https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 27 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 506 * எதிர்பாராதது *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 506

பதிவு : 506  / 692 / தேதி 27 டிசம்பர்  2019

* எதிர்பாராதது * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 20







காமராஜர் தான் புதுவைக்கு வருவதை பற்றி முடிவெடுக்கும் பொறுப்பை சண்முகத்திடம் விட்டது அவருக்கு முதலில் திகைப்பை கொடுத்தாலும் , அப்போதிருந்த ஒற்றைப்படை சிந்தனை காமராஜர் புதுவை வருவதை தடுத்தாக வேண்டும் என்பதாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் ,அதனால் அவர் சொல்லவருவது என்னவாக இருக்கும் எனபதை புரிந்துகொள்ள முடியாமையால் , சற்று இடைவெளி விட்டு அன்று மாலை வந்து அவரை மீண்டும் சந்திப்பது என முடிவெடுத்து தான் வழமையாக தங்கும் உடுப்பி பவனுக்கு சண்முகம் சென்றார்

ஹோட்டல் அறையில் இதைப்பற்றி ஒன்றும்  சிந்திக்க கூடாது என முன்பே முடிவெடுத்தபடி அன்று மாலை வரை வேறு விஷயங்களில் மனதை ஓடவிட்டிருந்தார்  . மாலை 4:00 மணிக்கு காமராஜர் வீட்டிற்கு சென்ற போது வழமைப் போல அவரது வீடு ஆரவாரமின்றி அமைதியாய் இருந்தது . வைரவன் வந்து அவரை வணங்கிய  சண்முகத்திற்கு   டீ வேண்டுமா என கேட்டார் , ஆம் என சொல்லி காமராஜருக்கும் சேர்த்து  டீ வாங்க பணம் கொடுக்க, வைரவன் டீ வாங்க பிளாஸ்கை எடுத்து சென்ற அந்த நிமிடத்தில் பொறி தட்டியதுப்போல ஒன்றை உணர்ந்தார் .

மிக எளிமையாகவாழும் முறையை  அமைத்துக்கொண்ட ஒருவருக்கு தனிப்பட்ட அரசியல் என்கிற விழைவு இருக்க வாய்ப்புண்டா. ராஜாஜியுடன் உள் சமரசத்திற்கு அவர் தயாரில்லை என்பதும். ராஜாஜி திமுக வுடன் கூட்டணிக்கு துணித்தது போல ஒரு முயற்சியை அவர் முன்னெடுக்காததற்கு அவரது அடிப்படை அரசியல் கண்ணோட்டம்  மாறவில்லை என்பதே காரணம் . திமுக அரசியலுக்கு லாயக்கற்ற கட்சி எ ன்பதாக இருந்தது . அதைக்கடந்து புதுவையில் அவருக்கு தனியாக என்ன நிகழக்கூடும் ........  இப்படி பல சிந்தனைகளில் இருந்தபோது காமராஜர் எளிய கைவைத்த பனியனுடன் வெளிவந்தார் . சண்முகமும் அவரும் ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டனர் . சண்முகம் அவரிடம்நீங்கள் அவசியம் புதுவைக்கு வரவேண்டும் , பெரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்ய இருக்கிறோம் என சொல்லி விடை கோரும்  போது காமராஜர் மெல்ல சிரித்துக்கொண்டார் .

காமராஜரிடம் விடை பெற்று வெளியே வந்த பிறகு மனம் மிகத் தெளிவாக வரையறை செய்யப்பட்டது  போல உணர்ந்தார் . காலை தான் கொண்ட நிலையழிவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது மனதில்  ஒருவித ஏமாற்றம் போல இருந்திருக்க வேண்டும் . அனுபவம் கழற்றலாகி அங்கிருந்து வாழ்க்கைக்கு அது வழிகாட்டலாக நிகழும் என ஒருபோதும் எண்ண முடியாது போலும் . கற்றல் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்று . அதிலுள்ள சிறு சிறு நுட்பக் கூறுகளை பிரித்து அறியும் ஆவலிருக்கும் வரை அதன் பாதை சுவாரஸ்யமானது .

எளிய மக்கள் வாழ்வியல் அனுபவத்தில்  இருந்து கருத்தென ஒன்றை சென்று அடைவதில்லை . மனிதர்கள் குறித்து அவ்வாறு கருத்தை உருவாக்கி கொள்பவர்கள் கூட , தங்கள் முடிவை மாற்றிக் கொண்டே வந்து பின்னர் ஒரு நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைத்துக் கொண்டு , அது நாள்  வரை பெரிதாக மதித்தவர்களை  தூக்கி எரிய தயங்குவதில்லை . ஆளுமைகள் அதை எப்போதும் செய்வதில்லை. மனம் கொந்தளிக்கும் போது அதிலிருந்து விலகி நின்று அது நாள்வரை இருந்துவந்து தங்கள் கருத்திற்கு மாற்றாக ஒன்று நிகழும் போது அதில் மனித மனங்களின் செயல்பாடுகளை பொறுத்திப் புரிந்து கொள்ள முயல்கிறார்கள் அன்றி அதுவரை தங்களை வழிநடத்திய கருத்துக்களை மாற்றிக்கொள்வதில்லை

பலவித சிந்தனையில்  புதுவை வந்த சண்முகம் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து காமராஜரை வரவேற்க  முழு ஏற்பாடுகளை செய்யத்துவங்கினார் . அனைவரும் உற்சாகத்தோடு செய்ய துவங்கினர் . ஒருவைகள் சண்முகத்துக்கு அது ஏமாற்றமே என்றாலும் வெளிக்காட்டிக்கொள்ள இயலவில்லை . குபேரால் அழைக்கப்பட்டு காமராஜர் புதுவை வருவதால்  நிகழும் அர்த்தமின்மையை ஏன் யாரும் உணரவில்லை என்பது அவருக்கு வருத்தத்தை கொடுத்தாலும் புதுவை அரசியலாளர்களின் உளநிலை அவருக்கு புரிந்திருந்தது

 காமராஜரின் வரவை ஏற்கும் சண்முகத்தின் ஏற்பாடுகளின்   தனது அரசியல் சூழ்தலால் விளைந்தவை என நினைத்தார் குபேர் . அதேசமயம் சண்முகம் தன்னை தாண்டி காமராஜரிடம் நெருங்காது அவரது நிகழ்வுகள் குபேரால் முடிவு செய்யப்பட்டியிடுருந்தது . கட்சி  அலுவலகத்தைத்  தவிர சண்முகம் காமராஜரை தனியாக சந்திக்க முயல்வார், அதை தடுக்க வேண்டும் என நினைத்த குபேரருக்கு சண்முகம் காமராஜரை சந்திக்க முயற்சிக்காதது  ஆச்சார்யர்ப்தை கொடுத்தாலும் தனது அரசியல் சூழ்தலுக்கு முன்னாள் அனைவரும் தோற்றிருக்கிறார்கள் என்கிற நிறைவை வந்தடைந்தார்

அனால் காலம் அதற்கு  பிறிதொரு கணக்கை வைத்திருந்தது . காமராஜரின் புதுவை வியாஜயம் எந்த முரண்பாட்டையும் அடையாமல் அனைத்து தரப்பினரும்  ஏற்கும் தலைமை என்பதாக தில்லி தலைமை மகிழ்ந்தது. காமராஜர் அனைவருக்குமான தலைவரானதால் இனி புதுவை சிக்கலை காமராஜர் கொண்டு தீர்க்க தில்லித்தலைமை முடிவெடுத்தது . சில மாதங்களுக்கு பின்னர் ஆளும் அரசிற்கு சிக்கல் எழுந்தபோது மீண்டும் முரண்பாடுகள்  வெடித்தது . தில்லி தலமையால் காமராஜர் உதவிக்கு அழைப்பட அவர் தனது அனுக்கர் R.வெங்கடராமனை அனுப்பி வைத்தார் . சில மாதங்களில் குபேர் மாற்றப்பட்டு ரெட்டியார் முதல்வராக நியமிக்கப்பட்டார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்