https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 18 மார்ச், 2017

அடையாளமாதல் - 10 (அரசியல் களம் - 10 & 11)

ஶ்ரீ:
அடையாளமாதல் - 10
(அரசியல் களம் - 10 & 11
தலைமைக்கு அணுக்கமாதல் )


மாலை கணகராஜ் சேகர் என்னிடம் வரும்போது பரபரப்பாக இருந்தான் அவன் எளிதில் உணர்வுகளை வெளியிடுகிடற ஜாதி இல்லை. சுப்பராயன் மற்றும் பாலனுடனான உரையாடலின் சாராம்சம் இப்போதுதான் அவனுக்குத் தெரியவந்தது . ஆச்சர்யமாக பேசினான். பாலன் யாரையும் சலேகித்துப் பேசி பார்த்ததில்லை என்பதை விட அவனிடமே இதுவரை பேசியதில்லை . தன்னை கூப்பிட்டனுப்பி பேசியதை அவனால் நம்பமுடியவில்லை.

கொட்டினான் நேற்று நடந்த நிகழ்வுகளுக்களைப் பற்றி பாலன் சொன்னதை . கடந்த சில மாதங்களாகவே , இந்த பிரச்சனைப் பொறி கிளம்பியிருக்கிறது . இது வழக்காமாக எழுவது இந்த முறை சற்று தீவிரம் . ஆனால் அது சமாதானத்திற்கான அறைகூவல் மட்டுமே இந்த எதிர்பு ,எதிர்த்து ஒன்றும்  செய்துவிட முடியாது . கட்சியில் இவர்களுக்கு யாரையும் தெரியாது , "இவர்கள் " என்ற ஒரு கூட்டம் இருப்பது கட்சியில் யாருக்கும் தெரியாது .இது பாலன் துவக்கியதல்ல . கண்ணன் துவக்கியது . இதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு .

பாலன் தன்னிடம்  இரவு விருந்திற்கு என்னை கூட்டிவரச் சொன்னதாக கூறினான் . இது அடுத்த கட்டத்திற்கான நகர்வு .

அடையாளமாதல் - 11
அரசியல் களம் - 11
உட்கட்சி அரசியல் ஒரு முன்னுரை


சரித்திரம் என்பது ஓர் மாபெரும் தேர் வடம் போல , அதன்      தொடக்கமும் முடிவும் கண்களுக்கு விஷயமாவதில்லை ,அது தேராக எதை அல்லது யாரை வைத்துள்ளது எனபதும் யாருக்கும் தெரிவதில்லை.  அது காலமாக, சமூகமாக, குழுவாக அல்லது உதிரியான தனி ஒருவனாகவும் இருக்கலாம் . அவர்களுடைய தேவை, விருப்பம் அர்பணிப்பு, தியாகம் அல்லது துரோகம் . என்கிற ஒரு புள்ளியியல் பல சரடுகள் வடமாக கெட்டிப்பட்டு சரித்திரமாகிறது.

சரித்திரமென்பது அனைவருக்கும் தொன்மங்களாக உள்ளுரையும் ஒருப்புள்ளி நிகழ்கால பதிவுகளில் உள்ள நடைமுறை சாத்தியங்களை விழுமியங்களுடன் ஒப்பிட்டு புதிய மரபாக ,அனுகுமுறையாக உருப்பெறுகிறது . அது அனைத்தையும் ஒற்றை திரளாக உருமாற்றும் இடத்தில் சரித்திரமென்றாகிறது .

அது ஒருவரை குறித்து புரிதலை மற்றொருவருக்கு காலமே முன்னெடுத்து கொடுக்கிறது . அதை ஒட்டியே அவர் மீதான அனைத்தும் முடிவாகிறது . நம் அபிப்ராயங்கள் அதற்கு உகப்பாக இருக்க வேண்டும் என எந்த நிர்பந்தம் இல்லை.ஏனெனில் அது வாழ்வியல். மற்றொரு விராட் வடிவம் ,அரசியல் .அது மக்கள் தொகுப்பை பிரதிநிதிப்பது அல்லது முன்னெடுக்கும் இயக்கம். கட்சி அரசியல் முரண்பட்ட கருத்துக்களால் பல நிலைகளில் பரிந்திருப்பது.

உள்கட்சி அரசியல் ஜனநாயகம் வேறுமாதிரியானது . கட்சிக்குள் வெற்றி பெருபவன தலைவன் அல்லது ஜன ஆகர்ஷ்ணம் ஒருவன் தலைவனாக வருவான் . ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை . தலைவனாக உள்கட்சி ஜனநாயகம் இல்லாத போது அவன் முட்டி மோதி முயங்கி முன்னகர வேண்டும் அரசியில் வாழ்ந்தவர் அதிகமாக கெட்டவர்கள் அதிகமா எனில் வாழ்ந்து கெட்டவர்கள் அதிகம் .

வாழ்ந்தவர்கள் என்பது அரசியலில் "சம்பாத்தியத்தை" குறித்து அது பேசவில்லை . வாழ்கை வரலாறை சித்தரிக்க அந்த பதிவு முயற்சிக்கவில்லை . ஆளுமைக்களுக்கு அருகில் இருந்து கட்சி அரசியலில் உள்ள யதார்த்தமானது எத்தகையது என்பதை பதிவு செய்ய வந்தது.

இதல் யாரையும் புண்படுத்துவதோ , உண்மைக்கு மாறாக சித்தரிப்பதோ இதன் நோக்கமல்ல . சில முக்கிய நிகழ்வுகள் சரித்தரமாக பார்க்கபடுகிது . ஆனால் அது நிகழ்கிற காலத்தில் அதன் நிலை , துவக்கும் , நகர்வு , கோணம் பற்றிய ஒரு அலசல் ஒரு மட்டுமே . இது நூறு சதவிகிதம் சரியானது என சொல்ல வரவில்லை . அனுமானம்  மற்றும் கட்சிப்பிழை இருக்க வாய்ப்புள்ளது . இது ஒரு அருகில் இருந்து பார்ப்பது மட்டுமே .கட்சியில் உள்ள முரணியக்கம எப்படிபட்ட வளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பற்றிய பார்வை மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்