https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 29 மார்ச், 2022

அடையாளமாதல் * கேளாச் செவி *

 




 

ஶ்ரீ:



பதிவு : 613  / 803 / தேதி 29 மார்ச்  2022



* கேளாச் செவி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 12.





1996 தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு லக்ஷ்மிநாராயணன் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து சண்முகத்தை சந்தித்தது கண்ணன் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கான சீட் பற்றியது என்றனர் . அப்போது மேலிடப் பார்வையாளாராக காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் ஜனார்தன பூஜாரி புதுவையில் இருந்தார் . காங்கிரஸின் நிர்வாக சிக்கலுக்கும் மேலிட பார்வையாளர்கள் சரியாக செயல்பட முடியாமைக்கு இருக்கும் தடை, மொழி. இங்குள்ள உண்மையான கள நிலவரத்தை கட்சி அமைப்பினர் தொண்டை கிழியஉரையாடினாலும்அதன் வழியாக அவர்கள் அடைய ஒன்றுமில்லை . சுவருடன் பேசுவது போல. இடையே நிற்பவர் முழு நிலவரத்தையும் வேறு திசைக்கு கொண்டு செல்ல முடியும் . இந்தி பேசாத மாநிலங்களில் கட்சி அவர்கள் அறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் குமுறிக் கொண்டிருப்பது அவர்களை சென்று சேராது . காங்கிரஸின் இந்த நிரந்தர ஊமைத்தனம் திராவிட அரசியலால் விளைந்தது . ஆந்திர கர்நாடக மாநிலங்களில் இந்த சிக்கல் இல்லை அவர்கள் பல மொழி பேசக் கூடியவர்கள் . ஜனார்தன பூஜாரி கர்நாடகத்தைப் பூர்வீகமாக கொண்டவர் என்பதால் தமிழ் புரிந்து கொள்ள முடிந்தது .சண்முகத்திற்கு மிக அனுக்கமானவராக அறியப்பட்டவர். ஜனார்தன பூஜாரி மீது சண்முகத்தில் செல்வாக்கு என்ன என்பது எனக்குத் தெரியாது . ஆனால் கண்ணன் அவரை நேரில் சந்தித்த போது அவரிடம் மிக கறாராக நடந்து கொண்டது சண்முகம் சொன்னதால் என பேசப்பட்டது எவ்வளவு உண்மை என தெரியவில்லை


கண்ணன் சபாநாயகராக பதவியில் யாருக்கும் கட்டுப்படாமல் நடந்து கொண்டது முதல் பிரதமர் வரை சென்ற பஞ்சாயத்து , பின் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிற முடிவு பிறகு தில்லி மேலிடம் அவரை சட்டமன்றத்திற்கு வர வேண்டியதில்லை என அறிவுறுத்தியது என அவரது ஐந்து வருட கடந்தாக கால செயல்பாடு அவருக்கு நினைவுறுத்தப்பட்டு ஏன்? என விளக்கம் கேட்க்கப்பட்டது . ஒருவருடம் அமைதியாக இருந்து தேர்தல் அறிவிக்க இருக்கும் நேரத்தில் அவர் நடத்திய பேரணி புதுக் கட்சி துவங்கும் நோக்கம் கொண்டதாக எல்லோராலும் அறியப்பட்ட பின் இந்த சீட்டு கேட்கும் ஆட்டத்தினால் ஆவதென்ன? . இறுதி ஒரு வருட காலம் துணை சபாநாயகர் Av. சுப்பிராமணியம் அந்த  சட்டமன்ற காலம் இறுதிவரை அமர்ந்து முடித்துக் கொடுத்தார் . ஜனார்தன பூஜாரி கண்ணனுக்கான சீட்டே சிக்கல் என்பது போல நடந்து கொண்டார் . சண்முகம் தலையிட்டு ஏதாவது செய்வார் என்கிற நம்பிக்கையில் லக்ஷ்மிநாரயணனிடம் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சீட்டு என கோரிக்கை வைத்தார். அது குறித்து பலமான அலர் நிலவியது. அவர் 5 சீட்டு இல்லை 7 கேட்டார் என . அப்படி இல்லை தனக்கும் லக்ஷ்மிநாராயணனுக்கும் மட்டும் கேட்டார் என்றனர் . சண்முகம் கண்ணனுக்கு மட்டும் என்றால் தன்னால் மேலிடத்தை சமாதானப்படுத்த இயலும் என கூறி விட்டார் . அதன் பிறகு அண்ணா திடலில் கூட்டம் கூட்டி தன்னை  தமாக வின் புதுவை கிளைத் தலைவராக அறிவித்துக் கொண்டார் . இதில் வேடிக்கை அதுவரை மூப்பனார் தில்லியில் இருந்தார் .தாமாக துவங்குவது பற்றி அவருக்கே அப்போது தெளிவான திட்டமிருந்ததாகத் தெரியவில்லை. அந்த வாரம் சென்னை திரும்பினார். அந்த ஒருவருட காலம் காங்கிரஸ் அரசியலை வழக்கம் போல குழுப்பி அடித்தவர் ரஜினிகாந்த். தேர்தல் நேரத்தில் அமெரிக்கா சென்றுவிட்டார். கடைசி நிமிடங்கள் முப்பனாருக்கு சாதகமாக இல்லை. அவரால் காங்கிரஸை திமுக நோக்கி கொண்டுவர இயலவில்லை. இருக்கும் கூட்டணியை தக்கவைக்க காங்கிரஸ் அதிமுக வுடன் தேர்தல் கூட்டு என அறிவிப்பு வெளிவந்தது .


அந்த சூழலில் அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் ஜெயலிலாதவிற்கு எதிரான அறிக்கை தமிழ்நாட்டில் புது அத்தியாயம் துவங்கி வைத்தது . அல்லது இது துக்ளக் சோ போன்றவர்கள் திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கலாம். துக்ளக் சோ கலைஞர்  மூப்பனாருக்கு இடையே பல சுற்றி பேச்சு வார்த்தைக்கு பின்னர்  பல்வேறு அரசியல் சூழலை கணக்கில் எடுக்கப்பட்டு பின்னர் தமாகா  துவக்கப்பட்டது . அந்த தேர்தலின் இறுதுவரை கண்ணன்சொல்லிக் கொண்ட தாமாகசார்பாக மூப்பனார் எங்கும் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை .கடலூரில் இருந்து சென்னை போகும் வழியில் ஒரு இரவு புதுவை ஆனந்தா இன்னில் தங்கினார் . அந்த ஹோட்டல் அமைந்துள்ள கண்ணனின் காசுகடை தொகுதியில் அவர் பிரசாரம் செய்யாத மர்மம் அனைவரும் அறிந்தது .திமுக தலைமையிலான ஆட்சியிலிருந்து கண்ணன் பாதியில் கழன்று விடுவார் என்பது மூப்பனார் உட்பட எல்லோருக்கும் தெரிந்திருந்தது ஆனால் அது எப்போது நிகழும் என்பது கேள்வி


காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பிறகு அதற்கு கண் காது என எந்த புலனும் இயங்காது . அதற்கே உரிய சிக்கலும் தீர்வும் இயங்கு விசையும் வேறானவை அதில் எந்த புற நியாயங்களையும் கொண்டு வைக்க முடியாது. கட்சி உறுப்பினர்களுக்கும் அதற்குமான உறவு அறுந்து போய் , அந்த ஆட்சிகாலம் முடிவுறும் வரை அது அப்படியே நீடிக்கும். முற்றும் எதற்கும் சம்பந்தமில்லாத ஒரு கூட்டம் அனைத்து இடத்திலும் குவிந்து கிடக்கும். ஆனால் அதில் உள்ள நியாயம் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் புதுவை காங்கிரஸின் ஊழ் நெறிப்படுத்தப்பட்ட கட்சி ஆட்சி அமைப்பு என ஒன்று இல்லாதது பெரிய சிக்கல் . அப்படி அது போல ஒன்று அமைய யாரும் விரும்பவில்லை ,அதன் காரணம் வெளிப்படை. கட்சியில் இருந்து உருவாகிவரும் அரசு என்பது தமிழகத்தில் திராவிட இயக்கம் போல தொகுதிக்கு இவர் என எவரும் வகை செய்யப்படுவதில்லை . தேர்தல் நேரத்தில் வந்தடையும் ஒரு சிலருக்காக அது அப்படி வைத்துக் கொள்ளப்பட்டது . இங்கு முற்றதிகாரம் கொண்ட மாநில தலைவர் என ஒருவர் உருவாகிவிட முடியாது. தலைவர் என்பவர் பல குரல்களை கையாளத் தெரிந்தவர் மட்டுமே. அவர் அந்த வெவ்வேறு குரல்களை ஒன்றிணைக்கும் சமரசப்புள்ளி. அவர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஓயாத உரையாடலில் இருந்தாக வேண்டி இருக்கிறது . அதில் கிடைக்கும் சந்தர்பத்தில்  தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கி தன்னை நிலைகொள்ளச் செய்ய அவருக்கு கட்சி மேலிடம்கருணைகொள்கிறது . அதையும் சத்தமாக செய்ய இயலாது . உரியது என்றாலும் அது பிறர் பார்க்க செய்து கொள்ள முடியாது . இந்தியா முழுவதும் இதுதான் நிலையா? என்றால் ஆம் ஆனால் மொழி ஒரு தடையாக இல்லாத மாநிலங்களில் ஒரு மாநில தலைவருக்கு இணையாக தில்லி கட்சி பொறுப்பாளர்களே மடை கட்டுகிறார்கள் தலைவர்கள் அனைவரும் தங்கள் கணக்கை மட்டும் மிக அழுத்தமாக முன்வைக்கிறார்கள் 

 

ஆட்சியை எந்த வகையிலும் கட்சி சார்ந்திருக்க முடியாது அதன் ஆட்ட விதிகள் வேறு உலகை சேர்ந்தவை. கட்சி அரசியல் அதிகாரம் என்பது ஆட்சியில் இருப்பது ஒரு அடையாளம் மட்டுமே. அதை செயல்படுத்த சட்டமன்றத்தை கடந்து வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கிறது அதற்கு கேட்கும் செவிகள் அதற்குறிய ஒலியமைப்புகள் கொண்டது . கட்சி முக்கியஸ்தர்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என எதிர் நோக்குவது மடமை ,அது இயல்வதல்ல. கட்சி செயல்பாடு ஒருவகை முக்கோண அமைப்பு கட்சி ஆர்வலர் , கட்சி அமைப்பு , அரசு அதிகாரிகள். இதில் பொது மக்கள் குறித்து பேச சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சி அமைப்பாக இருந்தால் அது தனக்காகவும் அதிகார அமைப்புடன் பேச முடியும். அது அரசானாலும் அரசாங்கமானலும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்