https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 17 மார்ச், 2022

அடையாளமாதல் * பார்வைக்கு அடங்காதவை *

 



ஶ்ரீ:



பதிவு : 611  / 801 / தேதி 17 மார்ச்  2022


* பார்வைக்கு அடங்காதவை *


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 10.






இந்த முறை அதிகார அடுக்கு மாறுபட்டது . மரைக்காயர் மாநில அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டவர் போலாகி தனது சட்டமன்றத் தொகுதியை மகன் ஷாஜகானுக்கு கேட்டுப் பெற்று பிறகு மௌனமானார் . மரைக்காயர் இடத்தில் வைத்திலிங்கம் வந்தமர்ந்து சண்முகத்துடன் தொகுதி வேட்பாளருக்கான தேர்வில் பேச்சுவார்த்தை நடத்தினார். சண்முகத்தின் கருத்து வைத்திலிங்கத்தால் ஏற்கப்படவில்லை என அவர் பலமுறை குறைபட்டதை கேட்டிருக்கிறேன் அதனால் ஆட்சி அமைக்கும் வாய்பிழந்ததாக சொன்னார் . எல்லா சமையங்களிலும் அது உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்றாலும் இந்த விஷயத்தில் அவர் சொல்வது உண்மை என நினைக்கிறேன் . அவர் நிகழ் அரசியல் குறித்த முடிவுகளை ஆழ்மன புரிதல்கள் மூலம் உருவாக்கிக் கொள்கிறார் அதை சாமியாடி போலகருத்தாகமட்டும் முன்வைப்பவர் அதில் பிறரை சலிப்பூட்டும் அவரது காலத்தில் உறைந்து போன கடந்தகால அனுபவங்களில் இருந்து அவற்றை வகைப் படுத்துவார். அதன் மூலம் தன் கருத்தை மறைமுகமாக சொல்லுவார். அவரை வழிபடுபவர்களுக்கு வேண்டுமானால் அது கற்றலாக இருக்கலாம் ஆனால் அதிகாரத்தின் வழியாக சமநிலையில் அமர்ந்து பேசும் நிகழ்காலத்தை சார்ந்தவர்களுக்கு அது மனவிலக்கத்தை சிறு எள்ளலைக் கொடுக்கும் . ஒரு கருத்து அனைத்து விதமான தர்க்கத்தை முன் வைக்க வேண்டும் என எதிர்பார்க்கும் . தர்க்கம் அவர் அறியாதது. தர்க்கத்தை முன் வைக்க கூடியவர் வைத்திலிங்கம். இருவருக்குள் ஒரு தலைமுறை இடைவெளி என்பதால் இருவரும் வேறு வேறு தளத்தில் இருந்தனர் . சண்முகம் தன் அனுபவத்தால் ஆளுமையால் சமாளிக்க முடியாமைக்கு வைத்திலிங்கத்திற்கு பிரதமர் நரசிம்மராவின் ஆதரவிருந்தது ஒரு காரணம் என்றனர் . தோல்வியுருவார்கள் என முன்பே கணக்கில் கொள்ளப்பட்டவர்கள் காந்திராஜ்,பக்கிரி அம்மாள், மாரிமுத்து , மரைக்காயரின் மகன் ஷாஜகான், அனந்தபாஸ்கர். அவர்களுக்கு மாற்று வேட்பாளர்கள் இருந்தனர். ஆனால் சில நுட்பமான காரணங்களாலால் சண்முகம் சொன்னது போல வைத்திலிங்கத்தின் பிடிவாதம் காங்கிரஸ் ஆட்சி அமைவதை நூலிழையில் தவறவிட்டதுஅந்த எரிச்சலினால் அஇஅதிமுக ஆதரவு மற்றும் சுயேட்சையான நளமகராஜன் என ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருந்தும் சண்முகம் அதை உள்நோக்கத்துடன் நிராகரித்தார் என அவர் மீதான குற்றச்சாட்டாக நீடிக்கிறது


நூலிழைப் பெரும்பாண்மையுடன் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பலவீனமானது ,கண்ணன் அதன் மீதமர்ந்த எடை . அந்த இடத்தில் இருந்து திறந்தால் பார்த்தால் மொத்தமும் வேறொரு பரிமாணத்தை காட்டக்கூடியது. அந்த சூழலில் இதை கண்ணனும் ஊகித்திருக்க வேண்டும் . தனிக்கட்சி என்பதை விட சட்டமன்றத்தில் சுயேட்சை என்கிற நிலை அவரை தேர்தல் நடந்த பிறகும் விருப்பம் போல செயல்படும் உரிமையை பெற்றுக் கொடுத்திருக்கும் . அவர் சட்டமன்றத்தில் எந்தக் கட்சியின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தமில்லை . தேர்தல் முடிவு குறித்த நிச்சயமற்ற நிலையால் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கள நிலைமையை அவதானித்தப் பிறகு தனது இடத்தை முடிவு செய்யலாம் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இவை எல்லாம் அரசியல் ஊகம் மட்டுமே . கண்ணன் படிவம்B சமர்பிக்காதது ஒரு விபத்து அதற்கு பின்னால் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. தலைவர் சண்முகம் ஜோதி நாராயணசாமியிடம் கண்ணன் வேட்புமனு தாக்கல் செய்யும் வரை பொறுத்திருக்க சொன்னது ஏன்? என்கிற கேள்வி எழும்வரை . அது விபத்தல்ல என முடிவாகிறது . தேர்தல் நேரத்தில் புதுக் கட்சி துவக்கி அதன் பொருட்டு திமுக வுடன் கூட்டணியில் இணைந்து வேட்புமனு வரையில் வந்து நிற்கும் ஒருவருக்காக சண்முகம் ஏன் தனது கட்சி வேட்பாளரை காக்க வைத்தார் என்பதை பிற புதுவை அரசியல் கட்சித் தலைவர்களும் அறிந்திருக்க வேண்டும் . அந்த சந்தேகத்தின் நிழல் கண்ணனை துரத்திக் கொண்டே இருந்தது. எங்கும் அமையாத உள்ளம் கொண்டவராக அந்த காலகட்டம் முழுவதிலும் இருந்தார்


முதல்வர் ஜானகிராமன் திராவிட பாணி அரசியல் பின்புலம் கொண்டவர் அவரது நேரடித்தன்மையை சமாளிக்க முடியாமல் கண்ணன் திணறினார். முதல்வர் கண்ணனை பொருட்படுத்தாதற்கு மூப்பனார் , கருணாநிதி மற்றும் மத்தியை ஆண்ட வாஜ்பாய் அரசாங்கம் என வெவ்வேறு அரசியல் கிளைகளாய் பிரிந்து பிரிந்து கண்ணனின் அனைத்து சிந்தனைகளையும் தடுத்துக் கொண்டே இருக்க காரணங்களை தொடர்ந்து முன்வைத்தது . பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு கட்டத்தில் கண்ணன் முப்பனாருக்கு எதிரானார். சண்முகம் , கருணாநிதி , மூப்பனார் என தஞ்சை அரசியல் பின்புலம் கொண்டவர்களை அவரால் சமாளிக்க முடியவில்லை . இவர்களுக்குள் கட்சி கடந்த பொதுப் புரிதல் இருக்கக்கூடும் என சந்தேகித்தார். கண்ணன் நிலையற்ற மனம் கொண்டவர் என்கிற சந்தேகப் புள்ளி அனைவருக்கும் அவர் மீது நிழலைப் போல படிய அது தமிழக தலைவர்கள் மற்றும் அவரது புதுவை கூட்டணி தோழர்களின் இடையே அவர் மீது நம்பிக்கையின்மை உருவாக்கிவிட்டிருந்தது .அது அவரை மேலும் மேலும் பதட்டமுள்ளவராக்கி இருக்கலாம் . 1996 களின் இறுதி கட்டத்தில் ஆட்சி மாற்ற ஊழலில் வைத்திலிங்கத்தை மத்திய புலனாய்வு வரை கொண்டு சென்றது அந்த பதட்டத்தால் எழுந்த மிகையான நடவடிக்கையாக அரசியலிளர்களால்  விமர்சிக்கப்பட்டது


கட்சித் தலைவர் பதவி அவருக்கு முள் கிரீடம் போலானது . சுயேட்சை என்பதால் சட்டமன்றத்திற்குள் கட்சித் தலைமையாக செயல்பட முடியவில்லை . தேனீ ஜெயகுமார் அந்த பொறுப்பில் வந்தார் . சட்டமன்ற நடவடிக்கை குறித்த செயல்பாட்டில் கண்ணனுக்கும் தேனீ ஜெயகுமாரும் இணையாளுமைகள் என்பதால் தலைவர் தொண்டர் என்கிற நிலை அங்கு உருவாகவில்லை. எப்போதும் தன்னை மேலதிகமாக கொண்டு வைத்து பழகிய கண்ணனுன்னு இந்த உட்கடசி ஜனநாயக புரிதல் வசப்படவில்லை. பிற முன்னணி தலைவர்களுக்கும் இதுவே சிக்கலாக உருவெடுக்க அனைவரும் தேனீ ஜெயகுமார் பின்னால் கூடினர். பின் உரசல்கள் மெல்லத் தோன்றியது. புதுவை தமாக ஒரு விசித்திரமான உருவை கொண்டது. அதனுள் பல ஆளுமைகள் தேர்தல் வெற்றியை முன்வைத்து மட்டுமே இணைந்திருந்தனர். இது சண்முகம் தலைமையிலான காங்கிரஸ் பல ஆண்டுகளாக செயல்படுத்தி ஆழ்ந்த நடைமுறையால் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது . அதற்கு பின்னால் சண்முகத்தின் அரவணைக்கும் போக்கு முக்கியமான காரணி . காங்கிரஸில் கூட அவருக்கு பின்னர் வந்த தலைவர்களால் பிற இணைத் தலைவர்களுடைய மனதை வென்றெடுக்க முடியவில்லை


கண்ணனால் தன்னுடன் முரண்படுபவர்களை கட்சி கட்டுப்பாடு என்கிற ஒன்றில் கொண்டு நிறுத்த முடியவில்லை . தன்னை அழுத்தமாக கண்ணன் முனவைக்கும் சந்தர்பங்களில் அவர்கள் மூப்பனாரின் பின்னால் நிற்பது கண்ணனை நிலைகுலையச் செய்திருக்க வேண்டும் .தேர்தல் நேர பரபரப்பில் வேறு ஒன்றையும் பற்றி கருத்தில் கொள்ளாது அனைத்தையும் கடந்து கண்ணன் மிக சரியாக வெற்றிபெரும் வாய்ப்புள்ளவர்களை தன்பக்கம் கொண்டுவந்திருந்தார் தனது ஆதரவாளரான உப்பளம் தொகுதி மனோகர் மட்டுமே அன்று வெற்றிவாய்ப்பை உறுதி செய்ய இயலாதவராக அறியப்பட்டவர் . ஊசுடு நாகரத்தினம், மண்ணாடிப்பட்டு ராஜசேகர உடையார் தவிற  

வில்லியனூர் தேனீ ஜெயக்குமார், பாகூர் கந்தசாமி இருவரும் தனியாளுமைகள் அவர்களின் அரசியல் புறவயாமாக மட்டுமின்றி அகவயமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது . மக்கள் நினைப்பது போல தேர்தல் வெற்றி தோல்வி குறித்து மிக சாதாரணமாக சென்றையும் இடம் தலைவர்களுக்கு வாய்ப்பதில்லை அவர்கள் பல்வேறு அலகுகளுடன் இதை அணுகுகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்