https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 25 மார்ச், 2017

அவதானிப்பில் மதிப்பீடுகள் -1

ஶ்ரீ:


கடந்த மூன்று வருடங்களாகவே என் இருபத்தி ஐந்து வருட மதிப்பீடுகளை மறுவரையறை செய்து இங்கு வந்து சேர்த்திருக்கிறேன் . தர்க்க புத்தி அதன் சட்டகத்தை வடிவமைத்து விட்டது அதில் பெரிய மாறுதல் இருக்கப்போவதில்லை , ஆனால் நடைமுறையில் அதை பொருத்துவது தர்கிப்பதை நிறுத்திக்கொண்டது . புறவயமான தேவைகளுக்கான கட்டுப்பாட்டு
தகர்ந்துவிட்டது , ஏனெனில் ஒதுக்குதல் இயல்பதாக நடப்பவை.

எனக்குள் நிகழ்ந்தவை , நிகழ்ந்து கொண்டிருப்பவைகளை அவதானிப்பின் வழியே எனக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் .

திரு. ஜெயமோகனை ஆசிரியர் ஸ்தானத்தில் இருத்தி அவரது எழுத்துக்களின் வழியே என்னைப் பற்றிய என் தொகுப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது . அந்த வகையில் அவரது சமீபத்திய பதிவை மிக நெருக்கத்தை ஏற்படுத்தியது. வழக்கம் போல இந்த பதிவின் ஊடாக கடக்க விழைகிறேன்.

நெடுங்காலம் வேர் விட்டு வளர்ந்து நிலை கொண்ட நிலப்பிரபுத்துவ அமைப்பொன்றின் இறுதிக்காலகட்டத்தில் பிறந்தவன். எனது தந்தை அந்நிலப்பிரபுத்துவ காலகட்டத்துக்குள் முழுமையாகத் திளைத்து வளர்ந்து வந்தவரின் பிள்ளயாக அவரின் விழுமியங்களையே என் தந்தைக்கு  அளித்தார் . ஆகவே அவரின் குடும்பம், பள்ளி,அலுவலகம் ,சமூகச் சூழல் அனைத்திலுமே அந்நிலப்பிரபுத்துவத்தின் மரபுகளும் நெறிகளும் நம்பிக்கைகளுமே மேலோங்கி நின்றன.

பழங்குடிகளின் கட்டற்ற பரவலான பண்பாட்டுவெளியை வாழ்ந்திராத போதும் , புரிதலின் வழியாக நிலப்பிரபுத்துவம் பல வகையிலும் முற்போக்கான வளர்ச்சியையே அளித்தது என்பதை உணர்ந்திருப்பார்.அதன் விளைவாகவே கலைகளும் இலக்கியங்களும் சிந்தனைகளும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வந்தன. நிலப்பிரபுத்துவத்திற்குமேல் எழுந்து வந்த முதலீட்டியம்  நிலப்பிரபுத்துவத்தோடு ஒப்பிட்டு நோக்குகையில் மேலும் முற்போக்கானது என்பது இயல்பான காலமாற்றங்கள் உணர்த்தின. ஆகவே நாம் முதலீட்டியத்தின் ஊழியர்கள். அதில் பங்களிப்பாற்றுபவர்கள்.

ஆனால் சென்ற காலம் பொருளியல்தளத்திலும் அரசியல்தளத்திலும் பின்னகர்ந்து விட்டாலும் கூட சமூகத் தளத்திலும் பண்பாட்டுத்தளத்திலும் நீடிக்கவே செய்யும். இன்று நம்மை ஆளும் மதிப்பீடுகள் நிலப்பிரபுத்துவக் காலத்தைச் சேர்ந்தவை .அவை இலக்கியங்களாக, நீதிநூல்களாக ,ஆசாரங்களாக, ஒழுக்க வரையறைகளாக ,அற மதிப்பீடுகளாக ஆழ்படிமங்களாக நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாக அவற்றை உற்று நோக்கி ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்வதினூடாகவே அவர் அவற்றை கடந்து செல்ல முயற்சிப்பவராக இருந்தார்.

அவை பெரும்பாலும் அறமதிப்பீடுகளே ஒழிய ஒழுக்க மதிப்பீடுகளோ நெறிமுறைகளோ ஆசாரங்களோ அல்ல. அந்த மாற்றம் மிகமெல்ல வளர்சிதை மாற்றமாக, முரணியக்கத்தின் வழியாக மட்டுமே நிகழமுடியும். அவ்வளர்சிதை மாற்றம் வழியாகவே நான் உருவாகி வந்தவன் என நினைக்கிறேன் . காரணம் என் தந்தை அவரின் மூத்வரோடும் என் பாட்டனாரோடும் எதிர் கொண்ட முரணை உணர்வதில் என்னை கண்டெடுக்க முயல்கிறேன் .

இச்சூழலில் நான் அறியும் ஓர் இடருண்டு. குடும்பத்தில் தந்தைக்கும், கல்வி நிலையங்களில் ஆசிரியருக்கும், தொழில் நிலையங்களில் மேலதிகாரிகளுக்கும், சமூகச் சூழலில் மூத்தவர்களுக்கும் முழுமையாக அடிபணியவே நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளால் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். இயல்பாகவே எந்தை அதை செய்தும் வந்திருக்கிறார் . ஆனால் அன்றைய தலைமுறையில் அந்த மதிப்பீடுகளை உதறி முன்னகரும் இயல்பு அவருக்கு உருவாகியிருக்கலாம் ,பெரும்பாலும் நவீன தொழிற்சூழலில் இருந்து இது முளைவிடுகிறது. நிலப்பிரபுத்துவத்தோடு நூலிழைத் தொடர்புகளே நீடித்த நிலையில்  அவர் தன்தந்தை முன்னெடுத்த தொழிலில் மேலும் வலுவான முன்னகர்தலில் ஈடுபட்டார்

90களுக்குப்பிறகு உலகமயமாக்கம் இந்தியாவில் ஐரோப்பிய அமெரிக்கபாணி தொழில்- வணிகச் சூழலை உருவாக்கியது. குறிப்பாக கணிப்பொறித்துறை போன்றவற்றில் ஐரோப்பிய பாணி நிர்வாகிகளும் தொழில்உறவுகளும் உருவாயின. அங்கு மேல் கீழ் அடுக்கு என்பவை ஆசாரம் மற்றும் நம்பிக்கை இவற்றின் இரண்டுமற்ற நிலையின் நீட்சியாக நான் உருவாகி வந்திருக்கிறேன் . நிர்வாகத்தின் பொருட்டு உருவாக்கப்பட்ட தொழில்முறை உறவுகளே இருந்தன. மெல்ல குடும்பங்களுக்கும் அவை வந்து சேர்ந்து கொண்டிருந்தது . இந்த சூழலில. எந்தையின் தொழில் முழுமையாக என்னிடம் கையளிக்கப்பட்டது .

தற்போதைய இளைஞர்களிடம் கணப்படுகிற பல நவீன விழுமிங்களோடு  நான் ஒத்துப்போவதைக் காண்கிறேன் . இது எந்தை வழியாக என்னிடம் வந்து சேர்ந்திருக்கலாம் , அல்லது நிலம் சமூகம் பணபாடு அல்லது ஆழ்மனபடிமங்களாக இவஐ வெளிப்பட்டிருக்கலாம் . அதன் விளைவாக எவரும் என்மேல் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காமலிருக்கும் மனநிலை இன்று வளர்ந்துவிட்டுருப்பதை உணர்கிறேன் . தந்தையோ ஆசிரியரோ மேலதிகாரியோ மூத்தவர்களோ என்னிடம் ஆணையிட இயன்றாலும் சில சமயங்களில் கட்டுபடுவதில்லை

மானுடனாக நான் பிறருக்கு முற்றிலும் சமானமானவன் என்ற உணர்வை இளமையிலேயே அடைந்துவிட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். எனக்கும் என் தந்தைக்குமான உறவல்ல எனக்கும் என் மகனுக்குமான உறவு. நான் என் தந்தைக்கு நிகராக நின்று ஒருசொல்லும் பேசியதில்லை.என் மகன் என்னை அஞ்சுவதில்லை, அடிபணிவதுமில்லை.

இச்சூழல் அறிவார்ந்த தேடலையும் ஆன்மீகமான மலர்வையும் நோக்கி ஒவ்வொரு தனியாளுமையும் சென்று சேர்வதற்கான விடுதலையை அது அளிக்கிறது. அதற்கெதிரான சமூகத் தடைகள் அனைத்தையும் பெரும்பாலும் விலக்குகிறது. பிறிதொருவரின் வாழ்க்கைக்குமேல் நாம் செல்வாக்கு செலுத்துவது பிழை என்ற எண்ணம் இன்று வலுப்பெற்று வருகிறது. தன்மேல் பிறர் செலுத்தும் ஆதிக்கம் என்பது ஒருவகையில் அத்துமீறலே என்னும் எண்ணம் உருவாகி நிலைபெற்றுள்ளது. அனைத்து வகையிலும் முந்தைய நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளிலிருந்து முற்போக்கானதென்றும் பயன் மிக்கதென்றும் இதை ஐயமில்லாமல் சொல்ல முடியும்.என்கிறார் ஜெயமோகன் இது என்வரையில் சரி என்றே உணர்கிறேன்.

என் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை முழுமையாகவே என் ஆளுமை கொண்டு எதிர்க்கிறேன் . அது விடுதலையளிக்கும். ஆனால் அதே எதிர்ப்பு என்னை உடைத்து வார்க்கும் வாய்ப்புள்ள, முற்றிலும்புதிய ஒன்றைக் கற்பிக்கும் வழிகாட்டியான ஆசிரியனிடம் செலுத்தப்படும் என்றால் அங்கு கல்வி மறுப்பே நிகழும். அது நிகழக்கூடாது . இந்த இரட்டைகளின் மத்தியில் பயணிப்பதே சரியானதாக இருக்கும்

எனது ஆணவத்தை ஜெயமோகன் முன்னால் திறந்து வைத்தேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை அவர் உடைக்கவும் அவர் என்னுள் புகவும் நான் அனுமதித்தேன். அது எனக்கு இறப்புக்கு நிகரான அனுபவமாக இருந்தாலும் அதனூடாகவே நான் என் இளமையின் அறியாமை எனக்களித்த ஆணவத்திலிருந்து வெளியே வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.இதற்குக் காரணம், சிந்தனையைத்தான் நூல்கள் அளிக்கமுடியும் சிந்திப்பதை ஆசிரியர்களே கற்பிக்கமுடியும் என்பது உண்மை தான்.
நம் எண்ணங்களை தர்க்கபூர்வமாக மாற்றுபவன் முதன்மை ஆசிரியன் அல்ல. தன் ஒட்டுமொத்த ஆளுமையையே நம் மீது பதிப்பதன்மூலம் நம்மை உடைத்து உருமாற்றி வார்ப்பவனே முதன்மையாசிரியன். குரு என்னும் சொல்லால் அதை குறிக்கலாம். அவன் எங்கே எப்படி நம்மை பாதிக்கிறான் என நாம் எளிதில் அறியமுடியாது. நம் உலகநோக்கை, சிந்தனைமுறையை நம்மையறியாமலேயே அவன் மாற்றுகிறான்.

இது ஒரு நுட்பமான குறியீட்டுத் தொடர்பு என்றே என் அனுபவத்திலிருந்து எனக்குத் தோன்றுகிறது. ஆசிரியனுடனான என்  உறவில் நான் அவரை மெல்லமெல்ல ஓர் அடையாளமாக ஆக்கிக்கொள்கிறேன். அவர் என்னிடம் நேரடியாக  உரையாடத்தையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறேன். அந்த நுட்பமான தொடர்புறுத்தலுக்கு தடையாக இருப்பது எப்போதும் என் தர்க்கபுத்தியை தீட்டி முன்வைத்திருப்பது, அது தன்னை முன்வைத்து என்னை எதிர்த்துக்கொண்டே இருக்கிறது. அதை இப்படி தொகுத்துக்கொள்கிறேன்
என்மீது கருத்தியலாதிக்கத்தை செலுத்த எவரையுமே அனுமதிக்காத இறுக்கத்தை நான் கொண்டேனென்றால் நான் எங்கு நிற்கிறேனோ அங்கேயே இறுதி வரை நின்று கொண்டிருப்பேன் . என்னுள் எந்த புதுக்கருத்தும் உள்ளே வரவும் முளைத்து மேலெழவும் அனுமதிக்காமலிருப்பேன் அதேசமயம் என்னை முழுமையாக பிறருடைய கருத்துக்களுக்கு விட்டுக் கொடுத்து ஒரு கால்பந்தாட்டத்தின் பந்து போலாவது எவ்வளவு அசட்டுத்தனமானதோ அதற்கிணையாகவே இரும்புத்தூணென நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கும் உறுதியும் அபாயகரமானது என்பதையும் புரிந்தே இருக்கிறேன் . உண்மையிலேயே அது எனது தேடலைத் தொட்டு எனது ஆழ்தளங்களை விரியச்செய்யும் ஆசிரியனிடம் எனது அதே வெற்றாணவத்தைக் காட்டுவது எதையும் கற்கவியலாது செய்துவிடும்.இது பெரும்பாலும் அவரின் தனிப்பட்ட தெரிவென்றாலும்  அது மறுக்கத்தக்கதல்ல. என் ஆளுமையாக தன்முனைப்பையும் கட்டமைத்து வைத்திருப்பின் இச்சொற்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. அதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும் .

ஜெயமோகன் சொல்கிறார் " தன் குருவை தானேதான் தெரிவுசெய்துகொள்ளவேண்டும். முதன்மையாசிரியர்களை, குருநாதர்களை, அணுகும் வழி என்று மட்டுமே இதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். உதாரணமாக நான் நடத்தும் நவீன இலக்கிய விவாதங்களில் தன்னிலையைப் பேணிக்கொள்ளும் ஒருவர் நல்ல பங்களிப்பை ஆற்றமுடியும். ஆனால் சுவாமி வியாசப்பிரசாத் போன்ற குருநாதர்களிடம் அந்தமனநிலையுடன் அணுகினால் வெறும் ஆணவமே எஞ்சும்.நான் சுட்டிக்காட்ட விரும்புவது இந்த வேறுபாட்டையே."

இது ஒரு நல்ல சொல்லாட்சி , ஜெயமோகனை அனுக நான் எடுத்துக்கொண்ட "தன்னிலை பேனுதல்"  இவ்வாறு தொகுத்துக் கொண்டேன் . அது பற்றி திரு.ஜெயமோகனுக்கு எழுதும் போது இப்படி குறிப்பிட்டேன்

" என்னுடனான என் ஒப்பந்தம். உங்கள் கருத்துக்களை இரண்டாக பிறித்துக்கொள்ளவது ஒன்று;அனைத்தையும் அது சொல்லும் வகையில் புரிந்து பொதிவது. இரண்டு;ஏற்கவியலாததை தனியாக வைத்துக்கொள்வது.

மேலும் ஏற்கவியலாததை இரண்டாக பிரித்துக்கொள்வது.
ஒன்று;அவற்றை அக்கால சூழல் உணர்ந்து புரிந்து கொள்வது, அல்லது தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையை அனுமானிப்பதின் வழியே அவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பது.இரண்டு; மற்றவற்றை கடக்கவியலும் காலம் வரை விட்டு வைப்பது.ஆனால் உங்களின் “ஆறு தரிசனம்” ஆக்கம் வாசிப்பிற்கு பிறகு இந்தப்பகுதியில் தற்கால சூழலை ஒட்டி அது திரிபடைந்திருக்கும் நிலையாக அனுமானிப்பதின் வழியே அவற்றை கடப்பது என்கிற ஒரு பொது புத்தி எழுந்து வந்துள்ளது.அவற்றை நியாயப்படுத்த தொடங்கினேன்."

திரு. ஜெயமோகன் மேலும் " இன்றைய முதலீட்டிய உலகில் பிற அனைத்து துறைகளிலும் சுதந்திரம், தனித்துவம், வணங்காமை, தன்முனைப்பு ஆகியவை  ஒருவகைப் பண்புகளாகவே நிலைகொள்கின்றன. கற்றுக்கொள்ளும் இடத்தில் மட்டும் உரிய இடத்தில் வணங்குதலும் உரிய முறையில் பணிதலும் அங்கே அவசியமானவை என்று தோன்றுகிறது. நாம் நமது வணக்கத்தின் மூலம், பணிதலின் மூலம் நாம் நம்து எல்லையைக் காணமுடியும். நமது பலவீனங்களையும் குறை பாடுகளையும் அளந்து அடையாளப்படுத்திக்  கொள்ள முடியும். அதன்பின்னரே நம்மை நாமே உடைத்து மறுவார்ப்பு செய்ய முடியும்.

நமது வெற்றிடங்களை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நம்மை நிரப்பிக் கொள்ளும்போதே உண்மையில் கல்வி நிகழ்கிறது. அதனூடாகவே வெளியிலிருந்து வரும் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் நம்முள் இடமளிக்க முடியும். அவற்றை நம்முள் நாமே வளர்த்து எடுக்க முடியும் அதனூடாக நாம் வளர்ந்து நாம் பணிந்தவர்களையும் வணங்கியவர்களையும் உண்மையிலேயே நிகரெனக்காணும் இடத்தை அடைய முடியும். கடந்து செல்லவும் கூடும்.

பிற உறவுகளிலிருந்து இவ்வுறவு வேறுபட்டது. பிற சமூக உறவுகள் அனைத்திலும் சற்றேனும் பொருளியல்சூழலின் கட்டாயங்கள் கலந்துள்ளன. அவை காலந்தோறும் நுணுக்கமான மாற்றங்களையும் அடைகின்றன. நிலப்பிரபுத்துவ காலகட்டக் காதலும் முதலீட்டியக் காலகட்டக் காதலும் வேறுபட்டவை. ஆனால் ஆசிரிய மாணவ உறவு எப்போதுமே காலாதீதமானது " என்கிறார் . அதீனமானது தானா ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக