https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 13 மார்ச், 2017

அடையாளமாதல் - 3 (புது நண்பர்கள் சந்திப்பு)அரசியல் களம் -3

புது நண்பர்கள் சந்திப்பு


அடுத்த நாள் மாலை சேகர் என்னை என் அலுவலகத்தில் சந்தித்த போது நான் முதல்நாள் நிகழ்வுகளில் இருந்து ஒரு சிறு ஏமாற்றதை அடைந்திருந்தேன். சேகரிடம் அதைப்பற்றி பேச வேண்டாம் என்று இருந்துவிட்டேன் . சேகர் உற்சாகமாக இருந்தான் . என்ன விசேஷம் என்றதும் ,கட்சியில் சிலர் என்னை சந்திக்க விரும்புவதையும் அவர்களை இன்று சாத்தியப்படுமா என்று கேட்டான் , நானும் உற்சாகமானேன் . கடற்கரை இந்தியன் காபி ஹவுஸ் சந்திப்பது என முடிவானது  . அது நான் என் பால்ய நண்பர்களை தினமும் சந்திக்கும் இடம்.

நண்பர்கள் வட்டத்தில் என் அரசியல் நுழைவு  ஒன்றும் பெரியதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை ,நம்பிராஜைத் தவிர . அவன் குடும்பமே அரசியலில் சம்மந்தமுடையது . அமைச்சர் கண்ணன் நம்பிராஜ் குடும்பத்திற்கு மிகவும் வேண்டபட்டவர் .அவனுடைய அண்ணின் நண்பர் . கண்ணன் இளைஞர் காங்கிரஸின் முன்னால் தலைவர் அவரிடமிருந்து கருத்து வேறுபாடுகளால் அது இரண்டு அணியாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலம் .

பாலன் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அவர் தலைமையில் நான் கட்சியில் இனைந்தது நம்பிக்கு வருத்தம் . நான் அவசரப்பட்டு விட்டதாக இன்று வரை சொல்லிக்கொண்டிருப்பவன். அவன்தான் மிகத் தீவரமாக என்னுடைய அரசியல் பிரவேசத்தை எதிர்த்தான்

ஆரம்பம் முதலே கண்ணன் அணியில் சேருவது பற்றி சிறு விருப்பம் இருந்தது . ஆனால் என் தர்க்க புத்தி நீ செய்வதற்கு அங்கு ஒன்றும் இல்லை என்றது . அதற்கு எதிரான வேரொரு கருத்து வலுவாக எனக்குள் தோன்றும் வரை அது சொல்லுவதே என் நிலைப்பாடாக இன்றுவரையில் உள்ளது. அதன் அறிவுரைப்படியே இன்றுவரை என் முடிவுகளை நல்லதும் கெட்டதுமாக எடுத்துள்ளேன் . அவைகளைப் பற்றி மாற்று கருத்து இன்றுவரை என்னுள் எழாதது ஒரு ஆச்சர்யம் .

நான் தனியனாக இருந்ததில்லை எப்பொழும் நண்பர் சூழ்ந்த கூட்டத்தில் மத்தியில் இருப்பது மிக விருப்பமானது. புது நண்பர்களை கண்டடைவது மகிழ்வானது.

புது அரசியல் நண்பர்களை சந்திக்க சேகருடன் புறப்பட்டேன் கடற்கரை காபி ஹவுஸிற்கு வலது பக்க சிமென்ட் கட்டையில் மூவர் அமர்ந்திருந்தனர் . அனைவரும் மொடமொடத்த கதர் சட்டை வேட்டியில் இருந்தனர் , பார்த்தாலே அரசியல் கட்சியினர் என்பது தெளிவாக இருந்தது .

சேகர் மூலம் அவர்கள் அனைவரும் எனக்கு அன்று அறிமுகமானார்கள் . தாமோதரன்,கமலக்கண்ணன் , சேகர் .
இப்போது இரண்டு சேகர்கள் .அதை பற்றி விளையாட்டாக அவர்களிடம் கேட்டதற்கு அடைமொழி மூலம் வித்தியாசப் படுத்தினர் எனக்கு முன்பே தெரிந்தவன் கணகராஜ் சேகர் என்றும் புதியவன் ஒல்லி சேகர் என்று கூறிச் சிரித்தார்கள் .

தாமோதரன் பார்பதற்கு முரட்டுத்தனமான கிட்டத்தட்ட ஆறடி உயரம் நல்ல வலிமையான உடற்கட்டு கருப்பு நிறம் தாடியுடன் இருந்தார் . அன்றெள்ளாம் தாடி வைத்திருப்பது இளைஞர் காங்கிரஸின் அடையாளமாக பார்க்கப்பட்டது .

கமலக்கண்ணன் இளவழுக்கை தாடியுடன் மூக்கு கொஞ்சம் சப்பையாக ஏறக்குறைய தெற்கு பகுதியில் கட்சி நடத்தும் அரசியல் தலைவர் ஜான் பாண்டியன் சாயலில் , ஆனால் அவ்வளவு உயரமில்லை , நடுத்தர உயரம்.

ஒல்லி சேகர் நெடுநெடுவென்று ஆறு அடி உயரம் அடைமொழிக்குரிய ஒல்லி உருவம் லேசாக கூன் போட்டுபடி தாடி மீசையில் இருந்தான்

கமலக்கண்ணனிடமும் தாமோதரனிடமும் சிறிது இறுக்கம் இருப்பதை உணரமுடிந்தது . ஒல்லி சேகர் அறிமுகமான நிமிடத்திலிருந்து மிக சகஜமாக பேச ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்கு பிறகு அனைவரும் சகஜநிலைக்கு வந்தனர் . மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்தது உரையாடல் இரவு  ஒன்பது மணிக்கு முடிவுற்றது . இனி தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்திப்பது என்று கூறிவிட்டு கமலக்கண்ணனும் தாமோதரனும் கிளம்பினார் .

இரண்டு சேகரும் அதன் பின் நெடுநேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். இயக்கம் பற்றியும் அதன் பிரச்சனைகள் பற்றியும் விரிவாக பேசினர். அப்போது தலைவர் பாலனின் அனுகுமுறையில் எனக்கேற்பட்ட வருத்தத்தை சொன்னேன். ஒல்லி சேகர்தான் அதெல்லாம் ஒன்றுமில்லை அவர் குணாதிசியங்கள் அப்படித்தான் என்றும் . அவர் தன்னிடம் நான் கட்சியில் இனைந்ததைப் பற்றி பேசியதை சொன்னான் .

இளைஞர் காங்கிரஸ் அன்று அதன் மற்றொரு பிரிவுடன் உக்கிரமாக மோதியபடி இருந்தது . அமைச்சர் கண்ணன் அனியினர் அரசு அதிகாரத்தில் இருந்ததால் , இளைஞர் காங்கிரஸ் அமைப்பு பெறும் பிண்ணடைவில் இருந்தது . இது நான் முன்பே அறிந்தே . ஆனால் நான் உள்ளே வந்தது  பற்றி அவர்கள் மத்தியில் பேசப்பட்டது எனக்கு உற்சாகமளிப்பதாக இருந்தது .

ஒல்லி சேகர் கிளம்பி சென்றதும் நானும் கணகராஜ் சேகரும் என் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்ததும் . மெதுவாக அவன் வேறு சில விஷயங்களை பேசத்துவங்கினான் . தான் முதலில் ஒல்லி சேகருக்கு மட்டும் சொன்னதாகவும் மற்ற இருவர் அங்கு வர இருப்பது தனக்கு கடைசி நேரத்தில் தான் தெரியும் என்று ஆச்சரயமாக கூறினான் . அவர்கள் இருவர் அனேகமாக பாலன் சொல்லி வந்ததாக இருக்கலாம் என்றான் . வீடு வந்த பிறகும் கணகராஜ் சேகர் அடுத்த நடவடிக்கை பற்றி பேசத் தொடங்கி ,என்னிடம் மறுநாள் காலை பதினோரு மணிக்கு அண்ணாசாலையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வரச்சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான் .


இரவு உணவிற்கு பின் கணகராஜ் சேகர் சொன்னது மண்டைக்குள் ஓடியபடியே இருந்தது .எனக்கு இது ஒரு நல்ல நகர்வாக தெரிந்தது. ஆனால் ஒரு கணகராஜ் சேகர் சொன்னது ஒரு ஊகமே . அதுவரை நடந்ததை மெதுவாக என் பாணியில் தொகுத்துக் கொள்ள ஆரம்பித்தேன் . பாலனுடைய சுபாவம் , என் உள்நுழைவு .ஏன் அது அவருக்கு முக்கியமானதாக பட்டது. ஒல்லி சேகர் மட்டும் வரவேண்டி இருக்க மற்ற இருவர் வந்ததற்கு , பாலன் சொல்லி அனுப்பியது மட்டும் தான் காரணமா? அதனால் தான் இருக்கமாக இருந்தார்களா? நிஜத்தை எப்படி தெரிந்து கொள்வது என பரபரப்பாக யோசிக்க ஆரம்பித்தேன் .

நிஜத்தின் முழு உருவம் நிழலை விட்டு அடுத்தடுத்த நாள்களில் எழுந்து வந்தது. யோசிக்க வேண்டிய வேளையை அது வைக்கவில்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்