https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

ஜெ கடிதம் -2


15 டிசம்பர்   2015
ஶ்ரீ:அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு ஜெயமோகன்  அவர்களுக்கு,
வணக்கம் ,ஏதோ ஓர் வேகத்தில் கடிதம் எழுதி அனுப்பிய பிறகுதான் கவனித்தேன் ஆரம்பத்திலேயே இருந்த என் தவறுகளை .தங்களுக்கு வரும் கடிதங்களையும் அதில் உள்ள தழிழ் ,நடை மற்றும் விஷய காம்பீர்யத்தையும் பார்க்கும்  போது நான் கடிதம் எழுதியிருக்கவே வேண்டாமோ , என கூசினேன் . ஆனால் , என் குறைகளுடன் என்னை நீங்கள் அறிவதே நலம் என சமாதானமடைந்தேன்.
தங்களிடமிருந்து இத்தனை விரைவில் பதில் வருமென்றும் நினைக்கவில்லை. தங்களை பற்றிய உளப்பூர்வமான ஓர் முழு பதிவோடே தான் ,உங்களை தொடர்பு கொண்டேன் . நான் அதில் ஏமாற்றமடைய மாட்டேன் என்கிற நம்பிக்கையை உங்கள் எழுத்துக்களிடமிருந்தே அடைந்தேன் என நினைக்கிறேன்.
தங்கள் கணிப்பே என் எண்ணம். நீங்கள் பல்லாண்டுகளாக அந்தச் சூழலில் தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள் . நான் இப்பொழுது தான் அங்கு வந்து சேர்திருக்கிறேன். உங்கள் தயக்கம் புரிந்து கொள்ளக்கூடியதே . அதற்கு சந்தர்ப்பம் தாராதே கருத்துருவாக்தை மேடைபடுத்துதல் எனக்கு சவால் என்பதையும் புரிந்திருக்கிறேன் , என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள் .
பார்வையாளர்கள், சுவைஞர்கள் , தேடலுள்ளவர்கள் , என பல தரப்பட்டவர்களை சந்தித்தும் , படித்தும் புரிந்து கொள்வதுடன் , இன்றைய ஜன சமூகத்தை பற்றிய மிகத்தெளிவான உளப்பதிவு உங்களுக்கு இருக்கும் . நான் முற்றிலும் வேறு ஒரு தளத்திலிருந்து வருகிறேன் .பல கூட்டத்தின் வாயிலாக கலந்து கொள்பவர்களை கவனித்ததில் தெளிந்தது ,அவர்களின் தேடல் . அதற்கு என்ன தீர்வு என்பதே,என் தேடலாகவே பல வருடம் கழிந்து போனது . சுமார் பதினோராயிரம்  அடிப்படை உறுப்பினர்களை கொண்ட ஒரு இயக்கமாக அது உருவெடுத்தது . அதில் சம்பிரதாயமான நிகழ்க்ருபாநிதி அரிக்ருஷ்ணன்
வுகள் பல நடந்தாலும் , wபக்தியைத்தாண்டி ஒரு விஷயம் இளைஞர்களுக்கு சொல்லப்பட வேண்டும் என விரும்பினேன் .தாங்கள் கூறுவது போல பக்தி ஆயிரமாண்டு காலம் வேரூன்றி இருக்கிறது , கேள்விகளற்ற , அறிவுக்கு இடமற்றதாக அது இருந்து வருகிறது என்பது உண்மையே . அது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்ததற்கு கைமாற்றி விடப்படுகிறது . ஆனால்  இன்றைய நவீன தலைமுறையினரிடம்  அது எடுபடுமா ,என்பதே இப்போதுள்ள கேள்வி ?. அதற்கானப் புரிதல்  எனக்கு கோவையில் கிடைத்தது.
கீதையை பற்றிய தாங்களின் பார்வையாக     கோவையில் வைத்தது, மேடையில் சொல்லிச்செல்லும் வெறும் கருத்துருவாக்கம் மட்டுமல்ல. யார் வர வேண்டும் என்பதை விட யார் வர வேண்டாம் எனபதில் தெளிவாக இருந்தீர்கள் .வந்தவர்களை புதிய களத்தில் வளர்த்தெடுக்கும் ஆர்வமும் ,இந்திய ஞானமரபில் அவர்களுக்கென்ன புரிதல், கடமை மற்றும் சவால்கள் ,அவற்றை எதிர் கொள்ள தேவைபடுவதை அவர்களுக்கு இப்போதே கட்டு சோற்றாக்கி இருக்கிறீர்கள்.
இன்று அவர்களின்  இருப்பு நிலை , தாங்கள் அவர்களை உயர்த்த விரும்பும் நிலை ,இவற்றுக்கு இடைப்பட்ட மற்றோர் நிலை என்ற ஒன்று இருக்கிறது என்றே என்னுகிறேன் . அதற்கான கருத்துருவாக்கம் இன்றியமையாததாகும் . நாங்கள் நடத்திய பல கூட்டத்தில் அதையே கண்டேன் , கோயமுத்தூர் கூட்டத்திலேயும் அதைத்தான் பார்த்தேன் . அந்த மற்றோர் நிலையே நான் நினைப்பது எனக் கருதுகிறேன் .
ஸ்வாமி ராமாநுஜரின் தத்துவ சித்தாந்தம் அழகியலுடன் இனைக்க முயன்றது என்னும் தங்கள் சொல் , மிக ஆழமானது அற்புதமானது ,சொல்நயம்மிக்கது . உங்களுக்கு கைவந்திருக்கும் அது ,எனக்கு சொல்லாக வெளிப்படாது நெஞ்சில் நின்றது , "உம்மிலும் தமிழ் சன்னதம் கொண்டெழுகின்றதையா" என திரு.டில்லி துரை அவர்கள் சொன்னது வெறும் வார்தை இல்லை.
அழகியலுடன் என்பதே கருப்பொருள் என நினைக்கிறேன் அதை விளக்க இன்றைய பாரம்பரிய பௌராணிகர்களுக்கு சாத்தியமா எனத்தெரியவில்லை . பரபக்தி ,பரக்ஞான, பரமபக்தி என்று ஸ்வாமி ராமாநுஜர் அவரது "கத்தியத்தில் " திரும்பத் திரும்ப கதறுவதற்கு இக்கால புரிதல்,இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற சமூக பிரக்ஞையுள்ள இலக்கியவாதியாக  உருவெடுத்திருக்கும் தாங்களிடமிருந்து ஒரு வேளை கிடைக்கலாம் என நினைக்கிறேன் .தாங்கள் பக்தியை எதிர்பவரோ , மறுப்பவரோ அல்லர் , என்பதாலேயே ஆதரிப்பவர் எனத்தேறுகிறது. என்பதாலே.
பாரத வர்ஷத்தின் ஈடு இனையற்ற சொத்து இந்திய ஞானமரபும் அதற்கானத் தத்துவங்களும் .அது சரியானபடி இன்றைய நவீன இளைஞரிடம் சென்று சேர வேண்டும் என நீங்கள் விழைவது சரி என்றே நானும் நினைக்கிறேன். அதன் மூலம் பக்தியை வளர்ப்பது எனக்கு நோக்கமல்ல , ஏனென்றால் அது கோவில்களில்  பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. தத்துவ விசாரங்களும் ,தர்கமும் , ந்யாயமும் ,மீமாம்சங்களும் , ஷனிகங்களும் பொதுவில் ! எளிதில் புரியும்படி வைக்கப்படாளொழிய ,அது நிலைக்காது. ஓரு இந்துவாக ,இந்தியனாக ஒருவன் தன் பிதுரார்ஜித சொத்தாக பெருமைப்பட இதைத்தவிர வேறு ஒன்று அவனுக்கு இருப்பதாக தெரியவில்லை.
நீங்கள்  மகாபாரதத்தை முழுமையாக மறுஆக்கம் செய்யும் பெரும்பணியில் ஈடுபட்டிருபதும் ,மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது , அது யுக புருஷருக்கானது , மேலும் பலநூல்கள் எழுதுவதும் , திரைத்துறையில் உங்களுடைய பங்களிப்பும் தெரிந்திருக்கிறேன். எனவே ஒரு வாசகனாக அது எனக்கும் அப்படியே. நிச்சயம் உங்கள் காலம் கலந்துரையாடல் போண்றவற்றில் வீணடிக்கப்படாது.
தங்களிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் ? உங்கள் தயக்கங்களுக்கு என் சமாதானம் என்ன? மேடைபடுத்துதலுக்கு முன்புள்ள தயாரிப்புகள் மற்றும் தங்கள் கருத்துருவாக்கம் குறித்த என் புரிதல் .இது பற்றி தெளிவு பெறவும் , தங்களின் எழுத்துப் பணிக்கு சிரமம் வாராத தங்களுடனான ஓர் சிறிய சந்திப்பை விழைகிறேன் . எங்கள் திட்டக்குழு உறுப்பினர்களுக்கு அளிக்கபட வேண்டிய முன்வரைவிற்கு அது உதவியாக இருக்கும்.

மிக்கப் பனிவண்புடன்.
க்ருபாநிதி அரிக்கிருஷணன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக