https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 16 மார்ச், 2017

அடையாளமாதல் - 7 அரசியல் களம் அவதானிப்பின் மத்தியில்

அடையாளமாதல் - 7
அரசியல் களம் - 7

அவதானிப்பின் மத்தியில்


கடந்த சில மாதங்களில் அரசியலில் கற்றதும் பெற்றதும் பற்றிய அவதானிப்பில் இருந்தேன் . ஒவ்வொரு முறையும் என்னை நடந்தவற்றிலிருந்து தொகுத்துக் கொள்வதும். தொகுத்தலில் கிடக்கும் புரிதலிலின் வடிவம் எவ்விதம் யதார்தத்தோடு ஒத்துபோகும் என்கிற , தருக்க புத்தியின் குரங்காட்டத்திற்கு , பின் முன்னகர்வது என் இயல்பாக எப்போதும் இருந்துவந்தது .

என் ஆழ்மனம் திருப்தியுறாத எதையும் நான் செய்வதில்லை. அதன் தருக்கத்திற்கு சமாதானம் கிடைக்கும்வரை எதையும்  தள்ளிவைப்பது என் பாணியானது. அது பிறர் என்னைப் புரிந்து கொள்ள முடியாதபடி செய்து கொண்டே இருந்தது . அதன் விலைவாக நல்லதும் கெட்டதும் தொடர் நிகழ்வானது.

அரசியலில் செய்திகள் அல்லது நிகழ்வுகளின் வழியாக ஆழ்மனப் படிமங்களில் இருந்து கிடைக்கும் ஒரு புரிதலை எக்காலத்தும் பிறருக்கு வெளிப்படையாக விளக்கி விட இயலாதது. ஆனால் அது பிறர் நம் மேல் வைத்துள்ள நம்பிக்கையை அடிப்படையாக்கி பின் அதை அவர்மேல் நம்மால் அதை கடத்த இயலும் . அப்போது இருவரும் ஒரே குவிமையத்தை அடைவோம் .

அது அடிப்படை கோட்பாடுகளை விளக்க வேண்டிய அவசியமின்றி , நேரே , நிகழக்கூடும் என்கிற அனுமானத்திற்குள் புகுந்துவிடும். பின் மணிக்கணக்கில் அந்த அனுமானத்தின் அத்தனை பரிமாணங்களையும் ஆராயும். அதன் சாத்தியக்கூறுகளில் உள்ள அனைத்து அலகுகளையும் மனம் சலிக்காது உற்சாகத்துடன் அலசிக்கொண்டே இருக்கும். நாம் ஆற்றவேண்டியதென்ன என்கிற இலக்கை தெளிவாக காட்டிக்கொடுக்கும்.

முதல் நிலை தலைவர்களுக்குள் இந்த பரிமாணமும் இலக்கும் கடத்தபடாமலேயே  நிகர்நிலை பெற்றிருந்தால் அதன் விளைவின்  இலக்குகள் சரித்திர வெற்றியாக இருந்திருக்கிறது.

ஆனால் அது எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருப்பதில்லை . அரசியலின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று . ஒவ்வொரு முறையும் அனைத்தையும் முதலில் இருந்தே தொடங்க வேண்டி இருக்கும் . காரணம் நேற்று நாம் நம்பிக்கைக்கு உரியவர் , இன்றும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கவேண்டும்  என்கிற அவசியமில்லை இல்லை . அரசியலில் திரிபடையாத மனம் உள்ளவர்கள் மிகக் குறைவு .

அரசியல் அனுமானம் என்பது , மானுட மனங்களின் விருப்பு வெறுப்பு ஆசை கோபம் என்று நித்தமும் திரிபடையும்  இரட்டைகளின் முரணியக்கத்தின் ஆகப் பெரும் தொகுப்பு. ஊகத்தின் வழியாக அது தேரும் திசையை அறிவது மனிதனுக்கு  சாத்தியமில்லாதது . ஆனால் அரசியல் செயல்பாடுகள் முணியக்கத்தின் குறியீட்டின் வழியே அதில் ஒழுகி பயணிப்பது மட்டுமின்றி , விரும்பும் இலக்கு நோக்கி செலுத்தவும்  இயலும் . ஆனால் அது கட்டற்ற நதிப் பெருக்கனெப் ஊர்வது. அதில் பயணம் என்பது நமக்கு சில காலம் அனுகூலமாய் தோன்றி . பின் நாம் நினைக்காத இடத்தில் நம்மிடம் இருப்பதை வாரியெடுத்து பின் மாற்று புதுப்பாதையில் பாயத் துவங்கும் . அதை செய்ய  ஆன்மபலம் துணைக்கவேண்டும் . அத்தகைய ஆன்ம பலம் துணைக்க நான் மகாத்மா காந்தியின் பாதங்களில்  தான் வேண்டுவதுதான் செய்யக்கூடியவை.

அந்த இழிநாளுக்கு பின் நான் வேரொருவனாகி இருந்தேன் .அதை ஒட்டி எழுந்த கொந்தளிப்பை வெற்று ஆத்திரமாக கொண்டிருப்பது எதையும் முன்னெடுக்க லாயக்கற்றது . வருத்தம் கோபத்தின் வடிகால்  பேசுவதால் குறையக்கூடியது என்பது , ஆனால் அரசியலில் அது செல்லாது. இது ஒரு குறுங்குழு நான் யாரையும் என் அணுக்கர் என்னு கருத்து பறிமாற இயலாது . அது சடக்கென பரவக்கூடியது. எனக்கெரென திரும்பக்கூடியது .

நீ நினைக்காது போனாலும் காலம் உன்னை யாருக்கோ போட்டி என நிறுத்தி விட்டது. இனி அப்படி இல்லை என தலையறுத்து வைத்தாலும் , எவரும் நம்பப்போவதில்லை. வஞ்சினம் வெறும் காழ்பைக் கக்கக் கூடியது . அதை ஒரு வாழ்வின் தருணமென்று ஆக்கு . நீ எதையோ எண்ணி இங்கு வந்து அமைந்திருக்கலாம்  . ஆனால் இங்கு என்ன செய்யக்கூடுவது என காலம் காட்டுவது .

ஆம் அந்த காற்றின் ஸ்பரிசம் உணரதக்கதே . ஆம் முதல்முறையாக உணரப்பட்டது . ஆனால் அது தென்றலல்ல.அழுத்தம் கூடியது இளஞ்சூடென பரவி நிற்பது . பல இலக்குகளை மெல்லத் தூக்கியும் அழுத்தியும் கொடுப்பது . அது மானுட ஸ்வாசம் வெம்மையுடையது அவர்களின் மூச்சின் காற்று .அதில் ஏக்கம் இயலாமை பொறாமை கழூமை வெறுப்பு ஆகியவற்றின் வெம்மை வேறு போக்கிடம் இல்லாமையால் அதில் ஏறியாக வேண்டும் .

அந்த காற்றில் பயணிக்க யார் யாரே எதை எதையோ உபாயம் என கொண்டிருக்கலாம் . ஆனால் நான் கொண்டது அந்த எளிய மானுடர்களின் நிகழாத கனவினை புரிந்து கொள்வது இயன்றால் அருகில் கொண்டு செல்வது . பொய்யில்லாது.

என்னடைய செயல்பாடுகள் தீவிரமடைந்தன . இலக்கு நானும் ஒரு ஆள் . என்னை விலக்க ஒன்னாதே நீங்கள் செயல்பட்டாக வேண்டும் என்பதே என் உணர்வுப்பதிவுவாதம் .

கமலக்கண்ணனின் இழைத்த இழிவுபடுத்துதலை  அறியாதவனென பக்கத்திலேயே இருந்தேன் . தாமோதரனுடன் அழுத்தமான உறவை புதிய புள்ளியிலிருந்து தொடங்கினேன் . அவரிடம் எனக்கு ஆவதொன்றில்லை என்ற போதும் . ஒல்லி சேகரை சரியென நிர்வகித்தேன். கணகராஜ் சேகருக்கு என்னை முற்றாக கொடுத்தேன் . அவனறியாது ஏதும் இயற்றாமலானேன் . என் பிரதியென வலம் வந்தான் . அதனாலேயே அங்கு அவனுக்கு முக்கியத்துவம் பெருகின . பாலனே அவன் மூலம் என்னை அனுகத்தொடங்கியதும் , அவனுக்கு என்னிடம் அணுக்கமும் அவனுள் கூர்மையும் பெருகியது . தன் இடத்தை விட மனமில்லாமல்  என்னை முழுவதும் சார்ந்ததனால் உள்கூறுகளையும் களநிலைகளையும் என்னால் வெற்றிகரமாக இனைக்க முடிந்தது. அந்த இனைப்பினால் நடப்பவை நடக்கவிருப்பவைகளை காணுகிற கண் கிடைத்தது

என் அங்கு பெருகிய ஆதரவு நிலையை அனைவரும் உணர்ந்திருந்தார்கள் . ஆனால் அது எவ்விதத்திலும் வெளிப்படாது பார்த்துக் கொண்டேன் . இது அதன் அடர்த்தியை பெருக்கிற்று. மேலடுக்கில் உள்ளவர்கள் நான் அதை அறிந்திராதவனாக எண்ணி நிம்மதியுற்றனர் . நான் விழைவதும் அதுவே. என் வஞ்சினம் நிறைவேறும் நாள் வாய்த்தது .

அதில் எனக்கு வாய்த்த முக்கியத்துவமும் . அதில் நான் நடத்திய நகர்வுகளும் , யாரும் எதிர்பாராத பலன்களை தந்தத்துடன் , என் இயல்பான இருக்கையை காட்டிக் கொடுத்து . ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ள இயக்கத்தில் என் இடம் தவிர்க்க இயலாத ஒன்று என் புரிய வைத்ததுடன் . புது எதிரிகளையும் சவால்களையும் ஒருங்கே வழங்கியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக