https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 9 மார்ச், 2017

நற்செயல் என மயக்கும் நற்பேறு

உன் நற்செயல்விளைவாக அல்ல, அவள் கொண்ட நற்பேறினால்தான்” என்றாள்.


இது வெண்முரசு மாமலர் 36. மலர்வைரம்

அன்று அவருக்கு புதிய அரசு பதவி கிடைத்திருந்தது . வாழ்த்துதல் முறை என்பதால் அவருக்கு அலைபேசினேன். வழக்கம்போல் வியப்பு அவர் கோவில் நிகழ்வொன்றில் இருந்தார் . என்னையும் வரும்படி அழைத்தார் . நான் அதில் பங்கு கொள்ளச் சென்றேன் .

அங்கு சென்று சேர்ந்ததும் மனம் வழக்கம் போல் குரங்கானது . புதிதாக தெரிந்தவர்கள் சிலர் செய்யும் சலம்பலும் , அளப்பறையுமாக அங்கு நிகழ்வு நகர்ந்து கொண்டிருந்தது . மனம் கசப்பை நோக்கி போகாமல் இருக்க "இது பொதுப் போக்கு புரிந்து கொள்" என்ற சமாதானத்திற்கு பின் இயல்பானேன்.

 கோவிலில் தற்பெருமையை நிலைநாட்ட வருபவர்களுடன் நான் எவ்விதத்திலும் தொடர்பு கொண்டிருப்பதில்லை . நான் என்னை தனியனாக உணர்வது மிக நல்லதொரு மனநிறைவை தருவது.

கோவிலிலிருந்து அழைப்பு வரும் போதெல்லாம் அது எனக்கான அங்கீகாரம் என நினைப்பதும் அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் அதற்கு எவ்வித தொடர்பும் இல்லாது துண்டாக நிற்பது ஏமாற்றமளிப்பதாக இருந்து வந்தது.

மின்னளென ஒரு புரிதல் .இது உன் நல்லூழின் பொருட்டல்ல .இது கோவில் அறங்காவலரான உன் அப்பாவின் நற்பேறு என்று. ஆகா என்ன ஒரு நிம்மதியான விடுதலை உணர்வு அது இதைப்படிக்கும் போது அது இன்னும் அதிகமானது . என்ன ஒரு அற்புதமான சொல்லாட்சி.

//. அவளை அவள் குலத்தவர் தூக்கி காட்டுக்குள் கொண்டுசென்றார்கள். விழிநீருடன் நின்ற நகுஷனிடம் ஒவ்வொரு குரங்காக வந்து கைநீட்டி அவன் கைகளைத் தொட்டு உதட்டைநீட்டி தலைகுனிந்து விடைபெற்றன. பல குரங்குகளின் உடலில் சில்லம்புகள் பட்ட புண்கள் இருந்தன. அவர்கள் சென்று மறைந்ததும் அவன் நிலத்தில் அமர்ந்து அழுதான். மூதன்னை “எப்போதும் எதையும் மறக்காமலிருப்பதே அரசபண்பு. இன்று நீ வந்து அன்னையைக் கண்டது உன் நற்செயல்விளைவாக அல்ல, அவள் கொண்ட நற்பேறினால்தான்” என்றாள். //

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...