https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * இணையாத உடைவு *

 



ஶ்ரீ:



பதிவு : 617  / 807 / தேதி 22 ஏப்ரல்  2022



* இணையாத உடைவு * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 15.





ஏதோ ஒரு வகையில் எனக்கு ஊசுடு மிக அணுக்கமாக இருந்தது . அது மீள மீள எனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது . அதன் வழியாக நான் என்னை கட்டமைத்துக் கொண்டே இருக்கிறேன். முதல் முறை விளையாட்டாக அரசியலில் நுழைந்து அதன் சிக்கலான பக்கங்களால் அலைகழிக்கப்பட்டு என்னை முழுவதுமாக தொகுத்தும் எனக்கான இலக்கையும் உருவாக்கிக் கொண்டேன் . துத்திப்பட்டு இளைஞர் காங்கிரஸ் நண்பர்கள் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் என சொல்லி கொண்டு குடியிருப்பு பகுதியில் நுழைந்து நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் செய்தவர்களை காரணமின்றி அங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர். இரவு நேர சாகசம் போல அவர்களை மீட்டு வந்த பிறகு, இது இரண்டாவது . இந்த முறை அது என்னை வேறொரு தளத்தில் கொண்டு வைத்தது. சண்முகத்துடன் வந்து இணைந்த போது அரசியலில் இன்னமொரு முன்னிலை பெறும் வாய்ப்பு உண்டு என நான் நம்பவில்லை . ஆனால் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை மீண்டும் உருவாக்க முடியும் என நம்பிக்கை அளித்த ஊர் ஊசுடு. சண்முகத்தையும் பிற கட்சி மூத்தவர்களையும் எனக்கொரு வாய்பை உருவாக்கிக் கொடுத்து என்னை கவனிக்கச் செய்தது அங்கு நடந்த இரண்டு நிகழ்வுகள். இரண்டும் ஒருவகையில் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டது. இரண்டிலும் நான் எதிர்பாராமல் கலந்து கொள்ள நேர்ந்தது . ஒன்று தொகுதி முழுவதும் நடந்த கொடியேற்று விழா. இரண்டு பங்கூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லும் நிகழ்வு . கலவரத்திற்கு காரணம் முன்னர் நிகழ்ந்த கொடியேற்று விழாவாக இருக்கலாம் என்பது ஊகம் . கொடியேற்ற விழா முழுவதுமாக முன்னெடுத்தது ஊசுடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து. தேர்தல் தோல்வியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அந்த நிகழ்வை பயன்படுத்திக் கொள்ள நினைத்திருக்கலாம். அல்லது தன்மீது ஆழ்மனவருத்தத்தில் இருக்கும் சண்முகத்துடன் ஒரு மன்றாட்டு போல அதை செய்ய நினைத்திருக்கலாம். 1991 தேர்தலில் ஊசுடு தொகுதியில் வென்ற பிறகு சண்முகம் சொன்னதை மீறி  கண்ணனை ஆதரித்தது அவரின் கோபத்திற்கு ஆளானார் . இந்த கொடியேற்ற விழா ஒருவகையில் அவரை சமாதனப்படுத்தும் முயற்சியும் கூட. 1996 தேர்தலில் அவர் வெற்றிபெரும் வாய்ப்பில்லை என அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் வைத்திலிங்கத்தின் ஆதரவால் 1996 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றார் . மாரிமுத்துவின் எளிய தோற்றமும் அனுகுமுறையும் அவரை பலர் பயன்படுத்திக் கொள்ள வைத்தது.இன்றுவரை அவரை புரிந்து கொள்ள முயல்கிறேன். அவரை வில்லனைப் போல ஊசுடு நண்பர்கள் சொன்னவை உண்மைதானா என அவரை பார்க்கும் போதெல்லாம் தோன்றுவதுண்டு . எனக்கு ஊசுடு 1992ல் துத்திப்பட்டு தொழிற்சாலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப் போனபோது சிலர் நண்பர்கள் பழக்கமாகி இருந்தனர் . அன்று நாங்கள் எதிர்த்து நின்றது ஒருவகையில் இந்த மாரிமுத்துவின் அணுக்கனைத்தான் . அதன் பிறகு இப்போது சண்முகத்தின் தரப்பாக வந்திருக்கிறேன் இன்று உடன் மாரிமுத்து இருக்கிறார் நான் சொல்லுவதையெல்லாம் கேட்கும் இடத்தில் . காலம் மிக விசி்திரமானது. நாம் நினைக்கும் எல்லைகளை அது எப்போதும் அழித்தே ஆடுகிறது . நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊசுடு செல்கிறேன் இப்போது அங்கு எனக்கு மிக குறைந்த நண்பர்களே அறிமுகமாகி இருந்தார்கள்


சேதராப்பட்டுகரசூர்,துத்திப்பட்டு,ராமநாதபுரம்,பிள்ளயார்குப்பம்,கூடப்பாக்கம், அகரம், உலவாய்க்கால்,கோனேரிக்குப்பம், பொறையூர், அனந்தபுரம் அரியூர், பங்கூர் என ஒவ்வொரு பகுதியிலும் அதை இணைக்கும் பேட் என்கிற காலனிகளும் அதற்கேயான உள்பூசலால் நிகழ்ந்த ஒருங்கிணைப்பு குளறுபடிகள் நேர விரையத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கியிருந்தது . சேதராப்பட்டில் துவங்கிய கொடியேற்ற நிகழ்வு ஊர்வலம் அதன் அடுத்த ஊரான கரசூரை கடந்து துத்திப்பட்டை அடைந்த போது அங்கு எதுவும் தயாராகியிருக்கவில்லை . கொடியேற்றம் பற்றி வாய்வார்தையாக இரண்டு நாட்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து அங்கு வந்து தனது அணுக்கனிடம் சொல்லிவிட்டு சென்றிருந்தார் . அவருக்கு தனது அணுக்கன் கட்டுப்பாட்டில் துத்திப்பட்டு இன்றும் இருப்பதாக நினைத்திருந்தால் அது  பிழை கணக்கு. தொகுதியில் அவர் உருவாக்கி வைத்தவர்களின் செயல்பாடுகளே அவர் தோல்வியடைந்ததற்கு அடிப்படைக் காரணம்


துத்திப்பட்டு மற்றும் சேதராப்பட்டு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள். அவை ஊர்கள் மற்றும் காலனிகள்  நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில் இருந்தது . ஒதுக்குபுறமானது என்பதால் அரசங்க விதிமுறைகளை பற்றி அவை கவலைப்படுவதில்லை . தனது முறைகேடுகளால் அங்குள்ள மக்களுடன் எப்போதும் மோதிக் கொண்டிருந்தது. சிக்கலை எதிர்கொள்ள சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் . மாரிமுத்துவை சார்ந்திருந்த அவரது அணுக்கர்கள் தொழ்சாலைகளால் லாபமடைய அவரது அணி இரண்டாக பிளந்து நின்று ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தது . மாரிமுத்து தவறுதலாக வழிநடத்தப்பட்டு, ஒவ்வொரு சிக்கலிலும் ஒவ்வொரு அணியை ஆதரிக்க வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்ததால் ஒருகட்டத்தில் ஒட்டு மொத்த அமைப்பிற்கும் எதிரானார் . ஊசுடு பலவகையில் மிக சிக்கலான திருகு முணைகளைக் கொண்டது . துத்திப்பட்டில் கொடியேற்ற நிகழ்விற்கு ஒரு சாரார் தங்களுக்கு தனிப்பட்ட அழைப்பில்லை என சொல்லி ஒதுங்கிக் கொள்ள நிகழ்வு ஏறக்குறைய நின்று போனது . தலைவர்கள் வந்து சேர்ந்த பிறகு அவர் முன் மாரிமுத்திற்கு எதிரான பஞ்சாயத்து போல் ஒன்று நிகழ்ந்து சண்முகம் முகம் சிறுத்தார். மாரிமுத்து தன் தரப்பை எடுக்க முடியாமல் திகைத்து நின்றுவிட்டார் . சிலமணி நேர சமாதானத்திற்கு பிறகு மிக மெல்ல அந்த நிகழ்வு நடத்தேரியது . துத்திப்பட்டு பெருமாள் ஊர். அங்கு அவனுக்கு நெருக்கமான சிலரை எனக்குத் தெரியும். அவர்களை அழைத்துக் கொண்டு நானாக அறுந்து கிடந்த ஒருங்கிணைப்பை உருவாக்கத் துவங்கினேன்


துத்திப்பட்டு சிக்கல் துவங்கிய சில நிமிடங்களில் மற்ற பகுதிகளில் என்ன நிகழும் என எனக்குத்தெரியும். துத்திப்பட்டில் இருந்து அதன் அடுத்த பகுதியான தொண்டமானத்தம் சென்றேன். அங்கும் இதே சிக்கல் ஆனால் தலைவர் வருகிறார் என்கிற சொல் அவர்களை ஒருங்கிணைத்தது. அழைத்து வந்திருந்தவர்களைக் கொண்டு கொடிக்கம்பம் நட்டு அதில் கொடியை கட்டும்  வேலையை துவங்கச் சொல்லிவிட்டு உடன் இருந்தவர்களை மூன்று பிரிவுகளாக பிறித்து ஒரு குழு ஊர் பெரியவர்களை அழைத்துக் கொண்டு ஊர் எல்லைக்கு செல்லச்சொல்லி இன்னொரு குழுவை துத்திப்பட்டிற்கு அனுப்பி இங்கிருந்து தகவல் வருமவரை எதையாவது செய்து நேரத்தை இழுத்தடிகச் சொன்னேன் . அங்கு இரண்டு மூன்று இடத்தில் கொடியேற்ற ஏற்பாடாகியிருந்தது. ஒரு இடத்தில் அரைமணி நேரம் காலம் தாழ்த்தினால் ஊசுடுவின் பெரிய ஊரான கூடப்பாக்கம் சென்று தேர மதியம் 2:00 மணியைக் கடந்துவிடும் . அங்கு அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. சிறிது நேர ஓய்வு எல்லாம் அற்றிற்கு அடுத்த கரையில் உள்ள அனைத்து ஊர்களிலும் சிறப்பாக எதையாவது செய்ய இயலும் எனக்கணித்திருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...