https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 16 மார்ச், 2017

அடையாளமாதல் - 8 அரசியல் களம் - 8 முதல் அடுக்கில் பிளவு

அடையாளமாதல் - 8
அரசியல் களம் - 8


முதல் அடுக்கில் பிளவு

அந்நாள் ஒரு அழகிய வாய்பென விடிந்தது. கட்சியிலிருந்து என்னை சிலர் தேடி வந்திருப்பதாக சொன்னபோது , அது ஒரு விஷயமில்லை ஆனால் காலம் . அது எதையோ உணர்த்துகிறது . காலை ஆறு மணி கீழ் ஹாலில் அவர்கள் பதற்றமாக காத்திருந்தனர் . அவர்கள் என்றால் .பாலன் மைத்துனர் சுப்பராயன் கமலக்கண்ணன் தாமோதரன் மற்றும் பாலனுடைய உள்வட்டத்தை சேர்ந்தவர்கள் கிருஷணராஜ் மற்றும் லோகரட்சகன்.

வியப்புத்தான் . பாலனின் உள் வட்டத்தில் எனக்கு நல்ல தொடர்பு இருந்தாலும் என்னைத் தேடி வரும் அளவிற்கு அளவிற்கு என் அவசியம் அவர்களுக்கு இருப்பதாக நான் உணர்ந்ததில்லை.வழக்கமான உபசரிப்புடன் வரவேற்றபோது சுப்பராயன் ஏதும் பேசவில்லை, அவரிடம் எனக்கு மிகவும் கவர்ந்தது பீடிகையற்ற நேர் செய்தி. நான் அவரைவிட குறைந்தது இருபது வயது இளையவன் . அவர் இளைஞர் காங்கிரஸின் முன்னாள் நிர்வாகி. குறிப்பிட்ட வயதிற்கு மேல் இயக்கத்தில் இருக்க அனுமதி இல்லை. என்பதால் இன்று அவர் எந்த பொறுப்பிலும் இல்லை . என்றாலும் . கட்சியில் ஒரு எதிர் இல்லாத ஓங்கிய குரல் .

பாலனுக்கு உறவினர் என்பதை தாண்டி அவருக்கு சில தகுதிகள் இருந்தன. என்ன காரணத்தினாலோ பாலனால்  இவர் சொல்லை எப்போதும் மீற முடிவதில்லை . யாருக்காகவும் தன் கருத்தை மாற்றி பேசாதவர் , அது தவறாக இருந்தாலும் அது ஓங்கி ஒலிக்கும் . முனுமுனுவென அது சபையில் மொசுக்கப்பட்டாலும் , என்ன காரணத்தினாலோ யாரும் எதிர் குரல் கொடுப்பதில்லை . பூச்சிகள்

அவருக்கு என்மேல் சில அடிப்படையான காரணங்களால் நல்ல நட்பு உண்டு , தனிப்பட்டு பேசுகையில் குழந்தையை போல வயது வித்தியாசமில்லாது பிரச்சனைகளை அலசுவார் . என் முரண்பட்ட கருத்துக்கள் வாதத்திற்கு எடுக்கப்பட்டு பலமுறை ஏற்கப்பட்டது , வியப்புக்குரியது .

சுப்பராயனுக்கென்று அணியின் முக்கியஸ்தர்கள் கிருஷணராஜ் மற்றும் லோகரட்சகன் இயக்க சம்பந்தமில்லாத போதும், பாலனுடைய அணுக்கர்கள் . இவர்கள் வருகிறார் என்றால் விஷயம் பதட்டமானது.

கலக்கண்ணன் பேச ஆரம்பித்தான் . என் கார் தேவை . பாலன்மீது அதிருப்தி அடைந்திருக்கும் சிலர் மாற்று திட்டங்களுக்கு தயாராவதாற்கு முன் அவர்களை சமாதானப்படுத்த , இந்த குழு உடனடியாக செயல்பட வேண்டும். தனியாக செல்லக்கூடாது . பேசி இன்று இரவுக்குள் அதிருப்தியாளர்கள் பாலனை வந்து சந்தித்தாக வேண்டும் . ஆகவே கார் வேண்டும்.

நான் பரபரப்பானேன் இது பற்றிய  எனக்கு முன்பே தெரியும் அவர்கள் அனைவரும் மூத்த நிர்வாகிகள். வியப்பு கமலகண்ணனின் குழு செல்வது , அது அவர்களை சிறுமையும் படுத்தியது போலாகி , தவறான சமிக்ஞையாகி விடும் . பின் இவர்களுக்கு முகமே காட்டமாட்டார்கள்.

சுப்பராயன் நல்ல தேர்வு ஆனால் , பல சிக்கல்களில் அவர்களுடன் நேரடியாக மோதியிருக்கிறார் . சரியான தீர்வை சுப்பராயன் முன் வைத்தலும் . அவர்களுக்கு சுப்பராயனை மூக்கறுக்க ஏற்ற சமையமிது . நிச்சயம் தவறவிட மாட்டார்கள்.

பாலனே நேரடியாக ஈடுபட்டலாம். பலன் உண்டு . அனாவசிய காலதாம் தவிர்க்கப்படும் . சிக்கல் . பாலன் சரணடைந்ததை போல் ஆகும் . மேலும் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் .

இந்த அனுமானங்கள் தெரிந்தும் . நான் பேசாது இருப்பதே எனக்கு நலம் . ஏற்கனவே சூடுபட்டாகி விட்டது . மேலும் இது என் களமல்ல. அவர்கள் கூறியதை புது தகவல்களை அனுகும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே , என் கார் டிரைவருக்கு தொலைபேசியில் அழைத்து உடனே கிளம்பி வரச்சொன்னேன்.

அரைமணிக்கெல்லாம் டிரைவர் வந்து கார் ரெடி. நான் சுப்பராயனிடம் தெரிவித்தேன் . கமலக்கண்ணன் என்னிடம் எப்படியும் இரவாகி விடும்,  டிரைவரிடம் சொல்ல சொன்னான் .
அனைவரும் எழுந்து புறப்பட தயாரானார்கள் . நான் முன் இரவு உடையில் இருந்ததால் ஹாலிலேயே அவர்களுக்கு விடை கொடுத்தேன் .

அப்போது , சுப்பராயனிடமிருந்து ஒரு கூர்மையான அசைவு எழுந்தது , கமலக்கண்ணன் திடுக்கிட்டு என்ன ? என்றதும் " ஏ கமலக்கண்ணனா நீ இன்னு திருந்தவே இல்லையா ? யாரு அவங்க கிட்ட பேசரது . நீயா ? உன்னால ஆவரதா இது . அசிங்கபடப் போற நீ . பாலனுக்கு தெரிஞ்சிச்சீ உன்ன இன்னாப் பன்னுவானு தெரியாது . இந்த பிரச்சனைக்கு நீயும் ஒரு காரணம் . தெரியாதா ?என்றார்.

எழுந்து செல்லவிருந்த கமலக்கண்ணன் அமைதியாக உட்கார்ந்து விட்டான் . இது ஒன்றும் எனக்கோ கமலக்கண்ணனுக்கோ புதிதல்ல என்பதால் நாங்கள் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டோம்.
அடுத்து என்ன? அது தான் கேள்வி.

சுப்பராயனுக்கு எதிலும் நேர் அனுகுமுறை , சில சமயம் அது சிக்கலாகி இருக்கிறது . ஆனால் பல முறை அது சரியாக வேளை செய்வதுண்டு , ஆனால் அதை எப்போதும் தான் எவர் பின்ன்னாலே நின்று அவரை கொண்டு செய்வது . இன்று அது எனக்கு வழங்கப்பட இருக்கிறது என்பதை உணர்ந்தேன் .

சுப்பராயன் என்னைப் பார்த்து திரும்பி  . "அரி நீயும் வா போலாம் என்றார் . நான் எதுவும் சொல்லாது அவரைப் பார்த்த போது . அவர் அதில் உறுதியாக இருப்பது தெரிந்தது . நான் பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக சொல்லி குளிக்கச் சென்றேன். அனைவரும் நான் வருவதற்குள் தெரு முனையில் உள்ள டீ கடைக்கு சென்று காத்திருக்க துவங்கினர் .

நான் குளிக்கச் சென்றேன் , சற்று நேரம் எல்லாவற்றையும் வழக்கப்படி தொகுக்க தொடங்கினேன் . என்ன நடந்தது கமலக்கண்ணன் புறப்பட எழுந்ததும் சுப்பராயனுக்கு ஏன் கோபம் வந்தது . என்னை எதற்கு கூப்பிட்டார் .

சுப்பராயனின் கூர்மை என்பது இது . என்னை வைத்து இதை புதுக்கோனத்தில் அனுக நினைக்கிறார் . அது என்ன என்று எனக்கு புரிந்தே இருந்தது . இப்போது பிரச்சனை அதுவல்ல . என் வஞ்சினம் நிறையும் நாள் இது.

எனக்கும் கமலக்கண்ணனுக்குமான உறவு சரியாக இருந்திருந்தால் , இன்று சுப்பராயன் என்னை மாற்றுக்காய் ஆக்கின போது . கமலக்கண்ணன் வருத்தமுறக் கூடும் என்று நான் மறுத்திருப்பேன். மற்றும் இது எங்களுக்குள் உள்ள உறவை பகைக்கும். மேலும் நண்பர்களுக்கு எதிராக திடீரென்றெல்லாம் என்னால் எழ இயலாது . அது எனக்கு சாத்தியமே இல்லை. ஏதாவது வலுவான காரணம் என் தர்க்க புத்திக்கு சமாதானமுரைக்க வேண்டும்

ஆனால் இன்று அப்படியல்ல அன்று பாலன் வீட்டில் என்னை கிள்ளுக்கீரை என நினைத்த கமலக்கண்ணனுக்கு நான் யார் என புரிய வைக்க வேண்டும் . எல்லாம் சரி நீ உன் வஞ்சினத்தில் வென்றாய் . இனி அடுத்து என்ன ? .

தெளிவாக இருந்தேன் என்னை வரச்சொன்னது சுப்பராயன் , அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவல் இது . முடிவு அவர்கையில் .
நான் வெறும் துணைக்காய் . ஆனால் இதல் நான் ஆற்ற வேண்டிய பாகம் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. எனினும்  உற்சாகமாக குளித்து கிளம்பத் தயாரானேன்.

அனைவரும் காரில் புறப்பட்டோம் , அது ஒரு திருப்பம் . எதற்கான துவக்கம் இது , தெரியாது . ஆனால் இது என்னை மிக உயரத்தில் நிறுத்தியது . மாநில அமைப்பில் தவிற்க இயலாத சக்தியாக எழுந்த வந்தது நிச்சயம் இந்த நாள்தான் . அதேசமயம் என் வாழ்கையை திருப்பி போட்டதும் இதே நாள் தான் . நான் கட்சியின் அதிருப்தியாளர்களை கட்சியின் முகமென்று சந்திக்க சென்று கொண்டிருந்தேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்