https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 21 மார்ச், 2017

அடையாளமாதல் - 13 (அரசியல் களம் - 13 இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-1)

ஶ்ரீ:



அடையாளமாதல் - 13
அரசியல் களம் - 13
இயக்கமுறைமையும் முரண்பாடுகளும்-1


எமர்ஜன்சிக்கு பிறகு இந்தரா காந்திக்கு  எதிராக அரசியல் எழுச்சி பெரும் பாய்ச்சலை கண்டது . அதன் நீட்சியாக இந்திரா காந்தி மத்தியில் ஜனதாவிடம் ஆட்சி இழந்ததுடன் சிறைசெல்லவும் நேர்ந்தது . ஜனதா அரசின் மடமைகளில் ஒன்று அவர்கள் கைது நடவடிக்கை மூலம் மக்களிடம் இந்திராகாந்திக்கு இருந்த கோபத்தை அனுதாபமாக ஆக்கியது .

காங்கிரஸுக்கு எதிரான எழுச்சியை கண்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சியை விட்டு ஓடிப்போனார்கள் , இனி இந்திராகாந்திக்கு  எதிரகாலமில்லை என்றானபோது , சன்ஜய்காந்தி தலைமையில் இருந்த இளைஞர் காங்கிரஸ் , காங்கிரஸ் கட்சிக்கும் இந்திராகாந்திக்கும் உறுதுனையாக இருந்தது . சன்ஜய்காந்தி இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்ததால் . சில முக்கியமான தன்னிலைசார் அதிகாரங்களுடன் இயக்கவிதிகள் மாற்றி அமைக்கப்பட்டன . அது நாடு முழுவதும் இளம் தலைவர்களை உருவாக்கி எடுத்தது . இன்று அகில இந்திய அளவிலும் மாநில அரசியலிலும் உள்ள தலைவர்கள் இளைஞர் காங்கிரஸின் வழியாகவே உருவாகி வந்தவர்கள் . அவர்களில் பெரும்பாலானவர்கள் வாரிசுகளாக இல்லாமல்  சமூகத்தில் இருந்து வந்தவர்கள் . எந்த அரசியல் பின்புலமும் பொருளாதார பலமும் இல்லாதவர்கள் .

ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் தனக்கான இடத்திற்கு போராடும் இயக்கமாக இளைஞர் காங்கிரஸ் இருந்து வந்ததிருக்கிறது . அதனுடைய அமைப்பு எந்த விதத்திலும் மாநில காங்கிரஸ் தலைமைக்கு கட்டுப்பட்டதல்ல . அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் அதை இயக்கி வந்தது . நியமனமும் , நீக்கமும் அவர்கள் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருந்தது . எல்லா நேரங்களில் இது மாநில காங்கிரஸுடன் மோதல் போக்கையே கொண்டிருந்தது .

என்னைப் பொருத்தவரை இது மிக அற்புதமான வழிமுறையாக இருந்தது . பல தலைவர்கள் உருவாக இது முக்கிய காரணியாக இருந்தது . ஆனால் ராஜீவ்காந்தி மறைவிற்கு பின் அதன் முக்கியத்துவம் குறைக்கபட்டு காங்கிரஸின் ஒரு உட்பிரிவாக மாற்றப்பட்டு அதன் வீரியம் குறைக்கப்பட்டது . புதிய இளைஞர்களை நோக்கிய அதன் செயல்பாடுகள் முடக்கியது . காங்கிரஸின் சரிவிற்கு இதுவும் ஒரு காரணம் . வயது மூத்த தலைவர்களின் தலையீட்டால் இளைஞர்கள் ஒதுக்கப்பட்டு இன்று தள்ளாடும் நிலைக்கு வந்துள்ளது . அகில இந்திய மற்றும் மாநில இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் இன்று உள்ளவர்கள் ஒன்று தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது சார்ந்து பிழைக்கும் ஒட்டுன்னிகள்.

இன்றும் இந்திய அனைத்து பகுதிகளையும் இணைக்கும் ஒரே சக்தி காங்கிரஸ் மட்டுமே . அதன் வீழ்ச்சி நாட்டிற்கு நல்லதல்ல .
இன்று காணப்படும் முற்போக்கின் வீழ்ச்சி இந்த சூழலில் இருந்து உருவாகி வந்ததே .

முரண்பட்ட கருத்துகளின் ஊடாக சித்தாந்தங்களை நிருவும் சாமர்த்தியம் இல்லாது ஆளுமைகளின் போக்கால் அமைப்பு சிதைந்து நோக்கங்கள் காணாமல் ஆயின . அன்டிப்பிழைப்பதும் , ஏவல் செய்வதால் பெரும் பதவிகளில் உட்காருபவர்கள் , தங்கள் நகல்களை பண்மடங்கு உருவாக்கி கட்சிக்குள் அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள் . இவர்களை கட்சியும் தலைவர்களாக வெளியிட்டபடி இருக்கிறது.

இயக்கம் தலவர்களை உருவாக்குவதில்லை , போராட்ட குணத்தின் வெளிப்படு பகுதியாக ஒவ்வொரு புது தலைவர்களும் நிகழ்காலத்துக்குறிய அரசியல் பிரக்ஞை மற்றும் பிரச்சனைகளுக்கு உரிய சமன்பாடு திட்டத்துடன் அவர்கள் எழுந்து வருகிறார்கள் . அதுவே ஒரு இயக்கத்தை உயிர்ப்பாக வைத்திருப்பது .

இன்று ஒரு நீண்ட காலம் என்பது மூன்று வருடங்களே என்பது மிகையல்ல . அதற்கான அரசியல் நிலைபாடுகள் கூர்மை படுத்தப்பட வேண்டும் . இந்தியா பல்லின நாட்டில் கட்சியின் மேல் கீழ் அடுக்குமுறை செயல்பாடுகள் விசையால் நகர்வதில்லை , அதிகாரத்தால் நடத்தப்படுவது . கீழ்நிலை யதார்தங்களின் பிரதிபலிக்கும் பிம்பமாக முடிவுகள் ஏற்படாது , அமர்வுகளில் எடுக்கும் உப்புசப்பில்லாத ஒருமித்த கருத்தென்னும் முடிவுகளால் தீர்மானிக்கப் படுகின்றன .

பிரதிநிதித்துவம் நியமிக்கப்படுபவர்களால் ஏற்கப்படுவதில்லை , சமூகத்தில் முட்டி முயங்கி எழுந்து வருபவருக்கு கிடைக்கும் அங்கீகாரத்தினால் ஆனது.

குரு சிஷ்யப்பரம்பரை அரசியலில் காணமல்போய்விட்டது . அரசியல் குரு தன் மனோ வாக் காயத் திரிகரணங்களாலும் சமூக அங்கீகாரத்தை பெருபவர்கள் ஒருகாலமும் தப்பானவர்களை அடையாளம் காட்டமாட்டார்கள் . என்ரொரு காலம் இருந்தது . சமூக சரி தப்புகளிலிருந்து மாறுபட்டதி அரசியலில் உள்ள சரி தப்புகள் இங்கே அதன் அடர்த்தி மிக குறைவானது . சில சமயம் அது கூடியும் இருக்கும்

ஒரு தலைவரை சுற்றி பல அடுக்குத் தலைவர்கள் இருப்பார்கள் , அது இரு பிரிவுகளாலானது ஒன்று கட்சி அதிகாரம் , மற்றது ஆட்சி அதிகாரம் . சட்டமன்றத்திற்கு குறிவைத்து அரசியல் செய்யும் எவருக்கும் மந்திரி என்பது லட்சியமாக இருக்கும் அது முழுக்க ஓட்டரசியலை கொண்டிருக்கும் அதற்கும் கட்சி அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை .

இது ஒன்றுதான் பெரிய முரண் புதுவை மற்றும் தமிழ்நாடு கட்சி அரசியலில் . தமிழ்நாட்டில் இயற்கையாகவே கட்சிசார்ந்த அரசியல் ஆனால் புதுவையில் அப்படி அல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக