https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 10 மார்ச், 2022

அடையாளமாதல் * முடிவில்லா சாத்தியகூறுகள் *



ஶ்ரீ:



பதிவு : 610  / 800 / தேதி 10 மார்ச்  2022


* முடிவில்லா சாத்தியகூறுகள் *



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 09.





வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து ஓரிரு நாட்களுக்கு பிறகு தேர்தல் அணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான  அதிகாரப்பூர்வ சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரும் விண்ணப்பபடிவம் B” சமர்பிக்கிறார்கள் . அது அந்தந்த கட்சிகளால் தங்கள் வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவது . அதுவே அவர்களையும் அமைய இருக்கும் அரசையும் கட்சியையும் இணைக்கிறது . பின் அவர்கள் அந்த சட்டமன்றம் கலையும்வரை அந்தக் கட்சியின் சொத்தாகிறார்கள். சட்டமன்றக் கட்சி என்கிற முழு அமைப்பிற்குள் சென்று அமர்ந்து அதன் சொல்லுக்கு கட்டுப்படுகிறார்கள் . கட்சி அவர்களை ஆள்கிறது,அதன் சொல்லுக்கு கட்டுப்பட மறுப்பவர்களை கட்சியிலியென அறிவித்து உதிரிகளாக்குகிறது . பின் உதிரிகளும் சுயேட்சைகளே. சில சமயம் அவர்களை பதவி நீக்கங்கள் கூட செய்கிறார்கள்கட்சித் தாவல் தடை சட்டம் அதற்கு வகை செய்கிறது . அதேசமயம் பிறிந்து செல்ல விழையும் உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகிற போது அந்த சட்டம் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. அவர்கள் கட்சியின் உடைந்த பகுதியாகி வெளியே செல்ல அது அனுமதிக்கிறது . “குறுங்குழுக்களுக்கு எப்போதும் தனிக்கணக்கு .   


கட்சியின் அதிருப்தியாராக போட்டியிடுபவர்கள் அந்த கட்சியில் எத்தகைய உயர்ந்த பொறுப்பில் இருந்திருந்தாலும் படிவம் B சமர்பிக்காவிட்டால் தங்களை அவர்கள் அந்தக் கட்சி சார்ந்தவர்களாக அறிவித்துக் கொள்ள முடியாது. அவர்களும் சுயேட்சைகளே . சுயேட்சைகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்கிறது . தமாக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் அவர்கள் தலைமையகத்தில் இருந்து படிவம் B வழங்கப்பட்டு தேர்தல் அலுவலகத்தில் சமரப்பிக்கப்பட்டு அவர்களின் சைக்கில் சின்னம் ஒதுக்கப்பட்டது . மூன்றாவது முறையாக சட்டமன்றத்திற்கு போட்டியிடும் தமாக புதுவைத் தலைவர் கண்ணன் அந்த படிவத்தை சமர்பிக்காததால்  “சுயேட்சையாக”  அறிவிக்கப்பட்டார் . தங்களுக்கு ஒதுக்கப்படும் சின்னம் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முற்றுரிமை உண்டு . புதிய கட்சிகளுக்கு தற்காலிக சின்னம் ஒதுக்கப்படுகிறது . அதை நிரந்தரமாக்கிக் கொள்ள குறிப்பிட்ட சதவிகித ஓட்டு பெற்ற பிறகு அந்த சின்னம் அவர்களது பிரத்யேக உரிமையாகிறது . பின் அந்த சின்னம் அந்த கட்சி வேட்பாளர் தவிர பிறருக்கு வழங்கப்படாது .தமாக புதிய கட்சி என்பதால் அதன் சைக்கிள் சின்னம் தற்காலிகமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதால் , அது அன்றுவரை சுயேட்டை சின்னமாக கருதப்பட்டது. கண்ணன் தனது சிண்ணமாக சைகிளை கேட்டுப் பெற்றார்


கண்ணன் சுயேட்சையானது விபத்தா அல்லது திட்டமிட்டு  வலிந்து செய்தாரா ?. 1996 தேர்தல் சூழ்நிலையை அவதானித்தால் சில புதிய உண்மைகள் தெரியலாம் .தமிழகம் போல காங்கிரஸ் அதிமுக கூட்டணிக்கு புதுவையில் பெரிய எதிர்ப்பலை இருக்கவில்லை . அங்கிருந்த கொதி நிலையை புதுவைக்கு கடத்த முயன்றவர் கண்ணன். அது சில தலைவர்களை இடம்பெயரச் செய்தது. அதில் முக்கியமானவர் ஜனதா தளத்தைச் சேர்ந்த தேனீ ஜெயகுமார் . ஜனதா தளம் சிதறுண்டதால் பலர் வேறு கட்சிகளுக்கு சென்றனர்.அரசியலில் சில பெரிய ஆளுமைகளின் முடிவு தேர்தல் அரசியல் களத்தை புதிய இடம் நோக்கி நகர்த்திவிடுவதுண்டு . புதுவை ஜனதா தளத்தின் தலைவரான தேனீ ஜெயகுமாருக்கு இயல்பில் அவர் காங்கிரஸில் இணைந்திருக்க வேண்டும் . தனது தொகுதியான வில்லியனூரில் அவர் போட்டியிட விரும்பினார். ஆனால் தலைவர் சண்முகத்தின் ஆதரவாளர் அனந்தபாஸ்கர் அதற்கு தடை. தனக்கு சீட்டு கிடைக்க வாய்ப்பில்லை என நினைத்திருக்க வேண்டும். அதனால் அவருக்கு கண்ணனின் தமாக ஒரே வாய்ப்பு.தேனி ஜெயகுமாருக்கு தலைவர் சண்முகம் அனந்தபாஸ்கரை ஒதுக்கி தனக்கு போட்டியிடும் வாய்ப்பை அளிக்கமாட்டார் என்பது பிழைப் புரிதல் என்றே நினைக்கிறேன். அனந்தபாஸ்கரன் தற்பெருமையும் கறாரான உரையாடலும் அதில் இருக்கும் மெல்லிய எள்ளலும் யாரையும் மிக எளிதில் காயப்படுத்தக் கூடியது . காங்கிரஸில் அவருக்கு நண்பர்கள் அனேகமாக இல்லை. தலைவர் சண்முகம் அவர் மீது அதிருப்தியில் இருந்தார் . சண்முகத்தை தேனீ ஜெயகுமாரின் சரியாக அனுகி இருந்தால் அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்திருப்பார்


தமாக வை புதுவை தேர்தலரசியல் களத்தை வேறொரு பரிமாணத்திற்கு நகர்த்தியவர் தேனீ ஜெயகுமார் . அவரது வருகை மண்ணாடிப்பட்டு,ஊசுடு,திருபுவணை,ஏம்பலம், பாகூர் போன்ற புற நகரப் பகுதிகளில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது . இங்கு காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு அவர் முக்கிய காரணம் கண்ணனுக்கு இணையான ஆளுமையாக புறநகர் பகுதிகளில் அறியப்பட்டவர் . அவர் தமாக வில் இணைந்தது. கண்ணன் மீது புதிய நம்பிக்கை ஏற்படுத்தி அவர் தனது அரசியல் பார்வையை மாற்றிக் கொண்டதாக புதிய பிம்பம் உருவானது. பின்னாளில் கண்ணனுக்கு மாற்று தலைவராகும் வாய்ப்பில் இருந்த தேனீ ஜெயகுமார் மிக எளிய அனுகுமுறையையும் யாரும் வந்து சந்திக்கும் இயலும் ஆளுமை  .வெளிப்படை மற்றும் நேரடித்தன்மை அவருக்கு பெரிய அணுக்கர் மற்றும் தொண்டர் அமைப்பை உருவாக்கிக் கொடுத்தது . ஏறக்குறைய புதுவை புறநகர் மற்றும் நகர் சார்ந்த பகுதிகளிலும் அவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை கணிசமானது . கடந்த 10 ஆண்டுகளில் கண்ணனின்

கட்சி அமைப்பு முழுமையாக சிதைந்த நிலையில் அவர் துவக்கிய கட்சியின் தேனீ ஜெயகுமாரின் வரவு பெரிய பாய்ச்சல் . கண்ணனின் அரசியல் நம்பகத்தன்மையை புறவயமாக கட்டமைத்து கொடுத்தது அது . இவை எல்லாம் புறவயத் தோற்றம்


கண்ணனின் யதார்த்த கணக்கு வேறு வடிவத்தில் இருந்தது அது ஏறக்குறைய சரியானதும் கூட. தன்னை முன்வைத்த அரசியலால் என்ன நிகழும் என தெரிந்திருந்தவர் தேனீ ஜெயகுமாரின் வரவு சில முக்கிய தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் ஊசல் முடிவாளர்களை தமாகா நோக்கி திரும்ப வைத்திருந்ததை கணக்கில் கொள்ளவில்லை. புதுவை தேர்தல் அரசியலில் காங்கிரஸின் இடம் வலுவாக இருந்தது . அந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் குறித்து முடிவெடுக்கும் இடத்தில் சண்முகமும் வைத்திலிங்கமும் முரண்பட்டனர் . பல தொகுதிகளில் அவர்களுக்குள் மாற்றுக் கருத்து இருந்தது . வெற்றிவாய்ப்பை கருத்தில் கொள்ளாமல் ஆதரவாளர்களுக்கு சீட்டு என்கிற கணக்கில் உறுதியாக இருந்தார் வைத்திலிங்கம். அவர் முடிவு செய்து வாய்ப்பளித்த அத்தனை பேரும்  தோல்வியடைந்தார்கள். மேலதிகமாக காரைக்கால் சந்திரகாசு, முதலியார்பேட்டை சபாபதி , மண்ணாடிப்பட்டு ராஜாராம் ரெட்டியார் போன்றவர்களின் தோல்வி எதிர்பாராதது. இது மொத்த கணக்கையும் மாற்றியமைத்தது


இவைகளுக்கு மத்தியில் தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வென்றிருந்தது . ஒரு சில தொகுதிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் காஙகிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம். பாகூர் மற்றும் ஊசுடு இரண்டு தொகுதிகளில் கடைசி நிமிடம் மாற்றம் செய்திருந்தால் கூட முடிவுகள் மாறியிருக்கும் . கைவிரல்களுக்கிடையே அந்த வாய்ப்பு நழுவியது . கண்ணனின் இறுதி நேர குழப்பத்தை இங்கிருந்து துவங்கி புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். சண்முகத்துடனான பேரம் தனக்கு முதல்வர் என்பதைத் தாண்டி வேறு ஒன்றிருக்க வாய்ப்பில்லை . தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு . ஆட்சி அமைக்க ஒன்று அல்லது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்கிற அளவில் வந்து நிற்கும் என்றால், கண்ணன் தன்னை காங்கிரஸ் மற்றும் தமாக இரண்டின் மத்தியில் நின்று கொண்டு தனியாக அல்லது கட்சியாக என இரண்டையும் பேரத்தில் கொண்டு சாத்தியப்படுத்தும் அவரது அரசியல் கணக்கு அபராமானது .


வக்கில் முருகேசன் தேர்தலுக்கு சில நாட்கள் முன்புவரை காந்திராஜ் சார்பாக காங்கிரஸிற்கு வாக்கு தேகரித்துக் கொண்டிருந்தார் . அவரிடம் நான் பேசிக் கொண்டிருந்த போதுநீங்கள் மூப்பானருக்கு அணுக்கமானவர் தமாக செல்லாதது கண்ணனின் பின்னால் நிற்க வேண்டும் என்பதை தவிற்கவாஎன்றேன் . அவர் முன்னாள் கண்ணனின் நண்பர் இன்று வெறுப்பவர். அவர் சொன்னார்நாங்கள் சிலர் சென்னை சென்று மூப்பனாரிடம் புதுவையில் என்ன செய்ய வேண்டும் என கேட்டோம் அதற்கு  இங்கு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் புதுவையில் காங்கிரஸ் வரும் வாய்ப்பிருக்கிறதே அங்கு சென்று ஆவதை பாருங்கள்என மூப்பனார் சொன்னதைச் சொன்னார்.


வாக்கு பதிவிற்கு சில நாட்களுக்கு முன் வக்கில் முருகேசன் தேர்தல் களத்தில் கானமலானார் . நான் காந்திராஜிடம் அவரைப் பற்றிக் கேட்டேன் அவர் கண்ணனுடன் சென்று விட்டார் என்றார் . மூப்பனார் அவருக்கு சொன்னதை சொன்னேன் . அவர் சிரித்தபடிமூப்பனார் எங்கு சென்றாலும் அவர் பின்னால் போக வேண்டியவர் முருகேசன் . தேவையில்லாமல் அவரிடம் கேட்டு பின் உண்னை அறிந்து பதறி புரிந்து கொண்டு ஓடிவிட்டார் என சொல்லி வெடித்துச் சிரித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்