https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 2 மார்ச், 2017

கண்ணிவெடி துரைவேலுக்கு கடிதம்




(இக்கடிதத்தை எனக்குஅரிகிருஷ்ணன் அவர்கள் அனுப்பியிருந்தார். அவர் அனுமதியுடன் இதை இங்கு வெளியிடுகிறேன். )
திரு. த.துரைவேல் அவர்களுக்கு
இது ஒரு '"கண்ணி'" 'வெடி' ஆனால் அதை சர்வஜாக்கிரதையாக கையாண்டு இருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் .

இந்த உலகிலுள்ள ஒரு நாட்டின் விதி வேறொரு நாட்டிற்கு பொருந்துவதில்லை என்பதை விட, இன்றும் சொல்லப் போனால்  "பொதுமை நீதி "என்கிற ஒன்று நம் பாரதவர்ஷத்தில் இல்லை என்கிறபோது மானுட உலகின் சட்டம் மேலுகில் பொருத்திப்பார்க்க இயலாது.

இதை ஊர்வசி அர்ஜுணன் உறவின் முரணில் பார்க்கலாம் , ஊர்வசி அவனுக்கு நேர் தாய் ஸ்தானம் வேறொரு வகையில் பாட்டி ஸ்தானம்.

பிரகஸ்பதி , லோகாயதமதத்தின் (ச்சாருவாகம்) ஸ்தாபகர் இது இன்றைய உலகின் நடையாடுகிற ஒரு மதம் , ஆனால் மதமென்று வெளிப்படையாக இல்லாது போனாலும் ஏறக்குறைய பெரும்பாலானவர்களின் உளக்கொள்கை அப்படித்தான் இருக்கிறது . அதற்கு சாட்சி அனுதினமும் நாளிதழில் நாம் காணும் பொருந்தாக்காமமும் அதை ஒட்டி எழும் குற்றச் செய்திகளும். 

பிரத்யக்ஷ்மாக தெரிவதற்கே முதலிடம் . "அதிருஷ்டமான" கண்ணுக்கு தெரியாமை பற்றிய விஷயங்களில் கவலையின்மை. அந்த கொள்கையே உங்கள் ஆக்கத்தின் பிரகஸ்பதியின் சித்தாந்தமாக திரு.ஜெயமோகன் அவர்களின்  எழுத்தில் ஒளிர்கிறது.

// “நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு”// என்று


"அறம்" இருவகை. அறம் ;தன்னறம் , திருஷ்டம்; அதிருஷ்டம், அகவயம் ;புறவயம் எனும் இருமைகள் . கருத்து இவை இரண்டிலும் வெளிப்படையாக இருந்தாலும் நுட்பம் சித்தாந்தம் எனப்படுவது. அது இந்த இரண்டின் மத்தியில் சொல்லப்படாது தொக்கி நிற்கிறது.

நீங்கள் கூறியபடி அறிவும் அழகும் குறியீடுகளே அதை மற்றவர்களின் பார்வைக்கு எண்ணத்திற்கு விருந்தாக்க நினைப்பது ஒரு வித விழைவின்  விளைவே . 

நீங்கள் பார்தது போல வேரொரு கோணம் . வயோதிகம் ஒரு ஆறு . அதற்கு அறிவும் அனுபவமும் இருகரைகள் அதில் சித்தவிகாரம் வெளிப்படுகையில் கரை புரண்டு நாசத்தை ஏற்படுத்தி விடுகிறது. தாரையின் நிலைக்கு பிரஹஸ்பதியே ஒரு காரணியாகிறார்.இதில் முரண்நகை "பிரபஞ்ச பெரும் கிழவர் "பிரம்மா 'இந்த 'பஞ்சாயத்திற்கு வருகிறார்.மானிட உலக ஒழுக்க கோட்பாட்டு இங்கு திகிலடைகிறது .

இந்து மத தரிசனங்களில் தத்துவத்தை விளக்க அது பாமர மக்களின் கதைகளாகும்  போது ,புராண இதிகாசங்கள் என்றாகிறது .அம்மாற்றத்தின் போது ஏற்படுகிறது சில பொருந்தாமை (Code  decoding ஆகும் போது ஏற்படுகிற Bug போல) அது பெறுமதியில் அதிர்வலைகளை கிளப்பி விடுகிறது 

ஆனால் வேதம் பரிகாரம் சொல்லுமிடத்தில் உபநிஷத்து, புராண ,இதிகாசங்களின் கருத்துக்கள் வேதப்பிரமாணத்திற்கு முரண்படின் ,உபநிஷத்து, புராண ,இதிகாசங்கள் மூன்றுமே தள்ளுபடி என்கிறது.

உங்கள் ஆக்கம் பொதுபுத்தியில் பொதிவது என வெளிப்படுகிறது . திரு.ஜெயமோகன் அவர்கள் யதார்த்தம்,உளவியல் , இருத்தலியல் கொள்கைகளை கையாண்டு வெற்றி கண்ட அதே விஷயத்தை உங்களின் எளிய வார்த்தைகளில் சொல்லியிருப்பது கத்தி மேல் சாகசம் செய்யும் மொழி ஆளுமை.  சிறப்பு . அதே சமயம் இது அவரின் நீட்சியாக வெளிபடுவதால் குற்றமற்று இருப்பதையே நான் காண்கிறேன்.



வாழ்த்துக்கள் !!

ஆழ்ந்த நட்புடன் 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்


18 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:35 அன்று, Thandapani Duraivel <thandapan...@gmail.com> எழுதியது:
- show quoted text -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக