https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 24 மார்ச், 2017

வெண்முரசு புதுவை கூடுகை , வெண்முரசு . முதற் கனல் . பொற்கதவம்

ஶ்ரீ:
புதுவை கூடுகை பதிவு.

நாள் 23-03-2017

வெண்முரசு . முதற் கனல் . பொற்கதவம் 

தர்மம் , தன்னறம் ,அறம் மூன்றும் ஒன்றையே சொல்லவந்தவை , ஆனால் நுட்பாமான மாறுபாடுடையது. தர்மம்- ஒன்றின் இயல்பினாலானது , தன்னறம் - இயல்பை அகவயமாக நோக்குவது , அறம் - நோக்கியதை பிறிதொன்றில் பொருத்தி ஒழுகுவது .வேள்விமுகம் தொடக்கமாக அமைந்ததற்கு காரணம் , அது ஒரு சுழி ,முழு வெண்முரசின் முடிவின் தொடக்கமும் - தொடக்கத்தின் முடிவுமானது. ஆகவே தொடர்ந்து நிகழ்ந்த படியேயிருப்பது.
வேள்விக்குளத்தில் ஆஸ்தீகர் சொன்னதே அறத்தைப்பற்றிய கலியுக விவரிப்பு. ஜீவாத்மாக்களான பிரம்மா முதல் எறும்பு ஈறாக அனைத்திற்கும் முக்குண மயக்கத்தால் கோபதாபங்கள் இருக்கின்றது எனப் புரிகிறது , அதை ஒட்டி கஷ்டமும் நஷ்டமும் வரத்தான் வரும் என்பதும் விளங்கிறது .சத்வ, ரஜோ, தமோ குணங்களுடைய சமன்குலைவே இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதற்கான விழைவின் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால் அனைத்தும் சிதறி மறையும். இச்சை தீமையல்ல! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்.அறம் , அறிந்தோரால் சாமான்யம் , விசேஷம் எனப் பகுக்கப்பட்டே அதற்கு அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது . 
பீஷ்மரின் மனக்கலகத்தையும் அறத்தைப் பற்றிய அவரின் சிரமம் சொல்லவந்தது பொற்கதவம் . பாரதம் என்கிற உதிரிப்பூக்களை தொடுக்கும் நார் போல அவர் செயல்பட்டால் மட்டுமே அது நகரும் . ஒரு சூழலில் அவர் திகைக்கிறார், பெரும் அறச்சிக்கலில் உழல்கிறார் . தன்னறம் தன்னை நெறிப்படுத்துவது என கைக்கொள்ளும் நிலையில் . அதன் மீது தாக்குதல் தொடங்குகிறது . சாதனை என்றால் பரிட்சை உண்டு , அதிலிருந்து வென்று வெளிவருகிறார் . ஆனால் அவை எல்லாகாலத்திற்குமானதன்று . அதனால் பெறும் விசை அடுத்த நிலை வரையில் நீடிக்கிறது . ஏனெனில் தீர்வு ஒற்றைபடையானதல்ல , பெரும் முரண்களின் தொகையை அது முன்வைக்கிறது . தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே .தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும் என்றும் , காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் என்று சித்ரகர்ணியும் , இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை’ என்று கந்தினியும் .இவை அனைத்திற்கும் சிகரமென வியாசர் பசுவைக்கொல்வதுதான் சிங்கத்தின் தர்மம். ஆகவே சிங்கத்துக்கு பசுவதையின் பாவம் கிடையாது” என்கிறார்  பீஷ்மர் அதைக்கேட்டு கோல் விழுந்த பெருமுரசம் போல மனம் அதிர்ந்து திரும்பி வியாசரைப் பார்த்தார். 
இங்கு பீஷ்மர் தெளிகிறார் என்று சொல்லமுடியுமா இதை ? இல்லை , ஏனெனில் பெற்ற சில மணித்துளிகளில் காலாவதியாகி விரல்சந்தின் இடையே நோக்கி நிற்கும் போதே  சொட்டி வழிந்த மறையும் நீரென்றே    தீர்வை காலம் எப்போதும் வழங்கிவந்துள்ளது . அவை எவரையும் கலமென நிரைத்து வைப்பதில்லை , தான் புரிந்துகொள்ளவே இருநூறாண்டுகால வாழ்க்கை தேவையாகியிருக்கிறது…. என்ற வியாசரின் புரிதலை பேசுகிறது அது ,அறிதலை பற்றி அல்ல .
பொற்கதவம் . உலோக பொற்கதவை சொல்ல வரவில்லை அறக்குழப்பத்திலிருந்து அவர் வெளிபட திறந்த அவரது மனக்கதவே பொற்கதவம் . தன்னை முழுதாக கட்டமைத்துக்கொள்கிறார் . ஒவ்வொரு காலத்திலும் அவை இடபாடுகளாகி மீண்டும் மீண்டும் கட்டியெழுப்படுகிறது. புது சித்தாந்தங்களை அவை கண்டடையப்பட்டு கட்டமைக்கின்றன . பீஷ்மரின் தன்னறம் மிக்க எழுந்து கழிவிரக்கமென நான்கு முகமாக கட்டியெழுப்பப்படுகிறது 
1 .சூதர் தீர்க்கசியாமர் மூலமாக
2 .வியாசர் மூலமாக
3 .சித்ரகரணி மூலமாக
4 .கந்தினி என்ற வெண்பசு
//சந்திரகுலத்து பிருஹத்ஷத்ரன் இக்‌ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற குழந்தை இளமையிலேயே நூறு யானைகளின் ஆற்றலைக்கொண்டிருந்தது. // புராணம் பாரதவர்ஷத்தில் இரண்டு சத்திரிய வம்சத்தைச் சொல்லுகிறது சந்திர சூரியவம்சம் இந்தியாவை ஆண்ட அனைத்து ராஜாக்களையும் இந்த இரண்டு பிரிவுகளுக்குள் வைத்தது . சூரியரியனும் அதன்  ஒளியை நகல் செய்யும் சந்திரனும்  உலகம் இரவு பகல்களால் ஆக்கி மனிதர்களின் அரசனென்றாகி நெறி வளர்ந்தனர் . சந்திரவம்சம் ஆட்சியேற உதித்த கண்ணன் சொன்ன கீதையின் நாயகன் சூரிய குல ரகுராமன் . ஆக இது ஒளியை பரதிபலிப்பது . எளிய மாநுடர்களுக்கானது பாரதம் இன்று வெண்முரசாகியது.
//யானைகளின் மதத்தில் மொய்க்கும் ஈக்களின் ரீங்காரம் மலர்ச்சோலைகளின் தேனீக்களின் ரீங்காரத்தை விட ஓங்கி ஒலித்தது. அந்த யானைகளின் எழிலைக்காண ஐராவதம் மீதேறி இந்திரன் விண்மீது வந்து நிற்பதனால் என்றும் அந்நகர்மேல் மழை பெய்துகொண்டிருந்தது// நீர் உயர நிலம் உயர வயல் உயர நெல் உயர கோல் உயர கொடி உயரும் . இந்திரன் தன் மகள் தேவயாணிக்கு அளித்த கொடை
//“அது பறந்து போய்விட்டது. அதோ அது பறந்து போய்விட்டது” என ஆர்ப்பரித்தான். “சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது” என்றான். கூடியிருந்த அனைவரும் அதைக்கேட்டு நடுங்கி அதிர்ந்து சினம்கொண்டனர்// வாழ்வு காலத்தினால் ஆனது , இது முடிவைக்குறித்து எழுகிறது . பின் ஏற்றமென்றும் இறக்கம் என்றும் அது மாயையினால் மயக்கினாலும் . முடிவு இங்கிருந்து துவங்குகிறது காலக்குறிகளைப் பார்த்த முதுநிமித்திகர் குருவம்சத்தின் மாவீரர்களும் அறத்தின்தலைவர்களும் இனிமேல்தான் பிறக்கவிருக்கிறார்கள் என்றும் குருகுலத்தின் புகழின் பூக்காலம் இனிமேல்தான் வரவிருக்கிறது என்றும் சொன்னார். ஆனால் பித்தனின் சொற்களும் சரியாகவே இருந்தன .
//“தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது” என்று அவன் சந்தனுவைப்பற்றி சொன்னான். “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” // 
பாரதத்தின்  போக்கை மாற்றி அமைப்பது சந்துனுவின் சத்தியவதியின் மேல் உள்ள இச்சையையும் , அது அவனுடைய வீரியத்தை வதைத்து , விதைகளை பலமிழக்கச்செய்கிறது . ஒரு விதையின் உள்ளே உள்ள காட்டை பிளந்து வெளிவரத் துணைக்கும் நீரும் மண்ணும் அறம்பிழைத்து அதை வதைக்கின்றன . வதைப்பதே உருவாக்கும் விசை போலும் . பீஷ்மரை அறம் எனும் நீரும் மண் எனும் அஸ்தினாபுரமும் வதைக்கிறன. 
// “இன்று வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது. அருந்ததிக்கு நிகரான விண்மீன். அது குருகுலத்தை அழிக்கும்” //
// அருந்ததிக்கு நிகரான எரிவிண்மீன் என்ற சொல் ஒரு பெண்ணைக் குறிக்கிறதென்றும் ஊகித்திருந்தனர் //ஆனால் அவர்களனைவரும் ஆச்சரியப்படும்படியாக சத்யவதி அதை அறிந்திருந்தாள். அந்தச்செய்தியை பிறர் எவரும் அறியவேண்டியதில்லை என்று அவள் அவர்களுக்கு ஆணையிட்டு பரிசில்கள் கொடுத்து அனுப்பினாள். அஜபாகனின் சொற்களிலிருந்து நிமித்திகர் ஊகித்த கடைசிச்செய்தியை அவர்கள் சத்யவதியிடம் சொல்லவில்லை.
//பேரமைச்சர் யக்ஞசர்மர் புன்னகைசெய்து “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார்.//அர்த்த சாஸ்திர வரிகள் போல கருணையற்ற உண்மைகளை கொண்டது , உண்மைகளை விழைவை என்கிற பொய்கலவாத தர்கத்தில் வைப்தனாலேயே அது தீர்வை நோக்கி நகர்கிறது .
//இந்த கிருஷ்ணபக்‌ஷ சதுர்த்தியுடன் அஸ்தினபுரியின் மன்னர் சித்ராங்கதர் மறைந்து ஒரு வருடமாகிறது. அவரது நீர்க்கடன் நாள் வரைக்கும் ஷத்ரிய மன்னர்கள் நம் மீது படைகொண்டுவர முடியாது. மேலும் எட்டுநாள் கழித்துதான் அவர்கள் போருக்கு நாள் குறித்திருக்கிறார்கள்//அரசர்களின் உலகம் ஆசைக்கானது என்றாலும் நெறியின் வழியில் விலக்குத்தேடியே வாழ்நாள் முழுவதும் சிந்திருக்கிறார்கள் என்கிறது இந்ப்பதிவு.
//அந்த துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன.//ஆகவேதான் பெருதெய்வங்கள் கண்கள் நம்மை சிறு தெய்வ்களைப் போல்நேர் கொண்டவெறித்த பார்வையின்றி , தழைந்த நோக்கும் கருணையுமாக கனிகின்றன.
//பீஷ்மர் “அன்னையே, உங்கள் சொல் எனக்கு ஆணை. ஆனால் நான் இக்கணம்வரை என் அகம் சொல்லும் நெறியை மீறியதில்லை. எதிர்த்துவரும் ஷத்ரியனிடம் மட்டுமே நான் என் வீரத்தைக் காட்டமுடியும். அரண்மனைச் சிறுமிகளிடம் தோள்வலிமையைக் காட்டினால் இந்த பார்தவர்ஷமே என்னைத் தூற்றும்…என்னை மன்னியுங்கள். என்மேல் கருணை காட்டி தங்கள் ஆணையிலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றார். யாசிப்பவர் போல கைகள் அவரையறியாமல் நீண்டன. “பழிச்சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம் தாயே…என்னை அந்த இருண்ட குழியில் தள்ளிவிடாதீர்கள்” என்றார்.//
பொற்கவம் ஆஸ்தானாபுரத்தின் மகாமரியாதம் என்னும் கோட்டைச்சுவர் நடுவே உள்ள அணிவாயிலுக்கு பொருந்துகிறதோ இல்லையோ பீஷமனின் மனக்கதவை குறிக்கும் சொல்.
அது திறப்பதையும் நாட்புறத்திருந்தும் அறம் அவருள்ளே நுழைகின்றது.
// சத்யவதி “தேவவிரதா, நீ கொள்ளவேண்டிய முதல்நெறி ஷத்ரிய நெறிதான். தன்னை நம்பியிருக்கும் நாட்டையும் குடிமக்களையும் காப்பதுதான் அது” என்றாள். “தன் குடிமக்களுக்காக மும்மூர்த்திகளையும் எதிர்க்கத்துணிபவனே உண்மையான ஷத்ரியன் என்று நீ கற்றதில்லையா என்ன? கடமையைத் தவிர்ப்பதற்காகவா நீ நெறிநூல்களைக் கற்றாய்? களம் நெருங்கும்போது பின்திரும்பவா ஆயுதவித்தையை பயின்றாய்?” என்றாள்.//
பீஷ்மர் தன்னறம் என நினைப்பதை சூதரிடம் விவரிக்கிறார்
//சூதரே, அறத்தின் வழிகள் முற்றறிய முடியாதவை. ஆனால் மனிதன் செய்யும் அறமீறல்களோ விண்ணிலும் மண்ணிலும் பொறிக்கப்படுபவை. மனிதனுக்கு படைப்புசக்திகள் வைத்த மாபெரும் சூது இதுவென்று நினைக்கிறேன்” என்றார். //
வனவேங்கை மரத்தடியில் ஒரு இடையச்சிறுவன் வந்தமர்ந்து குழலிசைக்கக் கேட்டார். அந்த இசையில் மயங்கி அருகே நெருங்கிச்சென்றபோது அவ்விசை மலரும்தோறும் வனவேங்கையின் கிளைகளிலெல்லாம் பொன்னிற மலர்கள் பூத்து நிறைவதைக் கண்டார். அவன் வாசித்துமுடித்தபோது மலர்க்கனத்தால் மரக்கிளைகள் தாழ்ந்து தொங்கி தூங்கும் மதயானைகளின் மத்தகங்கள்போல மெல்ல ஆடின. அவன் சென்றபின் அந்தக் குழலிசையை மெல்ல திரும்ப மீட்டியபடி வேங்கை மலருதிர்க்கத் தொடங்கியது. கண்ணீருடன் தன் தவச்சாலையை அடைந்து தன்னுடைய நூலை எடுத்துப்பார்த்தார் பராசரர். அதை அங்கேயே நெருப்பிடவேண்டுமென்று எண்ணி அனல் வளர்த்தார். அவர் சுவடிகளைப்பிரிக்கும்போது அங்கே நாரதமுனிவர் வந்தார். அவர் செய்யப்போவதென்ன என்று உணர்ந்த நாரதர் பராசர ரை தடுத்தாட் கொள்கிறார் . அவர் வான் நோக்கி துதிக்கை தூக்கும் யானையையே தன்னுள் எப்போதும் உணர்ந்தார்.
யமுனைக்கரையில் நின்றிருந்த மரமொன்றின் அடியில் இரவுறங்க வந்த பராசரர் நிலவில் தெய்வசர்ப்பம்போல ஒளி கொண்டெழும் யமுனையையே பார்த்துக்கொண்டிருந்தார். தானறிந்த ஞானமனைத்தும் அக்காட்சியின் முன் சுருங்கி மறைந்து வெறுமையாவதை உணர்ந்தபோது அவர் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டத் தொடங்கியது.
 பராசர ரிஷியின் இரண்டு வித சலனங்களின் வழியாக மாற்றமடைகிறது . அதன் விளைவாக பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என அறிகிறார் மகாவியாசர் அவதரிக்கிறார்
பீஷ்மனுக்கு மேற்படி உதாரணங்களுடன் அறப்பிழை அன்று என்கிறார் சூதர் தீர்க்கசியாமர் அதை பராசர ரிஷியின் கதையின்  வழியே வியாசனை காட்டிக்கொடுக்கிறார் .

வியாசரை சந்திக்கும் பீஷ்மர் தன்னை மனோரீதியில் சிந்திக்கும் திராணியில்லதா வெறும் ஆயுதமென்று நினைக்கிறார் 
//“ஆயுதங்கள் உயிரற்றவை. உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது. அவற்றை இயக்கும் விதிகளுக்கு அப்பால் அவற்றில் ஏதுமில்லை..”  என்கிறார் பீஷ்மர் . //
அதன் படி துல்லியமான கணக்குகள் வெல்ல அறிவற்ற ஆயுதமாக இருப்பது அறம் என உணர்கிறார் அதற்கு வியாசர். “ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது….பொறு நீ சேர்த்துக்கொண்டவை எல்லாம் உன்னைவிட்டு ஒழுகிமறையும் நாள் ஒன்று வரும்”
நான் தங்களிடம் கேட்கவிழையும் வினா ஒன்றே. ஒரு ஷத்ரியனின் முதற்கடமை எதுவாக இருக்கும்? எதன்பொருட்டு அவனுடைய பிற அனைத்துப்பிழைகளும் மன்னிக்கப்படும்?” என்றார்.
வியாசர் சிபிச்சகரவர்த்தியின் கதையில சித்ரகன் மூலம் தன்னறத்திற்கு வேறு வழி காட்டுகின்றார் 
சித்ரகன் சினந்து சிறகடித்தெழுந்தது சொல்கிறான்  “மூடனைப்போல பேசுகிறாய். தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்” என்றது. ஆக தன்னறம் என்பது ஆனவத்தின் அடையாளமாகி விடுகிறது .
பீஷ்மர் நெடுமூச்சுயிர்த்து “ஆம், ஷத்ரிய தர்மப்படி சொந்த நாட்டின் நன்மைக்காக ஷத்ரியன் ஷத்ரியப்பெண்ணை தூக்கிவருவதில் தவறே இல்லை….பிற குலத்துப்பெண்களை அவர்கள் அனுமதி இல்லாமல் தூக்கிவந்தால்தான் பெரிய பாவம்…” என்று அறம் பற்றி அறிந்து தெளிகிறார். 
ஆனால் கதையின் போக்கு மற்றொரு கோனத்திலும் பிஷமனை குற்றவாளி என்று சொல்லி பெரும்வெளியின் ஆடல் முன் புடவியில் அறங்கள் நுட்பமானவை, அறிதற்கரியவை என்கிறது

நீ என்னை அறியமாட்டாய். நானோ ஒவ்வொரு பிறவியிலும் உன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித்தெறிக்கும் கூழாங்கற்கள்கூட பிறவிகள் தோறும் உன்னை பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது. நான் இந்த முதுமைவரை வேட்டையாடி வேட்டையாடி கண்டறிந்தது ஒன்றே. காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப்பின்னிச்செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்’ என்று சித்ரகர்ணி சொல்லிக்கொண்டது.

அப்போது வெளியே சித்ரகர்ணி கால்களைப்பரப்பி அடிவயிற்றைத் தாழ்த்தி நாசியை நீட்டி மிக மெதுவாக தவழ்வதுபோல நகர்ந்து வாசலில் நின்ற வெண்பசுவை அணுகியது. கருவுற்றிருந்த கந்தினி என்ற வெண்பசு ‘இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை’ என்று சொல்லிக்கொண்டது.
இப்போது நமக்கு தெரியாமலேயே நாம் பிழைக்கும் அறம் நம்மை சேர்ந்தது அல்ல என முடிக்கிறார் திரு. ஜெயமோகன்
- கிருபாநிதி அரிகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக