https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 9 டிசம்பர், 2019

அடையாளமாதல் - 497 *சமூக ஆழ்விசை *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 497

பதிவு : 497 / 683 / தேதி 09 டிசம்பர்  2019

*சமூக ஆழ்விசை  * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 11





குபேர் முதல்வரான பிறகு காங்கிரஸ் கட்சி விவகாரங்களை தில்லியின் நேரடி காட்டுப்பாட்டில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் .தேர்ந்தெடுக்கபட்ட முதலவர் என்கிற அடிப்படையில் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் வாய்பபு அவருக்கே வழங்கப்பட்டது போன்ற தோற்றம் உருவானது .உள்ளூர் கட்சி குபேரின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்ததால் முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் பிற எவரும்  இல்லாமலானார்கள்

சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை கைபற்றாமல் குபேரை அடக்குவது இயலாது என ரெட்டியார்  புரிந்துகொண்டார்  .1954 ல் குபேர் மந்திரிசபையில் திட்டத்துறையின் அமைச்சராக ரெட்டியார் பதவிக்கு வந்த பிறகு தனது அணி உருவாக்கம் குறித்த இடத்திற்கு வந்து சேர்ந்தார் . அது முதல் நிலையில் வெற்றி பெற்றது . அதற்கான பரிசாக குபேரை வீழ்த்தி முதலவரானார் . ஆனால் அதன் பின் அரசாங்க பணியில் ஈடுபட்டு பிற அனைத்தையும. இழந்தார் . தேர்தல் நேரத்தில் அவருக்கு உடன்படாத அமைப்பினர் குபேர் முதல்வரான பிறகு அவர் மீது மனவிலக்கம் அடைந்து பின்னர் மெல்ல ரெட்டியாரை நோக்கி வரத்துவங்கினர் .சண்முகம் இதன் பின்னனியில் இருந்தார் .

குபேர் ஆரம்பம் முதலே காமராஜரை வெறுத்தார். அதன் உள்ளர்த்தம் புரிந்து கொள்ளக் கூடியதேதான் எண்ணிய  விஷயத்தை முடிக்க காமராஜர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை நேரில் அறிந்திருந்தார் . புதுவை சுற்றி வளைக்கப்பட்டு குபேர் போன்றவர்களை செயலிழக்க வைத்து இணைப்பிற்கு நிர்பந்திக்கப்பட்டனர் .பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்ட குபேர் காமராஜரின் கறாரான அனுகுமுறையால் கசப்படைந்திருந்தார் .எனவே புதுவை விடுதலைக்கு பிறகு காங்கிரஸ் உட்கட்சி விஷயத்தில் காமராஜரை உள்நுழைய அவர்  அனுமதிக்கவில்லை .

குபேருக்கு இருந்த பிரதமர் நேருவின் தொடர்பு பிற பொறுப்பாளர்களை புதுவை கட்சி விஷயத்தில் நிதானிக்க செய்தது .அந்த இடைவெளிகளை பயன்படுத்தி காங்கிரசை முற்றாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததனூடாக தான் எண்ணியதை சாதிக்க முடிந்தது .

இந்திய விடுதலைக்கு பிறகு தமிழக காங்கிரஸ் அமைப்பு செயல்பாடுகள் மற்றும் அதன் மாநில அரசியல் முடிவுகளை ஏறக்குறைய அவர்கள் வகுத்துக் கொண்டதாகவே இருந்தது . தில்லியின் தலையீடு என்பது மாநில அமைப்பின் கருத்தை அங்கீரிப்பது என்பது மட்டுமே.ராஜாஜி , சத்தியமூர்த்தி முரண் உச்சமடைந்து அதன் விளைவாக இரண்டாம் நிலை தலைமையிலிருந்து காமராஜர் போன்றவர்கள் முதன்மை பெற்றனர் . தனது அரசியல் செயல்பாட்டால் காமராஜர் 1954 களில் தமிழக முதல்வரானார் . 1963 வரை அவர் அப்பதவியில் நீடித்தார் .

1963 பிறகு திமுக வளர்ந்து வந்த சூழலில் , அதன் வளர்ச்சியை கணிக்காது தங்களின் பூசலில் தமிழக காங்கிரஸ் மூழ்கி இருந்தனர்  . பிரதான எதிரமைப்பு உருவாகி வருவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை .ராஜாஜியும் காமராஜர் மீதுள்ள காழ்ப்பால் திமுக வுடன் கூட்டணிஅமைத்தது .திமுக தனது புதிய யுக்தியான பரப்பியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்றவை அரசியலில் எந்த இடத்தை திமுக பெரும் என கணிக்க தவறினர்  . திமுக வின் பரப்பியல் பிரச்சாரம் மக்கள் உணர்வை தூண்டுபவை . அவற்றின் உண்மை நிலையை கண்டறிந்து மாற்று  சொல்ல வரும் முன் அவர்கள் பிறிதொரு தகவலுக்கு சென்று விடுவார்கள்பத்திரிகை உலகை மிக விரிவாக கைப்பற்றிய முறை அது

சாமான்ய மக்களின் நினைவை தொடாது  உணர்வை தொட்டு அங்கு நீண்ட காலம் ஒரு தகவலை போல அது ஒட்டிக் கொண்டிருக்கும் .திமுக ஒரு வர்த்தக சினிமா போல . அது சொந்தக்  கருத்தியல்  எதையும் உருவாக்குவதில்லை, மாறாக சமூகத்தில் பிரபலமாக உள்ள முரண்கருத்தை எடுத்து செறிவூட்டுகிறது .குடிமை சமூகத்தின் ஆழ்மனதை அது வெளியிடுகிறது , உச்சகட்ட வெற்றியை அதனால் அடைய முடிந்திருக்கிறது .திமுக வின் இந்த கூரிய அனுகுமுறை காங்கிரஸ் முற்றாக வீழ முதல் காரணியாக இருந்தது .பிற்காலத்தில் இதுவே அனைத்து கடசிகளின் அரசியல் செயல்படு முறை என்கிற புதிய கட்டத்தை அடைந்தது.இன்று கட்சிகளுக்கு இடையே திமுக வின் வித்தியாசத்தை உணரமுடியாத அளவிற்கு அவை அனைத்தும் ஒன்று போல ஆகியிருக்கிறது .
காமராஜர் பொறுத்த அளவில் நேரு தனக்கிட்ட வேலையின் ஒரு பகுதியை மட்டுமே செய்து முடிந்ததாக உணர்ந்திருந்தார். காரணம் புதுவை மாநில அமைப்பின் அத்தனை கூறையும் கமராஜர் நன்கு புரிந்திருந்தார் . குபேரின் பலம் , ரெட்டியாரின் பலவீனம் போன்றவைகளுடன் இரு அமைப்பும் ஒன்றை ஒன்று  நிகர் செய்ய இயலா ஆற்றலின்மை . மேலும் ரெட்டியார் தனது களத்தை ஒருபோதும்  உருவாக்க இயலாது போன்ற   நுணுக்கமான தகவல்கள் . அவற்றின் முரணை களைந்து  இணைப்பிற்கு பிறகு அவற்றை சமன்செய்ய எண்ணியிருந்தது நிகழாது போனது அவருக்கு வருத்தமளித்திருக்க வேண்டும் என்றலும், நேருவின் உத்தரவால்  புதுவை கட்சி அரசியலில் அவர் செய்யக் கூடியது ஒன்றுமில்லை என்பதே வெளிப்படை..

சண்முகத்திற்கான பாதை திறந்து கொண்டது இந்த சந்தர்பத்தில் என நினைக்கிறேன் . சண்முகம் தன்னை மூன்று நிலைகளில் நிறுவிக் கொண்டதால் ரெட்டியார் தரப்பில் முக்கிய இடத்தையும் , தனிப்பட்டு சில விஷயங்களை செய்யும் ஆற்றலை பெற்றிருந்தார்.ரெட்டியார் குபேர் அமைச்சரவையில் பங்கு கொண்டதால் அமைச்சர் கவுன்சில் கூட்டங்களில்  ஆட்சி சம்பந்தப்பட்டு குபேருடன் பலவித சமரசங்களுக்கு உட்பட்ட நடக்க வேண்டிய நிர்பந்தம் இருந்திருக்க வேண்டும் . முன்பே தனது மிதமான போக்கால் கட்சி அமைப்பின் நம்பிக்கையை இழந்த நிலையில், அமைச்சரான பிறகு ரெட்டியாரின் தலைமை நீர்த்துப் போனது.கட்சி அமைப்பின் ஆதரவை முற்றாக இழந்து போனார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...