https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * நடிப்பு சுதேசிகள் *

ஶ்ரீ:



பதிவு : 615  / 805 / தேதி 10 ஏப்ரல்  2022



* நடிப்பு சுதேசிகள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 13.





அன்று இரவு நடையின் போது பாபுலாலைப் பார்த்தேன். நலம் விசாரிப்புகள் . பல வருடங்கங்களாக கடற்கரை இரவு நடைக்கு சென்று கொண்டிருக்கிறேன் அவனை பார்த்ததில்லை. தற்செயலாக வந்திருக்கலாம். பாபுலால் இளைஞர் காங்கிரஸில் எனக்கு மிக அணுக்கமானவனாக இருந்தவன்இரவுகளில் சந்தித்து உரையாடி கொண்டிருப்பது அன்றைய வழக்கமாக இருந்தது . மிக உற்சாகமான நாட்கள் . அந்த உரையாடல்களுக்கு ஒருவர் பின் ஒருவராக வந்து கூடுவார்கள். பல நேரங்கள் இரவு நெடு நேரம்வரை அது நீண்டு விடுவதுண்டு . பாபுலால் எனக்கு அறிமுகமானது ஒரு விசித்திரப் பின்னணியில். வல்சராஜ் தலைவராக வந்த பிறகு அவர் நியமித்த கமிட்டியில் பாபுலால் 20 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்தான். BSNL ஊழியர் தாயகராஜனுக்கு நண்பர் . அவர் வழியாக சண்முகத்தை அறிமுகம் செய்து கொண்டான்அவனது பெயரை தாயகராஜன் வல்சராஜிற்கு சிபாரிசு செய்திருக்க வேண்டும் . நான் பாபுலால் பெயரை நிர்வாகிகள் பட்டியலில் பார்த்திருக்கிறேன் நேரில் அறிமுகமில்லை. வல்சராஜுடன் முதல் முறையாக தில்லி சென்றபோது பல புதிய நண்பர்கள் இளைஞர் காங்கிரஸ் சார்பாக அப்போது தில்லி வந்திருந்தார்கள். அவர்களுடன் பாபுலால் வந்ததாக நினைவு. முருகேசன் தலைமையில் வேறொரு அணியும் அப்போது அங்கு வந்திருந்தது . வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவன் இந்தி சரளமாக பேசி பிறருக்கு உதவி ரயிலில் இருந்த அனைவருக்கும் நெருக்கமானான். கூட்டம் நடைபெறும் போதெல்லாம் அவனுக்கும் அழைப்பு அனுப்பப்படும். ஆனால் எதிலும் கலந்து கொண்டதில்லை. சில வருடங்களுக்கு பின் மாறிக் கொண்டிருக்கும் அரசியல் சூழலை புதிதாக வந்து இணையும் ஆளுமைகளைக் கொண்டு இன்றையமார்கெட் மதிப்பைகணக்கிட்டுக் கொள்ளவோம். உருளையன் பேட்டை தொகுதி  ஹேமா பாண்டுரங்கம் ஒரு வித்தியாசமான ஆளுமை சற்று கூச்ச சுபாவி. வெளிவட்டார தொடர்பை சரியாக நிர்வாகிக்காதவர் அதுவே அவரை பல கட்சிக்கு துரத்திக் கொண்டிருந்தது . திமுக தொடங்கி பின் மதிமுக சென்று அங்கிருந்து தமாக வில் இணைந்தார். உருளையன் பேட்டை சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெல்லும் கனவுள்ளவர் . அது அவரை எந்த இடத்திலும் நிறைவுறாது துரத்திக் கொண்டே இருந்தது


உருளையன் பேட்டை தொகுதி நகர் மற்றும் அதை சார்ந்த உடனடி புற நகர் மற்றும் குடிசை பகுதிகளைக் கொண்டது. இளைஞர்கள் பல வித செயல்பாடுகளைக் கொண்ட குழுவாக இருப்பதால் அவர்கள் அரசியலை நோக்கி இழுக்கப்படுகின்றனர். குற்ற பின்னணியுள்ள இளைஞர்கள் அதிகம் என்பதால் அரசியல் பாதுகாப்பு மற்றொரு அம்சம். காங்கிரஸ் போன்ற மிதவாத கட்சியால் அங்கு தாக்குப்பிடிக்க முடியாது. எனவே அது திரவிட இயக்கங்களின் கோட்டை. அங்கிருந்து காங்கிரஸை நோக்கி வந்த முதல் ஆளுமைஹேமா பாண்டுரங்கரம்”. அவர் தமாக வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த போது பெரும் இளைஞர் கூட்டம் கட்சி அலுவலகத்திற்கு வந்தது . சம்பிரதாயமான இணைப்பு நிகழ்விற்கு பிறகு வந்த கூட்டம் வடிந்து ஹேமா பாண்டுரங்கத்திற்கு அணுக்கமான சிலர் மற்றும் தரைதளத்தில் தேங்கி நின்றிருந்தனர். உருளையன் பேட்டையை்சேர்ந்த எனது அணுக்கன் ஆறுமுகம் ஹேமா பாண்டுரங்கத்ததை என்னிடம் அழைத்து வந்தான் அவர் தன்னை அறிமுகம்செய்து கொண்டார். அவர் பெயர் நான் முன்பு அறிந்திருந்தேன் ஆனால் நேரில் பழக்கமில்லை . அவரது பெயரின் அடைமொழி அந்த கவனிப்பை கொடுத்திருக்கலாம். உருளையன்பேட்டை தொகுதியில் இரண்டு பாண்டுரங்கங்கள் இருந்ததால் ஹேமா ஒயின் நடத்திய பாண்டுரங்கம் கடை பெயர் அவருடன் இணைந்து கொண்டது. அவர் தன்னுடன் வந்திருந்தவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த போது அதில் பாபுலால் ஒருவன். பெயர் ஒற்றுமையாலும் பார்த்த முகமாக இருந்ததாலும் அவனை விசாரிக்க அந்த பாபுலால் தான் என தெரிந்தது . கட்சியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இருப்பதே அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும் . அவன் பெயர் இன்னும் கமிட்டில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது குறித்து அவனுக்கே வியப்பு. அதன் பின்னர் என்னுடன் இணைந்து செயல்பட்டான்


பாபுலால் உரையாடல்களில் விருப்பமுள்ளவன் தயக்கமில்லாமல் தனது வாதத்தை முன் வைக்க நல்ல வாசிப்பு இருந்திருக்க வேண்டும் அல்லது அவனது நண்பன் தாயகராஜனுடன் நடந்த உரையாடல்களின் வழியாக அவற்றைப் பெற்றிருக்கலாம். தாயகராஜன் BSNL ல் காங்கிரஸ் தொழிற்சங்க வாதி. ஆரம்பத்தில் கம்யூனிஸ இயக்கங்களில் இருந்து பின் முரண்பட்டு வெளியேறினாலும் புரட்சிகர மார்க்கிய சிந்தனைகளுடன் காங்கிரஸிற்குள் அவற்றை முன்வைக்க அது ஏற்படுத்திக் கொடுக்கும் இடத்திற்காக காத்திருப்பவர்கள். காங்கிரஸில் அப்படி ஒன்று இல்லை என்பது அதன் வினோதம். பல முறை அப்படிப்பட்ட கருத்துக்களை தாயகராஜன் சண்முகத்துடன் அவர் ஓய்வாக இருக்கும் போது உரையாடுவதை பார்த்திருக்கிறேன். அது இன்னொருவர் அந்த அறைக்குள் நுழையும் வரை மட்டுமே நீடிக்கக் கூடியது. பின் சண்முகத்தால் அறிவுரை போல ஒன்று சொல்லப்படு முடிவிற்கு வந்துவிடும் . ஒரு வித உடல் குறுகலுடன் அவர் அதை ஏற்று அமைதியடைந்துவிடுவார். அவர் பொறுத்தவரை சண்முகத்துடன் உரையாடிய திருப்தியில் அன்று சந்திக்கும் அனைவரிடமும் சண்முகத்துடன் விவாதித்ததாக சொல்லும் அரசியல் அவருக்கு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

நவீன இளைஞர்களிடையே சாதி, சமூகமேட்டிமைத்தனம் எல்லாமே உண்டு. அவர்களுக்கு நீதியுணர்ச்சி என்பதே இல்லை என்பது அதிர்ச்சியளப்பது . அவர்கள் குடும்பங்களில் அதைச் சொல்லிக்கொடுப்பதில்லை அவர்களுள் எதையாவது வாசிக்கக்கூடிய ஓரிருவர் கூட இல்லை. ஆகவே வேறு எந்தவகையிலும் அவர்களுக்கு அறமோ நீதியுணர்வோ அறிமுகமாவதே இல்லை. அசலான இடதுசாரிக் கருத்துக்களை வாழ்வியலாகக் கொண்ட ஒருவர் கூட நான் பார்த்தில்லை . ஏழைகள்மேல் ஒரு சின்ன கரிசனமும் குறைந்தபட்சம் ஏளனம் செய்யக்கூடாது என்ற உணர்வு எல்லாம் கடந்த கால நினைவுகள் போல . அதாவது சென்ற இரண்டு தலைமுறைக்காலம் என் தாத்தா , அப்பாவின் காலம் . அது எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல காந்தியில் தொடங்கி நக்சலைட் இயக்கத்தில் முடிந்த ஒரு யுகம். இன்றைய இளைஞர்களிடம் அந்த நுண்ணுணர்வும் இங்கிதமும் துளிகூட கிடையாது. தனக்கு ஒரு சமூகப்பொறுப்பு உண்டு என்ற எண்ணமே எவரிடமும் இல்லை. சொல்லப்போனால் பிறருக்காக எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இதன் நடுவே புரட்சிக்காரர்களாக வேஷம் போடுகிறார்கள். அது ஒரு ரோல்பிளேயிங். ஒரு சைக்காலஜிக்கல் ரிலீஃப். முற்போக்காக புரட்சிக்காரனாக கலகக்காரனாக பாவனைசெய்து அரசாங்கத்தையோ சமூகத்தையோ மதத்தையோ கட்சியையோ வசைபாடினால் ஒரு சின்ன நிறைவு. பிறரிடம் இருந்து நான் வேறுபடுகிறேன் என்கிற ஆனவம் சமன் செய்யப்படுகிறது. பாரதியார் சொல்லும் அப்பட்டமான நடிப்பு சுதேசிகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக