https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 10 மார்ச், 2017

அடையாளமாதல் - 1 ( அரசியல் விருப்பு )


அரசியல் களம் -1

அரசியல் விருப்பு





அடையாளம் ஒரு குறியீடு , ஒருவரை பற்றிய மதிப்பீடுகளாக  அவை வெளிப்படுகையில் அனைவருக்கும் அனைத்தையும் ஒரு நொடியில் கடத்தி விடுகிறது.அது ஒருவரை தருக்கி நிமிர வைக்கிறது. ஓரளவிற்கேனும் அந்த குறியீட்டு மொழிகள் அவருக்கு உரித்தானதாக இல்லாமல் , வெறும் குலம் சாரந்தோ ,பொருளியல் சாரந்தோ வெளிபடுகிற போது  அந்த நிமிர்வு அர்த்தமற்றதாகி விடுகிறது.

குடும்ப மற்றும் பொருளாதார அடையாளம் மட்டுமே சமூகத்தில் காணப்படுவதாக தோன்றியதும் , எனக்கான அடையாளம் அது நான் எனக்கென உருவாக்கிக் கொள்ள விழைந்தது. "அரசியல்"

புதுவை "அரசியல்". அது நீண்ட நெடுநாட்களாக என் அவதானிப்பில் இருந்து கொண்டிருந்தது . இங்கு எந்த ஒரு செயலாக்கத்திற்கான பொது மறையாக அது புதுவையில் இருந்து கொண்டிருந்தது ஒரு காரணியாக இருந்திருக்கலாம் . தமிழ்நாடு அரசியலை ஒட்டி புதுவை அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் , ஆழத்தில் புதுவைக்கென்று மாறுபட்ட அம்சங்கள் இருந்தன. ஒன்று அதன் நீண்டகால பிரான்சு தொடர்பும். இரண்டு சின்னஞ்சிறு மாநிலமாக அது இருப்பதனால் .மூன்று பல கலாச்சார பின்னணி உள்ளதாக இருக்கலாம் .

இவை மூன்றும் அல்லது ஏதேனும் ஒன்று இங்குள்ளவர்களை தமிழ்நாட்டில் உள்ளவர்களின் மனநிலைக்கு வேறாக அகங்காரமுள்ளவர்களாக ஆக்குகிறது . பெரும்பான்மையானோர் அவ்வாறே உள்ளனர். அவர்களின்  அடையாளமாக  அரசியல் முன்னிலை வகிக்கிறது .

எளிதாக தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் சூழ்நிலையே அவர்களை அரசியல் நோக்கி உந்துகிறது. பலன் எல்லாரும் அடைவதில்லை ஒரு குறிப்பிட்டவர்களுக்கே அது சாத்தியபடுகிறது.

ஏனோ திராவிட இயக்கங்களின் மேல் கவனம் செல்லவில்லை. காங்கிரஸ் நோக்கி இழுக்கப்பட்டது அதன் இளைஞர் பிரிவில் ஓயாது நடந்து கொண்டிருந்த சச்சரவுகள் காரணியாக இருக்கலாம்.

சீனு மூலமாக அதனுள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது . அன்று அது இரு பிரிவாக மோதிக்கொண்டிருந்தது . நான் இரண்டாம் பிரிவையே தேர்தெடுத்தேன் . அதன் மிக பலவீனமான நிலை எனக்கு கட்டற்ற விடுதலையும் செயலாற்றும் ஊக்கமும் அளிக்கும் என நினைத்தேன்.
அது நடந்தது . ஆனால் நான் நினைத்ததைப் போல அவ்வளவு எளிதாக இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...