https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 6 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * முயற்சிகளின் வெளி *

 


ஶ்ரீ:



பதிவு : 614  / 804 / தேதி 06 ஏப்ரல  2022



* முயற்சிகளின் வெளி * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 12.





1996 களில் தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி இறந்த காலத்தில் வசித்துக் கொண்டிருந்த போது நான் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை முழுமையாக உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆட்சியில் இருக்கும் காலத்தில் கட்சியில்  வேகமாய் இயங்குவதை போல மடமை பிறிதில்லை. அந்த நேரத்தில் அதில் புதிதாக உபயோகமிள்ளதாக எதையும் உருவாக்க முடியாது. அதை செய்ய முயற்சிப்பது முழு வேகத்தில் சென்று சுவற்றில் முட்டிக் கொள்வது.பயிற்சி முகாம் என்கிற வாய்ப்பும் அதை நிகழ்த்த முடியாத முற்றுகையும் அந்த சூழலில் ஏற்படுத்தப்பட்டதால் அரசியல் மாற்றமடையும் முன்னர் அந்த முகாமை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டிய நிர்பந்தமும் தேவையும் எனக்கிருந்தது . அரசியல் என்பது ஒருங்கிணைப்பின் வழியாக உருவாவது அது மையங்கொள்வதை தடுக்கும் எதிர்ப்பு மனச்சோர்வு அடையச் செய்து விடும். ஆனால் இந்த முறை அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதை தெளிவாக உணர்த்திருந்தேன் . 1996 களில் ஆட்சியல் அமர்ந்த போதே ஜானகிராமன் தலைமையிலான திமுக அரசு பலவீனமானது . அதன் முதல் சிக்கல் அடுத்து என்ன நிகழ்த்துவார் எனக் கணிக்க முடியாத கண்ணன் அவரது அமைச்சரவையில் இருந்தார். இரண்டு. ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருந்தும் காங்கிரஸ் அதை கோராது எதற்காகவோ காத்திருப்பது போல விலகி நின்று கொண்டது . இவை அரசியலாளர்களுக்கு புரிவது .அது தவிற வேறு சில சந்தர்பங்களில் அரசு மிக பலவீனமானது என சாமான்யனுக்கும் புரிந்தது . ஒன்று ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை ஏறக்குறைய வெற்றி பெற்றிருக்க வேண்டியது ,ஒரு சின்ன இழை பிசகியதால் அன்று அது நடக்கவில்லை. இரண்டு நாராயணசாமி போட்டியிட்ட ராஜ்யசபை தேர்தல் முடிவு . ஆளுங்கட்சி 18 காங்கிரஸ் 9 நடுநிலை 3 என்கிற கள சூழலில் . நாராயணசாமி ஒரு வோட்டு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவை அந்த ஆட்சியின் ஆயுள் பற்றிய கணக்குகளை எல்லோருக்கும் கொடுத்திருந்தது . எனக்கு வேறுவிதமான கணக்குகள் இருந்தன. நான் எனது பழைய தொடர்புகள் அறாமல் புது இளம் ஆளுமைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் இடத்தை உருவாக்கி அவர்களுக்கு அளிக்கும் முயற்சியில் இருந்தேன். அவர்கள் அந்த இடத்தில் நிலை பெற்ற பிறகே எனக்கான இடம் தெளிந்து வரும். நான் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவராகும் வாய்ப்புகள் இருந்தாலும் அது நிகழும் வரை என்னால் காத்திருக்க முடியாது. என்னைத் தவிர பிறர் எல்லாம் சொன்னார்கள் நான் அடுத்த தலைவர் என்று . இருப்பை தெளிவாக உணர்வது ஆழ்மனம் அங்கிருந்து நம்மை அறியாது செயல்கள் கூர் கொள்கின்றன. அங்கிருந்து ஆழ்மனம் அறிவதை உடல் உணரும் போது செயல்வேகம் கூடுகிறது. என்ன காரணம் என தெரியவில்லை என்னால் என்னை அந்த அமைப்பின் தலைவராகும் வாய்ப்பை உடலால் உணரவே முடியவில்லை . அது இல்லை போலும். இறுதியில் அதுவே நிகழ்ந்தது .


எனகுள்ள நேரம் மிக குறைவானவை . புதிய இளம் ஆளுமைகளுக்கு கட்சியை பற்றிய அறிமுகமும் இதுநாள் வரை இழந்ததும் இப்போது பெறப்போவதும் என்ன வென்று தெரியவேண்டும் . அதில் இருக்கும் அரசியல் சாத்தியக்கூறுகள் பற்றியும்  எப்படிப்பட்ட ஆளுமையாக இருந்தாலும் உதிரியாய் இருந்தால் அடைய ஒன்றுமில்லை.அமைப்பாக திரண்டு நின்றால் மட்டுமே அது எவருடனும் உரையாட பரிமாணமடைய முடியும். ஆனால் அது நிகழும் வாய்ப்பு மிக மிக குறைவானது. அது நடக்க அதிகார அடுக்குகளில் உள்ளவர்கள் அனுமதிக்கப் போவதில்லை . அவர்களை நிராகரித்து மட்டுமே அது நிகழ்முடியும் . இப்போதுள்ள வாய்ப்பு சண்முகம் மட்டுமே. அவர் ஆகச் சிறந்த வாய்ப்பல்ல , அவரே விழித்துக் கொண்டால் இது நடக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்ல. யார்யார் கண்களுக்கு இந்த இயக்கத்தின் வளர்ச்சி எப்படி பெருள்படும் என என்னால் ஊகிக்க முடியாது . அதைவிட மிக சிடுக்கான இடம். என்னால் அடையாளப் படுத்தபடுபவர்களுக்கு தங்களின் எதிர்காலமென்ன என்பது புரியுமா. அரசியல் களத்தில் பிரித்தாளுதல் மிக பழைய யுக்தி அதற்கு பலியானால் எங்கள் யாரையும் எதுவும் காப்பத்தாது .


இப்படி எந்தப் பக்கமும் சாதகமின்றி உள்ள ஒன்றை ஏன் செய்ய வேண்டும் என பல முறை கேட்டுக் கொண்டதுண்டு . விருப்பமுள்ள துறையில் ஏதாவது செய்யும் வாய்ப்பு தூண்டிலின் புழு அதை கடந்து செல்ல முடியாது அதன் முடிவுகளின் வெளியில் உள்ள ஆகயமும்  அடியாழத்தில் உள்ள இருள் உலகமும் ஒரு ஈர்ப்பு . இது இன்று வரை யாரும் முயற்சிக்காதது இனி இதன் அருகில் கூட இன்னொருவர் வரப்போவதில்லை. நான் வெற்றியின் எவ்வளவு அருகில் நின்று கொண்டிருக்கிறேன் என என்னைத் தவிர பிற யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . அடுத்தவருக்கு எளிதில் புரியவைத்து விட இயலாது இருந்தாலும் இது நிகழ்த்தப்பட வேண்டியது. எனது கற்றலின் காரணமாக எனது செயலூக்கத்தை வழியாக .என்னால் செயல்பாடுகள் வழியாக மட்டுமே முன்னகர முடியும் அதில் வெற்றி பெற இயலாது போனாலும் முயற்சியே எனக்கான நிறைவை தரும் எனது தனி உலகை நான் அங்கு கண்டடைவேன்.


இதை 1996 களில் துவங்கி இருக்கலாம் அவர்களை முன்வைத்து நிகழ்த்திய கூட்டங்களில் தேவையற்ற பிரச்சனை உருவாக்க மாநில நிர்வாகிகள் முயன்றனர் . ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய்  இனி கூட்டம் நடத்துவதில்லை என முடிவெடுத்திருந்தேன் . புதிதாக ஒரு அமைப்பாக திரண்டு வருவதற்கு அதற்குள் எதிர்ப்பு குரல் எழுப்புவதன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர முயற்சிப்பது மிக எளிய அரசயல் தந்திரம் அதை கடந்து நிகழ்வை ஒருங்கிணைக்கும் ஆற்றல் உள்ளவர்களின் உலகம் வேறு வகையிலானது . அந்த அக்கபோரில் நான் ஆர்வமல்லாமல் அமைதியன பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாமலாகி இயக்கம் நின்று போனது . அடுத்து ஆட்சி மாறும் அறிகுறிகள் தோன்றின . அதை தொடர்ந்து கட்சி மாறுபவர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர் . மாதத்திற்கு இரண்டு நாளாவது பேராவது ஏதாவதொரு  கட்சியில் இருந்து விலகி கங்கிரஸிற்கு வந்து கொண்டே இருந்தனர் . ஒரு இணைப்புக்கு ஆயிரம் பேர் என ஒரு கணக்கு அந்த ஒரு ஆறு மாதத்தில் ஏழெட்டு பேர் இணைந்து விட்டார்கள் எப்படி பார்த்தாலும் எட்டாயிரம் பேர் . ஆனால் தினசரி கட்சி அலுவகத்திற்கு வரும் அதே எட்டு பத்து பேர் தாண்டி எப்போதும் கூட்டம் வருவதில்லை .உள்ளே வந்து சேரும் அனைவரும் புழக்கடை வழியாக வேறெங்கோ வேரொரு உலகிற்குள் சென்று மறைந்து விடுகிறார்கள் போல . அல்லது வந்தவர்களே மீள மீள வந்து கொண்டிருக்கிறார்களா?. புரியாமல் இருந்தது. கட்சியில் இணைந்த முக்கியஸ்தர்கள் மட்டும் டூவீலர் ஓட்டுனர் சகிதமாக வந்திறங்குவார்கள் . கட்சி வளர்ச்சி பற்றி எங்கும் பேச்செழுந்தபடி இருக்கும். கொள்கை பிணைப்பு , பிடிப்பு பற்றி நாம் கூசுப்படி படி பேசுவார்கள் செயல்படுவார்கள் நாம் இவர்கள் அளவு நாம் செயல்படவில்லையோ என நாணும் படி செயல்படுவர்கள் . புதிதாக வந்திணைந்தவர்கள் நம்மை தேடி வந்தால் மட்டுமே நம்முடைய இடம் என்ன என்பது பற்றிய புரிதல் உண்டாகும் . தேசிய தலைவர் பேரை கொண்ட ஒருவர் உணர்வு பூர்வமாக பேசிக் கொண்டிருந்தார் அந்த தேசிய தலைவர் இறந்த தினத்தில் அவர் பிறந்ததால் அவருக்கு அந்த பேர் போடப்பட்டதாக சொன்னார் . அதனால் தான் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்றார் . நான் வாய் பிளந்தபடி அவர் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன் சரியாக இரண்டு வருடத்தில் கட்சியை விட்டு வெளியேறினார் . பின்னர் ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளுக்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை பார்க்கும் போது மௌனமாக கடந்து மட்டுமே செல்ல முடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்