https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 22 மார்ச், 2022

அடையாளமாதல் * ஆழ்மனமும் மனமும் *



ஶ்ரீ:



பதிவு : 612  / 802 / தேதி 22 மார்ச்  2022



* ஆழ்மனமும் மனமும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 11.





புதுவை அரசியலில் எந்த பின்புலமும் இல்லாமல் உயர்நிலைக்கு வந்தவர்கள் மிகச்சிலர் , அவர்களைப் பற்றி ஒரு பட்டியலில் இருந்தால் அதில் கண்ணனும் உண்டு . அவர்கள் அனைவரும் தங்களை பலவித அனுகுமுறையால் முன்வைத்தனர். கண்ணன் மீறல் மனப்பான்மை கொண்ட இளந்துருக்கியர் என்கிற பிம்பத்தை வெளிப்படுத்தினார் . தனது சோஷலிச சிந்தாந்தத்தக புறவயமாக வெளிப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் . 1980 களில் இந்திய அளவில் அந்த தலைமுறைக்கான தொடக்கம் நிகழ்ந்தது . இந்திரா காந்தியை மறுத்து வெளிவந்து காங்கிரஸிற்கு மாற்றாக தன்னை நிறுவிக் கொள்ள தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தவர் . கட்சி தொடங்கி பின்னர் கட்சிகளை ஒற்றிணைத்து என அதிகாரப் பதவியில் அதிகம் இல்லாது போனாலும் அவர் இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஆளுமை. அலலது அப்போதைய இளஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா அதே போல தாடியுடன் இருப்பவர் அவரிடமிருந்து தனக்கான அடையாளமாக அதைப் பெற்றிருக்கலாம். புதுவையில் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது பிடியை மெல்ல கைவிட்டுக் கொண்டிருந்தது . அவர்கள் பேசும் மார்க்சியம் இளைஞர் காங்கிரஸாருக்கு கவர்ச்சியை கொடுத்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக காங்கிரஸ் காந்தியின் அகிம்சாவாதத்தை முன்வைக்கவில்லை . அது அதற்கு சரியான மாற்றாக இருந்திருக்கும்


அரசியல் நான் கடந்துவந்த பாதை என நினைக்கவில்லை. அவை நான் உயிர்ப்புடன் வாழ்ந்த களங்கள். அவற்றை ஒருபோதும் கடந்து வரவில்லை. இங்கிருந்து கொண்டு அங்கு மேலும் மேலும் புதியவற்றை தேடிக்கொண்டிருக்கிறேன். அவற்றை தொகுத்துக் கொள்ள இந்த வலைப்பூதளத்தில் மீள மீள சில நிகழ்வுகளாக அவை சொல்லப்படுவதற்கு காரணம் நான் அவற்றில் இருந்து புதியவைகளை தொடர்ந்து கண்டுகொள்கிற தருணங்களுக்காக. இளைஞர் சக்தியின் பிரதிநிதியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும்,அவரது கணக்குகள் பல அடுக்குகளையும் அதில் ஓயாது ஊடாடும் மனமும் கொண்டவராக இருந்தார் . அதனால் எங்கும் அமைந்து அமராமால் தொடர்ந்து மாற்றமடைந்த மனத்துடன் இருந்ததால் அவருடன் யாரும் இணையமுடியாத இடத்தில் நின்று கொண்டார். தன்னை மட்டுமே முன்னிறுத்த அவர் முயற்சித்து தயக்கம் காரணமாக மூப்பனாரை சார்ந்து நிற்க முடிவெடுத்து , தமிழகத்தில் பெருக்கெடுத்த உணர்ச்சிகளை புதுவைக்கு கொஞ்சமேனும் கடத்தும் முயற்சியே புதுவையில் அவர் துவங்கிய தமாக


மூப்பனார் கட்சித் துவங்காதிருந்தால்? கண்ணன் அதை வேறு பெயரில் செய்திருப்பார் . பின்னாளில் அவர்புதுவை மாநில காங்கிரஸ்துவங்கி காணாமலானது வேறு கதை. அவர் மூப்பனாரை முன்னிருத்தியதில் சாதக பாதங்கள் இரண்டும் இணைகட்டி நின்றன . சாதகம் கட்சி துவக்கப்பட்டு சில வாரங்களில் கணிசமான வேட்பாளர்கள் உருவாகி அதில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தனர் . பாதகம் குறித்து இப்படி ஊகிக்கலாம் என நினைக்கிறேன். அவரின் முதல்வர் கனவு . தேர்தல் கூட்டணி அமர்ந்த முதல் விஷயத்தில் அவரது அனைத்து கதவுகளும் மூடுண்டன . கூட்டணி உடன்படிக்கை சென்னையில் மூப்பனாரின் முன்னனிலையில் தமிழகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது . புதுவை தமாகா விற்கு 6 தொகுதிகளே ஒதுகப்பட்டன . அதிக சீட்டுக்களை வழங்குவதில் உள்ள சிக்கலை திமுக தெளிவாக உணர்ந்திருத்து  . இரண்டாவது அடுக்கில் கண்ணனுக்கு தனது கட்சியின் சார்பில் நிற்கும் தன்னை தவிர மீதமுள்ள ஐந்தில் எத்தனை வெற்றி என்கிற குழப்பம் இருந்திருக்க வேண்டும் . போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் அனைத்திலும் அவரது கட்சி வெற்றி அவர் எதிர்பார்த்தாரா? என்பது தெரியவில்லை . அந்த முரண் கணக்கு சண்முகத்துடன் இறுதி நிமிட வரை பேரத்தை நிகழ்த்த இடம் கொடுத்திருக்க வேண்டும் .



தேனீ ஜெயக்குமாருக்கு வில்லியனூர் தாண்டி ஊசுடு பாகூர் மண்ணாடிப்பட்டு என பிற தொகுதி வேட்பாளர்களுடன் நல்லுறவும் வாக்காளர்களிடம் செல்வாக்கும் இருந்தது

அவர் ஜனதா தளத்தின் மாநில பொறுப்பில் இருந்த போது புதுவை புறநகர் மற்றும் நகர் சார்ந்த பகுதிகளில் அவருக்கான ஆதரவு தளம் உருவாகி வந்தது . தென்னகத்தில் ஜனதா தளம் போன்ற தேசிய கட்சிகளின் அவர்களுக்கான இடத்தைக் கொடுத்தது. காங்கிரஸிற்கு மாற்றாக அதை உருவாக்கிய தலைவர்கள் அவர்கள். காங்கிரஸின் பின்னால் நிற்க அவர்களுக்குத் தயக்கமிருந்தது அதே சமயம்  திரவிட அரசியலையும் நிராகரித்தனர் . கடந்த தேர்தல்களில் சில தொகுதிகளில் வெற்றியும் இரண்டாமிடமும் பெற்று தங்களின் இருப்பை உணர்த்தியும் உணர்ந்தும் இருந்தனர் . 1989 களில் பிரதமர் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பதவியை இழந்த பிறகு உருவான வெற்றிடம் அவர்களை நம்பிக்கை இழக்க செய்திருந்தது . 1991 தேர்தலில் குறிப்படத்தக்க வாக்கு விகிதத்தை பெற்றது அவர்களுக்கு அரசியல் நம்பகத்தன்மை குறித்து நம்பிக்கை அளிப்தாக இருந்தாலும் ஒரு சில உறுப்பினர்களுடன் சட்டமன்றம் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு அரசியல் குறித்து கனவிருந்தது. காங்கிரஸிற்கு மாற்றாக அவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு மூப்பனார் தலைமையை கொண்ட தமாகவாக உருவான போது தயக்கமல்லாமல் அதில் இணைந்தனர். அவர்களுக்கு கண்ணனின் மனநிலை தெரியும். ஆனால் அவரைப் பொருட்படுத்தாமல் தங்களின் ஆளுமையை முன்வைத்து கட்சியையும் தேர்தலையும் எதிர் கொண்டனர்


தேசிய அளவிலான வசீகரத் தலைவர்களின் பிம்பம் உள்ளூர் தேர்தலில் எடுபடாது என அறிந்திருந்தனர். மூப்பனாரின் ஆளுமை காங்கிஸ் சார்ந்த தொண்டர்களை தங்களுக்கு மேலதிகமாகப் பெற்றுத் தரும் என கணக்கிட்டனர் . அது மிகச்சரியான அவதானிப்பு . அவர்கள் வெற்றிக்கு தேவையான ஊசல் ஓட்டுக்கள் அவை பெற்றுத்தந்தன. பின்னர் தனிப்பட்ட அரசியல் அனுபவமும் பொருளியல் பலத்தையும் முன்வைத்து தங்களை நிறுவிக் கொண்டனர் . கடந்த கால அரசியல் யாதர்த்தத்தினால் ஏற்பட்டப் புரிதல் கட்சியின் பிற தலைவர்களை சம ஆளுமைகளாக ஏற்று நடிப்பில்லாது அனைத்து செல்வது குறித்த பழக்கும் அவர்களுக்கு நல்ல பலன் கொடுத்தது . தங்களை பிறரையும் மிகச் சரியாக புரிந்து வைத்திருந்தனர், அவர்கள் தொண்டர்களுக்குள் அடுக்கு உருவாக்கிக் கொண்டு வேறு பக்கம் நிற்காமல் எளிய இடத்தில் நின்று கொண்டனர். புதுவை போன்ற மிகச் சிறிய மாநிலத்தின் அரசியல் வெற்றிக்கு மிக சிறந்த அனுகுமறை . ஆனால் பெரும் நடைமுறைச் சிக்கல் உள்ளது . ஒவ்வொருவரையும் தெரிந்து வைத்திருப்பதால் அவர்கள் குடும்ப நல்லதும் அல்லாததுமான நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும். ஒரு நடிப்பிற்காக அதை செய்பவர்கள் ஒரு கட்டத்தில் அது கட்டுபடியாகாமல் விலகி விடுவதைப் பார்த்திருக்கிறேன் . புதுவை முதல்வர் ரங்கசாமி அதற்கு மிகச் சிறந்த உதாரணம். நாள் ஒன்றிற்கு 30 முதல் 40 குடும்ப நிகழ்வுகளில் சலிக்காமல் கலந்து கொள்வதை பார்த்திருக்கிறேன். நம்பும் ஒன்று அது நேரில் அப்படி இருக்க வேண்டும் என்பதில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...