ஜுனன் வியந்து நின்றான்.
‘‘தனிவாழ்க்கையில் இருந்தே எழுத்தாளன் தன் இலக்கியத்திற்கான தூண்டுதலை பெறுகிறான்’
‘ஆனால் தனிவாழ்க்கையில் விழுமியங்களில் ஒருவன் சமரசம் செய்துகொண்டால் அவனுள் எரியும் நெருப்பு ஒன்று அணைந்துவிடுகிறது. அதன்பின் அவன் சொற்களில் உண்மையின் சீற்றமும் தெளிவும் கைகூடாது. அவை ஒளியற்ற செயற்கை வெளிப்பாடுகளாகவே இருக்க முடியும்’.
‘உண்மையின் அனல் உள்ள எழுத்தாளன் உலகமே எதிர்த்தாலும், புறக்கணித்தாலும் தன் நெஞ்சறிந்தவற்றை துணிச்சலாக முன்வைப்பவனாகவே இருப்பான். ஒருபோதும் தன் கருத்துக்களை சூழலில் இருந்து பெறமாட்டான். தான் அறிந்த வாழ்விலிருந்தே பெறுவான். அதற்காக அன்னியமாகவும் அஞ்சமாட்டான்’.
இதற்காகவே தங்களை சந்திக்கும் நல்லூழ் நான் பெற்ற பேறு.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகாலம் கேட்பாடற்ற கிடந்த என் தந்தையின் புத்தக அலமாரியை புதிதாக்கி அதை நிரைக்க தொடங்கி இருக்கிறேன் . இதற்கு நீங்கள் மட்டுமே காரணம் , என்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிரீர்கள்.
நன்றியுடன்
க்ருபாநிதி அரிக்ருஷ்ணன்
புதிவை
குறிப்பு
இது தங்களுக்கு என் முதல் கடிதம் , குற்றங்களை பொறுத்தருள வேண்டுகிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக