https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

அடையாளமாதல் * நிறுவிக்கொள்ளுதல் *

 




ஶ்ரீ:



பதிவு : 616  / 806 / தேதி 15 ஏப்ரல  2022



* நிறுவிக்கொள்ளுதல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 14.






BSNL தாயகராஜன் தனது மார்க்கிய தொடர்புகளில் இருந்து வெளியேறியிருந்தாலும் அவரின் லட்சியவாத பார்வை விலகவில்லை காங்கிரஸிற்கு வந்த பிறகும் இங்கு அதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார் . மார்ஸிய மனச் சாய்வு கொண்டவர்களுக்கு காங்கிரஸ் பெரும் துயரம் அளிக்கும் அமைப்பு . இங்கு காணப்படும் இடைவெளி அவர்களின் சிந்தனையில் மார்ஸியத்தை இங்கு செயல்படுத்த வேண்டும் என்பது ஒருவித மன்றாட்டு மனநிலையில் அதை சுற்றியே உரையாடல்கள் செல்வது அவரால் தவிற்க இயலாததாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றில் எதை எங்கிருந்து எப்படி இதில் கொண்டு வைக்க முடியும்? என கேட்டால் அவரிடம் பதில்லாமல் போகலாம் . தாயகராஜன் பாபுலாலுக்கு அவனது வியாபாரம் வழியாக அறிமுகமாகியிருக்க வேண்டும் . பாபுலால் சின்னகடை முனிசிபல் கட்டிடத்தில் கறிக்கடை வைத்திருக்கிறான் . அரசியல் குறித்த ஆழமான விமர்சனங்களையும் கேள்விகளையும் அவன் தாயாகராஜனிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். தாயகராஜன் முன்வைப்பவை இங்கு யாருக்கும் என்னவென்று புரிவதில்லை. அதை மேடைதோரும் முழுங்கும் கம்யூனிஸ்டுகள் கூட இன்று அவற்றை பற்றிய நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை . இன்று அதை மேடையில் பேசுகிறவர்களுக்கு அது ஒரு அலங்காரம் போல அடையாளம் போல பேச்சில் வெளிப்படுகிறது . காங்கிரஸில் உள்ளவர்களுக்கு அவை முற்றிலும் புரியாத வேறொரு உலகம். அதன் சிறு பகுதியை புரிந்து கொண்டவர்கள் கூட ஒரு ஏளனப் பார்வையுடன் சிரித்தபடி கடந்து சென்றுவிடுவார்கள்


தாயகராஜன் கடந்த காலத்தில் உறைந்திருந்தார். அவர் பேசுவதெல்லாம் ஒருகாலத்தில் கம்யூன்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு சுற்றி இருப்பவரை பற்றிக்கொண்டு எரிந்தது. உள்ளுக்குள்ளே கூட ஒத்த கருத்துள்ளவர்களை பார்க்க முடியாது . ஒருவர் சொன்னதை பிறிதொருவர் மறுத்து பேசியேயாக வேண்டும் என்பது ஒரு சட்டம் போல. கலைந்து சென்ற பிறகும் பேசப்பட்ட கருத்துக்கள் எடுத்துச் செல்லப்படாமால் பருப் பொருள் போல அங்கேயே இருந்தது . கேட்டவர்கள் காதிலெல்லாம் ஒரு மயக்கு அவர்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கலாம் . இன்று அவர்களிடையே கூட புதிய தலைமுறைகள் ஒன்று உருவாகிவந்துவிட்டது. அவர்கள் மத்தியில் இவை மீண்டும் அதே உக்கிரத்துடன் மீளவும் விவாதிக்கப்படுகிறதா என தெரியவில்லை. என்னுடன் அரசியலில் இணைந்து பணியாற்றிய பல கம்யூனிஸ நண்பர்களை நான்பின் தொடரும் நிழல்குறித்த கேள்விகளை ஒரு சீண்டலுக்காக கேட்பதுண்டு . அவர்கள் அதை பதட்டமில்லாமல் கடந்து செல்வது ஆரம்பத்தில் எனக்கு திகைப்பை கொடுத்ததுண்டு . பின்னர் அதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது. எங்கும் உள்ள இளைஞர்களைப் போல இங்கு அரசியலின் பதவி மற்றும் அதிகாரத்திற்கு  கொள்கைகள் அவர்களை தங்களின் அரசியலின் நிறம் பிறித்தலுக்கு பயன்படுபவை. அது புறவயமாக அவற்றை தொகுத்துக் கொள்ளும் அதே சமயம் அகவயமாக அதை நெருங்க தயங்குபவர்களாக அல்லது அஞ்சுபவர்களாக அவர்களை பார்த்திருக்கிறேன். மார்க்சியம் ஒரு தரிசனம் அதை ஒட்டு மொத்த உலகியலுக்குள் கொண்டு வைக்க இயலும் என ஜெயமோகன் சொல்வதுண்டு . அப்படியானால் அது எக்காலத்திற்கும் உரிய பொதுத்தன்மை கொண்டிருக்க வேண்டும். அதை காலத்திற்கு எற்று அல்லது ஏற்ப பொருள் சொல்லபவர்கள் இல்லை என்பதால் அது நிறுவனமாக மாறிப் போனதற்கு காரணமாக இருக்கலாம்.


நான் நினைக்கும் அமைப்பும் ஒருவகையில் நிறுவனப்படுத்துலா அதனால் நிகழும் முரண்பாடுகள் நான் தெளிவாக வரையறை செய்து கொள்ள எப்போதும் முயன்றிருக்கிறேன். கட்சியும் கொள்கைகளும் நிரந்தரமாக பிரிந்துபோன ஒரு காலகட்டத்தில் அந்த விவாதங்களுக்கு என்ன அர்த்தம் என்பது  திகைப்பை கொடுத்தது . நானும் ஒரு வகையில் இவர்களை போல கட்சிக்கும் காலத்திற்கும் பொருந்தாத ஒன்றை முயற்சிக்கிறேனா என கேட்டுக் கொண்டு அவர்களது உரையாடல்களை சந்திக்கிறேன். உறுதியாக அப்படி இல்லை. என் செயல்பாடுகள் வழியாக நான் முயற்சித்துக் கொண்டிருப்பது அரசியலை அல்ல நான் ஆராய்ந்து கொண்டிருப்பது என் சிந்தனையை . நினைக்கும் அமைப்பை உருவாக்குவதை பற்றிய எனது முன்னோடி கண்ணன் மற்றும் உருவான இயக்கத்தை கையாண்ட சண்முகம் மற்றும் பாலன் போன்றவர்களிடமிருந்து எனக்கானதை புரிந்து கொண்டிருக்கிறேன். கட்சி அமைப்பில் இருப்பவர்களின் உளம் செல்லும் திசையை மிக அணுக்கமாக பார்த்திருக்கிறேன் அதில் அந்த நொடிப் புரிதல் சொந்த லாபத்தை தாண்டி அவர்கள் செல்வதில்லை. அதைத்தாண்டி தன் பங்காக சிறிது கிள்ளி எடுத்துவைத்தவர்கள் கூட நினைவுகொள்ளப்பட்டதில்லை. அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தங்களுக்கு தலைமை தாங்கியவர்களை கைவிட்டிருக்கிறார்கள் அல்லது சூழல்நிலை காரணமாக நிராகரித்திருக்கிறார்கள். இதுவே அரசியலில் நிரந்தரமானது. மாற்ற முடியாத விதி. பின் அவற்றை எதன் பொருட்டு முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்பவர்கள் அரசியலுக்குள் பொருந்தியிருக்க முடியாதவர்கள்.


அரசியல் உலகில் அத்தனையும் சாத்தியமா? என்றால் ஆம்! என்பதே அதன் பதிலாக இருக்க முடியும் . இல்லை என்பது பிறதொரு சாத்தியகூறு மட்டுமே . என்னென்ன சாத்தியங்களினால் அவை இல்லை என்றாகிறது காரணங்களை கண்டடைகிறது , எந்தெந்த வாய்ப்புகளில் பாய்ந்தோடி இணைந்து கொள்கிறது எப்படியெப்படித் தன்னை உருமாற்றி அமைத்துக் கொள்கிறது, எப்படி தன்னைத்தானே கண்டடைகிறது. அதில் இருந்து என் இடத்தில் இருந்து இதுவரை , இனிமேல் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை . அதுதான் எனக்கு முக்கியம். இது எனக்கு மட்டும் திறந்து காட்டும் வழி அதை நானே கண்டடையும் பரவசத்துக்காகவே நான் அரசியலில் தொடர்ந்து முயற்சி செய்கிறேன். வெல்கிறேன் , தோற்கிறேன் அதன் முடிவுகள் எனக்கு பொருட்டள்ளானால் அதிலிருந்த கற்றுக் கொள்கிறேன் .


நிலைத்து நிற்கவே இயலாத ஒரு அமைப்பை கொண்டு அதிலிருந்து அடைய ஒன்றுமில்லாத போது அதை ஒரு உருவாக்குவதில் என்ன லாபம்? இது இன்னொரு நம்பிக்கையிழப்பு கைவிடப்படல் . அப்படி எத்தனை நூறு முயற்சிகள் அவை ஒவ்வொரு இயற்கையின் சக்திகளை வாய்ப்புகளை நான் அறிந்து கொள்வதில் ஒரு புதிய திறப்பு. இயற்கையை அரசியலை நான் கையாள்வதில் ஒரு புதிய சாத்தியம் அதிலிருந்து வெற்றி அல்லது இல்லை என்கிற இரட்டைக்குள் வைத்து பார்க்காத போது அது தரும் இடம் மகத்தானது . ஒவ்வொரு முயற்சியும் இயற்கையில் இருந்து எனக்கு கிடைக்கும் ஒரு நிகழ்வு ஒரு அனுபவம் ஒரு சாத்தியம் ஒரு சொல் ஒரு புரிதல் ஒரு குறியீடு இப்படி சொல்லிக் கொண்டே செல்லாலாம் . ஆனால் எல்லா நிகழ்வுகளும் குறியீடுகள்தான். இயற்கையாக அது  சூழ்ந்திருக்கிறது. இந்தவானம், இந்தமழை, இந்த மலைகள், இந்த நகரம் இந்தக்காடு அவற்றின் மொழி வானமெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த மொழி கடல் என்றால் மானுடர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் சிந்தனை ஒரு  மொழி என்பது அதில் ஒரு துளி. இயற்கையின் பெருமொழிமேல் மானுட மொழியைக் கொண்டு முட்டிக் கொண்டே இருப்பது போல செயல்பாடுகளை கொண்டு அதை செய்கிறேன் . அடிபெருத்த மரத்தை அறைந்து உலுக்குவதுபோல. அவ்வப்போது ஒரு சொல் உதிர்கிறதுவானிலிருந்து நேராக சிந்தனையில் நாவில் சொல்லில் தோன்றியது இடியாக. செயல்களில் இருந்து உருவான இடம் என்னை நான் கட்டமைத்துக்கொள்ள உதவின.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்