உச்சநிலைகளில் வாழுதல் - ஒரு குறியீடு-1
என்னைப் பற்றிய அவதானிப்பில் இருந்து கொண்டிருக்கிறேன். வாழ்வின் உச்சநிலை கொண்டாங்களையும், இறப்பை காட்டிலும் வலி மிகுந்த வீழ்ச்சிகளையும் தொடர்ந்து, என்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்தையும் எழுத்தில் கொண்டுவந்து , அதை கடந்து செல்வதன் விழியாக அதிலிருந்து மீள்வதை வழக்கமாக கொண்டுள்ளேன் . அதன் அதீத விடுதலை உணர்வும் அது தரும் நிம்மதியையும் போல வேறு எதுவும் தருவதில்லை என சமீப காலமாக புரிந்து வந்துள்ளேன் . ஆம் சமீப காலமாக .ஏனெனில் அது சமீபமாகத்தான் என்னுள் நிகழ்ந்தது . எனக்கென ஒரு மொழி உருவாகி வந்தது ஒரு கருத்துருவாக்கத்திற்கு பிறகு , கருத்துரு வாசிப்புகளில் தொடங்கிய திறப்புகளுக்கு பிறகு எழுந்த வந்த புரிதலில்.அவை அனைத்தும் இலக்கிய வாசிப்புகள் வழியே என உணர்கிறேன்.
வழக்கமாக என்னுடைய வலைத்தளத்தில் அவற்றை பதிவேற்றி முடித்து கொள்வேன் . அதில்தான் என் மனக்குகையின் அனைத்து இருளும் அதன் முடிவான வெளிச்சமும் பதிவாகியுள்ளன . அவை அனைத்தும் ஜெயமோகன் எழுத்துக்களாக,ஜெயமோகனின் உச்சிஷட்டங்களாகவே நிறைந்துள்ளது .ஆனால் அவை அனைத்தும் என் கருத்து என் எண்ணம். என் மீட்சி . என் அகங்காரம் .
இருபதாண்டுக் காலமாக என்னை தொகுத்து செயல்பட்ட அனைத்து விஷயங்களையும் இப்போது மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறேன். வலி பொருக்க மாட்டாத நிகழ்வுகளிலிருந்து இவை என் ஊழ் என்ற ஒன்றை சொல்லால் நினைவு கூர்தால் ஒழிய அதிலிருந்து காயப்படாது விலக இயலுவதில்லை.
ஆகவே, அனைத்தையும் ஊழ் என்று பொதிந்து உட்கொள்ளுதல் என்று நிகழாத நாள் ஒன்று இல்லை. ஆயினும் அது எண்ணங்களாக எழுகையில் ஒவ்வொருமுறையும் அச்சுறுத்துகிறது , அவை பெரும் மனவதையை தருவற்கு ஏற்பட்டதே .அதை கடந்து செல்லம் வழி அதே மனநிலையில் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது என்கிற ஒரேவித மனநிலை கைக்கொள்வது ஒரு நல்ல கடத்தியானது.
எதிலும் ஊக்கநிலையை தவிர்த்து இருத்தலும் , செயலாற்றியே ஆக வேண்டிய கணங்களில் பற்றற்ற நிலையில் அதை செய்து விட்டு விலகுதல் என்பது எனது வழிமுறையானது . ஒரு மழைக்காக ஏங்கித் தவிக்கும் சிறு செடி போல காலத்தின் அடிபொடி படும்வரை கல்லாய் காத்திருக்கத் தொடங்கினேன். காலம் கழிந்து போக.
வாழ்கை ஒரு வட்டம் .புரிந்திருக்கிறது .அனால் அது சின்ன சின்னதாய் மீண்டும் மீண்டும் நகர்ந்து ,தொடங்கிய இடத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு தீயூழ் . ஒவ்வொரு நாளும் அது மனத்தில் எரிந்து கொண்டே இருக்கும் ,அதை வாழ்வின் போக்கு என சமாதானமும் அடைவதாக ஒரு வழி.
தாங்க முடியாத நிலை . இழப்புகளினால் ஏற்பட்டு வாழுகின்ற சூழலிலிருந்து வெளித்வரத் துடிக்கும் மனதை ஒரே வழி அதை நிலைப்படுத்துதல் . எனக்கு இயல்பானது . கொண்டாட்களில் ஈடுபடாது ஒரே மாதிரியான மனவழுத்த நிலையிலேயே அதை நீடிக்கச்செயவது தத்துவ உரைகளை மனத்தை குவிக்க இயாலமையால் படிக்க முடியாமல் தத்துவ விசாரங்களை பேச்சிக் வழியே கேட்டு, அதனால் ஏற்படும் திறப்புகளின் வழியாக மனதை ஆற்றுபடுத்தியபடி சித்த விருத்திக்கு இடம் தராதிருப்பது
அன்றாட வாழ்வென்பது பல வித உணர்வுகளுக்கு இடம் மற்றும் நிகழ்வுகளால் ஆனது . உற்சாகமான நிகழ்வுகளில் முழுமையாக ஈடுபட இயலாமல் உருத்தலாக சிக்கல்கள் நீடிக்கையில் மனம் உற்சாகத்தில் திளைப்பதில்லை அனால் வருத்முற்று இருக்கையில் உற்சாகத்தை ஒதுக்க இயல்வதால் மனவழுத்ததுடன் இருப்பதே இயல்பான ஒன்றாகிப் போகும்.
அந்த சமயங்களில் காலம் வரும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கையில் பல சமயங்களில் மனம் தறிகெட்டு ஓடுவதிலேயே குறியாக இருக்கும் .மனதை ஸ்வசப்படுத்திய படி இருப்பதே அதன் மீறல்களில் இருந்து மீள்வதற்கு வழி . இதில் மானுட வாழ்வில் கிடைதற்கறிய நாட்கள் எந்த வித உபயோகமில்லாது வீணே கழிந்து போகின்றன. இதற்கான சமாதானம் நாள் குறைவதால் இறுதி அருகுகிறது என நிம்மதி அளிப்பதாக பொருள் கொள்ளல் வழி என்றாகிப்போகும்.ஆகவே சாதகமற்ற காலங்களில் செயலற்று இருப்து என்பது வழக்கமாகிப் போனது .
என்னை எதிலும் வகைபடுத்துதல் இயலாமல் , அகவய முரண்களுக்கு இடையே நிறைய பதிவுகளை எழுதுவதன் வழியில் என்னை கண்டையும் முயற்சிகள் குறை பிரசவங்களாக கிழிபட்டு கடக்க இயலாது தொடர்ந்து அனுமானித்த படியே இருந்து கொண்டிருந்த போதுதான் , 'கடவுள் இல்லாத நிலம்' பதிவை வாசிக்க நேர்ந்தது அதில் வந்த "உச்சநிலைகளில் வாழுதல் " என்னும் வரி எதிர்பாரத ஒரு தருணத்தில் ஒரு குறியீடென ஒரு மின்னெலென சொடிக்கி ஒரு திறப்பை கொடுத்தது. உடன் அதை ஒட்டி இதை எழுத தொடங்கினேன் .
வாழ்வு மகத்தானது. ஆம் வாழ்வு மகத்தானது அது வாழும் முறையில் தன்னளவிலேயே முழுமையானது .நிகழ்ந்த காலமே நல்ல காலங்கள் ,நிகழாத காலத்தை எதிர் பார்த்து நிகழும் காலத்தை வெறுப்பது முறையல்ல.
உச்சநிலைகள் என்பது உச்சமும் நீச்சமும்தானே அதில் கலக்கமில்லாது வாழுதல் வரம் நான் என்பதை எப்படி உணராது போனேன். வாழ்சியும் வீழ்ச்சியும் வெறும் கால நிகழ்வுகளின் நகர்வுகள் தானே . வாழுதல் மகத்தானது .எதனாலும் அதை இழப்பது கூடாது. வருவதை வரும் அளவிலேயே எதிர் கொள்ளவது என்பது விடுதலையைக் கொடுப்பது.
உச்சநிலையில் வாழுதல் . வாழ்ச்சியில் மட்டுமல்ல வீழ்ச்சியிலும் என்பதாக பட்டது . வெற்றியில் கொண்டாடமாக வெளிப்படுவதும் வீழ்ச்சியில் உழன்று சிறுத்து மற்றொரு காலம் நல்லென வரும் அது வரை அடைகாக்கும் கோழிபோல துக்கத்தை , அவமானத்தை இழப்பை கருத்தில் கொள்ளாது பதுங்கி ஏங்கி இருப்பதும். எதிர் வரும் சவால்களை எண்ணி கலங்கி கிடைப்பதும் , கலங்காதிருக்க தத்துவத்தில் நாட்டம் கொண்டு அதை அறிய முயற்சிப்பதும். அறிந்ததை கொண்டு அறிய இயலாததை அனுமானிக்க முயலுவதும் அனுமானித்தை வாழ்கையில் பொருத்திப் பார்பதும் இடைவெளிகளை இட்டு நிறப்ப முயற்சிப்பதும் என இரு நிலைகளின் எல்லைகளை தொட்டு தொட்டு மீள்வதே வாழ்க்கையாக இருந்தது.
வீழ்ச்சியும் , வீழ்ச்சியும் வாழ்வின் இரு கரைகளாகிப் போனபடியால் சாதக சூழலில் செயல்படுவதும் மற்றைய காலங்களில் செயலற்று இருப்பது முரணே.
தன் தனித்திறனால் தொடர்ந்து வென்று கொண்டே செல்கிறார்கள். அதே சமயம் ஒவ்வொரு தருணமும் சாவின் எல்லை வரைக்கும் சென்று தற்செயலாக மீள்கிறார்கள். வாழ்கை என்பது பெருத்திட்டத்தினால் இயங்குகிறது , நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலெனவே நகர்கிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் . பல பெரும் நிகழ்வுகளை முன்னெடுத்துச் சாதித்தும் தோற்றும் தப்பித்தும் என பல தற்செயலாகவே நடந்தன . அனைத்து தற்செயல்களும் பெருந்தோட்டத்தின் உள் மடிப்புகளை.
வாழ்வியல் காயங்களால் மனதை முறித்துக் கொண்டு எஞ்சிய நாட்களைளெல்லாம் கசந்து படியே எவ்விடமும் நகர இயலாது உழல்வதனால் அதை அடர்த்தியானதாக மாற்றத்தான் முடியும் . இனி எவ்வகையிலும் மனதை முறித்துக்கொள்ளவது என்னால் இயலாது.
அடிப்டையான அறங்களின் வழியே எனக்கான பாதையையே நான் எப்போதும் தேர்ந்தெடுப்பேன். ஆன்மீக நம்பிக்கை எனக்கு இயல்பானதாக இருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கான சூழல் இருந்திருக்கலாம் . நான் என்னிடம் ஆழ்படிமம் சார்ந்து உரையாடியபடியே இருந்திருக்கிறேன். என இப்பொழுது நினைக்கிறேன்.
எனக்கான விதை எங்கு எப்படி இடப்பட்டது என நான் அறியேன். என் சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள் தீவிரமானதாக இருந்ததால் நான் பெரும் மாற்றமடைந்திருக்கலாம்
இன்றைய சூழலில் இலட்சியவாதத்தில் நம்பிக்கைகொண்டவர்களில் இருவகை மனிதர்கள் உண்டு. மூர்க்கமாக இச்சமூகத்தின் கருத்தியல்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராக தன் கொள்கைகளை முன்னிறுத்திப்போராடுபவர்கள் முதல்வகை. சமரசமற்றவர்கள். ஆகவே தனியர்கள். பெரும்பாலும் தோல்வியடைபவர்கள். ஆகவே கசப்பு நிறைந்தவர்கள்.
நான் கசப்புகள் என்னுள் நிறையாது இருக்க ஒவ்வொரு கணமும் கவனமாக இருந்திருக்கிறேன்.
அதன் முதல் பதிவிலேயே அதை குறிப்பிட்டிருப்பேன். அதில் உள்ள என் பதிவுகள் அனைத்தும் மொழி திருந்தா குழந்தையின் உளறல்களாக இருக்கும் . என் மொழி உருவாகி வந்ததா என் நடை திருந்தியதா. அதை நான் அறியவேண்டியதில்லை . நான் எழுத்தாளன் அல்லேன் .என் வாழ்வின் சரடை பற்றி போய்க் கொண்டே இருக்கிறேன் அடைய வேண்டியது அதை பற்றிய புரிதல்களே . அது எதிர்படத் தொடங்குகிறது .அவற்றை பல பதிவுகளாக பதிந்து வைத்துள்ளேன் .
மிக இக்கட்டான இதுவரை சந்தித்தில்லாத ஒரு காலகட்டத்தில் ஒரே சமயத்தில் அக மற்றும் புறவயமான தாக்குதல்களுக்கு இடையே இருந்து கொண்டிருக்கிறேன். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை "இனிதாக இயல்பாக உதிர்வதை காட்டிலும்" , எனும் தியான நிலையிலேயே இருந்து கொண்டிருக்க விழைகிறேன் .ஆனால் ஒரே இடத்தில் இருந்தாலும் மனம் பத்து திக்கிலும் சுழன்று படி இருக்கிறது. மனப் பழக்கத்தால் அது சமன்படுத்தப்பட்டு சிறு சலனமான நதியாயாக சதா ஒழுகியபடி இருந்தாலும், பெருக்கெடுத்தால் நிகழும் விளைவை உணர்ந்து அதன் கரையில் நிற்கும் மரம் போல இருந்து கொண்டிருக்கிறேன் . என் ஊழை எதிர் நோக்கி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக